திங்கள், 8 ஏப்ரல், 2013

பயிற்சியின் நோக்கம்


ஒரு இயந்திரத்திற்கு  உபரிப்பொருள் தயாரிப்பது  போன்றதல்ல. இராணுவப் பயிற்சிகள் ஒவ்வொரு தனிமனிதப் பயிற்சியும் ஒரு இயந்திரத்தைத் தயாரிப்பது போன்றது.இராணுவப் பயிற்சிகள் கடுமையானவை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அந்தப் பயிற்சிகளின் உள் நோக்கத்தைப் புரிந்து கொண்டால் பயில்வது சுலபமாகிவிடும். இது ஒரு இயந்திரத்திற்கு உபரிப்பொருள் தயாரிப்பது போன்றதல்ல. இராணுவப்பயிற்சிகள், ஒவ்வொரு தனிமனிதப் பயிற்சியும் ஒரு இயந்திரத்தைத் தயாரிப்பதைப் போன்றது. போர்க்காலங்களில் பல திருப்புமுனைகளை மிகச் சாதாரண சிப்பாய்கள் தங்களது கடுமையான உழைப்பாலும் தன்னிகரில்லாத நாட்டுப்பற்றாலும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். போரில் பல சமயங்களில் நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடப்பதில்லை. சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் எதிரிகளின் நடவடிக்கைகளுக்கும் ஏற்றபடி உடனுக்குடன் முடிவெடுத்து செயலாக்கப்பட வேண்டும். 

தனி ஒரு மனிதனைக் குறி வைத்து எறியப்படும் குண்டுகளைவிட ஒரு குறிப்பிட்ட பகுதியையே அழித்துவிடக் கூடிய AREA WEAPON மலிந்துவரும் இன்றைய நாளில் உயிரோடு இருக்கக்கூடிய கடைசி ஜவான் கூட ஒரு இராணுவதளத்தைக் காப்பாற்றிவிட முடியும். அந்த சாகசங்களுக்கெல்லாம் இத்தகைய பயிற்சிகள் அடித்தளமிடுகின்றன. சவால்களைத் தாங்கும் உள்ளத்தையும் உடலையும் உருவாக்குகின்றன. ஒரே மாதிரியான சூழல்களில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் புதிய அபாயங்களையும் சவால்களையும் சந்திக்க இயலாது. அவற்றிற்கு மனிதர்களைத் தயார் செய்வதே இப்பயிற்சியின் உள்நோக்கம் என்பதை நினைவில் கொண்டு பயிற்சி செய்யுங்கள். 

நாடு காக்க மிஞ்சி நிற்கிற ஒரே ஒரு  அதிகாரியாகவோ அல்லது , சிப்பாயாகவோ நீங்கள் இருக்கலாம்.     

கர்னல் பா.கணேசன்.. B.Tech. V.S.M. ( ஓய்வு ).

1 கருத்து:

  1. இராணுவத்தில் கொடுக்கப்படும் பயிற்சிகள், சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் துணிவையும் சாதுர்யத்தையும் அடிப்படையாகக் கொண்டவை என்பதை அறிந்து கொண்டேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு