திங்கள், 24 அக்டோபர், 2016

                                        Farewell not Goodbye.
            இடைக்காலப்  பிரிவேயன்றி 
                    இறுதி வணக்கமல்ல .

  இராணுவம்      ஒரு பாரம்பரிய புகழும்  பெருமையும் கொண்ட அமைப்பு என்று பார்த்தோம் .இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பெற்ற வெற்றிகளையும் விருதுகளையும் இன்றளவும் எல்லா இராணுவ அமைப்புகளும் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றன.
                     இராணுவ  அதிகாரிகள் தங்களது தன்னிகரற்ற திறமையால் ,அறிவு வெளிச்சத்தினால் படைப்பிரிவுக்குப் புகழும் பெருமையும் சேர்க்கிறார்கள்.
                            நாள்தோறும் மாறிவரும் சுற்றுப்புற சூழ்நிலை சமுதாய மாற்றங்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு அதிகாரிகள் படைப்பிரிவை வழிநடத்திச் செல்லவேண்டும்.
                     ஆனால் பெரும்பாலான அதிகாரிகள்  எதற்கு வம்பை விலைக்கு வாங்கவேண்டும் என்று பழைய தடத்திலேயே சென்று விட்டு ஓடிவிடுவார்கள்.
                       கணேசன் கிராமப்புற சூழ்நிலையில் வளர்ந்தவர்.அவரது படைப்பிரிவினர் கேரளா,தமிழ்நாடு,ஆந்திரா  மற்றும் கர்நாடகா மாநிலத்தைச்சேர்ந்தவர்கள்.ஆகையால் அவர்களோடு இணைந்து செயலாற்றுவதில் ,அவர்களைத்  தனித்திறமை வாய்ந்தவர்களாக  உருவாக்குவதில் பெருமகிழ்ச்சியடைந்தார்.
                        ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் இராணுவத்திலிருந்து ஒய்வு பெறுகிறார்கள்.இளமையையும் எழிலான வாழ்க்கையையும் இந்த நாட்டிற்கு வழங்கிவிட்டு  சிவில் வாழ்க்கைக்குத் திரும்பும் அவர்களுக்கு பிரிவு உபசார விருந்து ஒன்று நடக்கும்.
                        அத்துடன் அவர்களது இராணுவத்தொடர்பு முடிந்துவிடும்.
                            இங்குதான் கர்னல் கணேசன் சில மாற்றங்களைக்  கொண்டுவந்தார்.
                 சுமார் 18 வயது முதல் குறைந்தது 40 வயது வரை எல்லைப்புறங்களில் எதிரிகளுடனும் இயற்கைக் கொடுமைகளுடனும் போராடிய இவர்களுக்கு சில மணி நேர பிரிவு உபசார  விருந்துடன் வீட்டுக்கு அனுப்பி விடுவது சரியல்ல என்று நினைத்தார்  அன்றைய மேஜர் கணேசன்.
                     இராணுவத்தினரின் பிரிவு உபசார விருந்து ஒரு நிரந்தர பிரிவின் ஆரம்பம் இல்லை.அந்த விருந்துக்கு

                                                 Farewell not goodbye

             என்று பெயரிட்டார்.அதாவது இராணுவத்தினரின் ஒய்வு ஒரு

இடைகாலப் பிரிவேயன்றி  இறுதி வணக்கமல்ல.









             உற்றார் பெற்றோர்   உறவுகள் பிரிந்து கல்லோடும் மண்ணோடும் கலந்து இந்தியதிருநாட்டின் எல்லைப்புறங்கள் மட்டுமல்லாமல் இந்த நாட்டின் சார்பாக பல அயல் நாடுகளிலும் செஞ்சொற்றுக் கடன் தீர்த்த இந்தக் கடமை வீரர்களுக்கு  வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கக்கூடிய விதத்தில் அவர்களது பிரிவு உபசார விருந்து இருக்கவேண்டும் என்று விரும்பினார் கணேசன்.
                    ஒரு படைப்பிரிவு அதன் அங்கத்தினர்களை மிக சாதாரண பணியாளர்கள் போல் நடத்தக்கூடாது.அந்த உறவு  குருதி கலந்து இறுகியது.அதன் உறுப்பினர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த படைப்பிரிவினுடன் தொடர்பு கொள்ளவேண்டும்.
                    அதனால் இந்த நிகழ்வு இடைக்காலப்  பிரிவுதான் இறுதிவணக்கமல்ல.ஒய்வு பெரும் ஒருவர் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த படைப்பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.
               படைப்பிரிவுடன் அவர் பணி யாற்றிய காலங்களின் தொகுப்பாக ஒரு ஓரங்க நாடகம் போல் நடத்த மலரும் நினைவுகளில் அவர் மயங்க பிரிவு உபசார விழா பிரியா விழாவாக நிறைவுபெறும்.
                           1980-82ல் கணேசன் ஆரம்பித்த இந்த விழா இன்றளவும் மிகவும் சிறப்பாக அந்த படைப்பிரிவினர்கள் நடத்துகிறார்கள் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

























வெள்ளி, 21 அக்டோபர், 2016

                          இன்றைய  நிகழ்வே  நாளைய  வரலாறு !
                                          வாருங்கள் ,
                      வருங்கால சமுதாயத்தினருக்கு
                                   வரலாறு படைப்போம்  !
   
                       நிகழ்வுகள்தான்  சரித்திரமாக உருவாகிறது. சிந்தித்து  சீர்தூக்கிப்  பார்த்து  செயல் படுத்தப்படும் நிகழ்வுகள் காலத்தால் அழியாத கல்வெட்டுகளாக உயர்ந்து நிற்கும்.
                    இராணுவம் பல பாரம்பரிய  பெருமைகளைக்கொண்டது.ஒவ்வொரு படைப்பிரிவும் தங்களுக்கென சில போர்க்கள சின்னங்களையும் சம்பிரதாயங்களையும்  காலம் காலமாகக்  கடைப்பிடித்து வருகின்றன.
            இராணுவத்தில் நேரிடையாகப் போரிலே  பங்கு கொள்வோர் என்றும் அவர்களுக்கு உதவி செய்வோர் என்றும் இரு பெரும் பிரிவுகள் உள்ளன.
                    Armoured corps,Artillery.Engineers ,Signals,and Infantry
ஆகிய படைப்பிரிவுகள்  நேரிடையாகப்  போரில் பங்கு கொள்ளும் அதிர்ஷ்டசாலிகள் .
           இராணுவத்தைப்பற்றி  முன்பின் அறிந்திராத கணேசன் ஒரு விபத்து போல் இராணுவத்தில் சேர்ந்தது மட்டுமல்லாமல் மிகவும் கௌரவமான அதிகார வர்க்கத்தின் முதல் படியில்  ஏற்றி நிறுத்தப் பட்டிருந்தார்.
                       இராணுவத்தின் செயல் பாட்டு முறைகளை  மிகவும் உன்னிப்பாகக்  கவனித்து வந்த கணேசன்  தன்னை ஒரு தகுதி வாய்ந்த தலைவனாக உருவாக்கிக்கொள்ளத்  தவறவில்லை.
                          அவரது செயல்பாடுகள்  இராணுவப்  பாரம்பரிய பெருமைக்கு மெருகூட்டி  புதிய தடம் பதித்தன.
Un Known Soldiers Day. 

                        போர்க்களத்திலே  வீர சாகசம் புரியும் மாவீரர்களை எல்லோரும் அறிவார்கள்.ஆனால் அவர்களை விட அதிகமாகப் பல செயல்கள் புரியும் வீரர்களை இந்த சமூகம் தெரிந்துகொள்வதில்லை.

                                மனம்  கொண்ட துணைவர்க்கு                  
                                             விடை தந்து வேல் தந்த மறக் குலப்பெண்கள்
                                                         
                                                                                 தாம்  அவர்கள்.
                  அறிந்தோ அறியாமலோ இராணுவத்தினரை மணக்கும்  பெண்கள் அவர்களது கணவரை விட பெரும் போர் நடத்துகிறார்கள்.
                         எல்லை பாதுகாப்புப் பணியில் ஒருவன் வீரமரணம் அடைய நேர்ந்தால் அவனது குடும்பத்தைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்.இங்குதான் கர்னல் கணேசன் தடம் பதித்தார் .
இராணுவப் பணி  பெரும்பாலும் ஒரு கூட்டு முயற்சி.அதில் ஒருவன் உயிர்த் தியாகம் செய்யநேர்ந்தால் அவனது செயல் பலராலும் பாராட்டப்பட்டு அவனது ஈமச் சடங்குகள் மரியாதையுடன் செய்யப்படுகிறது.






                      அனால் ஒரு சில நாட்கள் சென்று அவனது மனைவி மக்களைப் பார்த்தோமானால்  அது விவரிக்க முடியாத சோகக் கதையாக இருக்கும்.
                         கணேசன் அந்த சோகக் கதைகள் தொடரக்  கூடாது என்று முடிவெடுத்தார்.
                       அப்படிப்பட்ட  நிகழ்வுகளுக்குள்ளான பெண்களை
           
                                        Un Known Soldiers

என்று  அறிமுகப்படுத்தினார்.இராணுவத்தினரின்  குடும்பமே அறியப்படாத வீரர்கள் என்று பிரகடனப்  படுத்தினார் .
                     இராணுவத்தினரை மணக்கும் பெண்களைக் கௌரவிக்கும்  ஒரு  நிகழ்வாக இந்த விழா 1981-82ல்  நிகழ்த்தப்பட்டு படைப்பிரிவு தளங்களில் கணவரோடு வசிக்கும் அவர்கள் ஒவொருவரும்  முன்னிறுத்தப்பட்டு கௌரவிக்கப் பட்டர்கள்.



             1981-2ல்  பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் என்ற  இடத்தில்  நடத்திய UN  KNOWN  SOLDIERS DAY  நிகழ்வுக்கு  வந்திருந்தவர்கள்.
                            அன்றய  படைப்பிரிவு தலைவர்  COLONEL.B.S.Guraya (டர்பன் கட்டியிருப்பவர் ) அவர்களின் இரு புறமும்  கர்னல் கணேசனும் அவரது துணைவியாரும்.
                        இன்று சுமார் 37 வருடங்களாகத்  தொடர்கிறது  அந்த விழா.
அடுத்து  கணேசன் அறிமுகப்படுத்தியது

                                         FAREWELL NOT GOODBYE

                இது பற்றிய  விபரங்களை அடுத்த  பதிவில் பார்ப்போம்.



























திங்கள், 10 அக்டோபர், 2016

                                      கணேசன் என்பது யார் ?
                கர்னல் பாவாடை கணேசன் என்ற எனது பதிவுகளைப்  படித்துவரும் நண்பர்களும்   எனது  pavadaiganesan.com என்ற வலை தளத்தைப் பார்த்துவரும் நண்பர்களுக்கும் "யார் இவன் ; வித்தியாசமானவனாகத் தெரிகிறதே" என்ற எண்ணம் எழுந்திருக்கலாம்.
                             ஆம்!எனது வாழ்க்கைப் பாதையில் சற்று  பின் நோக்கி நடந்து பார்த்தால் விளக்கம் கிடைக்கிலாம்.
                    திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் தாலுக்காவில் உள்ள அன்றைய சிற்றூர்  சன்னாநல்லூர்.இன்று அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டது .இன்னமும் விரிவாக்கப்பட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரு நகரமாக இது உருவாகலாம்.




             நன்னிலம் என்ற ரயில் நிலையம் இருப்பது சன்னாநல்லூரில்.
                             அன்றைய அந்த சிற்றூரிற் பிறந்து வளர்ந்து பொதுப்பணித்துறையிலும் பின்னர் இந்திய இராணுவத்திலும் தன்னிகரற்ற தலைவனாக உயர்ந்து இந்தியத் திருநாட்டின் தென் துருவ ஆய்வு தளம் தக்ஷிண் கங்கோத்ரியின் குளிர்காலக் குழு தலைவனாகப்  பணியாற்றி  குடியரசுத்தலைவரின்"வஷிஷ்ட்ட சேவா மெடல் "விருது பெற்றவர் கணேசன்.

கணேசன் பிறந்து வளர்ந்த தெரு,குளம் மற்றும் அவரது வயல்.




                                இந்த செய்தி 1989ல்  பல ஊடகங்களில் வெளியாகியிருந்தது.இதைப்பற்றி அறிந்த தஞ்சாவூர் மனிதர் ஒருவர் "அப்படியா? என்று ஆச்சரியப்பட்டு கணேசனை வாழ்நாளில் ஒருமுறையாவது கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.
                 சுமார் 10 ஆண்டுகளுக்குப்பின் தஞ்சாவூரிலிருந்து "திருச்செங்க ட்டான் குடி"புறப்பட்ட அவர் வழியில் சன்னாநல்லூரைப் பார்த்து வண்டியை நிறுத்திவிட்டார்.
                    ஆகா ! கர்னல் கணேசன் பிறந்த ஊரல்லவா என்று மகிழ்ந்து அவரைப் பற்றியும் அவரது பெற்றோர் ,குடும்பம் பற்றி விசாரித்திருக்கிறார்.ஊர் மக்கள் அப்படி யாரும் இந்த ஊரில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
                     அண்டவெளி  ஒரு மாபெரும் சக்தி பீடம் .நமது மூளைப் பகுதியில் உள்ள  "பீனியல்"சுரப்பி ஒரு தொலைத்தொடர்பு மையம்.இதில் பதிவாகும் கேள்விகளுக்கு விண்ணிலும் மண்ணிலும் எங்கும் தேடி அதற்கு விடை கொண்டுவந்துவிடும்.
                      காலம் சுழன்றது.தஞ்சாவூர் மனிதர் கணேசனை மறக்கவே இல்லை.சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கணேசன் ரயிலில் 2Tier A/Cயில் பகல் வேளையில் சன்னாநல்லூர் போகப் பயணித்துக்கொண்டிருந்தார்.வண்டி விழுப்புரம் தாண்டுகையில் கம்பார்ட்மெண்ட் உள்ளேயே இங்கும் அங்கும் நடந்து தனது இருக்கையை விட்டு வேறு ஒரு இடத்தில்உட்கார்ந்தார்.
                            எதிரில் சுமார் 70-75 வயது முதியவர் வெளிப்பக்கம் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். வண்டி கிட்டத்தட்ட காலி.கணேசனே பேச்சை ஆரம்பிக்கிறார்.
                     அய்யா !கையில் என்னவோ "ஒய்வு ஊதியோர் பத்திரிகை" வைத்திருக்கிறீர்களே ,நீங்கள் ஒய்வு பெற்றவரா ?
                          பெரியவர் சற்று திரும்பிப் பார்த்து "ஆம்"என்கிறார்.
              நானும் இராணுவத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவன்தான் .
          அண்டவெளியில் சற்று சலசலப்பு !அவரது பீனியல் சுரப்பி பிரகாசிக்கிறது.
             கண்கள் மின்னுகின்றன.
                             சார்! சில ஆண்டுகளுக்குமுன் தென் துருவம் சென்று வந்த சன்னாநல்லூரைச்சேர்ந்த ஒரு இராணுவ அதிகாரியை பற்றி விசாரித்தேன் .அப்படி யாரும் அந்த ஊரில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
                               நீங்கள் இராணுவ அதிகாரி என்கிறீர்களே உங்களுக்கு கர்னல் கணேசனத்தெரியுமா?
                       அண்டவெளி என்ற சக்தி பீடம் அதிர்ந்து சிரித்தது.
                கணேசன் அப்படியா என்று சொல்லிவிட்டு எழுந்து போய் தன்னிடமிருந்த ஒரு தன விளக்க நூலை எடுத்துவந்து பெரியவரிடம் தந்தார்.
                          அடையாளம் கண்டுகொண்ட பெரியவர் கைகள் நடுங்க கணேசனைக் கட்டிப்  பிடித்துக்கொண்டார்.
                          தான் பிறந்து வளர்ந்து 15-16 வயதுவரை வாழ்ந்த ஊரில் யாருமே என்னைப் பற்றி நினைவு கூறவோ பெருமைப் பாடவோ இல்லையா?
                      நமது செயல்பாடுகள் மக்கள் மனதிலே நிற்பதோடு அல்லாமல் அவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக உந்து சக்தியாக காலம் காலமாக நிலைத்திருக்கவேண்டும்.
                            அப்படி உருவானதுதான்"அகத்தூண்டுதல் பூங்கா."



 சன்னாநல்லூரில் அவரது சொந்த நிலத்தில் அவரது தம்பி கலியமூர்த்தி உதவியுடன் ஆறு கோண வடிவில் அகத்தூண்டுதல் பூங்கா வேலைகள் ஆரம்பமாகின்றன.
                     பேரளம்  வேதாத்திரி மகரிஷி  பெருவெளி ஆலயத்து தலைவர்  டாக்டர்  அழகர் ராமானுஜம் அவர்கள் 23-12-2012 அன்று அகத்தூண்டுதல் பூங்காவைத்  திறந்த வைத்து உரையாற்றினார்.

பெருமை மிகு நண்பரும் என்னை எனது பிறந்த ஊரிலேயே  அறிமுகப்படுத்திய தஞ்சாவூர் "தங்கமுத்து" அவர்களும் நண்பர் திருநாவுக்கரசும்.
              தம்பி கலியமூர்த்திக்குப் பொன்னாடைப் போர்த்தி மகிழும் அண்ணன்  கணேசன்.
பேரளம் பெருவெளி ஆலயத்தில் அகத்தூண்டுதல் பூங்கா.

                 தமிழ்நாட்டில் சன்னாநல்லூர்,பேரளம் ,சென்னை ஆகிய இடங்களிலும் பெங்களூருவில் M.E.G &CENTRE
                                                         பெங்களூரு M.E.G&Centre
             


சென்னை  943,17வது மெயின் ரோடு ,அண்ணாநகர் என்ற கணேசனின் வீட்டு முன்னால் .


     உலக  உருண்டைபோல் வடிவமைக்கப்பட்ட  மற்றோரு கல் பெங்களூருவில் அமையவிருக்கும் Military Museum of India வில் இடம்பெற  
கணேசனின் தென் துருவ கல் எடுத்துச் செல்லப்படுகிறது.
                 சுமார் 50 கோடி வருடங்கள் 5000மீ கனபரிமான உறை பனியில் கிடந்த இந்த பாறைகள்  தெற்கு பசிபிக் மகாசமுத்திரம் ,தெற்கு அட்லாண்டிக் மகாசமுத்திரம் சந்திக்கும் தெற்கு மகாசமுத்திரம் வழியாக இந்தியப் பெருங்கடல் ,அரபிக் கடல் தாண்டி கோவா துறைமுகம் வந்து பின்னர் தரை மார்க்கமாக இந்த இடங்களுக்கு ஒரு தனி மனிதனால் கொண்டுவர முடிந்தது என்றால்..........



                இந்த அகத்தூண்டுதல் பூங்கா பார்ப்போர் மனதில் உந்து சக்தியைக் கொடுத்து சாதனைப் புரியத்  தூண்டும் என்று எதிர் பார்ப்போம்.

                                வாழ்நாளில் ஒருமுறையாவது ஏதாவது ஒரு அகத்தூண்டுதல்  பூங்காவிற்கு  சென்று வாருங்கள்.
                           
                           உங்கள் வாழ்க்கை  வளமாகும்.








































ஞாயிறு, 9 அக்டோபர், 2016

Mind is the master

                              மன மலர் கொய்து மஹேச                                 பூஜை செய்யும் .

                                 எனது  பதிவு"இதுவுமல்ல அதுவுமல்ல ,ஓம் "என்ற கட்டுரையை நண்பர்கள் படித்திருக்கலாம்.கேரளத்து ஆன்மீக பெருந்தகை "நாராயண குரு " அவரகளின்  "ஆத்ம உபதேச சதகம் " என்ற நான்கு வரிகளுக்கொன்றாக நூறு பாடல்களின் நானூறு வரிகளுக்கு அவரது வழித்தோன்றல்  குரு "நித்ய சைத்தன்ய யத்தி "சுமார் ஆயிரம் பக்கங்களுக்கு தந்திருக்கும் விளக்கமே "இதுவுமல்ல அதுவுமல்ல  ஓம்."என்ற நூல்.
                           மனித மனம் புற உலகம் ,அக உலகம் என்ற இரண்டுக்குமிடையே  போராடுவதே மனித வாழ்க்கை .
                 புற உலகினைப் புரிந்துகொள்ள உதவும் கண்ணாடி ஐம்பொறிகளான மெய் ,வாய் ,கண் ,மூக்கு ,செவி.
            இந்த ஐம்பொறிகளும் தெரிவிக்கும் செய்தி அக உலகில் என்ன என்ன வேடிக்கைகளை நடத்துகிறது என்று பார்க்கலாம்.


Image result for structure of human mind





                      பெரும் பாலானவர்கள் இந்த ஐம்பொறிகளின் தேவையைப் பூர்த்திசெய்வதுதான்  வழக்கை என்று நினைக்கிறார்கள்.
                         நாள் முழுவதும் பொய்,ஏமாற்று, நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு மலையில் நவராத்திரி பூஜை செய்கிறார்கள்.
                      இன்றைய தமிழ் நாட்டின் நிலை ஒரு ஒருங்கிணைந்த கொலைக்களம் போலிருக்கிறது.யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
                     அரசாங்க அதிகாரிகள் தற்கொலை,பள்ளி மாணவன் ஆசிரியரைக்கொலை செய்வது,கணவன் மனைவியை /மனைவி கணவனைக் கொலை செய்வது ,கோடிக்கணக்கில் பண மோசடி ,நம்பிக்கை துரோகம் ,கையூட்டுக் கலாச்சாரம்  போன்றவைகள்தான் அன்றாட நிகழ்வுகள்.
                           கொள்ளையடித்தப் பணத்தை நன்றாகப்  பூட்டிவிட்டு கோவில் தர்மகர்த்தா என்றமுறையில் கும்பாபிழேகத்திற்க்கு சென்று வந்தால் வீடு திறந்துகிடக்கிறது.(மேலும்  விவரிக்கத்தேவையில்லை)
                  இங்குதான் நாராயணகுரு மன மலர் கொய்து  மஹேசனுக்குப் பூஜை செய்யுங்கள் என்கிறார்.
                    மனம் என்ற தோட்டத்தை நாம் பண்டைக்கால விவசாயிகளைப்போல் (?) பராமரிக்க வேண்டும் .அந்த மலர்களைக்கொண்டு  அர்ச்சனை செய்யுங்கள் என்கிறார்.நவராத்திரி ,ஆயுதபூஜை என்றால் பூ விலை பல மடங்கு உயர்ந்துவிடும்.ஏன் புற  உலகப் பூக்களை தேடுகிறீர்கள் .?
அக உலகத் தோட்டம் பாழடைந்தவர்கள் தான் பூக்களைத் தேட

வேண்டும் .
                 எந்த கோவிலுக்கு சென்றாலும் கூட்ட நெரிசல் தாங்கமுடிவதில்லை.திருப்பதி ப்ரமோத்வச விழாவில் சிலர் நேரிடையாக மோட்சத்திற்கு (?) சென்று விட்டார்கள் .
                  இப்படிப்பட்ட அறிவு சூன்யங்களுக்குகாகவே நமது முன்னோர்கள்

                    மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்,
                    மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்,
                    மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்,
                    மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே !

            என்று எழுதி வைத்தார்கள்.
                              நமது கல்வியின் நோக்கம் "கைநிறையப் பொருளீட்டல்" என்றாகிவிட்ட பிறகு மனமாவது  மந்திரமாவது.
                       ஆனாலும் சில நல்லவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழகத்தை மீட்டுக் கொண்டுவர  முயற்சிக்கிறார்கள் என்பது ஒரு நல்ல செய்தி.
                  மனமெனும்தோட்டத்தில்  விளையும் சந்தன முல்லைகளைக் கொண்டு மனசாட்சி என்ற அந்த மகேசனுக்குப்  பூஜை செய்வோம் வாருங்கள்.
               
               





























ஞாயிறு, 2 அக்டோபர், 2016

ELLAIP PAATHUKAAPPU.

                               ல்லை பாதுகாப்பு என்பது 
             காலை 9 மணி-மாலை 5 மணி                                  வேலையல்ல.
            இராணுவப் பணி  இராணுவத்தினருடன் சம்பந்தமில்லாதவர்கள்  எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதில்லை.அதனால் தான் பல படித்த முட்டாள்கள் கூட  இராணுவத்தினரின்  ஊதிய முக்கியத்துவங்களை  காகிதக் கணக்கீடுகளுடன்  ஒப்பிட்டு பேசுகிறார்கள்.

Image result for indo pak border clashes


                        ஒன்றரை வருடங்கள் இந்த உலகின் கீழ்க்கோடியான  தென்துருவதில் பணியாற்றும் வாய்ப்பு  எனக்கு கிடைத்தது.மிகவும் மகிழ்ச்சியுடனும்  பெருமையுடனும்  உற்றம்  சுற்றம் மனைவி  மக்களைப் பிரிந்து அங்கு பணியாற்றிக்கொண்டிருக்கையில்  புதிய குழுவினர் எங்களது சில கடிதங்களுடன்  எங்களது பணி  முடியும் தறுவாயில் அண்டார்க்டிகா வந்தனர்.
                      மகா ராஷ்ட்டிரா விலிருந்து  ஒரு B.Sc பட்டதாரி  எங்களுடனிருந்த அவரது அண்ணனுக்கு (விஞ்ஞானி )எழுதியிருந்த  கடிதத்தில் இரண்டு நாட்கள்  அவசர விடுப்பில் வீட்டுக்கு வந்து போகும்படி எழுதியிருந்தார்.
                      இதைப்  படித்தவர்கள் வாய்விட்டு சிரிக்கையில்  தலைவன் என்றமுறையில் என்  நெஞ்சில் உதிரம் கொட்டியது.

Image result for dakshin gangotri indian antarctic station


                       அண்டார்க்டிகா என்பது எங்கிருக்கிறது,அங்கு ஒன்றரை வருடங்கள் பணியாற்ற எவ்வளவு உடல்,மன திண்மை வேண்டும் என்பதை 
உணர முடியாத படித்த முட்டாள்கள் நிறைந்த இந்த நாட்டிற்க்காகவா  நான்
இத்தனை சிரமங்களையும் ஏற்றுக்கொண்டுள்ளேன்?
             உலகிலேயே கொடுமையான குளிர் 5000மீ.கனமான உறைபனி ,மணிக்கு சுமார் 300கி.மீ  வேகத்தில் வீசும் நிற்கவே நிற்காத பனிக்காற்று  நிறைந்த உலகை இந்த முட்டாள்கள் கற்பனை செய்து  உணரமுடியவில்லையே.
                 அதே நிலையில் தான் இன்றைய அறிவு ஜீவிகள் இருந்துகொண்டு இராவணுவத்தின் பணியை மற்ற மத்திய அரசு பணிகளுடன் ஒப்பிடுகிறார்கள்.
                  இந்திய மக்களின் நினைவுகளில்  சமீபத்திய நிகழ்வுகள் பசுமையாக இருக்கும் என நினைக்கிறேன்.
                       உரி பகுதிகளில் நடந்த நிகழ்வுகளும் அதற்கு இந்திய இராணுவம் கொடுத்த பதிலடியும்  நமது மக்களிடையே இருந்த தூக்கத்தை சற்றே  கலைத்திருக்கிறது என நினைக்கிறேன்.

Image result for uri operation




                          எல்லை பாதுகாப்புப் பணியும்  மனிதர்களை மிருகங்களை விட கேவலமாக,கொடூரமாக  போர்க்கைதிகளின் நடத்து விதிகளைக் காலில் போட்டு மிதிக்கும் நமது அண்டைநாட்டு நடைமுறைகளும் இந்திய ஆட்சிப்பணியாளர்கள்  அறிந்திராதது.
                      நமது மக்களுக்கு நமது இராணுவத்தினரின் எல்லை பாதுகாப்புப் பணி பற்றிய எண்ணங்களும் அதனால் ஏற்படும்  உணர்வுகளும் சரியாக இல்லை என்பதன் அடையாளமே "ஒரு ரேங்க் ஒரே ஓய்வு ஊதியம் "என்று போராடிய முன்னாள் இராணுவத்தினரின் கோரிக்கை இன்னமும் முடியாமலிருக்கிறது.
                  கார்கில் போரின்போது பாகிஸ்தானியரிடம் பிடிபட்ட லெப்டினன்ட் காலியாவையும் அவரது சகாக்களையும் உயிரை வைத்து உடலை சிதைத்தார்கள் என்ற உண்மை நமது மக்களிடையே ஒரு அதிர்ச்சியையும் அதன் காரணமாக ஒரு பூகம்பத்தையும் ஏன்  ஏற்படுத்தவில்லை.
                      பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக  அறிவிக்கக் கோரி காலியாவின் தந்தை இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார்.அது என்னவோ தனிமனித போராட்டம் என்று நமது மக்கள் உணர்வுகளற்று போய்க்கொண்டிருக்கிறார்கள்.
                   நமது "அறுவை சிகிச்சை" போருக்குப்  பின் இன்று இந்திய எல்லைப்புற வாழ்க்கை எப்படிஇருக்கும் என்று இராணுவம் அல்லாத மக்கள் அறிவார்களா?
                         நித்திய கண்டம் பூரண ஆயுள் .
          செத்துப் பிறக்கும் குழந்தையை வெட்டிப் புதைக்கும் வீர மறவர்கள்தான் நாம். ஆனால் எல்லையில் உள்ள இராணுவத்தினர்  தினமும் செத்துப் பிழைக்கிறார்கள் என்பதை இந்த நாடு உணருமா?
                   அவர்களுக்காக என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்.
 தனது மகன் பாகிஸ்தானியர்களால் பிடிக்கப்பட்டுவிட்டான் என்ற சேதியைக் கேட்டவுடன் மாரடைப்பால் மரணமடைந்த அந்த மகாராஷ்ட்டிர  மாநில தாய்க்கு இந்த நாடு என்னசெய்யப்போகிறது .
                        எனது அருமைத் தாய்நாட்டு மக்களே ,சிந்தியுங்கள்.!!

                            ye mere vathanki logo, 
                            jara yaadkaro kurpaani.
                 
                         

























































சனி, 1 அக்டோபர், 2016

                                                மண் மேடுகள் .
              இது  கர்னல் கணேசனின் அடுத்தது வரவிருக்கும் நூல் .

                               வரும் பகைவர் படை கண்டு மார்தட்டிக்
                                     களம் புகுந்த மக்களைப்பெற்றோர் வாழ்க.
                               மனம் கொண்ட துணைவர்க்கு  விடை தந்து வேல் தந்த
                                       மறக்குலப்  பெண்கள் வாழ்க.
                              உரம் கொண்டுப்  போராடி உதிரத்தில்  நீராடி
                                          அறம்  காத்த உள்ளம் வாழ்க ! ! !
           படிப்பவர் கண்களில் கண்ணீரையும் நெஞ்சில் செந்நீரையும் சிந்தவைக்கும்  உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட ஒரு குறுநாவல் .
                             ஒரு தொழிலதிபர்,இரண்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்கள்
தந்திருக்கும் அணிந்துரை.
                              இவற்றில் தொழிலதிபர் அவர்களின் அணிந்துரை உங்களுக்காக.




















          இந்த நூல்  சரியானப் பதிப்பகத்தாரைத்  தேடிக்கொண்டிருக்கிறது.
                      நாட்டுப்பற்றுடைய  இந்தியத் திருநாட்டின் நலனில் அக்கறையுள்ளவர்கள்  தொடர்பு கொள்ளவும்.