திங்கள், 25 ஜனவரி, 2021

                                                 விஜயபாரதம்.

இந்திய திருநாட்டின் சரித்திரம் பல மனிதர்களால் சிதைக்கப்பட்டு உண்மை நிகழ்வுகள் மறை க்கப்பட்டு அரசியல் ஆதரவுக்காக வெளியிடப்பட்டது என்பதை எல்லோரும் அறிவார்கள்.சுதந்திரப்போராட்ட காலத்திலேயே  உண்மையும் நேர்மையான சில மனிதர்களின் செயல்பாடுகள் வெளியுலகம் அறியாதவாறு இருட்டடிப்பு செய்யப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா என்ற மாபெரும் தேசம் சிதைக்கப்படாமல் சுதந்திரம் பெறவேண்டும் என்ற தியாக உணர்வோடு தொடங்கப்பட்டதுதான் "ராஷ்ட்ரிய சுயம் சேவக் " என்ற அமைப்பு.  காந்தியைக்கொன்ற "நாதுராம் கோட்ஸே "ஒரு தியாகி என்று போற்றப்பட்டு நாட்டின் பல இடங்களில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

கோட்ஸேயின் வரலாற்றைப் பின் நோக்கிப்பார்த்தல்  பல செய்திகள் வெளிவரும்.கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு கோர்ட்டில் நின்றுகொண்டிருந்த கோட்ஸேயின் வாக்குமூலத்தைப் பாருங்கள்.

“Gandhi was the reason for partition. He is the main reason for all the atrocities against Hindus during the partition. Gandhi acted in favour of Muslims. His presence will be harmful to Hindus. Hence, by killing Gandhi I did  great justice to this nation.” 


Godse said in the court that while people in general were against transferring Rs 55 crore to Pakistan after partition, Gandhi forced it upon the nation to transfer the money by going on a hunger strike. The Indian government too was hesititating to transfer the money. The Indian government and its people had to give way to one man’s adamancy, Godse had said justifying his act.

                 மத அடிப்படையில்  நாடு துண்டடாடப்பட்டபொழுது இந்தியா ஒரு ஹிந்துக்களின் நாடு என்பதை ஏற்றுக்கொள்ள ஏன்  தயங்க வேண்டும். அந்த அடிப்படையில் ஆரம்பித்ததுதான் "விஜய பாரதம் " என்ற வார இதழ்.
                  இந்தியாவின் உண்மையான வரலாற்றை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் நான் விஜயபாரதம் படிக்க ஆரம்பித்தேன்.இந்தியா ஒரு மாபெரும் தேசம் என்பதையும்,இங்கு பல  ,மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள் என்பதையும் மனதில் பதிய வைத்தால் முஸ்லிம்களுக்கென்று தனி நாடு கேட்கப்பட்ட பொழுது இந்தியா என்றபகுதியில் வாழ்பவர்கள் எல்லோரும் முஸ்லீம் அல்லாதவர்கள் என்றுதானே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
         மத ரீதியில் மக்களை பிரிக்காமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒற்றுமையாய் வாழ்ந்த நாட்டில் ஆங்கிலேயர்கள் கலந்த விஷம் இன்றளவும் தொடர்கிறது 
                                இந்நிலையில் விஜயபாரதம் இதழ் இந்துக்களின் ஒற்றுமைக்கும் இந்தியா என்ற மாபெரும் தேசம் மீண்டும் உலகப் புகழ் பெறவும் பாடுபடுகிறது என்று நான் எண்ணுகிறேன்.ஆகையினால் எனது இராணுவ வாழ்க்கை மற்றும்  செயல் பாடுகள் குறித்து அவர்கள் நேர்காணல் கேட்ட பொழுது மனமுவந்து பகிர்ந்து கொண்டேன்.
                             இதோ எனது நேர்காணல்;








இந்தியாவை எனது நாடு என்று ஏற்றுக்கொண்ட எத்தனையோ மதத்தினர்,முஸ்லிகள் உட்பட இந்திய இராணுவத்தில் பணியாற்றுகிறார்கள்.அவர்களது சிறப்பான செயல்கள் கவனிக்கப்பட்டு பாராட்டப்படுகின்றன.பிரிவினையின் போது ஏற்பட்ட போரில்  ஜம்மு-காஷ்மீர் பகுதி நவாஷ்ஷெரா பகுதியில் போரிட்ட பிரிகேடியர் "முஹமது  உஸ்மான் '" மஹாவீர் சக்ரா வழங்கி கௌரவிக்கப்பட்டார் .1965 போரில் 'பரம்வீர் சக்ரா "விருத்தி பெற்றவர் ஹவில்தார் அப்துல் ஹமீத் ,இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
                        வாழ்க பாரதம்,! வாழ்க  பாரத மணித்திருநாடு. !!  



















செவ்வாய், 19 ஜனவரி, 2021

             மனம் ஒரு மாயக்கண்ணாடி -2 

                       சில நாட்களுக்குமுன் எனது பதிவில் எனது தென்துருவ பயண நூலான ,"வெண்பனிப் பரப்பிலும் சில வியர்வைத்துளிகள் "பற்றி குறிப்பிட்டிருந்தேன்.1981 தொடங்கி இன்று வரை இந்தியாவின் அண்டாரக்டிக்கா பயணம் தொடர்கிறது.அதில் உங்கள் பயணம் எந்த விதத்தில் வித்தியாசமானது என்று நண்பர்கள் நினைக்கலாம்.ஆய்வுக்கட்டுரைகளிலும் வீர தீர விளையாட்டுகளிலும் ஆர்வம் உள்ள சிலர் எனது நூலின் தாக்கத்தைப் புரிந்துகொண்டு  நீண்ட பாராட்டுரை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லவும் மற்றவர்களுக்கு இன்னும் சில நிகழ்வுகளை எடுத்துச் சொல்லவும் இந்த இரண்டாம் பகுதி.

                     அண்டார்க்டிகா ஒரு உறைபனி கண்டம்.14.5 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு 98.5% உருகவே உருகாத பனி யால்  மூடப்பட்டது. ஒருசில மலை முகடுகள் மட்டுமே கோடைகாலத்தில் தெரியம்.குளிர்காலத்தில் அதுவும் மூடிவிடும் .ஆய்வுநடத்த விரும்பும் நாடு தங்களது ஆய்வின் நோக்கப்படி மலைப்பாங்கான இடத்திலோ அல்லது உறைந்த பனி மண்டலத்தின் மீதோ தங்களது ஆய்வுத்தளத்தை அமைக்கும்.இந்திய முதல் ஆய்வுத்தளமான "தக்ஷிணகங்கோத்ரி "உறைபணிமீது அமைக்கப்பட்டது.உறைபனி 5000மீ.கன முள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

                    ஆய்வுத்தளம் வெளிப்படுத்தும் உஷ்ணத்தினாலும்,வருடம் முழுவதும் வீசும் பனிக்காற்றின் தாக்கத்தினாலும் ஆய்வுத்தளம் கொஞ்சம் கொஞ்சமாக உறைபனியில்  மூழ்கும். ஆய்வுத்தளம் கட்டி நான்கு வருடம் சென்றபிறகே 1987ம் ஆண்டு எங்களது ஐந்தாவது குளிகாலக் குழு பயணப்பட்டது.ஐந்துநட்சத்திர விடுதி போன்றது இந்திய ஆய்வுத்தளம் என்று சொல்லப்பட்டது. அண்டார்டிகா சென்று நாங்கள் ஆய்வுத்தளத்தைப் பார்த்தபோது எங்களது இரத்தம் உறைந்தது.



 


                                                    

          நாங்கள் எதிர்பார்த்துவந்த ஐந்து நட்சத்திர விடுதி எந்த நிமிடமும்உறைபனியில்  மூழ்கி குளிர்காலக்குழு ஜீவசமாதி யாகும் நிலையில் இருந்தது.இந்நிலையில் ஒரு தலைவன் எப்படி செயல்படவேண்டும் ?

                    உயிர்காக்கும் பிழைக்கும் வழியாக Escape shaft வழியாக உள்ளேபோக ,வெளியே வர விளையாட்டுபோல ஏற்றுக்கொண்டு செயல்பட ஆரம்பித்தோம்.


அவசரம் அவசரமாக ஹெலிகாப்டரிலிருந்து தள்ளிவிடப்பட்ட எரிபொருள் எந்தநிமிடமும் பனி யில் மூழ்கும் அபாயம்.இவைகளை மேடைபோல் பிளாட்பாரம் அமைத்து அதன் மேல் அ டுக்கவேண்டும்.
         அண்டார்க்டிகாவின் குளிர்காலக்குழுவின் செயல்பாடுகள் இயற்கைக்கும்  மனிதனுக்கும் நடக்கும் ஜீவ  மரண போராட்டம் .இயற்கையை எதிரியாக நினைக்காமல் நண்பனாக ஏற்றுக்கொள்ளும்போது அது வேடிக்கை விளையாட்டுபோலாகிவிடும். நாங்கள் அப்படித்தான்  விளையாடி மகிழ்ந்தோம்.எங்களது புகைப்படங்களும் வீடியோவும் அப்படித்தான் காட்டுகின்றன.ஓராண்டு முடிக்கையில் எங்களைப்போல் இன்றுவரை யாரும்
Camp Fire கொண்டாடவில்லை.


அதுமட்டுமல்லாமல் வருடம் முழுவதும் ஆட்டமும் பாட்டமுமாக செலவிட்டாலும் எங்களது அரசுப்பணி மிகச்சிறப்பாக முடித்தோம்.இன்று சுமார் முப்பது வருடங்களாகியும் இன்றும் எங்களது குளிர்காலக் குழு உறுப்பினர்களில் காலதேவனின் மடியில் கலந்துவிட்ட இருவரைத்தவிர மீதி எல்லோரும் அவ்வப்பொழுது கலந்துரையாடுகிறோம்.அதுவே எங்களது வெற்றி.அதுவே இன்றைய இளைஞர்களுக்கு எங்களது செய்தி.

                                           வாழ்த்துக்களுடன்!!




















திங்கள், 18 ஜனவரி, 2021

                              மனம்  ஒரு மாயக்கண்ணாடி. 

எனது தென் துருவ அனுபவங்களை எழுத்தில் கொண்டுவரவேண்டும் என எடுத்துக்கொண்ட முயற்சிகள் 2007 ம் ஆண்டு '"வெண்பனிப்பரப்பிலும் சில வியர்வைத்துளிகள் " என்ற நூலாக m/s பழனியப்பா பிரதர்ஸ் அவர்களால் வெளியிடப்பட்டது.ரூ.150/ என்று விலையிடப்பட்டது.எழுதியவன் என்ற முறையில் எனக்கு இரண்டு புத்தகங்கள் இலவசமாகக் கொடுத்தார்கள். சில நாட்களுக்குள் பதிப்பகத்தாருக்கு 7500 பிரதிகளுக்கு ஆர்டர் கிடைத்தது.என்னை  அழைத்து ரூ25000/கொடுத்தார்கள்.

          பணத்தை எதிர்பார்த்து நான் எழுதவில்லையாதலால் மகிழ்வுடன் வந்துவிட்டேன்.தமிழ்நாட்டின் மூளை,முடுக்கெல்லாம் இந்த நூல் சென்றுவிட்டது.நாள் ஆக ஆக முன் பின் அறிமுகமில்லாத பலர் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்கள்.மிகவும் நேர்மையான இராணுவ வாழ்க்கை ஆழ்மனதில் பதிந்து விட்டதால் உண்மையை உண்மை என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் ஏற்பட்டதில்லை.

                  200 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் பல இடங்களில் அன்றைய அரசாங்க செயல்பாடுகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.தென் துருவப் பயணம் புறப்பட்டு 7-8 நாட்களில் கப்பல் பூமத்தியரேகையைக்கடந்து போய்க்கொண்டியிருந்தது.அப்பொழுது கப்பலிலிருந்து இந்திய தென் துருவ ஆய்வுத்தளம்"தக்க்ஷிங்கங்கோத்ரியை"த்தொடர்புக்கொண்டோம்.அப்பொழுது அங்கிருந்த தலைவரிடம் எனப்பற்றி சொல்லி எனது மகிழ்ச்சியைத்தெரிவித்தேன்.அதற்கு அவர்,அண்டார்க்டிக்கா ஒரு வெண்பனிச்சுடுகாடு,இங்கு வருவதற்கு ஏன் இப்படித் தவிக்கிறாய் ?என்றார்.நான் போனை வைத்துவிட்டேன்.அப்பொழுது ஏற்பட்ட எனது மனநிலை பற்றி நூலில் இப்படிக்குறிப்பிட்டிருந்தேன்,

           "எவன் ஒருவன் தனது பணியில் வேண்டாவெறுப்புடன் செயல்படுகிறானோ,அவன் விபச்சாரியைவிட மோசமானவன்.ஒரு மாபெரும் தேசத்தின் பிரதிநிதியாக உலக அரங்கில் அறிமுகப்படுத்தப் படுபவன் எவ்வளவு பெருமைப்படவேண்டும் ?நான் அன்றே முடிவுசெய்தேன்,என்னுடைய தலைமையில் இயங்கப்போகும் இந்தியாவின் ஐந்தாவது குளிர்காலக்குழு உலக வரலாறு படைக்கும்.எனது குழுவின் (மொத்தம் 15 பேர் )ஒவ்வொரு உறுப்பினரும் அவர்களது வாழ்க்கையின் ஒரு அற்புத பகுதியாக இந்த காலம் அமையும் ." 

               நூல் முழுவதும் செயல்பாடுகளின் விளக்கமும் இடையிடையே மனோதத்துவ கருத்துகளும்  இழையோடியிருக்கும்.இந்த நூலைப் படித்த ஒரு அன்பர் விருத்தாச்சலத்திருந்து தொலைபேசியில் அழைத்து சுமார் 40 நிமிடங்கள் பேசினார்.மிக அற்புதமான உரையாடல் அது.இன்றுவரை அவரை நான் சந்திக்க வில்லை.

                         இன்று (17-01 2021) காலை "தினமணி "நாளிதழ் படிக்கையில் மின்னல் போல் ஒரு வெளிச்சம் உள்ளத்தில் பரவியது."வாசிப்புக்கு விருந்து" என்ற தலைப்பில்  அவரைப்பற்றிய ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது ஆம்.சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எனது நூலைப்படித்துப் பாராட்டிய அந்த மா மனிதர் "பல்லடம் மாணிக்கம் "அவர்கள்தான்.

                      

           தினமணி ஒரு தரமான பத்திரிக்கை என்பதால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பான கட்டுரைகளும் தமிழ் மணி என்ற இலக்கிய பகுதியும் நான் விரும்ம்பிப் படிப்பேன்.

                      என்றாவது ஒருநாள் எனது சமூக ஆர்வம் பற்றியும் எனது நூல்கள் பற்றியும் தினமணியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன்.


                  பல்லடம் மாணிக்கம் அவர்கள் நூறாண்டுகாலம் நிறைவோடு வாழ இயற்கைத்துணைபுரிய பிரார்த்திக்கிறேன்.























வியாழன், 14 ஜனவரி, 2021

             இந்திய  இராணுவ தினம்-15 January.

ஒரு விபத்து போல எனது இராணுவ வாழ்க்கை  அமைந்தாலும்,உடலாலும்,மனதாலும்,வாக்காலும் நோக்காலும் இராணுவ வாழ்க்கையை மிக மிக மகிழ்வோடு நான் அனுபவித்து வாழ்ந்தவன்.எல்லைப்புற தனிமை வாழ்க்கை இயற்கையை ரசிக்கவும்,ஏராளமான தமிழ் இலக்கியங்களை படிக்கவும் கிடைத்த வாய்ப்பாக எடுத்துக்கொண்டேன்.



              1965 ஆண்டு ஆகஸ்ட் 28-29 தேதிகளில் பஞ்சாப் மாநிலம் அம்பாலா என்ற இடத்தில் 24 மணிநேர இராணுவ உடையில் போர்க்களத்தை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்த நேரம்...."சைனிக்சமாச்சார் "என்ற இராணுவ பத்திரிகையில் இதைப் படித்தேன், "The innocent Girl became a widow before she could become a woman."இதன் பொருள் உணர்ந்து சிந்திப்பதற்குள் 1965 ம் ஆண்டின் இந்திய-பாகிஸ்தானிய போர் முழக்கம் ஆரம்பமாகிவிட்டது.

                  சுமார் 30 ஆண்டுகள்  உருண்டோடிவிட்டது.சீருடை கலைந்து தெருவில் போகும் எண்ணற்ற மக்களில் ஒருவராக நான் கலந்துவிட்டாலும் "பெண்ணாக மாறுமுன்பே விதவையாக ஆக்கப்பட்டால் அந்த சிறுமி '"என்ற வரிகள் உள் உணர்வோடு கலந்துவிட்டது என்பதை நான் அறிவேன்.



          நாட்டுப்பற்று இருந்தாலும்,நாட்டின் பாதுகாப்புப்படையில் அங்கம் வகிக்க எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.அந்தப் பேரதிர்ஷ்ட்டம் "Men of Noble Birth "என்று  ஆங்கிலேயர்களால் விமரிசிக்கப்பட்ட ஒரு சிலருக்கே கிடைக்கிறது.அப்படிக் கிடைத்தவர்களில் பலர் என் கண்முன்னே மண் மேடுகளானார்கள்.1965.மற்றும் 1971 என்ற இரு போர்க்களங்கள் மட்டுமல்லாது எல்லைப்புறங்களில் இயற்கைக்கு கொடுமைகளுக்கும்,எதிரிகளின் நயவஞ்சக கொடுமைகளுக்கும் ஈடுகொடுத்த பலரும்கூட மண்ணோடு மண்ணாகிப் போனார்கள்.இன்றும் மண்ணாக்கிக் கொண்டிடுக்கிறார்கள்.அத தாக்கமே இந்த கற்பனைக்கதை.

                      ஒரு தேசத்தின் முதல் தர பாதுகாப்புப் பணியில் இருக்க ஒவ்வொரு இளைஞர்களும் பயிற்றுவிக்கப்படன்வேண்டும்.அப்படிப்பட்ட பயிற்சியை அதுபோன்ற வேல்வித் தீயிலிறங்கி  வெற்றியோடு திரும்பிய சத்திய புத்திரர்களால்தான் நடத்தமுடியும்.

            வாருங்கள் ! !அப்படிப்பட்ட சில மாமனிதர்களை சந்திப்போம்.

 இது "மண் மேடுகள் "என்ற எனது புதினத்திற்கான என்னுரை.இந்த நூலுக்கு அணிந்துரையாக முன்பே இரு மாமனிதர்களின் வழங்கிதைப் பதிவிட்டிருக்கிறேன். 

                            01october 2016............Mr.Harihara Subramanian.

                     07 April 2020.............Dr.Anbashakan,Tamil professor,Annamalai                                                                            university.

            வாசக அன்பர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்; இவைகளைப்படித்துவிட்டு தங்களது கருத்துக்களை பதிவிட்டால் முழு  நாவலையும் பகுதி பகுதியாகப் பதிவிடுகிறேன்.

                                                                      



                                     நன்றி.