வெள்ளி, 5 ஏப்ரல், 2013

இராணுவ வாழ்க்கையில் கேளிக்கை விளையாட்டுகள் !

விளையாட்டு வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல. அது உங்களை முழுமைப்படுத்தும் பயிற்சிக்கூடம்.

இராணுவ வாழ்வில் கேளிக்கைகளும் விளையாட்டுகளும் ஓய்வுபெறும் காலம் வரை தொடர்வன. கேளிக்கையாகவே நாளினினைப் போக்கிட கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் பெறுவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விளையாட்டுகளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் உங்கள் ஆழ்மனதின் ஆக்கபூர்வமான உணர்வுகளைத் தூண்டி உங்களை நல்வழிப்படுத்தும். வெற்றி பெற்ற வீரர்கள் தோல்வி விளையாட்டு விளையாடுவதில்லை. அப்படித் தோல்வி ஏற்படும்பொழுது அது வெற்றிக்கான பயிற்சியே என்றும் மனதில் கொண்டு நம்மை நாமே திடப்படுத்திக் கொள்ளத் தயங்கக் கூடாது.

விளையாட்டு வெறும் பொழுதுபொக்கு மட்டும் அல்ல. அது உங்களை முழுமைப்படுத்தும் ஒரு பயிற்சிக்கூடம். வாழ்க்கை இராணுவப் பணியோடு முடிவதில்லை. அதற்கு அப்பாலும் உண்டு என்பதையும் இந்தப் பணிக்காலம் முழுவதும் நீங்கள் பெறும் அந்த விளையாட்டு அனுபவம் கூட மற்றொரு ஞானபீடத்தில் உங்களை ஏற்றி வைக்க இறைவன் ஏற்படுத்தித் தரும் படிற்சியாக அமையலாம்.   

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு )

1 கருத்து:

  1. குழுவாகச் செயல்படல், ஒருவருக்கொருவர் ஒத்துழைத்தல், இலக்கை அடைய ஒன்றிணைந்து முயல்தல், என போருக்குரிய பல்வேறு பண்புகளும் விளையாட்டிலும் உள்ளன.
    ஆம்,
    அது ஞானபீடத்தில் அமர்த்த இறைவன் ஏற்படுத்தும் படியும் பயிற்சியும் ஆகும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு