வெள்ளி, 19 ஏப்ரல், 2013

செயலுரிமைக் கட்டளையும் செயலாக்கமும்

தங்களது தலைமைப் பண்பு பாராட்டப்பட்டு

அதன் காரணமாக அளிக்கும் பரிசுதான்

செயலுரிமைக் கட்டளை.

காலம் வளர வளர இந்தக் கூட்டு மதிப்பு 

உயர வேண்டுமே தவிர குறையக் கூடாது.

commission  என்பது குடியரசுத் தலைவரின் செயலுரிமைக் கட்டளையாகும். பயிற்சிக் காலத்தில் நீங்கள் காட்டிய செயலாக்கத் திறன் , நேர்மையான அணுகுமுறை, சிந்தனை சக்தி, உடல் மற்றும் மன வலிமை, தேசப்பற்று,  தியாக மனப்பான்மை, புதிய சூழ்நிலையிலும் புதிய மனிதர்களுடன் ஒத்துப் போகக் கூடிய மனப்பான்மை போன்றவற்றின் கூட்டு மதிப்பாக தங்களது தலைமைப் பண்பு பாராட்டப்பட்டு, அதன் காரணமாக அளிக்கும் கட்டளைதான் செயலுரிமைக்கட்டளை.

காலம் வளர வளர இந்தக் கூட்டு மதிப்பு உயரவேண்டுமே தவிர குறையக் கூடாது. வாய்மை தவறாமை என்ற குணம் ( LOYALTY ) நான்கு பரிமாணங்கள் கொண்டது என்றாலும், முதல் பரிமாணம் தனக்குத்தானே வாய்மை தவறாமை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதைத்தான்,
"தன்னெஞ்சறிவது பொய்யற்க: பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்"
என்றார், பொய்யா மொழியார். 

நமக்கு நாமே உண்மையோடு இருப்பதிலிருந்து அபூர்வமான ஆத்மசக்தி பிறப்பதை நாமே அறியலாம். அதுதான் பாராட்டிற்குரிய தலைமைப் பண்புக்கு அஸ்திவாரமாக விளங்குகிறது.

கர்னல்.பா.கணேசன், B.Tech.  V.S.M ( ஓய்வு )

1 கருத்து:

  1. குறளுக்குத் தன்னனுபவத்தில் இருந்து தந்த உரை பரிமேலழகியத்தைக் காட்டிலும் எனக்கு இனிக்கிறது.

    தொடருங்கள்.

    நன்றி

    பதிலளிநீக்கு