சனி, 13 ஜனவரி, 2018


                            உருவமற்ற குரல்..........7

         சென்னையில் இராணுவ மருத்துவ மனை செயின்ட் தாமஸ் மவுண்ட் ல் இருக்கிறது.மருத்துவமனையில் சேர்ந்த 2-3 நாட்களில் கால் கட்டு பிரிக்கப்பட்டு  எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.கால் சரியாகிவிட்டது என்று Re medical categorization board நடத்த உத்திரவு இடப்பட்டது.
                  எதோ காரணத்தால் அது கால தாமதமாக இடையில் 1965 ம் ஆண்டு தீபாவளி வந்தது.கிராமத்தில் பெற்றோர்கள் கணேசன் ஒரு காலை இழந்துவிட்டான்  என்ற நினைவிலேயே இருந்ததால் இரண்டு நாட்கள் விடுமுறையில் போக விரும்பினார் .ஆனால் விடுமுறை மறுக்கப்பட்டது.
                         காலையிலிருந்து இரவு வரை அவுட் பாஸ் இரண்டு நாட்களுக்கு எழுதிவிட்டு கணேசன் பெற்றோரைப் பார்த்துவர போய்விட்டார்.இரவு பணிக்கு வந்த டாக்டர் கணேசன் மருத்துவமனையில் இல்லாதது குறித்து புகார் எழுதிக்கொடுத்துவிட்டார்.
                     மறுநாள் காலை இராணுவ தலைமையகத்திற்கும் காவல் நிலையங்களுக்கும் இராணுவ விதிமுறைப்படி "இராணுவ அதிகாரி ஓடிப்போய்விட்டார் " என்று தந்தி கொடுத்துவிட்டார்கள்.
                     மூன்றாம் நாள் காலை கணேசன் மருத்துவமனை வந்தார்.இராணுவ விதிகளின்படி அவர் குற்றவாளியாக உயர் அதிகாரிமுன் நிறுத்தப்பட்டார்.அதிகாரி Lt.Col Venkitaachalam கோபமாக ஏன் ஓடிப்போனாய் என்று கேட்டார்.கணேசன் போரில் அடிபட்டது, மூன்று மருத்துவமனை சுற்றியது,கிராமத்தில் பெற்றோர்களின் நிலை எல்லாவற்றையும் சொல்லி விடுமுறை மறுக்கப்பட்டதால் தான் ஊருக்குப்போய் பெற்றோர்களை பார்த்து வந்ததாக சொன்னார்.
                     கோபத்தோடு ஆரம்பித்த அதிகாரி கணேசன் மீது பரிதாபப்பட்டு உடனே அவரை  டிஸ்சார்ஜ் செய்யும்படிஉத்திரவிட்டார்.போர்க்களத்திலிருந்து
வெளிவந்தவர்களை திரும்பவும் அங்கு அனுப்ப முடியாது.பயிற்சி தளமான பெங்களூருக்குத்தான் அவர் போயிருக்க வேண்டும்.அனால் தவறாக அவரை அவரது படைப்பிரிவுக்கே அனுப்பிவிட்டார்கள்.
                      அவரது படைப்பிரிவு போரில் மகத்தான வெற்றி பெற்று பாகிஸ்தானுக்குள் சுமார் 20 கி.மீ.சென்று விட்ட நிலையில் போர் நின்றது.

                               


கணேசன் தனது படைப்பிரிவை கண்டுபிடித்து போய்ச்சேர்ந்தார். சியால்கோட் என்ற பாகிஸ்தான் பெரு நகரம் 20 கி.மீ.தூரத்திலிருக்குமிடத்தில்  அவர்கள் இருந்தார்கள். 
                  சுமார் ஒரு மாதம் போல் வெற்றிபெற்ற இடங்களில் சுற்றி வேலைகள் செய்தார் கணேசன். 1966 ம் ஆண்டு ஜனவரி 9 ம் நாள் ரூர்கி பல்கலைக்கழக த்தில்   ஆரம்பிக்கும் ஒரு பயிற்சிக்கு அவரை நியமித்து உத்திரவு வந்தது.
                இந்தியாவிலேயே பொறியியற் படிப்புக்கு பல்கலைக்கழகமாக இருக்கும் ரூர்கிக்கு வந்து சேர்ந்தார் கணேசன். 

  

புதன், 10 ஜனவரி, 2018


                  காலத்தால் அழியாத கல்வெட்டு 

          கணேசன் 1961 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் நாள் தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறையில் மேற்பார்வையாளராக பணியில் சேர்ந்தார்.பட்டுக்கோட்டை யில் பணியில் சேர்ந்த அவர் பின்னர் ஆவுடையார்கோவில் ,பேரளம் ,கொரடாச்சேரி போன்ற ஊர்களில் பணியாற்றிவிட்டு 1962 ம் ஆண்டு தஞ்சாவூருக்கு அருகில் மெலட்டூர் என்ற இடத்தில் கட்டப்படவிருந்த  Conversion of an Anaicut into a Regulator என்ற வேலைக்கு மாற்றப்பட்டு  மெலட்டூர் வந்து சேர்ந்தார்.
                     வெட்டாற்றின் குறுக்கே இது கட்டப்படவிருந்தது.விவசாயம் முடியும் தருவாயில் நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நீர்வரத்து நிறுத்தப்பட்டு  ஏப்ரல் -மே  மாதங்களில் வேலை முடிந்து நீர் திறந்துவிட வேண்டும்.
                 ஆற்றின் கரையிலிருந்த ஆய்வு மாளிகை கணேசனது தங்குமிடமாக மாற்றப்பட்டு வேலை ஆரம்பமானது.
                        அன்றைய தஞ்சாவூர் காங்கிரஸ் பிரசிடெண்ட் தான் ஒப்பந்தக்காரர்.எந்தவித பிரச்சினையுமில்லாமல் வேலை நடந்து முடிந்தது.செலவிடப்படாத சுமார் 2000 மூட்டை சிமெண்ட்டை ஒப்பந்தக்காரர் எடுத்துக்கொண்டு போய்விட்டார்.இதை எதிர்த்த எனக்கு அது காண்ட்ராக்ட் வேலை என்பதால் கணக்குப்படியான சிமெண்ட் அவருக்கு தரவேண்டியதுதான் என்கிறார்கள்.
                  மிகவும் உன்னிப்பான கவனத்தினால் ஏற்பட்ட மீதமான சிமெண்ட் டிபார்ட்மெண்ட்க்குத்தான் சொந்தம் என்ற எனது வாதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
                  மனம் வெறுப்படைந்த கணேசன் தண்ணீர் திறக்கும் நாளன்று நூறு இரண்டு ரூபாய் நோட்டுகளை ஆற்றில் வீசிவிட்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.                                 தஞ்சை நண்பர் தங்கமுத்து அவர்களுடன்

                 ராஜினாமாவை ஏற்காத அவர் உயர் அதிகாரி 1962 அக்ட்டோபர் - நவம்பரில் நடந்த சீன -இந்தியப்ப் போரையும் அதனால் ஏற்பட்ட அவசரகால நிலையையும் நினைவுபடுத்தி கணேசனை இராணுவத்திற்கு விண்ணப்பிக்கத் தூண்டினார்.
                 அதுவே கணேசன் வாழ்வில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது.இராணுவத்தேர்வுகள் கடுமையாக இருந்தாலும் அவர் தேர்வு பெற்று  1963 ம் ஆண்டு அக்டொபர் 9 ந்தேதி இராணுவப் பயிற்சியில் சேர்ந்து 1964 ம் ஆண்டு மே மாதம் 3 ம் நாள் பெருமைமிகு இந்திய இராணுவத்தில் அதிகாரியாக சேர்ந்தார்.
           இராணுவ வாழ்வில் இடை இடையே விடுமுறையில் வரும்போது தவறாமல் மெலட்டூர் சென்று தான் கட்டிய ரெகுலேட்டர் எப்படி இருக்கிறது என்று பார்த்து வருவார்.
             இன்று 2018 ம் ஆண்டு,55 ஆண்டுகள் ஆன  அவரது வேலை காலத்தைக்கடந்த கல்வெட்டாக நின்றுகொண்டிருக்கிறது.
                          இதோ ! அது உங்களுக்காக. !


                        இராணுவத்தில் சிறப்பாகப் பணியாற்றி இந்தியாவின் அண்டார்க்டிக்கா ஆய்வு தள  தலைவராகப் பணியாற்றி,குடியரசு தலைவரின் விருது பெற்று கணேசன் 1994 ம் ஆண்டு ஒய்வு பெற்றார்.

 குடியரசு தலைவர் விருது "வஷிஷ்ட்ட சேவா மெடல் "வழங்கப்படுதல்.

                                                             26 ஜனவரி 1994.
 

                          சக்கரம் சுழல்கின்றது.... 
                           அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது....

             பொதுப்பணித்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த கணேசன் 1964 ம்  ஆண்டு  May 03 ம் நாள் இராணுவத்தில் அதிகாரியாக மாற்றம் பெற்றார்.44 Field Park Company என்ற படைப்பிரிவில் பணி தொடங்கியபின் அது 4 Engineer Regiment என்று 02 june 1966 அன்று உரு மாற்றம்பெற்றது.
                காலமெனும் காட்டாறு கரைபுரண்டோடியது.1965 ல் பாகிஸ்தானுடனான போர் ,பின்னர் 1971ல் பங்களாதேஷ் தனி நாடான போர் என்றும்  அதே படைப்பிரிவுடன் பணியாற்றிய கணேசன் 1969ல் தனது பொதுப்பணித்துறை வேலையை ராஜினாமா செய்துவிட்டு இராணுவத்தில் நிரந்தர அதிகாரியானார்.
               பலமுறை இதே படைப்பிரிவுடன் பணியாற்றிய கணேசன் 1984 ம் ஆண்டு இந்த 4 Engineer Regiment ன் தலைவரானார்.அவருடைய மூன்றாண்டு தலைமையில் பல இளம் அதிகாரிகள் படைப்பிரிவில் சேர்ந்தார்கள்.அதில் ஒருவர் 2 L/t M N Devaya.                  இராணுவப் பொறியியற்கல்லூரியில் இளம் அதிகாரிகளை பயிற்றுவிக்கும் அதிகாரியாகப் பணியாற்றியிருந்த கணேசன் தன்னுடைய தலைமையின் கீழ் பணியாற்றும் ஒவொரு அதிகாரியையும் வருங்கால ஜெனெரல் ஆபீசர் என்றே நடத்தியிருக்கிறார்.
                             
                                      அன்றய கர்னல் கணேசன் மற்றும் தேவையா

                     காலம் உருண்டோட கணேசன் 1994 ம் ஆண்டு பணி  ஒய்வு பெற்றார்.
அவரிடம் பணியாற்றியவர்கள்  காலப்போக்கில் உயர்ந்து பல நிலைகளில் ஒய்வு பெற்றார்கள்.
                      இந்நிலையில் கணேசனுடைய மூத்த மகனும் இராணுவத்தில் அதிகாரியாகி அதே 4 Engineer Regiment ல் பணியாற்றி தற்பொழுது Lt Colonel  என்ற பதவியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
                  தங்களது மகனுடைய குடும்பத்துடன் சில நாட்கள் செலவிட பயணித்த கணேசனுக்கு ஒரு ஆச்சரியமும் அதிசயமும் அங்கு காத்திருந்தது.ஆம்.
                 அன்று அவர் தலைவராக இருந்த படைப்பிரிவு  அருகிலேயே தான் அவருடைய மகன் ஆனால் வேறொரு இடத்தில் பணியாற்றுகிறார்.இதில் பெரு மகிழ்ச்சி என்னவென்றால் அன்று அவரிடம் பணியாற்றிய  2 Lt Dvaya  அவர் எதிர்பார்த்தவிதமே மேஜர் ஜெனரல் என்ற உயர் பதவியில் பக்கத்திலேயே பணிமாற்றம் பெற்று வந்திருந்தார்.
              The Commanding Officer and his Subaltern
 
                   சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பெய்ததுபோல்  கணேசன் எல்லோரையும் சந்தித்து மகிழ்ந்தார்.
                       2018 ம் ஆண்டு முதல் நாள் மேஜர் ஜெனரல் அவர்கள் தனது அதிகார இல்லத்தில் கணேசனுக்கும் அவரது துணைவியாருக்கும் விருந்து கொடுத்து மகிழ்ந்தார்.கணேசன் மகனும்  அவரது படைப்பிரிவின்  இன்றைய தலைவரும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்கள் .
                                               First and second Generations

                                
 standing 1st Row
                             Maj Bhardwaj,coy cdr 13 Fd Coy.Col P K Chatterjee,Father of Col Rupam,
                                Mrs Ganesan,Mrs Devaya.
2nd row               Offr from 13 Fd Coy,Col Ganesan,Mrs.Rupam.
3 rd row                 Lt Col G Arvindhan,Maj Gen M N                     Devaya,Col Rupam Chatterjee.