திங்கள், 26 செப்டம்பர், 2016

ATTESTATION PROCEDURE.


                                                      கடமைக்கும்  அப்பால் .

            இராணுவத்தில் சேரும் அதிகாரிகளும் அதிகாரிகளல்லாதோரும் ஆரம்பகால பயிற்சி முடிந்து மேலும் சிறப்புப் பயிற்சிகளுக்குப் போகுமுன் "சத்தியப்  பிரமாணம்"என்னும் உத்திரவாத உறுதிமொழி கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
                         இந்த சத்தியப் பிரமாண அணிவகுப்பில் ஒவ்வொரு பயிற்சியாளரும் அவரவர்களது மத அடிப்படையில் முதலில் இந்திய தேசியக் கொடிமீதும் அடுத்து அவர்களது மத நூல் மீதும் கை  வைத்து சில உறுதி மொழிகளைச்சொல்லி  சத்தியம் செய்யவேண்டும்.

                   இந்துக்களுக்கு பகவத் கீதையும் முஸ்லிம்களுக்கு குரானும் கிறிஸ்தவர்களுக்கு பைபிளும் சீக்கியர்களுக்கு குரு  கிரந்தம் போன்றவைகள் மீது பயிற்சியாளர்கள் உறுதிமொழி சொல்லி சத்தியம் செய்யவேண்டும்.
                           இராணுவத்திற்கு நாட்டின் பல தேர்வு மையங்களிலிருந்து தேர்வாகுபவர்கள் அவர்களது தேர்வின்படி குறிப்பிட்ட பயிற்சி
மையங்களுக்குஅனுப்பப்படுவார்கள்.
                      உதாரணமாக பெங்களூர் பொறியாளர் பிரிவுக்கு எழுத்தர் வேலைக்கு சென்னையிலிருந்து ஒருவரும் கல்கத்தாவிலிருந்து ஒருவரும் கூட தேர்வாகலாம்.
                     ஒரு பயிற்சி அணி சுமார் 60 பயிற்சியாளர்கள் கொண்டது.இந்த 60 பேரும் தினமும் 4-5 என்று 10 நாட்களுக்குள் ஒன்று சேர்ந்து  விடுவார்கள்.
                   முதல்  மூன்று   மாதங்கள் உடல் அளவிலான பயிற்சிகள்தானிருக்கும்.கூடவே அணிவகுப்புப் பயிற்சியும் (DRILL)மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சியும் இருக்கும்.
                      பயிற்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் இந்தப் பயிற்சியாளர்கள்  அவரவர்களது சொந்த ஊரின் காவல்துறை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு
அவர்கள் ஏதும் குற்றவாளிகள் இல்லை என்ற POLICE VERIFICATION REPORT
கட்டாயம் பெறவேண்டும்.இதற்கு 52 வாரம் காலக்கெடு உண்டு.
                     உள்நாட்டு  காவல் துறை பரிசீலனை இல்லாமல்  பயிற்சியைத் தொடர்வது மிகவும் தவறு ,ஆபத்தானது. ஏனெனில் பயிற்சியாளர் துப்பாக்கி சுடுதல்,வெடிமருந்துகளைக் கையாளுதல் போன்ற பயிற்சிகளில் சிறப்பாக செய்துவரும்போது  காவல்துறை பரிசீலனை அவர் ஒரு தேசத்துரோக செயலில் ஈடுபட்டு தண்டிக்கப் பட்டவர் என்று வந்தால் எப்படி இருக்கும் பாருங்கள்.
                   அதாவது ஒரு குற்றவாளிக்கு இராணுவப்பயிற்சியளித்து அவனது குற்ற மனப்பான்மைக்கு மேலும் வலு சேர்ப்பது போலாகும்.
              இராணுவப் பயிற்சி மையங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கலாம்
                                   கணேசன் பயிற்சிப்படை தலைவராக நியமிக்கப்பட்டபோது சுமார் 2500 பயிற்சியாளர்கள் பல நிலைகளில் பயிற்சியிலிருந்தார்கள்.இதில் சுமார் 120 பேர் 52 வாரங்கள் கடந்தபிறகும் காவல்துறை பரிசீலனை இல்லாமல் பயிற்சியிலிருந்தார்கள்
                     பயிற்சி  தரும் அதிகாரிகள் இதை ஒரு சாதாரண நிகழ்வு போல் இருந்தார்கள்.
                     கணேசன்  அவர்களது தவறை சுட்டிக்காட்டிவிட்டு அந்த 120 பேரையும்  உடனடியாக பயிற்சியிலிருந்து நிறுத்தினார்.அந்தந்தஇடத்து காவத்துறை உயர் அதிகாரிக்கு விரிவான கடிதம் எழுதி பயிற்சியாளர்களிடம் கொடுத்து ஒரு வாரத்திற்குள் காவல்துறை பரிசீலனை ரிப்போர்ட் வுடன்  வராவிட்டால் அவர்கள் இராணுவப்பயிற்சியிலிருந்து நீக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள் என்ற கடுமையான உத்திரவுடனும் காவல் துறைக்கு இதன் முக்கியத்துவத்தை விரிவாக விளக்கியும் கடிதங்கள் கொடுத்து அனுப்பினார்.
                         ஒரு வாரத்திற்குள் 120 பேரும் காவல்துறை பரிசீலனை ரிப்போர்ட்வுடன்  வந்தார்கள் என்பது சொல்லத்தேவையில்லை.
                                  ஒன்றிரண்டு காவல்துறை உயர் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து இனி அப்படி நடக்காது என்று உறுதி அளித்திருந்தார்கள் .
                           "கடமைக்கு அப்பால்" (Beyond the call of duty ) என்றொரு சொற்றொடர் உண்டு.கடமையை செய்பவர்கள் அதனுடைய பலா பலன்களை உணர்ந்து செயல்படவேண்டும்.
                              காவல் துறை பரிசீலனை வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார்கள் .ஆனால் அதன் பிறகு என்னவாயிற்று.?ஒன்றிரண்டு reminderஅனுப்பி யிருந்தார்கள் .
                           முடிவு என்ன ?
    பணியாற்றிய  இடங்களில் எல்லாம் கணேசன் இப்படித்தான் செயல் பட்டிருக்கிறார்.
                         
    கணேசனின் அமர்வுக்கு பின்னால் இரு வாசகங்கள் .
                     
                          1.    THE BUG STOPS HERE.NO MORE SHUNTING, SHIFTING,  
                                                      BY   PASSING  OR    RETURNING.

                                                                   
  
                          2.            OUR DISTINCTION DO NOT LIE IN THE PLACES WE OCCUPPY;
                                      BUT IN THE GRACE AND DIGNITY WITH WHICH WE FILL                                                                                                             THEM.             

                        

1 கருத்து:

 1. வணக்கம் .

  எங்களுக்குத் தாம்பரம் விமானப்படைத்தளத்தில் Pre Commissioning இன்போது இதுபோன்ற நடைமுறை உண்டு. அடுத்தடுத்த பயிற்சிகளுக்கும் காவல் துறையினரிடம் குற்றவழக்குகள் இவர்மேல் இல்லை என்பது போன்ற சான்று பெறுதல் கட்டாயம்.

  ஒருமுறை இங்கே காவல்நிலையத்தில் இச்சான்று கொடுப்பதற்குக் காலம் நீட்டித்தபோது, என் Commanding Officer Gp.Cpt. MS Rao. நேரடியாகக் காவல்துறை ஆணையரிடம் பேச, சம்பந்தப் பட்ட காவல்துறை ஆய்வாளர், உடனடியாக என்னைச் சந்தித்து இச்சான்றை அளித்தது நினைவிற்கு வருகிறது.

  தங்களின் இருக்கையின் மேலே உள்ள வாசகங்கள் தங்களின் ஆளுமையை உணர்த்துகின்றன.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு