ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

                                        சீருடையணிந்த  சூறாவளி.-2

              இராணுவத்தைப்பற்றி  கனவில் கூட நினைத்திராத கர்னல் கணேசன் ஒரு விபத்துபோல  இராணுவ அதிகாரியானது மட்டுமில்லாமல் தன்னிகரற்ற தலைவவனாக பணியாற்றிக்கொண்டிருந்தார் .அவரையறியாமலேயே " Colonel Tornado " :"என்ற  அடைமொழி வந்து ஒட்டிக்கொண்டது.





              1990 ம் ஆண்டு மார்ச் 2 ம் நாள் இந்தியக் குடியரசு தலைவரின் "கொடி வழங்கு விழா" நடத்த M E G Bangalore  தயாராகிக்கொண்டிருந்தது.அந்த சமயத்தில்தான் கர்னல் கணேசன் தனது அண்டார்க்டிக்கா டெபுடேஷன் பயணம் முடித்திருந்தார்.காக்கை உட்கார பனம் பழம் விழுந்ததுபோல்  கர்னல் கணேசன் பயிற்சிப் படைப்பிரிவு தலைவராக பெங்களூரு வந்து சேர்ந்தார்.

                    குடியரசு தலைவரின் விழா சிறப்பாக நடந்து முடிந்தது.சற்றே நிறுத்தி வைத்திருந்த மற்ற ரெஜிமெண்ட்டால் நிகழ்வுகள் விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்தன.

   On 24 February 1944, during the Allied campaign in Italy Sub Subramaian had won the George Cross at Mignano by throwing himself onto a mine about to detonate and thus successfully protecting others from the blast. His award was gazetted posthumously on 30 June 1944. He was also awarded the Indian Distinguished Service Medal.

          அன்று முதல் எம்.இ ,ஜி யின் இளநிலை அதிகாரிகள் ஒவ்வொரு வருடமும் சுப்பிரமணியம் நினைவு நாள்  அனுசரித்து வருகிறார்கள்.

                         1991.ம் ஆண்டு பிப் 24 அன்று வழக்கம்போல் சுப்பிரமணியம் நினைவுநாள் அனுசரிக்க ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன.இளநிலை அதிகாரிகளின் நிர்வாகம் பயிற்சிப் படைப்பிரிவு-1 ன் கீழ் இருந்தது.ஆகையினால் வயது முதிர்ந்த ஓய்வுபெற்ற அவர்களின் தலைவராக இருக்கும் ஒரு அதிகாரி கர்னல் கணேசனிடம் வந்து அந்த ஆண்டு சுப்பிரமணியம் நினைவுநாள்  மிகவும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

                     சுபேதார் சுப்பிரமணியம் பற்றிய கோப்புகளில் அவர் காஞ்சீபுரத்திற்கு அருகில் உள்ள "கீழ ஒத்திவாக்கம் "  என்ற ஊரைச்சேர்ந்தவர்  என்பதுமட்டுமே இருந்தது.இளநிலை அதிகாரிகளின் தலைவரை அழைத்து சுப்பிரமணியம் மனைவி ,பிள்ளைகள் போன்ற விபரங் களைக்  கொண்டு வரும்படி சொல்லி மூன்றுநாட்கள் நேரம் கொடுத்திருந்தார்.

                   மூன்றாம் நாள்  அந்த இளநிலை அதிகாரிகளின் தலைவரை அழைத்து விபரங்கள் கேட்டார்.அதற்கு அவர் ," ஐயா,சென்ற 46 வருடங்களாக சுப்ர்மானியம் நினைவு நாளில் எந்த மாற்றமும் இல்லை.ஒவ்வொரு வருடமும் அவருடைய புகைப்படம் வைத்து பூஜை செய்து விட்டு,அவருடன் பணியாற்றியவர்கள்,அவரது இராணுவ அறிமுகமானவர்கள் போன்றோர்களின் இரங்கல் உரையுடன் நிகழ்ச்சிகள் முடிந்துவிடும்.இதைத்தவிர சுப்பிரமணியம் பற்றிய வேறு விபரங்கள் எங்களுக்குத் தெரியாது. என்று முடித்தார்.




                 கர்னல் கணேசன் தன முன்னிருந்த மேஜையின் ட்ராயரைத் திறந்து ஒரு கவரை எடுத்து சுமார் பத்து புகைப்படங்களை எடுத்து வெளியில் வைத்தார்.எல்லாம் சுப் .சுப்ரமணி யனுடையது. அந்த இளநிலை அதிகாரிகளின் தலைவர் கண்கள் விரிய உற்று பார்த்துக்கொண்டு  இதெல்லாம் ஏது  ஐயா ?  என்று ஆச்சரியத்துடன் கேட்டார். இங்குதான் கர்னல் கணேசன் "கர்னல் டோர்னடோ" என்று  பெயரெடுக்கிறார்.

                      இளநிலை அதிகாரிகளின் தலைவரிடம்  இரண்டு நாட்களில் சுப் .சுப்ரமனின் மேலும் விபரங்களுடன் வரவேண்டும் என்று கர்னல் கணேசன் கட்டளையிட்டார் இல்லையா ? சென்ற 46 வருடங்களாக  சேகரிக்க முடியாத விபரங்களையா இவர் கொண்டுவர போகிறார் என்ற சந்தேகம்  கணேசனுக்கு இருந்தது.மறுநாள் காலை ஒரு காமெராவை எடுத்துக்கொண்டு கணேசன் காஞ்சீபுரம் சென்றார்.அங்கிருந்து ஒரு ஆட்டோவில் "கீழ ஒத்திவாக்கம் " சென்றார்.அங்கு சுப்பிரமணியனின் வீடு,உறவினர்கள் எல்லாம் இருக்கிறது.சுப்பிரமணியனின் தந்தையும் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி.விபரங்களை சேகரித்து,புகைப்படம் எடுத்துக்கொண்டு நேரே சென்னை சென்று சுரமணியன் மகன் "துரைலிங்கம்"  அவர்களை சந்தித்து அவரது தந்தையின் நினைவுநாளில்  பெங்களூர்  வந்து கலந்துகொள்ளும்படி அழைப்பு கொடுத்துவிட்டு இரவே கணேசன் பெங்களூர் வந்துவிட்டார்.

                        எதிரே நின்றுகொண்டிருந்த இளநிலை அதிகாரிகளின் தலைவரிடம் மேலும் விபரங்கள் சொல்லி 24 Feb 1991 வரலாற்று புகழ் மிக்கத்  திருப்புமுனையாக அமைய ஆகவேண்டிய வேலைகளை செய்யும்படி கட்டளையிட்டார்.




                  சுரமணியனின் மகன் சென்னையிலிருந்து உடனடியாக கர்னல் கணேசனுக்கு ஒரு நன்றி  கடிதம்  எழுதியிருந்தார்.46 வருடங்களாக சுப்ரமணியனின்  ஒரே மகனான துரைலிங்கத்திற்குக்கூட  தெரியாமல்  அவரது நினைவுநாள்  எம் .இ .ஜி  யில்  அனு சரிக்கப்பட்டது  என்பது  எவ்வளவு பெரிய அவமரியாதை.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக