சனி, 7 மே, 2016

                              தலைவனின்  மறு பக்கம்.

                தலைவன் என்பவன் யார்? அல்லது தலைமைத்தகுதி என்பது என்ன என்பதற்கு சுமார் 142 விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன.

                 இவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து இவனே சிறந்த தலைவன் என்று நாம் தேர்ந்தெடுக்கும் போது அவனுக்கும் மறுபக்கம் உண்டு என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

                         யாருக்காக வாழ்கிறோம்? எதற்காக வாழ்கிறோம்? இந்த வாழ்க்கையின் முடிவுதான் என்ன? என்பது பற்றியெல்லாம் எண்ணிப்பார்க்காமல் மேலோட்டமாக பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் மறைந்தோம் என்று வாழ்க்கை முடிந்துவிடுகிறது.

                                 இப்படிப்பட்ட மனித்ர்களைப்பார்த்து ஒருவன் கேட்கிறான்,


                                              தேடிச்சோறு நிதம் தின்று  
                                                           பல சின்னச்சிறு கதைகள் பேசி-மனம் 
                                              வாடித்துன்பம் மிக வுழன்று 
                                                            பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை 
                                              கூடிக் கிழப்பருவம் எய்திக்  கொடுங் 
                                                          கூற்றுக்கு இரை எனப் பின் மாயும் -பல 
                                               வேடிக்கை மனிதர்களைப் போல் 
                                                            நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ ?
                                                                                                                                       என்று.

              இப்படித் தனி மனிதர்கள் சிந்திக்கும் போது அவர்களின் மூலமாக உருவாகும் தலைவன் உண்மையில் போற்றத் தக்கவனாகத் தான்   இருப்பான். அப்படி இல்லாமல் கொள்ளையடிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு தொண்டனும் தலைவனும்  மக்களைச் சுரண்டும் போது நாட்டில் முன்னேற்றம் என்பது பெயரளவிற்குத்தான் இருக்கும்.

                       இந்தியத்திருநாடு  சுதந்திரம் பெற்றபின் இந்த  68 ஆண்டுகளில் நமது தலைவர்கள் என்று முன் நின்றவர்களின் துணையோடு இதுவரை 73000000000000( ஆச்சரியமாக இருக்கிறதா) 73 லட்சம் கோடி கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது. 

                                எங்கே இந்தப் பணமெல்லாம்?





                                 நமது தலைவர்களின்,அவர்களின் பினாமிகளின் வளர்ச்சியின்,சொத்து மதிப்பையும் கணக்கெடுத்தால்இதற்கு விடை கிடைக்கும்.

                         காமராஜரைப் போல்,அண்ணாதுரையைப் போல்,லால்பகதூர் போல்,மொரார்ஜி போல்,நந்தா போல்  தலைவர்கள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்?


                         தேடுங்கள்.....கிடைத்துவிடும்.







Image result for GREAT LEADERS OF INDIA PHOTOS

                                                        











           
                                                       
                                                             

                                                     






    

3 கருத்துகள்:

  1. வேதனையான விடயம் ஐயா எல்லாம் நமது அறியாமையே அன்றி வேறென்ன ?

    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா !

    தேடற் கரியார் எல்லோரும்
    தெய்வ மாகிப் போனதனால்
    வாடத் தொடங்கும் வயதினிலும்
    வாய்யா லத்தால் வாழ்கின்றார் !

    இவனும் மாற்றங்கள் வேண்டி நிற்கும் ஓர் பாமரன் தான் !





    பதிலளிநீக்கு