வியாழன், 16 ஜூன், 2016

                                                      மறுபடி பிறந்தால்.....
 
                          வழுத்துதற்கு எளிது ஆய் வார்கடல் உலகினில் 
                          யானை முதலா எறும்பு ஈறு ஆய் ......

                                                       செல்லா அ நின்ற இத்தாவர -சங்கமத்துள் 
                                                        எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் .......

                என்று உருகும் மாணிக்கவாசகரைப்போல் நான் எனது பிறப்பு இறப்பு பற்றிஎண்ணிப்பார்ப்பதுண்டு.இராணுவவாழ்க்கையில்எல்லைப்புறத்தில் எதிரிகளுக்கும்  இயற்கைக் கொடுமைகளுக்கும் ஈடு கொடுத்துப் போராடும் பொழுது என்னிலிருந்து என்னை விலக்கி வெளியில் நின்று வேடிக்கைப் பார்க்கும்பொழுது இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றும்.

                     அப்படிப்பட்ட நேரங்களில் " மறுபடி பிறந்தால்...."எப்படி வாழவேண்டும் என்று எண்ணிப் பார்ப்பேன்.
                  நினைவு தோன்றிய நாள் முதல் செய்த தவறுகள்,சொல்லிய பொய்கள்,பிறருக்கு உதவி செய்ய மறுத்த,பிறரை எள்ளி நகையாடிய, பிறருக்கு செய்த தீங்குகள் போன்ற எல்லாவற்றிற்கும் பிராயச்சித்தமாய் வாழவேண்டும் என்று நினைப்பேன்.

                             அப்படிப்பட்ட நினைவுகளில் முதலாவதாகத் தோன்றுவது

                                               கிராமப்புற வாழ்க்கை 
                     இந்த கிராமப்புற வாழ்க்கைப் பற்றியும் அடுத்து அடுத்து மனதில் தோன்றிய எண்ணங்கள் பற்றியும்  இனி வரும் நாட்களில் ஒரு தொடராகப் பார்ப்போம்
1 கருத்து:

  1. "மறுபடி பிறந்தால்... நான் கிராமத்திலேயே பிறக்க வேண்டும். முன்னேரு, பின்னேரு என்று ஏறுபூட்டி முப்போகம் விளைவிக்கவேண்டும்." என்ற கருத்தை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு