சக்கரம் சுழன்றோடுகிறது.......
வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் நலமென்றும் சக்கரம் சுழல்கின்றது ;அதில்தான் சரித்திரம் நிகழ்கின்றது.
1974,Feb 6 th தைப்பூசத் திருநாளில் கணேசனின் திருமணம் நடந்தது.முன் கண்டறியாத ஒருவனின் கைத்தலம் பற்றி காலம் அதுவும் கரடு முரடான இராணுவ வாழ்க்கை என்ற காட்டுப் பாதையில் நடக்கத் தயாரானார் அனந்தலக்ஷிமி என்ற அந்த பெண்.
திருமணமாகி ஏழு வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்த அவள் பெற்றோர்கள் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின் பெயரில் அனந்த விரதம் இருந்து பெற்றெடுத்த பெண் என்பதால் அவளது இல்வாழ்க்கையும் அந்த அனந்தபத்மநாப சுவாமியின் அருளோடு தொடங்கட்டும் என்று முடிவெடுத்த கணேசன் திருமணமான இரண்டொரு நாட்களில் நேரே திருவனந்தபுரம் செல்லவும் பின்னர் அங்கிருந்து மெல்ல மெல்ல ஒரு மாத பயணத்தில் சென்னை வந்து சேரவும் திட்டமிட்டார்கள்.
வழியெல்லாம் உறவினர்களை சந்திக்கவும் கோவில் குளங்களை தரிசிக்கவும் முடிவெடுத்தார்கள்.
இதோ அனந்த பத்மநாப சுவாமி சன்னதி முன் புது மண மக்களாக அவர்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipYzpebya4nFr3V6V8HnS3UMYkIDuwWcGivsFQDxj73laSRsKEJJR-pc8iD38BU5ck_7wVW2RQtbwK2htZDTPlgcUEzd7cvjsMdJhwHnYlDtXbydNDt8LbdrRZr8jI2VFX17LeyfkGyAJZ/s320/44+years.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXuNENBA7pRecQRQ5hhtTnkGL4Rxz5QvQjwn-N3g8RF4iaG6rSqu8uE0ezpplGOguYJeQ7lEq3R-PEGAYCzkUFkXcXOfSwrFBPUBz6damHgaAThKJBcO56dIFK434dbuuXNRHB_v-6GQTc/s320/3333.jpg)
கோவளம் கடற்கரையில்......
1974 ல் ஆரம்பித்த அவர்கள் இல்வாழ்க்கை என்ற மாநதி சலனமற்று ஓட ஆரம்பித்தது.1975 ல் முதல் ஆண்குழந்தையும் 1980 ல் இரண்டாவது ஆண் குழந்தையும் பிறந்தார்கள்.குழந்தைகள் +2 படிப்பதற்குள் சுமார் பத்து பள்ளிக்கூடங்கள் பார்த்துவிட்டார்கள்.ஆனாலும் அவர்கள் வளர்த்தார்கள்...வாழ்க்கைப்பாடங்கள் கற்றார்கள் .
பெரியவன் இராணுவ அதிகாரியாகவும் சின்னவன் வாங்கிப் பணியில் உயர் அதிகாரியாகவும் தடம் பதிக்கிறார்கள்.பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள சன்னாநல்லூர் என்றாலும் கணேசன் சென்னையில் வீடு கட்டினார் .
1994 ல் கூடுதல் தலைமைப் பொறியாளராக சென்னையில் பணி யாற்றி ஒய்வு பெற்றார் கணேசன்.அதன் பின் சமூகப்பணியில் ஆர்வம் கொண்டு சொந்த ஊரில் "அகத்து தூண்டுதல் பூங்கா " (Inspirational Park ) என்ற அமைப்பை ஏற்படுத்தி செயலாற்றி வருகிறார்.
2018 ம் ஆண்டு செப்டம்பர் 23 ல் கேரள மாநிலம் கண்ணனூரில் அவருடன் பணியாற்றிய முன்னாள் இராணுவத்தினர் அழைப்பை ஏற்று மூன்று நாட்கள் பயணமாக சென்று வந்தார்.
44 ஆண்டுகளுக்குப்பிறகு அவர்கள் இல்வாழ்க்கை ஆரம்பித்த இடங்களை மீண்டும் ஒருமுறை தரிசித்தார்கள்.
எவ்வளவு மாற்றங்கள்.