சனி, 27 ஏப்ரல், 2013

பலகோணப்பரிசீலனை !

எதிரி என்று வெறுக்காமல் ஒருவர் வீரத்தைப் 

பலகோணங்களில் பரிசீலிப்பதே வீரம்


இராணுவ வாழ்வின் ஒரு செயலின் முடிவைவிட செயலாக்கிய திறன் மிகவும் பாராட்டப்படுகிறது. வெற்றிதோல்விகளை நிர்ணயிக்கும் போர்முனைப் பகுதிகளில் கூட வெட்கப்படத்தக்க வெற்றிகளும், பெருமைப்படத்தக்க தோல்விகளும் ஏற்படுவதுண்டு. 1971-ஆம் வருடப் போர்க்களத்தில் நமது இலக்கை நோக்கி வந்த பாகிஸ்தானியப் படைகள் முற்றிலும் அழிக்கப்பட்ட பொழுது மறுநாள் காலையில் பாகிஸ்தானியப் படைத் தளபதி தானே முன்னின்று அப்படையை நடத்தியதையும் , அதில் படைத் தளபதி நமது பாதுகாப்பு நிலைக்கு மிக மிக அருகில் கொல்லப்பட்டதையும் அறிய நேரிடுகிறது. 

அந்த வீரத்தைப் பாராட்டிய இந்தியத் தளபதி , பாகிஸ்தானியத் தளபதியின் செயலை வானாளவப் புகழ்ந்ததுடன், அவருக்குப் பாகிஸ்தானிய அரசாங்கம் தகுந்த மரியாதை செய்ய வேண்டும் என்று ஒரு கடிதத்துடன் அந்தப் பாகிஸ்தானியத் தளபதியின் உடலை அவர்களுக்கு அனுப்புவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட பாகிஸ்தானிய அரசாங்கம் அந்தத் தளபதிக்கு பாகிஸ்தானிய மிகப்பெரும் விருதான நிஷானே பாகிஸ்தான் ( நமது பரம் வீர் சக்ராவுக்கு நிகர் ) வழங்கப்பட்டது. இப்படிப்பட்ட போரில் இருதரப்புமே வேற்றி பெற்றதாகத்தான் கருதப்படுகின்றது, எதிரி என்று வெறுக்காமல் ஒருவர் வீரத்தைப் பல கோணங்களில் பரிசீலப்பதே உண்மை வீரம். 

                                                       கர்னல்.பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு )

13 கருத்துகள்:

 1. எதிரி என்று வெறுக்காமல், வீரத்தைப் மனமாரப் போற்றுதலே உண்மை வீரம்.
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 2. மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கும் மணம் உண்டு நண்பரே....அருமை.
  Killergee
  www.killergee.blogspot.com

  பதிலளிநீக்கு
 3. எதிரி என்று வெறுக்காமல், எதிரியின் வீரத்தை மதிக்க வேண்டும்.
  ஆயினும், எம்மிடம் உள்ளதிற்கு எவ்வளவு பெறுமதியோ அது எதிரியிடம் இருந்தாலும் அதே பெறுமதியென நாம் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்...

  தங்களின் வருகைப் பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றிகள்...

  visit and check : http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-2.html

  how is it ...? excited...? put a comment... thank you...

  அன்புடன்
  பொன்.தனபாலன்
  9944345233

  பதிலளிநீக்கு
 5. உண்மை.வீரம் எங்கு இருந்தாலும் மதிக்கப்பட வேண்டும்...வலைப்பதிவர் விழாவிற்கு அன்புடன் அழைக்கின்றோம்..

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்.

  உங்கள் இடுகையின் நிகழ்வைக் காண எனக்கு அலெக்ஸாண்டர் போரஸ் போரிட்ட அந்தப் போர்க்களம் நினைவு வந்தது.

  தொடர்கிறேன்.

  நன்றி

  பதிலளிநீக்கு
 7. தங்கள் பதிவுகள் அனைத்தும் படித்தேன்..

  எங்கள் மகனும் கடற்படையில் பணியாற்றுவதால் தங்கள் அகத்தூண்டுதல்கள் அனைத்தும் பயனுள்ளவையாக மிளிர்கின்றன...

  பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்...!

  பதிலளிநீக்கு
 8. பதிவுகளைத் தொடருங்கள் ஐயா.

  காத்திருக்கிறோம்.

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 9. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
  நன்மை தரும் பொன்நாளாக அமைய
  வாழ்த்துகள்!

  யாழ்பாவாணன்
  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு
 10. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 11. Dear sir,
  These are re production of my book,SIVANDA MANN KAIPPIDI NOORU.It was posted by a friend of mine to whome I had given the book.For un known reasons he abrubtly left after 26 paras.
  Thear are 100 such paras.If you are interested I can post you the book.Please mail me your postal address.
  Thanks for youe mail and I wish the same.

  பதிலளிநீக்கு
 12. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  சித்திரையாள் வருகை
  இத்தரையில் எல்லோரும்
  எல்லாமும் பெற்று வாழ
  எல்லோருக்கும் வழிகிட்டுமென
  புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
  இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

  பதிலளிநீக்கு