சனி, 6 ஏப்ரல், 2013

தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும் !

 உத்தேசத்தில் நீங்கள் சுத்தியோடு இருந்து எதைக் கேட்கிறீர்களோ
அது உங்களுக்குக் கிடைக்கும். நிச்சயமாக  உடனே  அது
கிடைக்கவில்லை என்றால் இறைவனின் கருணையை
இடைவிடாது தேடிக்கொண்டே இருங்கள்.

 ’தட்டுங்கள் திறக்கப்படும்’ என்பது ஒரு ஞான குருவின் வாசகம். கதவு மூடப்பட்டிருக்கும்போது தட்டவேண்டும் என்பதும், கிடைக்காதபோது தேடவேண்டும் என்பதும், தேவையானபோது கேளுங்கள் என்பதும் அதன் தொடர்பான மணி மொழிகள். இந்த வாசகம் கேளுங்கள் கொடுக்கப்படும்; தேடுங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் திறக்கப்படும் என்ற வரிசையில்தான் அமைந்திருக்கின்றன. இறைவன் எல்லோர்க்கும் எல்லாமும் வாரி வழங்கும் வள்ளல். உங்கள் தேவைகள் என்னவென்று அவன் நன்றாய் அறிவான். பொதுவாக மனிதர்களாகிய நாம் அறிவு மயக்கத்தால் தேவை எதுவோ அதை விட்டு விட்டுத் தேவையில்லாததைதான் கேட்போம். தேடுவோம். அதற்காக ஆலயத்தின் கதவுகளைத் தட்டுவோம். தேவையானது கிடைக்கவில்லையே என்று மனதை அலட்டி அலட்டி வருத்தப்படுவோம்.

உண்மையிலேயே உங்கள் அத்தியாவசியத் தேவை என்ன என்று உங்களுடைய அடிமனதிற்கு நன்றாகத் தெரியும். அதைக் கேளுங்கள். இறைவனிடம் கேளுங்கள். அவன் இல்லையென்று மறுப்பதே இல்லை. நீங்கள் மீனைக் கேட்டால் எந்தத் தந்தையாவது பாம்பையா உங்களுக்கு வழங்குவார் ? உத்தேசத்தில் நீங்கள் சுத்தியோடு இருந்து எதைக் கேட்கிறீஈர்களோ அது உங்களுக்குக் கிடைக்கும் நிச்சயமாக. உடனே அது கிடைக்கவில்லை என்றால் இறைவனின் கருணையை இடைவிடாது தேடிக் கொண்டே இருங்கள். தொடர்ந்து உங்கள் கரங்கள் இறைவனின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கட்டும். கிடைக்கவேண்டியது தானே உங்களுக்குக் கிடைக்கும்.
 
கர்னல். பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு )

 


1 கருத்து:

  1. விவிலியத்தின் ஒற்றை வாசகத்திற்கு உங்கள் பாணியில் நீங்கள் அளித்த பொழிப்புரை வெகுசிறப்பு.

    நன்றி.

    பதிலளிநீக்கு