திங்கள், 23 அக்டோபர், 2023

                                            மண்ணும் மனிதர்களும்.

                                               பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி!

                                                         நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி!
                                                         தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி!
                                                         வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி!
                                                         வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!

            இந்த உலகம்  பஞ்ச பூதங்களால் ஆனது போல் இந்த மனித  உடலும் பஞ்ச பூதங்களால்  ஆனது என்பதை நாம் அறிவோம்.ஆனால் 96 தத்துவங்களடங்கிய இந்த உடலின் சூக்குமத்தை  பெரும்பாலானவர்கள் தெரிந்து கொள்வதில்லை. மண்ணின் பெருமையறிந்த  விவசாய பெருமக்கள்  மனித  உடலின் மஹத்துவதில் கவனம் செலுத்துவதில்லை.
                        கிராமத்தில்  விவசாயப்  பெருங்குடியில் பிறந்த கணேசன் இயற்கையாகவே  அந்த நறுமனச் சகதியில் கிடந்துழலும் பேறு  பெற்றிருந்தார்.தமிழிலக்கியங்களின்  ஈடுபாடு  அவரை புதிய பாதையில் அழைத்துச்சென்றது. 



                                   உரிமையில்லாத சொத்து சுகம், உழைக்காமல் பெரும் ஊதியம்,உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுதல் ,நம்பிக்கைத் துரோகம்  போன்றவற்றை  இளமையிலேயே வெறுத்து ஒதுக்கினார்.பொருளீட்டவேண்டும் என்ற பேராசை அவர் மனதில் பதியவே இல்லை.அதன் காரணமாக தமிழக பொதுப்பணி துறை பொறியாளராக 1961 முதல் இருந்த அவர் வாங்கிய சம்பளத்தை வெட்டாற்றில் வீசியெறிந்துவிட்டு அரசாங்க வேலையை 1963 ல்     ராஜினாமா செய்தார்.
                    இங்கு நாம் திருமந்திரம் பாடல் ஒன்றை நினைவு கொள்ளவேண்டும்.
                                     
                                  "கண்காணி இல்" என்று கள்ளம் பல செய்வர் ;
                                     கண்காணி இல்லா இடமில்லை ,காணுங்கால் ;
                                    கண்காணியாகக் கலந்து எங்கும் நின்றானைக்
                                     கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே .

  கணேசனின் செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த அந்தக் கண் காணி  அவருக்கு  புதிய பாதையைத் திறந்துவிடுகிறான். அவர்களது பரம்பரையிலேயே முன் எப்போதும் யாரும் கனவுகூட கண்டிராத   பாதையாக அவர்  இந்தியத் திருநாட்டின் இராணுவத்தில் 1964 ம் ஆண்டு மே  மாதம் 3 ம் நாள்  அதிகாரியாகிறார்.  



                     கல்வியறிவு பெற்று  அரசாங்க வேலையிலிருப்போரின் பிள்ளைகள் இளமைமுதல்  கனவு கன்டுகொண்டிருக்கும்  ராஜ மரியாதை நிரம்பிய இராணுவ அதிகார  உயர் பதவியின் முதற் படியிலமர்த்திய  அந்தக் கண்காணி மாய உருவில் கணேசனை வழிநடத்த ஆரம்பித்தான்.
                 இராணுவப்  பரம்பரையில் வந்த பல இளம் அதிகாரிகளும் வியந்து நிற்க கணேசன் பழைய எல்லைகளை  உடைத்தெறிந்து  புதிய இலக்குகளை உருவாக்குகிறார்.
இராணுவத்தில் அதிகாரி களல் லாதோர் முன்னிலையில் அவர் தன்னிகரற்ற தலைவனாக உயறுகிறார். 
                      சிப்பாய்களின் பயிற்சி அதிகாரி,  , இளம் அதிகாரிகளை ப்  பயிற்றுவிக்கும் அதிகாரி , படைப்பிரிவு தலைவர் என உயர்ந்த அவரை இந்தியத் திருநாட்டின்  தென் துருவ ஆய்வுதளமான "தக்ஷிண்கங்கோத்ரி "யின் குளிர்கால தலைவனாக  இந்திய அரசு தேர்வு செய்தது.



                 திருவாரூர் மாவட்டம்,சன்னாநல்லூர்  மண்ணின் பெருமையை இளமை முதல் அனுபவித்திருந்த கணேசன், தென் துருவம் புறப்படுமுன் சன்னாநல்லூர் வந்து தனது பிறந்தமண்ணில் ஒருபிடி எடுத்து வைத்துக்கொண்டார். 26 நவம்பர்,1987 ல் கோவாவி லிருந்து  புறப்பட்ட அவர்கள்  21  டிசம்பர்  1987 ல்  அண்டார்க்டிகாவில் இந்திய ஆய்வுத்தளம்  சென்றடைந்தார்கள் .தனது பிறந்த மண்ணை ஆய்வுத்தளம் சுற்றி தூவிய பின் தனது பனியை துவக்கினார்கள்.
                      உலகிலேயே கொடுமையான குளிரும்,பனிக்காற்றும் நிமிடத்துக்கு நிமிடம் மாறும் சுற்றுப்புற சூழ்நிலையும் உள்ள அண்டார்க்டிகாவில் இந்திய குழு சரித்திரம் படைத்தார்கள் என்பதை காலம் என்னும் பதிவேட்டில்  பதித்த கணேசன் அங்கிருந்து  திரும்புமுன் யாருமே எதிர்பார்க்காத ஒரு செயலை செய்தார்.
                       5000 மீ கணபரிமான உறைபணிக்கிடையில் சுமார் 50 கோடி வருடங்களாக மூழ்கிக் கிடந்த கற்பாறைகள்  சிலவற்றை தமிழகம் கொண்டுவந்தார்.அவைகளை சுமார் 10அடி  உயர கல்தூணைகளின் மேல் நிறுத்தினார்
                 இதுவே "அகத்தூண்டுதல் பூங்கா "பிறந்த கதை.






                   இந்த நிகழ்வு மண்ணின் பெருமையா , அல்லது மனிதர்களின் பெருமையா ?
மண்ணை நேசிக்கும் மனிதர்களை அந்த பஞ்ச பூதங்களும்  பாதுகாக்கின்றன என்பதே இந்த பதிவு தெரிவிக்கும் செய்தி.

                              உடல் நலமும் மன நலனும் பெற்ற குழந்தைகள்  நல்லமுறையில் வழி நடத்தப்பட்டால் அவர்கள் சரித்திரம் படைப்பார்கள் .ஆனால் சுய சிந்தனை திறன் வளர்க்கப்பட்டால் ,அவர்களாகவே புதிய பாதையில் பயணிப்பார்கள்.

                              பணம் சம்பாதிக்கவேண்டும் ,பொருள் சேர்க்கவேண்டும்  ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஆசைகளைவிட சாதனை புரியவேண்டும்,சரித்திரம் படைக்கவேண்டும் என்ற இலட்சிய எண்ணங்கள் மனதில் பதியவேண்டும்.நேர்முக சிந்தனையை விட மாறுபட்ட சிந்தனைகள்தான் ( vertical thinking and lateral thinking ) சாதனையாளர்களை உருவாக்குகிறது.

                                 Watch your thoughts; it become words.
                                watch your words;it becoes action.
                                 watch your actions;it becoes habit.
                                  watch your habits;it becomes character.
                                 Watch uor character;it takes you to destiny.

                  So,your destiny is chanelised by your thoughts.












 















































                                          

செவ்வாய், 3 ஜனவரி, 2023

                                    விபத்தில் உணர்வுகளிழந்த 

                     கருப்புப்பூனை அதிரடிப்படை இராணுவ வீரர்                                                                          பிரபாகரனுக்கு

                         மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி 

                                               வழங்கும் விழா.

                              25 டிசம்பர் 2022,ஞாயிற்றுக்கிழமை.

                அகத்தூண்டுதல் பூங்கா வளாகம்,

                                       சன்னாநல்லூர் .

                விழா தலைமை .கலைமாமணி,பத்மஸ்ரீ 

                                       கே.கேசவசாமி 

                                   இந்தியக் குடியரசு தலைவர்களிடம் 

                                       ஏழுமுறை சிறப்பு விருது பெற்றவர்.

வாழ்த்துரை வழங்குவோர் ;

                                    1. முனைவர் .அழகர் ராமானுஜம்,

                                                     தலைவர்,வேதாத்ரி மகரிழி  ஆஸ்ரமம்.

                                    2. திரு.சுதர்சனம் ,மூத்த வழக்கறிஞர்.கோயமுத்தூர்   

                                    3. திரு .ஆர்.வேதாச்சலம் .காரைக்கால்.   

      நன்றியுரை; கர்னல் பாவாடை  கணேசன்,வீ.எஸ்.எம்.

                                   தலைவர் ,அகத்தூண்டுதல்  பூங்கா,சன்னாநல்லூர்.

                                           பகல் விருந்து ;13.30 மணி  


வரவேற்புரை.:

          வணக்கம்.!

           இந்திய  திருநாட்டின் பாதுகாப்பில்  பங்கெடுக்க ,தன்னார்வத்துடன் தனது சொந்த ஊரான இராமநாதபுர மாவட்டத்துக்கு கிராமத்திலிருந்து  புறப்பட்ட திரு பிரபாகரன் அவர்கள்,தூரதிர்ஷ்ட்டவசமாக தனது பணி க்காலம் முடியுமுன்பே  விபத்தின் காரணமாக திரும்பிவிட்டார்.

                 முதுகெலும்பு பாதிக்கப்பட்டு ,இடுப்புக்குக்கீழே உணர்வுகளிழந்த அவருக்கு,சிறு உதவியாக மோட்டார் பொறுத்திய சக்கர நாற்காலி வழங்க இருக்கும் விழாவிற்கு வந்திருக்கும் பெருமை மிகு பண்பாளர்கள் எல்லோரையும் வருக வருக என வரவேற்கிறேன்.தன்  முனைப்பாக இந்த விழாவிற்கு ஏற்பாடுசெய்திருக்கும் கர்னல் பாவாடை கணேசன் சார்பாகவும்,பாவாடை தெய்வானை குடும்பத்தினர் சார்பாகவும்  உங்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன்.

            விழாவிற்கு தலைமை  ஏற்க இசைந்து இங்கு வந்துள்ள பெருமை மிகு கலைமாமணி,பத்மஸ்ரீ திரு கேசவசமி அவர்களுக்கு வணக்கம் சொல்லி அவர்களை மேடைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

                   பெறலாம் வேதாத்ரி மகரிஷி ஆஸ்ரம தலைவரும் 21 ம் நூற்றாண்டின் அறிவு ஜீவி என்று போற்றப்படும் மரிஷி வேதாத்ரி அவர்களின் கருத்துக்களை உலகேங்கும் பரப்பும் உன்னத பணியில்  தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவருமான முனைவர் திரு அழகர் ராமானுஜம் அவைகளுக்கு வணக்கம் சொல்லி அவர்களை மேடைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

            இந்தியதிருநாட்டின் பாரம்பரிய பெருமையை உலகேங்கும் பரப்பிவிட்ட  மாமனிதர்,தெய்வத்திரு இராமானுஜரின் அடிமையாகத் தன்னைப் பாவித்து "சுதர்சனம்" என்று  பெற்றோர்கள் இட்ட பெயரை "இராமானுஜ தாசர் ? என்று மாற்றிக்கொண்டவரும், இந்திய இராணுவத்தினர் மீது பெரு மதிப்பும் மரியாதையும் கொண்டு அதில் சிறப்பாகப் பணியாற்றிய  கர்னல் கணேசன் பால் ஈர்க்கப்பட்டு இந்த விழாவில் பங்குகொள்ளும் பொருட்டு கோயம்புத்தூரிலிருந்து  இங்கு வந்துள்ள திரு சுதர்சன் அவைகளை மேடைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறோம்.

            சுதந்திரப்  போராட்டத்தில் தீவிரப்பங்காற்றி இந்திய அரசின் தாமிரப்பத்திர விருது பெற்ற திரு ராஜன் அவர்களின் மகனும் பாண்டிச்சேரி மாநிலத்தின் பல பகுதிகளிலும் குறிப்பாகக் காரைக்கால் மாவட்டத்திலும் மிகச்சிறப்பாக அரசாங்கப்  பணியாற்றிஒய்வு பெற்றபின்னரும் பல சமூக சேவையில் ஈடுபட்டுவரும் திரு வேதாச்சலம் அவர்களையும்  அவரின் தூண்டுதல் காரணமாக இங்கு வருகை புரிந்திருக்கும் காரைக்கால் வட்டார பெருமக்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.திரு வேதாச்சலம் அவர்களை மேடைக்கு வருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

              ஆர்வமிருந்தும் தனது வருகையை உறுதி செய்யமுடியாமல் இருந்து பல வேலைகளையும் ஒதுக்கிவிட்டு இங்கு இன்று மகிழ்வோடு வந்திருக்கும் பெருமக்களை வணக்கத்துடன் வரவேற்கிறேன்.

              தனது முப்பதாண்டு  இராணுவப் பணியில் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகப் பணியாற்றிய கர்னல் கணேசனின் அழைப்பை ஏற்று தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு வந்துள்ள முன்னாள் இராணுவத்தினர் அனைவருக்கும் எனது வணக்கம்.

                    உலகின் கீழ்க்கோடியான  தென் துருவத்தில் கர்னல் கணேசனுடன் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றி இன்றுவரை அவரது எல்லா செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரும் இன்று பெங்களூரிலிருந்து இங்கு வந்துள்ள கௌரவ கேப்டன்  திரு ராஜன் அவர்களை அன்போடு வரவேற்கிறேன்.

                       உறவிற்கு உரம் கொடுத்து ,உறவும் நட்பும் இணைந்து திரு கணேசனின் குடும்பத் தினரின் பல நிகழ்வுகளிலும் எங்கிருந்தாலும் வந்து கலந்து கொள்ளும் திரு ராமநாதன்-காஞ்சனா தம்பதியினர்,திருமதி நப்பின்னை-வெங்கடேசன் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

                      இந்த மண்ணின் மைந்தன் கர்னல் கணேசனுடன் இணைந்து அகத்தூண்டுதல் பூங்காவின் பல நிகழ்ச்சிகளிலும் பங்குகொள்ளும் சன்னாநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் எல்லோருக்கும் எனது வணக்கம்.

                             உங்கள் எல்லோருடைய வரவும்  இனிதாக  இயற்கை துணைபுரிய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் எனது வரவேற்பு உரையை நிறைவு செய்கிறேன்.வணக்கம். !