செவ்வாய், 25 ஏப்ரல், 2017

கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்:

கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்:

                               அறிவுத் திருக்கோவில் திறப்பு விழா . 

       பரம்பொருளே இயக்கத்தில் உயிராகி ,உயிர் திரட்சியில் பஞ்ச பூதங்கள்,பேரியக்க மண்டலம் ,உலகம்,உடல் இவைகளாகி உயிர் உடலோடும் உலகத்தோடும் பேரியக்க மண்டல நிகழ்ச்சிகளோடும் மெய்ப்பொருளோடும் தொடர்புகொண்டு இயங்கும்போது அறிவாகவும் இயங்குகிறது.இந்த இயக்கத்தைப் புரிந்துகொண்டால் அறிவே பரம்பொருள் என்ற உணர்வு பிரகாசிக்கும்.
                       எண்ணங்களே வாழ்க்கையை அமைக்கின்றன என்பது எண்ணற்ற உளவியல் வல்லுநர்கள் கண்டறிந்தது.இன்றும்கூட மனித மூளையின் செயல்பாடுகள் பற்றி உலகம் முழுவதும் ஆய்வுகள் நடக்கின்றன.
                    மனம் நம்புவதை உடல் செயலாக்குகிறது.இந்த சக்தி அவனுள்ளேதான் இருக்கிறது.ஆனால் அந்த ஞானப்பெட்டகத்தைத் திறக்கும் சாவிதான் நம்பிக்கை.அந்த நம்பிக்கை ஆகாயத்தில் கட்டும் கோட்டையாக இல்லாமல் சில உண்மைகள் என்ற அஸ்திவாரத்தில் எழுப்பப்படும் கற்சுவர்களாக இருக்கவேண்டும்.
                    இந்த அடிப்படையில்தான் 


                                  Dr.அழகர் ராமானுஜம் திறந்துவைக்கிறார்.

   திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூரில் கர்னல் கணேசன் அவர்களால் அகத்தூண்டுதல் வளாகத்தில் அறிவுத்திருக்கோவில் நிர்மாணிக்கப்பட்டது.
          கர்னல் கணேசனுடன் அண்டார்க்டிகாவில் பணியாற்றிய இந்திய கடற்படை அதிகாரி ராஜ்குமார் அவர்களின் துணைவி விளக்கு ஏற்றுகிறார்.இரு புறமும்  கணேசனும் அவரது துணைவியாரும் .

                  முன்பே அறிவித்தபடி விழாத்தலைவரும் மற்ற விருந்தினர்களும் 17-5-2017  புதன்கிழமை காலை பத்து மணியளவில் ஒருங்கிணைய விழா இனிதே தொடங்கியது.
                கணேசனுடன் அண்டார்க்டிகாவில் பணியாற்றிய மற்றோர் இராணுவ அதிகாரி  ராஜன் அவர்கள் பெங்களூரிலிருந்து வந்திருந்தார்.
                  திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயராமன் ,சென்னையிலிருந்து காவல் ஆய்வாளர் (ஒய்வு )செல்வராஜ் காரைக்காலிருந்து திரு .வேதாச்சலம் மற்றும் ஏராளமான நண்பர்கள் உதவியுடன் விழா இனிது நடந்தது.
                     நன்னிலம் காவல் கண்கானிப்பாளர் திரு அருண் அவர்களும் கரந்தை ஜெயக்குமார் அவர்களும் வாழ்த்தினார்கள்.
                       இந்த விழாவின் நோக்கம் மனிதனின் திறமை அளவுகோலுக்கு அப்பாற்பட்டது என்பதையும் அவனது செயல்பாடுகளை எந்த புற  காரணிகளும் தடுத்து நிறுத்த முடியாது என்பதையும் இன்றைய இளையோர் மனதில் பதியவைப்பதேயாகும் .
                   வருங்காலத்தில் சன்னாநல்லூரைச் சுற்றியிருக்கும் கிராம மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு அவர்கள் சரித்திரம் படைப்பார்கள் என்று எதிர்பார்ப்போம் .



            விழா சிறப்பாக நடைபெற உதவிய எல்லோருக்கும் இதயம் நிறைந்த நன்றி .
         மாலையில் சென்னை வானொலி நிலைய காரைக்கால் பகுதி அதிகாரிகள் அறிவுத்திருக்கோவில் வளாகத்தில் கர்னல் கணேசனை நேர்காணல் நடத்தி பெருமை சேர்த்தார்கள்.அவர்களுக்கும் நன்றி.
 














                             
                                             மின்காந்த  நூலகம் 

                                                cosmic    Library
  அன்புடையீர்  !
                 நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 3 ம்  நாள் (17-05-2017) புதன்கிழமை திருவோணம் நட்சத்திரம் கூடிய நன்னாளில்  காலை 10.00 மணியளவில் 
                     திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூரில் பெருமைமிகு பாவாடை-தெய்வானை  குடும்பத்தினர்களால் பொது மக்களுக்காக அர்பணிக்கப்பட்டிருக்கும் "அறிவூத்   திருக்கோவில்" திறப்பு விழா நடைபெறும்.
  


                       
                 பரம்பொருளே இயக்கத்தில் உயிராகி உயிர் திரட்சியில் பஞ்ச பூதங்கள் ,பேரியக்கமண்டலம் ,உலகம் இவைகளாகி உயிர் உடலோடும் உலகத்தோடும் பேரியக்க மண்டல நிகழ்ச்சிகளோடும் மெய்ப்பொருளோடும் தொடடர்புகொண்டு இயங்கும்போது அறிவாகவும் இயங்குகிறது..

                       இந்த இயக்கத்தைப் புரிந்துகொண்டு "அறிவே  பரம்பொருள்" என்ற உணர்வை  விருந்தினர்களிடையேப் பதியவைத்து இந்த ஞானாலயாவைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார் 

                             டாக்டர் .அழகர்  ராமானுஜம் ,Ph.D
                   தலைவர் ,வேதாத்ரி மகரிஷி  ஆசிரமம் ,பேரளம்.

  தொடர்ந்து சில அறிஞர் பெருமக்களும் உரையாற்றுகிறார்கள் .

                     அனைவரும் வருக!     ஞானவெள்ளத்தில் நனைக !.

                                                                                    சக பயணிகளுக்காக,
                                                                             கர்னல்.பாவாடை கணேசன்   















வியாழன், 20 ஏப்ரல், 2017


                                  அன்னையின் பொற்பாதங்களிலே.

               முந்தித் தவமிருந்து முன்னூறு நாட் சுமந்து பெற்றுவளர்த்துப்  பின்னைப் பாலூட்டி  சீராட்டி கண்ணே மணியே என் கட்டிக்கரும்பே என சொல்லி வளர்த்துத்   தன் சுகமெல்லாம் தந்து

                    மடியில் வளர்த்த மக்களில் சிலரை மண மேடையும் ஏற்றிவிட்டு வாழுங்களப்பா  நான் வருகிறேன் என்று சொல்லாமல் சொல்லி இன்று இல்லாமல்போய்விட்ட  எனது  அன்னையின் நினைவுகள் அவ்வப்பொழுது வந்து என்னை அலைக்கழிப்பதுண்டு.

                       காலமெனும் காட்டாறு கரைபுரண்டு ஓடுகையில் எண்ணக்குவியல்கள் மேலும் கீழும் இடதும் வலதுமென இடம்மாறி போகலாம்.அப்படி தடுமாறி,தடம்மாறி போகையில் கற்பனைக்குமெட்டாத நிகழ்வாக
                எனது அன்னையை ஒருநாள் சந்தித்தேன் .எனது சொல்லால்,செயலால்,நாட்டுப்பற்றால் ஈர்க்கப்பட்ட நண்பரின் அறிமுகமும் அவர் மூலமாக அவரது அன்னையின் ஆசிர்வாதமும்  கிடைத்தது.

                          அவர் ஒரு திருநாளில் தனது பூர்வீகம் தேடிவந்ததுபோல் எனது பிறந்தமண்ணில் பாதம் பதித்ததை என்னவென்று சொல்வேன்.


               தனது செல்வ  மகனுடன்  புண்ணிய தல   தரிசனம் புறப்பட்ட அவர் ராமநவமி அன்று ராமேஸ்வரம் கோதண்டராமனை தரிசித்து பின்னர் தமிழ்நாட்டில் எமதர்மராஜனுக்கு ஆலயம் உள்ள ஒரே ஊரான திருவாஞ்சியம் (திருவாரூர் மாவட்டம்)தரிசித்தார் .அங்கிருந்து வருகையில் "சன்னாநல்லூர்" 7 கி.மீ.என்ற அறிவிப்புப் பலகையைப்  பார்த்து ஆழ் மனதில் ஒரு மின்னல் பளிச்சிட  அவர் பொற்  பாதங்கள் எனது பிறந்தமண்ணில் பதிந்தது.

        எத்தனைப் பிறவியில் நான் செய்த தவமோ ஆயிரம் பிறை கடந்து இன்று நூறாவது  அகவையை நெருங்கிக்கொண்டிருக்கும்  அவர் சன்னாநல்லூரில் அமைக்கப்பட்டிருக்கும் "அகத்தூண்டுதல் பூங்காவிற்கு "ம்  அங்கு திறப்பு விழாவிற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் "அறிவுத்  திருக்கோவிலுக்கு"ம் வருகை தந்தார்.
                 
                   நன்றி சொல்வேன் நண்பர் ஹரிஹர சுப்பிரமணியனுக்கு.




                  தொடர்புக்கு :
                                         கர்னல் .பாவாடை கணேசன் .
                                044-26163794,       09444063794.