செவ்வாய், 26 ஏப்ரல், 2016

                                   வணக்கம்  நண்பர்களே!
கர்னல் கணேசன் என்று வலை நண்பர்களுக்கு அறிமுகமான நான் பிறர் உதவியுடன்தான் எனது பதிவுகளை இதுவரை எழுதிவந்தேன்.
       அகத்தூண்டுதல்கள் என்ற தலைப்பில் நூறு பாராக்கலில் சுமார் 26 பாராக்கள்தான் பதிவுசெய்யப்பட்டன.இதன் கடைசிப் பதிவு "பலகோணப் பரிசோதனை" என்பதாகும்.
      தமிழில் பதிவு செய்ய ஒரளவு கற்றுக் கொண்டதால் இனி எனது எழுத்துக்களை வலை நண்பர்கள் தாராளமகப் படிக்கலாம்.
ஆங்கிலத்தில் "Colonelganesan.in" என்ற வலைப்  பதிவை நண்பர்கள் படிக்கலாம் .இந்த இணைப்பும்
உதவியாக இருக்கலாம்.

                                 26.பட்டப் படிப்பும் பழக்க                        .
வழக்கங்களும்.

அறிவுத்திறன்  எல்லாமே  கல்விச்சாலையில் பெறப்படுவதில்லை.கல்விச்சாலையில் பெறும் பட்டங்கள் வாழ்வின் வெற்றிக்கு முழு காரணங்கள் ஆவதில்லை.வகுப்பறையிலும் பல செயல்முறை விளக்கக் கூடங்களிலும் பெறமுடியாத அறிவுத்திறனை சுற்றுப்புற சூழ்னிலையால்,வாழ்வில் நாம்  சந்திக்கும் மனிதர்கள் மூலம் பெறமுடியும்.அப்படிப்பட்ட அறிவாற்றல் கல்வித்தகுதி என்ற சானைக்கல்லினால் கூர்மைப்படுத்தப்படுகிறது.அதை  மனதில் கொண்டால் ஒவ்வொரு  நாளும் நடக்கும் நிகழ்ச்சிகள்,சந்திக்கும் மனிதர்கள்  ஏதோ ஒரு அறிவுத்திறனை போதிக்கின்றனர் என்று புரிந்துகொள்ளலாம்.  தற்பொழுது பட்டம் பெற்று வெளிவரும்  மாணவர்கள் அதைப் பெரிதும் பொருட்படுத்துவதில்லை.காரணம்  வழங்கப்பட்டது வெறும் பட்டம்தானே  தவிர வாழ்க்கைக்கான உத்திரவாதம் அல்ல என்று உள்ளூர அவர்கள் உணர்ந்திருக்கிரார்கள்.அறிவுத்திறன் ஒவ்வொரு நாளிளும்.ஒவ்வொரு நிகழ்விலும் ஒளீந்திருக்கிறது.கண்டுபிடித்தால் நீங்கள் வெல்வது சுலபம்

2 கருத்துகள்:

  1. தமிழ் தட்டச்சு கற்று
    தமிழ் வலைக்கு வரும் தங்களை
    அன்போட வரவேற்கிறோம்
    வாருங்கள் வாருங்கள்

    பதிலளிநீக்கு