புதன், 27 ஏப்ரல், 2016

                             

27.  தலைமைத் தகுதிக்குத்                        தயாராகுங்கள்.

    கல்லுரிப்  பட்ட்ங்கள் பெற்றிருந்தாலும், பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்திருந்தாலும்  செயலுரிமைக்கட்டளைப் பெற்றிருந்தாலும் தலைமைத்தகுதிக்கு  நீங்கள் ஏற்றவர்தானா?     கேளுங்கள் உங்கள் மனசாட்சியை. அது பதில் சொல்லும். இராணுவம் என்ற பணி மற்ற பணிகளைப்  போல்  யந்திரங்களுடனும் காகிதங்களுடனும் கண்க்குவிகிதங்களுடனும்  ஈடுபட்டு வெற்றி காணும்  பணி அல்ல.அங்கு மனித்ர்களோடு, அவர்களது  மனமுவந்த உயிர்த்தியாகத்தோடு  போராடும் தலைவன் தேவைப்படுகிறான்.கையில் பிரம்புடன் துருப்புகளின் பின்னின்று விரட்டுபவனைவிட மனதில் தைரியத்துடன் முன்னின்று வழி நடத்தும்  தலைவனையே இராணுவம் விரும்பி எற்றுக்கொள்ளுகிறது. சத்திய எண்ணங்கள், எண்ணங்களை  செயலாக்கத்திறன் என்ற வாள்கொண்டு  வீசும் வீரனைத்  தலைமைத் தகுதி  தேடிவந்தடைகிறது.

2 கருத்துகள்: