புதன், 5 ஜூலை, 2017

                 
                              வை யவன்  என்ற  MSP முருகேசன் .

             விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.இதற்கு விளக்கம் சொல்லமுடியாது.விளக்கத்திற்கு உட்பட்டு ஒரு நிகழ்வு நடந்தால் அது முதலிலேயே எதிர்பார்க்கப்பட்டஒன்று  என்று ஆகிவிடும்.விபத்துகள் விபத்துகளேயன்றி அதற்கு விளக்கம் சொல்லமுடியாது.

                     அப்படிப்பட்ட ஒரு இனிமையான விபத்துதான் திரு வையவன் அவர்களின் சந்திப்பு.
                     
                       எனது தென்துருவ அனுபவங்கள் பற்றி பேசுவதற்கு தங்களது அமைப்புக்கு வரமுடியுமா என்று கேட்பதற்காக ஒரு முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் 2012 ம் ஆண்டு எங்கள் வீட்டுக்கு வந்தார்.பேசிக்கொண்டிருக்கும்போது ,சார்,நீங்கள் வையவன் அவர்களை சந்தித்திருக்கிறீர்களா ?என்று கேட்டார்.

                  சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றேன் .
                     இப்பொழுதே  ஏற்படுத்திக்கொள்ளலாம் என்ற அவர்
         வையவனுடன் கைபேசியில் தொடர்புகொண்டு கைபேசியை என்னிடம்                                                     தந்தார்.
           அது ஒரு மகத்தான நேரமாக இருந்திருக்கவேண்டும்.

                                எந்த சுமார் 5 ஆண்டுகளில் ஏதோ வேலை செய்தோம் ,எழுதினோம் என்றிருந்த கர்னல் பாவாடைகணேசன் என்பவரை கிட்டத்தட்ட உலகத்தமிழர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்திவிட்டார் திரு வையவன்  அவர்கள்.
             
                   அவர் எழுத்தாளர், proof reader, wrapper designer,பதிப்பாசிரியர் ,கவிஞர்  என்று பன்முகப் பரிமாணம் அதிலும் விஸ்வரூபம் எடுப்பவர் என்பதால் அவர் மூலமாக வெளிவரும்  நூல்கள் பரவலாகப் பேசப்படுகின்றன.

                                           இது அவர் முயற்ச்சி எடுத்த எனது  முதல் நூல்.

  அதன்பிறகு பல நூல்கள் வெளிவந்துவிட்டன.எண்ணிக்கை தொடர்கிறது.தாரணி பதிப்பகம் என்ற பெயரில் பதிப்பிக்கப்படுகிறது.அவரது உதவியில் வந்த எனது மற்ற நூல்கள்,

     மற்றவர்களுக்காக எழுதுவதும் பதிப்பிப்பதுவும் இல்லாமல் அவரது கைவண்ணத்தில் ,இலக்கிய வேள்வியில் பல கவிதை,கட்டுரைகள்,நாவல்கள்,ஆய்வக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன.உதாரணத்திற்கு ஒன்று சில நாட்களுக்குமுன் பதிப்பித்த பாரதி பற்றிய ஆய்வு நூல்.


             பாரதி பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன.கடுகைத் துளைத்து ஏழ் கடலைப்புகுத்தியதுபோல் எல்லா நூல்களையும் விலக்கி வைத்து பாரதியை புதிய கோணத்தில் அறிமுகப்படுத்துகிறார் வையவன் .

                         பாரதியின் விஸ்வ ரூபா தரிசனத்தில் ஆரம்பித்து  பாரதி என்னுமொரு மானுடன் என்று 23 ஆய்வுகளில் 183 பக்கங்களில் மிக அற்புதமான முறையில் பாரதியின் எல்லா எழுத்துக்களையும் அறிமுகப்படுத்துகிறார்.

                      பள்ளிக்கூடங்கள்,கல்லூரிகள் ,மேடைப்பேச்சாளர்கள்,இலக்கியவாதிகள் எல்லோரிடமும் இருக்கவேண்டிய நூல் இது.

                                       
                              வாழ்க வையவன் !  வளர்க அவரது கைவண்ணம்.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக