செவ்வாய், 9 ஏப்ரல், 2013

வாழ்க்கையில், நாம் கற்றது கைம்மண்ணளவு

மாற்றங்களை ஆர்வத்தோடும் அக்கறையோடும் கவனித்து வருவது
அதிகாரியாக இருந்தாலும்ம் சிப்பாயாக இருந்தாலும்
அத்தியாவசிமாகும்
கல்வி எல்லையற்ற ஒரு பெருங்கடல். நீந்த நீந்தக் கடல் வளர்ந்து செல்லும்,. ஓங்கி எழுகின்ற ஒவ்வோர் அலையும் நமக்குச் சொல்வது ஒரே ஒரு செய்திதான். காலம் முழுவதும் நமது கம்வித் தகுதியைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். நேற்று நீங்கள் பெற்ற புகழாரம் இன்று பழையதாகிவிட்டது. இன்று மீண்டும் ஒரு புகழாரம் பெற நீங்கள் பாடுபட வேண்டும். இதைத்தான் ஒவ்வொரு அலையும் நமக்கு அறிவிக்கின்றது

இராணுவத்தில் இருக்கும் நமக்கெல்லாம் தெரியும், போர் முறைகள் அன்றாடம் மாறுகின்றன. போரிடுவதற்கான புதுப் புது வழி முறைகளும் ஆயுதங்களும் வெடி பொருட்களும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய்க் கண்டுபிடிக்கப்படுகின்றன.
மாற்றங்களை ஆர்வத்தோடும் அக்கறையோடும் கவனித்து வருவது அதிகாரியாக இருந்தாலும் சிப்பாயாக இருந்தாலும் அத்தியாவசியம். நாளைக்கு எதிரி ஒரு புதிய ஆயுதத்துடன் போரிட வந்தால் அதை எதிர்த்துத் தாக்கி அழிப்பது எப்படி என்று அறிந்திருக்க வேண்டும். 

அதில் தவறினால்கடைகளில் தூங்கினவன் முதல் இழந்தான்; போர்ப் படைகளில் தூங்கினவன் வெற்றி இழந்தான் என்ற கதையாகிவிடும். நாம் அறிந்து கொள்ள வேண்டியவ்பற்றை அன்றாடம் எந்த வகையிலாவ்பது தேடி அறிய வேண்டியது இன்றைய மனிதனுக்கு மிகவும் அவசியம்.
                                                                                                                                                                                                      கர்னல். பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு )                                                      

1 கருத்து:

  1. எந்தத் துறையினரும் தம்மை அன்றாட மாறுதல்களுக்கு ஏற்பப் புதுப்பித்துக் கொள்ளாவிட்டால், தமக்குரிய அங்கீகாரத்தை இழந்துவிட நேரும்.
    இராணுவமும் அதற்கு விதிவிலக்கன்று.

    தாங்கள் சொல்வது உண்மையே.

    நன்றி.

    பதிலளிநீக்கு