புதன், 3 ஏப்ரல், 2013

சத்தியப் பிரமாணம் !

திருத்தப்படாத குற்றங்களே தவறுகளாக உருமாறுகின்றன.
மீசை அரும்பாத இளமைப் பருவத்தில் இராணுவத்தில் சேர்ந்திருந்தாலும், தனக்குத்தானே சிந்தித்துச் செயலாற்றும் திறம்படைத்தவர்கள் நாம். இராணுவப் பயிற்சி முடியும் தருவாயில் நாம் எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணத்தை எப்பொழுதும் நினைவில் கொள்ளுவோம். சத்தியப் பிரமாணம் என்பது வெற்றுச் சொற்களல்ல. உங்கள் தேசப் பெருமை அறிந்து உங்கள் சுய நினைவுடன்கூடிய தன்மதிப்போடு நீங்கள் வழங்கிய வாக்குறுதி. அதன்படி தன் சுக துக்கங்களை ஒதுக்கி நம்மை ஈந்த நாட்டின் சுகதுக்கங்களுக்கும் சக இராணுவத்தினரின் சுக துக்கங்களுக்கும் முன்னுரிமைதரப் பழகுவோம்.

அதிகார வரிசையில் உங்களுக்கு மேலுள்ளவர்களின் நியாயமான கட்டளைக்குக் கீழ்ப்படிந்து உங்களுக்கும்,  உங்களது படைப் பிரிவிற்கும், இந்த நாட்டிற்கும் பெருமை சேர்க்க முயற்சிப்போம். தவறுகள் திருத்தப் பட வேண்டும். அந்தத் தவறுகளை நீங்களோ, உங்கள் நண்பர்களோ அல்லது அதிகாரிகளோ செய்தால் சுட்டிக் காட்டலாம். ஆனால், குற்றங்களுக்காகத் தண்டனை அடைந்தே தீரவேண்டும். அறியாமல் செய்யும் பெரும் குற்றங்களாய் இருந்தாலும்கூட சிறு தண்டனை கொடுத்தேனும் மன்னிக்கப்படலாம். அந்தத் தண்டனை நம்மை நாமே திருத்திக் கொள்ள உணர்த்திய வாய்ப்பென்று ஏற்றுக் கொள்ள வேண்டும். திருத்தப்படாத தவறுகளே குற்றங்களாக உருமாறுகின்றன என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். 

கர்னல்  பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு )

1 கருத்து:

  1. “ திருத்தப்படாத தவறுகளே குற்றங்களாக உருமாறுகின்றன “ என்று நீங்கள் இறுதியில் கூறுவதே பதிவின் முகப்பிலும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    வகுப்பின் கரும்பலகையில் எழுதியிட ஆகச்சிறந்த வாசகம்.

    நன்றி

    பதிலளிநீக்கு