விஜயபாரதம்.
இந்திய திருநாட்டின் சரித்திரம் பல மனிதர்களால் சிதைக்கப்பட்டு உண்மை நிகழ்வுகள் மறை க்கப்பட்டு அரசியல் ஆதரவுக்காக வெளியிடப்பட்டது என்பதை எல்லோரும் அறிவார்கள்.சுதந்திரப்போராட்ட காலத்திலேயே உண்மையும் நேர்மையான சில மனிதர்களின் செயல்பாடுகள் வெளியுலகம் அறியாதவாறு இருட்டடிப்பு செய்யப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா என்ற மாபெரும் தேசம் சிதைக்கப்படாமல் சுதந்திரம் பெறவேண்டும் என்ற தியாக உணர்வோடு தொடங்கப்பட்டதுதான் "ராஷ்ட்ரிய சுயம் சேவக் " என்ற அமைப்பு. காந்தியைக்கொன்ற "நாதுராம் கோட்ஸே "ஒரு தியாகி என்று போற்றப்பட்டு நாட்டின் பல இடங்களில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
கோட்ஸேயின் வரலாற்றைப் பின் நோக்கிப்பார்த்தல் பல செய்திகள் வெளிவரும்.கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு கோர்ட்டில் நின்றுகொண்டிருந்த கோட்ஸேயின் வாக்குமூலத்தைப் பாருங்கள்.
“Gandhi was the reason for partition. He is the main reason for all the atrocities against Hindus during the partition. Gandhi acted in favour of Muslims. His presence will be harmful to Hindus. Hence, by killing Gandhi I did great justice to this nation.”
இந்தியாவை எனது நாடு என்று ஏற்றுக்கொண்ட எத்தனையோ மதத்தினர்,முஸ்லிகள் உட்பட இந்திய இராணுவத்தில் பணியாற்றுகிறார்கள்.அவர்களது சிறப்பான செயல்கள் கவனிக்கப்பட்டு பாராட்டப்படுகின்றன.பிரிவினையின் போது ஏற்பட்ட போரில் ஜம்மு-காஷ்மீர் பகுதி நவாஷ்ஷெரா பகுதியில் போரிட்ட பிரிகேடியர் "முஹமது உஸ்மான் '" மஹாவீர் சக்ரா வழங்கி கௌரவிக்கப்பட்டார் .1965 போரில் 'பரம்வீர் சக்ரா "விருத்தி பெற்றவர் ஹவில்தார் அப்துல் ஹமீத் ,இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.