வெள்ளி, 13 செப்டம்பர், 2024

                          சீருடையணிந்த  சூறாவளி-3

              தமிழ்நாட்டின் பொதுப்பணிதுறை பொறியாளரான பாவாடை கணேசன் யாரும் கற்பனைக்கூட  செய் திராத விதத் தில் பொருள்மீதோ செல்வம் சேர்ப்பதிலோ ஆவல் இல்லாமல் வளர்ந்தார். இதனால் பொதுப்பணிதுறை வேலையில் அவருக்கு விருப்பமில்லைஅந்நிலையில் இந்தியா-சீனா பேரும் அதன் காரணமாக ஏராளமான இராணுவத்தினர் உயிழப்பும் நேர்ந்தது. நாட்டில் அவசரகாலநிலை பிரகடனப்ப படுத்தி இராணுவம் மிகப்பெரும் அளவில் விரிவுவுபடுத்தப்பட்டது. மத்திய அரசிலும் மாநில அளவிலும் பணியாற்றுவோரில் தகுதியானவர்களை இராணுவ அதிகாரிகளாக வரும்படி சுற்றறிக்கை விடப்பட்டது. 

                           பொதுவாக  வீர தீர விளையாட்டுகளில் ஆர்வம் மிகுந்த கணேசன் இதுவே சரியான சந்தர்ப்பம் என்று முடிவெடுத்து இராணுவததேர்வுகளுக்கு சென்றார். அதிர்ஷ்ட்டவசமாக அவர் தேர்வு செய்யப்பட்டார். 

                          காலமெனும் காட்டாற்று வெள்ளம் கறை புரண்டோடியது. சிறந்த நீச்சல் வீரரான கணேசன் இக்கறைக்கும் அக்கறைக்குமாக நீந்திவிளையாடலானார்.உடல ளவிலும் மனதளவிலும் வலுவானவரான கணேசன் இராணுவ செயல் பாடுகளிலும் சிறந்து விளங்கியதால் தான் உண்மைக்குப் புறம்பான செயல்களில் நாட்டமின்றி பணியாற்ற ஆரம்பித்தார். இராணுவ ஒழுங்குமுறைகளை மிகவும் கண்டிப்புடன் நடைமுறைப் படுத்தலானார். 

                            இதனால் மறைமுகமாக அவருக்கு சில எதிரிகள் தோன்ற ஆரம்பித்தனர்.


                   இது ஒரு  warning letter. இந்த கடிதம்  கிடைத்தபின் சுமார் 2000  இராணுவத்தினரிடையே இக்கடிதாதைப் படிததுகாண்பித்தார். இதற்கிடையில் கடிதம் எழுதியவரைக் கண்டுபிடித்துவிட்டார். ஏனென்றால் கடிதம் எழுதிய  பிறக்கும் கர்னல் கணேசன் தனது நடவடிக்கைகளில் தீவிரமாக இருந்ததால் கடிதம் எழுதியவர் மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டார்.

                கர்னல் கணேசனுக்கு தனது நடவடிக்கைகள் இராணுவத்தினர் மத்தியில் சிறந்தமாற்றத்தையேதான் தரும் என்பதில் அவருக்கு கொஞ்சமும் சந்தேகம் இல்லை.இராணுவத்தினரிடையே  கர்னலது நடவடிக்கைகள் அவர்களது சிறந்த எதிர்காலத்தை க் காட்டியது என்றால் மிகையில்லை.


            ஓய்வு பெற்றபின்னரும் கர்னல் கணேசன் சக இராணுவத்தினருக்கு தன்னாலான  உதவிகளை செய்துவருக்கிறார்.






                                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக