ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

                             உணர்வுகளின்  கொலை
                      அல்லது தற்கொலை.
     
                   உடல்,உயிர்,ஆன்மா  என்ற மூன்றும் உயிர் வாழ்வன எல்லாவற்றிலும் உண்டு .ஆறறிவு பெற்ற மனிதர்களில் மட்டுமே இவை சிறப்பாக செயல் படுகின்றன.
                  உடல் மட்டுமே தனித்து இயங்க முடியாது.அதுபோல் உயிர் இயங்க உடல் தேவைப்படுகிறது.இவை இரண்டும் இருந்தாலும் அவற்றை இணைக்கும் ஒரு மூன்றாவது பொருள் வேண்டும்.அதுதான் உணர்வுகள்.இந்த உணர்வுகள் தானாக இயங்கினாலும் அவற்றை கட்டுக்குள் கொண்டுவருவது ஒரு சிறப்பான பயிற்சி.
                                   1970ம்  ஆண்டு கணேசன் வாழ்க்கையில் சில திருப்பு முனைகள் ஏற்பட்டன.முதலாவதாக அவரது அன்னை மறைந்தார்.அவரது கடைசிப்பயணத்தை கணேசன் காணமுடியவில்லை.இது ஒரு மாபெரும் உணர்வின் தாக்கத்தை அவருக்கு ஏற்படுத்தியது.


                              கணேசனது  அப்பா "பாவாடை",அம்மா "தெய்வானை "                           இரண்டாவது அவர் மூன்றாண்டுகால B.Tech படிப்புக்காக  இராணுவப் பொறியியல் கல்லூரி வந்திருந்தார்.முன்பே பட்டயப்  படிப்பு படித்திருந்த அவருக்கு பட்டப்  படிப்பு  சுமையாகத்தெரியவில்லை.
                                    அவரது தம்பிக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் பிறந்திருந்தது.இந்நிலையில் அவருக்கும் திருமணம் செய்விக்க முயற்சிகள் நடந்தன.தமிழகத்தில் இராணுவ வாழ்க்கை பற்றி சிறப்பான கருத்துக்கள் இல்லையாதலால்  அவரது திருமணம் முடிக்க காலம் கடந்துகொண்டிருந்தது.
                            இந்நிலையில் 1971 ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது.இராணுவக் கல்லூரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அதிகாரிகள் படைப்பிரிவுகளுக்கு அனுப்பப் பட்டர்கள்.
                      கணேசன் தனது உடைமைகளை 3.5 புல்லட் மோட்டார் சைக்கிள் உட்பட நண்பர் ஒருவர் வீட்டில் போட்டுவிட்டு விளக்கமாக ஒரு கடிதம் அவரது அண்ணனுக்கு எழுதினர்.இறைநிலை காரணமாக தான்  ஒரு சமயம் போர்க்களத்திலிருந்து திரும்பாவிட்டால் (அதாவது உயிர்த்தியாகம் செய்ய நேர்ந்தால் )என்ன செய்ய வேண்டும் என்ற விளக்கமானது.
                       கணேசன் மிகவும் தெளிவாக மேலும் மகிழ்வாக தனது அடுத்த கட்ட வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.அவரது படைப்பிரிவு திரிபுரா மாநிலத்திற்கு வந்து கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைய தயாராகிக்கொண்டிருந்தார்கள். மகிழ்வாக இருந்ததற்குக் காரணம் அவர் தனி ஆள்.அவரது இழப்பு யாருக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
                      இந்த நிலையில் தான்  உணர்வுகளின் போராட்டம் ஆரம்பமாகிறது.
உணர்வுகள் அனிச்சை செயலாக நடப்பவை.ஆனால் பயிற்சியினால் அவற்றை மாற்றி அமைக்க முடியும்.
                     இராணுவ வாழ்க்கை அதுவும் அதிகாரிகளின் உயர்மட்ட வாழ்க்கை கிராமத்து சூழ்நிலையில் பிறந்து வளர்ந்திருந்த கணேசனுக்குப் புதிய உலகமாக அறிமுகமாகியிருந்தது.அவரது பெற்றோர்கள் பள்ளிக்கூடம் பார்க்காதவர்கள்.இதனால் உறவுகளை உடன் அழைத்துச் செல்லமுடியாது என்பதையும் அவர் அறிவார்.தானே ஏற்படுத்துக்கொண்ட பாசவலையின் முடிச்சுகளைத்  தனேதான் அவிழ்க்கவேண்டும் என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார்.
                        இதனால் அண்னன்  தம்பிகளுடனான உறவு பாசம் என்ற பாசவலை சிதைவுற  ஆரம்பித்தது.
                          பாசவலை சிதைவுறுவதை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.அது உணர்வுகளின் கொலை அல்லது தற்கொலை எனலாம்.மனதளவில் மிகவும் பலசாலியானவர்களால்தான் அதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டு தன்னளவில் அழிவுறாமல் தப்பித்து வரமுடியும்.
                             சுமார் 12-13 வயதிலிருந்து பலவித யோக,உடற்பயிச்சிகளையும் செய்துவரும் கணேசன் வலுவான ஆன்ம சக்தி பெற்றிருந்தார்.அதனால்  பேரிழப்புகள் இன்றி வெளிவந்துவிட்டார்.
                         இழப்பதற்கு ஏதுமில்லை என்று தாறுமாறாக  வாழ்பவன் ஏதும் பெறுவதற்கும் தகுதியற்றவனாக ஆகிவிடுவான்  என்பதை அவர் உணர்ந்திருந்தார். அதனால்  self motivation and auto suggestions போன்ற பயிச்சி முறைகளை மேற்கொண்டு வாழ்வின் வெற்றிப் பயணத்தைத்  தொடர்ந்தார்.
                     இழப்புகள் ஏற்படலாம்.அதை எதிற்கொள்ளும் மன  தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றி என்றும் உங்கள் பக்கமே.
                   1979ல் கணேசனது அப்பா இறந்தார்.அவரது இறுதிச் சடங்கிலும் கணேசன்  கலந்துகொள்ள முடியவில்லை. அவர் உணர்வுகளை அடக்கித் தன் கடமையில் கவனம் செலுத்த ஆரம்பித்து வாழ்வில் வெற்றி காண வழி காட்டினார்.
                     
                          வாழ்க வையகம்!           வாழ்க  வளமுடன்.!  


2 கருத்துகள்:

 1. பெற்றோர் இருவரின் இறுதிச் சடங்கிலும் கலந்து கொள்ள இயலாமல் பணியாற்ற மிகுந்த மனோ பலம் தேவை.
  அது தங்களுக்கு இருக்கிறது ஐயா

  பதிலளிநீக்கு
 2. நன்றி ஜெயக்குமார் அவர்களே.எனது அனுபவங்கள் ஒரு சாதாரண மனிதனுக்கு கிடைக்க முடியாதவை.இராணுவ வாழ்க்கையிலும் போர்க்களங்கள்,கல்லூரி வாழ்க்கை,படைப்பிரிவு தலைமை,பயிற்சி மையங்கள்,தென் துருவ அனுபவம் போன்றவைகளை சொல்லலாம்.
  இவைகளையும் இவற்றை நான் எப்படி எதிர் கொண்டேன் என்பதையும் இன்றைய இளைஞர்களுக்கு சொல்லவேண்டியது எனது கடமை.
  மனித வாழ்க்கை ஒரு மகத்தானப் பரிசு.இதன் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் வெறும் உணர்வுகளுக்கு அடிமையாகி இன்றைய இளைய சமுதாயம் அழிந்துகொண்டிருக்கிறது.
  மனதில் தோன்றும் தவறான உணர்வுகள்தான் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் அல்லது கொல்லப்படவேன்டும்.அதற்குமனப் பயிச்சியும் அதன் மூலமாக ஆன்ம சக்தியும் பெறவேண்டும்.அதை செயல் படுத்தாத தூண்டுவதே எனது நோக்கம்.

  பதிலளிநீக்கு