இலையுதிர் காலம்.
மண்ணுலகில் இருக்கும் சொர்க்கத்தை மக்கள் தெரிந்து கொள்வதுமில்லை,புரிந்துகொள்வதுமில்லை.இந்த மண்ணின் வளத்தை குறிஞ்சி,முல்லை,மருதம் ,நெய்தல் ,பாலை என ஐந்து வகையாகப் பிரித்து அவைகளுக்கான இலக்கணத்தை வகுத்து வாழ்ந்தனர் நம் முன்னோர்கள்.
குறிஞ்சி என்பது மலையும், மலை சார்ந்த இடமும் ஆகும். உதாரணமாக, ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம், ஏற்காடு போன்ற மலைப்பிரதேசங்கள் குறிஞ்சி நிலம் ஆகும். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் முருகனை வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்களைக் "குறவர்" என்று கூறுவர். இவர்களது தொழில் "தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்" ஆகியன. மலை நெல், தினை ஆகியன இவர்களின் உணவுகள். அகில், வேங்கை ஆகியவை குறிஞ்சி நிலத்தின் மரங்கள். குறிஞ்சி மலர், காந்தள் ஆகிய பூக்கள் இங்கே பூக்கும். கிளி, மயில், புலி, கரடி, சிங்கம் ஆகியவை இங்கு வசிக்கும் பறவைகள் & விலங்குகள் ஆகும்.
முல்லை என்பது காடும், காடு சார்ந்த இடமும் ஆகும். முல்லை நில மக்கள் வணங்கிய தெய்வம் திருமால் ஆவார். இங்கு வாழ்ந்த மக்களை "ஆயர்" என்று கூறுவர். இவர்களது தொழில் "ஏறுதழுவுதல், நிரை மேய்த்தல்" ஆகியன. அதாவது, ஏர் உழுதல், பசு மேய்த்தல் ஆகியன ஆகும். வரகு, சாமை ஆகியன இவர்களின் உணவுகள். கொன்றை, காயா ஆகியவை முல்லை நிலத்தில் வளரும் மரங்கள். முல்லை மலர், தோன்றி ஆகிய பூக்கள் இங்கே பூக்கும். காட்டுக் கோழி, மயில், முயல், மான், புலி ஆகியவை இங்கு வசிக்கும் பறவைகள் & விலங்குகள் ஆகும்.
மருதம் என்பது வயல், வயல் சார்ந்த இடமும் ஆகும். உதாரணமாக, தஞ்சாவூர் அருகே உள்ள வயல் சூழ்ந்த இடங்கள் மருதநிலம் ஆகும். மருதநில மக்கள் வணங்கிய தெய்வம் இந்திரன் ஆவார். இங்கு வாழ்ந்த மக்களை "உழவர்" என்று கூறுவர். இவர்களது தொழில் "நெல்லரிதல், களை பறித்தல்" ஆகியன. செந்நெல், வெண்னெல் ஆகியன இவர்களின் உணவுகள். காஞ்சி, மருதம் ஆகியவை மருதநிலத்தில் வளரும் மரங்கள். செங்கழுநீர், தாமரை ஆகிய பூக்கள் இங்கே பூக்கும். நாரை, நீர்க்கோழி, அன்னம், எருமை, நீர்நாய் ஆகியவை இங்கு வசிக்கும் பறவைகள் & விலங்குகள் ஆகும்.
நெய்தல் என்பது கடலும், கடல் சார்ந்த இடமும் ஆகும். உதாரணமாக, திருச்செந்தூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களை ஒட்டிய கடல் பகுதி நெய்தல் நிலம் ஆகும். நெய்தல் நில மக்கள் வணங்கிய தெய்வம் வருணன் ஆவார். இங்கு வாழ்ந்த மக்களை "பரதன்" என்று கூறுவர். இவர்களது தொழில் "மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்" ஆகியன. மீன், உப்பு விற்று அதன் மூலம் கிடைத்த பொருள் இவர்களின் உணவு. புன்னை, ஞாழல் ஆகியவை நெய்தல் நிலத்தில் வளரும் மரங்கள். தாழை, நெய்தல் ஆகிய பூக்கள் இங்கே பூக்கும். கடற்காகம், முதலை, சுறா ஆகியவை இங்கு வசிக்கும் பறவைகள் & விலங்குகள் ஆகும்.
பாலை என்பது மணல், மணல் சார்ந்த இடமும் ஆகும். பாலை நில மக்கள் வணங்கிய தெய்வம் கொற்றவை (துர்கை அம்மன்). இங்கு வாழ்ந்த மக்களை "எயினர்" என்று கூறுவர். பாலை நிலத்தில் விவசாயம் எதுவும் செய்யமுடியாது. ஆகையால், "வழிப்பறி செய்தல்" மட்டுமே இங்கு வாழ்ந்த மக்களின் தொழில். சூறையாடலால் கிடைக்கும் பொருளை, இவர்கள் உணவாக உண்டனர். இலுப்பை, பாலை ஆகியவை பாலை நிலத்தில் வளரும் மரங்கள். குரவம், பாதிரி ஆகிய பூக்கள் இங்கே பூக்கும். வலிமை இழந்த யானை, புறா, பருந்து ஆகியவை இங்கு வசிக்கும் பறவைகள் & விலங்குகள் ஆகும்.
இதற்கு மேலும் நமது கிராமங்களைப்பற்றி சொல்ல வேண்டுமா ? இப்படிப்பட்ட கிராமத்தில் பிறப்பது நமது தவப்பயன்.
- கார்காலம்: இது தமிழ் மாதமான ஆடி, ஆவணி யை உள்ளடக்கியது.
- குளிர்காலம்: இது தமிழ் மாதமான புரட்டாசி, ஐப்பசி யை உள்ளடக்கியது. இலைகள் கூம்பி உதிர்வது கூதிர் எனப்படும்.
- முன்பனிக்காலம்: தமிழ் மாதமான கார்த்திகை, மார்கழி யை உள்ளடக்கியது.
- பின்பனிக்காலம்: இது தமிழ் மாதமான தை, மாசி யை உள்ளடக்கியது.
- இளவேனில்காலம்: இது தமிழ் மாதமான பங்குனி, சித்திரை யை உள்ளடக்கியது.
- முதுவேனில்காலம்: இது தமிழ் மாதமான வைகாசி, ஆனி யை உள்ளடக்கியது.
பண்டைத் தமிழ் மக்கள் மாறிமாறி வரும் பருவ காலங்களைக் காலத்தின் மாற்றங்களாக மட்டும் கருதாமல் மக்கள் வாழ்வியலுடனும், அவர்கள் வாழும் நிலத்துடனும் பிணைத்துப் பார்த்தார்கள். தமிழர் நிலப் பிரிவுகளான முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை போன்றவற்றுக்கு உரித்தான பருவகாலங்களைப் பற்றித் தொல்காப்பியம் பேசுகிறது. இதன்படி, முல்லை நிலத்துக்குக் கார் காலமும்; குறிஞ்சி நிலத்துக்குக் கூதிர் காலமும், முன்பனிக் காலமும்; மருதத்துக்கும், நெய்தலுக்கும் எல்லாப் பருவகாலங்களும், பாலை நிலத்துக்கு இளவேனில், முதுவேனில், முன்பனி ஆகிய காலங்களும் உரியவை.[1]
இலையுதிர்காலம் என்பது நான்கு மிதவெப்பநிலை நிலவும் பருவங்களில் ஒன்றாகும். கோடைகாலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாற்றம் நடைபெறுகையில் இலையுதிர்காலம் ஏற்படுகிறது. குறிப்பிடும்படியாக இரவு முன்கூட்டியே வந்தடையும் போது, வழக்கமாக மார்ச் மாதத்தில் அல்லது செப்டம்பரில் (வடகோளப்பகுதி) இலையுதிர்காலம் உண்டாகிறது.
மனித வாழ்க்கையிலும் இலையுதிர்காலம் உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். மனம்,புத்தி,,சித்தம் ,அஹங்காரம் என்ற அந்த கரணங்களை நாம் செம்மையாக உபயோகப்படுத்தியிருந்தால் இந்த இலையுதிர்காலம் நம்மை அதிகக் கஷ்டப்படுத்தாது.
வாழ்வின் இளமைப்பருவத்தில் ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் நாம் இருந்து முதுமையில் பின்னோக்கிப்பார்த்து வருத்தம் கொள்வதை விட மகிழ்ச்சி கொள்ளவேண்டும். ஏனெனில் எண்ணங்களுக்குத்தான் நாம் உரிமையாளர்களேயொழிய அதன் விளைவுகள் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.
ஆகையினால் வாருங்கள்,முதுமையை மகிழ்வோடு வரவேற்போம். திறமையை வளர்த்து,அதன் காரணமாக செல்வத்தை
சேர்த்தவர்கள்,வறியவர்களுக்கு வாரி வழங்குங்கள்.
ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பொருள் சேர்க்கவேண்டும் என்ற பேராசை கணேசன் மனதில் எழவேயில்லை. அதற்க்கு மாறாக எனது வாழ்க்கைப் பாதயில் நடந்துபாருங்கள் என்று உலகுக்குச் சொல்வதுபோல் "அகத் தூண்டுதல் பூங்கா "அமைத்து உலக்கோரை அழைக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக