வியாழன், 27 ஆகஸ்ட், 2020

           பனி உலகை ஆண்ட பாரதப் புதல்வர்கள்.

                   இந்தியா உலக உருண்டையின் கீழ்க் கோடியான  தென் துருவத்தில் தனது முதல் ஆய்வு தளமான தக்ஷிண்கங்கோத்ரியை 1984 ,Feb 24  அன்று கட்டி முடித்து  அன்று முதல் ஒவ் வொரு ஆண்டும் சுமார் 15 -20 பேர்களடங்கிய  குளிர்காலக் குழுவை அனுப்பி வருடம் முழுவதுமான ஆய்வுப்பணியைத் தொடர்கிறது.
                    இப்படி  ஆரம்பித்த ஆய்வுப்பணியின்  5 வது  குளிர்காலக் குழுவின் தலைவராகத் தேர்வானவர் கர்னல் பாவாடை கணேசன்

           தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன் தனது குழுவினருக்கு இவர் விடுத்த செய்தி இது.
                   இவரையும் சேர்த்து 15 பேர்களடங்கிய குழுவில் இவரது படைப்பிரிவில் பணியாற்றி இவருடனே வந்திருக்கும் ஸ்ரீகுமார் என்பவரைத்தவிர வேறு யாருமே முன்பின் அறிமுகமில்லாதவர்கள்.எப்படிப்பட்ட சூழ்நிலையில் யாருடைய தலைமையில் பணியாற்றப்  போகிறோம் என்பது பற்றி ஒருவருக்கொருவர் அறிமுகம்,மற்றும் கலந்துரையாடல் அவசியம் என்பதை கர்னல் உணர்ந்தார்.உயர் அதிகாரிகளும் சாதாரண சிப்பாயும் ஒன்றாக உண்டு,உறங்கி பணியாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
               


                          இந்த பரந்த உலகில் டெலிபோனைத்தவிர எந்த தொடர்புமில்லாமல் அவர்கள் பணியாற்ற வேண்டும்.வெண்பனிப் பர ப்பைத்தவிர  வேறு மரம் செடி கொடிகளையோ, உயிரினங்களையோ பார்க்கமுடியாது.
                 வருடம் முழுவதும் வீசும் பனிக்காற்றில் எந்த பொருளையும் வெளியில் விட்டு வைக்க முடியாது.


                          வெளியில் கிடைக்கும் பொருள்களை உடனே அடையாளம் காணமுடியவில்லையானால்  அவை பனிக்காற்றில் மூழ்கிவிடும்.



                                குளிர்காலம் முழுவதும் தேவையான எரிபொருள் ஹெலிகாப்டரிலிருந்து தள்ளிவிட்டு விட்டு அவர்கள் இந்திய திரும்பிவிட்டனர்.கர்னல் கணேசன் அவசரம் அவசரமாக அந்த இடங்களிலெல்லாம் மூங்கில் நட்டு வைத்தார்.பின்னர் நேரம் கிடைக்கும்போது அவைகளை பாதுகாப்பாக மேடை மீது வைக்க வேண்டும்.
                 உடலளவிலும் மனதளவிலும் அவரும் மற்ற உறுப்பினர்களும் நலமாக இருப்பதோடு பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும்.அண்டார்க்டிகாவிலிருந்த காலம் முழுவதும் கர்னல் கணேசன் மிகவும் கவனமுடன் செயல் பட்டார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
                முதல் முறையாக தக்ஷிண் கங்கோத்ரி  ஆய்வுதளம் வெளிநாட்டவர்களால் பார்வை இடப்பட்டது.

                    எல்லாவற்றிற்கும் ஈடுகொடுத்து  "பனிஉலகையாண்ட பாரதப் புதல்வர்கள் "என்ற பெருமையுடன் அவர்கள் இந்திய திரும்பினார்.



                










வியாழன், 13 ஆகஸ்ட், 2020

                            சங்கமித்ரா-65

                                "வல்லமை படைத்தவர்கள் கொள்ளையில் பதுங்கிவிட இல்லாமை-ஏழ்மையோடு பார்ப்பனப் பொல்லாமைப்போரில் நிற்கும் நல்லவனே -வல்லவனே நடைபோடுவேன் உனது வழி"  என்று 94 வயதுவரை இந்த சமுதாய மக்களுக்காகப் போராடிய தந்தை ஈ.வே.ரா. வின் வழிநின்று தனது 73 வது வயதில் மறைந்த சங்கமித்ரா என்னும் பா.ராமமூர்த்தியின் "வாழ்வும் பணியும் -மக்கள் தணிக்கை " என்ற நூலின் தலைப்பு இது.


           
                    நாளை நடைபெறவிருக்கும் இணையதள நூல் வெளியீட்டு விழாவில் நூலைப்பற்றியும் நூலாசிரியரான "புதிய மாதவி"பற்றியும் தெரிந்துகொள்ள தேடுகையில் மேலே உள்ள புத்தகம் கிடைத்தது.

                       
 

80 பேர்கள் புகழ்பெற்ற மனிதர்களின் பதிவுகள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன.

                           இதில் "புதிய மாதவி "என்ற எழுத்தாளரும் வித்தியாசமான முறையில் சங்கமித்ராவைப்பற்றி எழுதியிருக்கிறார்.







                     சுமார் 15 ஆண்டுகளுக்குப்பிறகு அந்தப் புரட்சி எழுத்தாளர் "புதிய மாதவியை " சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
                         அது மட்டுமல்லாது அவரது "பச்சை குதிரை "என்ற நூலைப் படிக்கவும் அதன் விமரிசனங்களை படிக்கவும் நேர்ந்தது.
                      எல்லாவற்றிக்கும் மேலாக அந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இணையதள வெளியிட்டு விழாவில் பங்கு கொள்ளும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
                                 பெரிதும் மகிழ்கிறேன்.
            நூல் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.









வியாழன், 6 ஆகஸ்ட், 2020

                                      எங்கள் வீட்டு இளவரசி.....
                                             உங்கள் வீட்டு ராணியாக.....

                  கர்னல் கணேசன் அமைத்துள்ள "அகத்தூண்டுதல் பூங்காக்களில் ' சன்னாநல்லூர்  சிறப்பானது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.ஏனெனில் சன்னாநல்லூர் அவர் பிறந்த ஊர்.
          1940 போன்ற காலகட்டத்தில் மிகவும் சாதாரணமாக இருந்த கிராமம்.Boat Mail என்று சொல்லக்கூடிய சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் சன்னாநல்லூர் மார்க்கமாக திருவாரூர் ,திருத்துறைப்பூ ண்டி,பட்டுக்கோட்டை காரைக்குடி வழியாக செல்லும்.ரயில்வே ஸ்டேஷன் சன்னாநல்லூரிலிருந்தாலும்  அதற்கு நன்னிலம் என்றுதான் பெயர்.

                   இன்று சன்னாநல்லூர் அகத்தூண்டுதல் பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்கள்அங்குள்ளபோஸ்டர்களில்முதலில்காண்பதுகணேசனது பெற்றோர்கள்.அடுத்து வரிசையாக "சன்னாநல்லூர் நறுமனச் சகதியில் விளைந்த சந்தன முலைகள்"என்ற தலைப்பினொடு கணேசனது உடன் பிறந்தோர் விபரங்கள் இருக்கும்.







                இதில் குறிப்பாக நான் பதிவிட விரும்புவது எனது தங்கையை பற்றியது.ஏழுபேர்கள் அண்ணன் தம்பி அக்காள் தங்கை என்ற பெரிய   குடும்பத்தில் நான் நடுவனாகப் பிறந்தேன்.

                              காலம் எங்களைத் தாலாட்டியது.இரு அண்ணன்  ஒரு அக்காள் திருமணமாகி சென்றுவிட்டனர்.நான்  S S L C படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் அன்னை கொடுங் காசநோய்க்கு ஆளாகி தஞ்சை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.வீட்டில் அப்பா,இரண்டு தம்பிகள்,ஒரு தங்கை இவர்களுடன் நான்.
                  இந்நிலையில் எனது S S L C தேர்வு எழுதும் நாள் வந்தது.காலை நான்கு மணியளவில் எழுந்து அன்றைய தேர்வுக்குப் படித்துவிட்டு வீட்டில் மற்றவர்களுக்காக சாதமும் ரசமும் செய்துவிட்டு ஐந்து கி.மீ தொலைவில் உள்ள பள்ளிக்கு ஓடுவேன்.வழியில்ஹோட்டலில்  மூன்று இட்லீ பொட்டலம் வாங்கி வழியில் அப்பா நின்றுகொண்டிருப்பார்.அதை வாங்கிக்கொண்டு ஓடுவேன்.
                                காலைத்தேர்வு எழுதி முடித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் உட்கார்ந்து இட்லீ சாப்பிட்டுவிட்டு,பகல் தேர்வுக்குப் படிப்பேன். மாலை ஐந்து மணிபோல் வீட்டுக்கு வந்து அடுத்த வேலைகள்  இருக்கும். 
               தாயின் அன்பும் கவனிப்பும் இன்றி வளரும் தம்பிதங்கை பற்றி கண்ணீர் வடிக்காத நாளே இல்லை எனலாம்,
                        காலம் எனும் காட்டாறு கரைபுரண்டோடியது .நான் இராணுவ அதிகாரியானேன் .தம்பிகளும் தங்கையும் வளர்ந்தார்கள்.அம்மா காசநோயோடு போராடிக்கொண்டு மருத்துவமனைக்கும்,வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருந்தார்,
                       தாயின் காசநோய்,தங்கையின் திருமண ஏற்பாடுகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது,மூத்த அண்ணன் மிகவும் பாடுபட்டு தங்கையின் திருமணத்தை முடிவு செய்தார்,
                      திருமணம் கடலூரில் நடக்கவிருந்தது,உடல் நிலை காரணமாக அம்மா வரமுடியவில்லை,மேகலாயா வில் பணியிலிருந்த நான் இரண்டுமாத விடுமுறையில் வந்து திருமண ஏற்பாடுகளில் அண்ணனுக்கு உதவியாக இருந்தேன்,
                 திருமணம் முடிந்து அன்று மாலையே மணமக்கள் மாப்பிள்ளையின் ஊருக்குப் புறப்பட்டார்கள்.அவர்களுடன் நானும் பெரிய அண்ணியும் சென்று வருவதாக ஏற்பாடு,
                 நல்ல விதமாக மாப்பிள்ளை வீட்டு வரவேற்பு இருந்தது,மறுநாள் காலை நானும் அண்ணியும் திரும்புவதாகவும் நாலைந்து நாள் சென்று நான் மட்டும் வந்து மணமக்களை அழைத்துப் போவதாகவும் முடிவானது,
                        மாப்பிள்ளையிடம் சொல்லிவிட்டு தங்கையிடம் போய்வருகிறேன் என்று சொல்ல முனைந்தேன்,
                    
                        தங்கை என்காலில்  விழுந்தாள் ,ஏனென்று தெரியாமல் நான் கேவிக்கேவி அழ ஆரம்பித்தேன்,கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது,"ஐயோ ,தாயிருந்தும் இல்லாதவளாக வளர்ந்த என் தங்கை ஒரு வீட்டு மருமகளாக,முன்பின் அறிமுகமில்லாத ஒருவன் மனைவியாக எப்படி வாழப்போகிறாளோ ? என்று என் உடம்பெல்லாம் நடுங்கியது.
                  மாப்பிள்ளையின் கைகளைப்பிடித்துக்கொண்டு தானே தனக்குத் தலைவிதியாய் வளர்ந்தஎங்கள்   வீட்டு இளவரசி இன்று உங்கள் வீட்டு மருமகள்.அவள் உலகம் புரியாத சிறு பெண்.தயவு செய்து கருணையோடு  கவனித்துக் கொள்ளுங்கள் என்று கண்ணீருடன் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.
                   அது நடந்தது 1969.இன்று 2020 ல் நினைத்துப் பார்க்கும்போது  எங்கள்  வீட்டு இளவரசி அவர்கள் வீட்டு ராணியாக இருந்தாளோ இல்லையோ ,ஆனால் அற்புதமானக் குடும்பத்தலைவியாக இருக்கிறாள் என்று காலம் அடையாளம் காட்டுகிறது.
                          இரண்டு பிள்ளைகள்,இரண்டு பெண்கள் என்று குடும்பம் பெறுக,மாப்பிள்ளை தலைமைப்பொறியாளராக ஒய்வு பெற்றார்.குழந்தைகளில் மூவர் பொறியாளர்கள் ஒருவர் மருத்துவர் என்றாகி எல்லோரும் 
மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
                     இரண்டு அண்ணன்கள் இரண்டு தம்பிகள் ஒரு அக்காள் என்று
 ஐவரைக் கால வெள்ளம் அடித்துச்செல்ல நான் மட்டுமே எங்கள் இளவரசியின்  ஆட்சியை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
                         எப்போழுதாவது  பிறந்த மண் நினைவு வந்தால் அவர்கள் குடும்பத்தோடு வந்து  சன்னாநல்லூர் மண்ணை உலகறியச்செய்த அண்ணன் அமைத்துள்ள அகத்தூண்டுதல் பூங்காவில் இளப்பபாறிச் செல்கிறார்கள்.

                                         வாழ்க ! வளமுடன் ! ! !.
  
                    
















   



ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

        இந்தியப் பெருமக்களுக்கு 73 வது சுதந்திர                                      தின வாழ்த்துக்கள்.

        தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்                                      கவனத்திற்கு.

               தென்  தமிழகத்தின் காவேரிக்  கரையோரத்தில் பிறந்தவர்கள் நுங்கும் நுறையுமாகப் பாய்ந்தோடும் புதுப்புனலில் நீராடி மகிழ்ந்தவர்கள்  மட்டுமல்லாது வளம் செறிந்த தமிழ் மொழியிலும் மூழ்கி முத்தெடுத்தவர்கள் என்பது சரித்திரம் சொல்லும் உண்மை.
                    இம்மண்ணில்தான் பிள்ளைக்கறி சமைத்த சிறுத்தொண்ட நாயனார் வாழ்ந்த திரு செங்காட்டங்குடியும்
                    வீரத்திற்கு விளக்கம் சொல்லும் கலிங்கத்துப் பரணி பாடிய ஜெயன்கொண்டார் பிறந்த தீபங்குடியும் இருக்கிறது.
                இந்த இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 15 கி.மீ.தான். இந்த இடைப்பட்ட தூரத்தில் தான் வீரத்திற்கும் விவேகத்திற்கும் முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடிய ஒரு மாமனிதன் பிறந்த ஊரான சன்னாநல்லூர் இருக்கிறது.
           ஒருதமிழ்ப்புலவன் கருணைக்கும் காவியபுலமைக்கும்,
எடுத்துக்காட்டாகச் சொல்லப்படும் ஒரு தமிழ்ப்புலவன் கையில் கொலைக்கருவியான துப்பாக்கி ஏந்தி நிற்பது போன்ற ஒரு ஒவ்வாத
உருவக்  கற்பனை நம் மனதில் எழலாம்.
                       இப்படி ஒவ்வாத உருவக் கற்பனைக்கு உரியவர்தான் கர்னல் பாவாடை கணேசன்.
                 பொறியாளர்,போர்வீரர்,தமிழ் மொழிக்கு பத்துக்கும் மேற்பட்ட நூலெழுதி பாமாலை சூட்டிய புலவன் போன்ற அடைமொழி இவருக்குப் பொருந்தும்.
            எல்லாவற்றிற்கும் மேலாக இராம காவியம் பாடிய கவிச்சக்கரவர்த்தி கம்பர் "ஏர் எழுபது "என்று வேளாண்குடிமக்களின் பெருமை பற்றி எழுபது பாடல்கள் பாடிய விவசாயக் குடும்பத்தில் இந்த மண்ணை நேசித்த மா  மனிதர்களான பாவாடை-தெய்வானை என்ற தம்பதியினர்க்குப் பிறந்தவர்.
                  அதனால்தான் இந்த சன்னாநல்லூர் மண் பற்றி இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது.
                   பொதுப்பணித்துறை பொறியாளராக இருந்த கணேசன் 1962 ல் நடந்த சீன ஆக்கிரமிப்பும் அதன் காரணமாக ஏற்பட்ட நாட்டின் அவசரகால நிலையும்
இருந்த நேரத்தில் பொதுப்பணித்துறை வேலையே விட்டு விட்டு இராணுவத்தில் அதிகாரியாகசேர்ந்தார்.
           கிராமத்து இளமை சுறு சுறுப்புடன் இருந்த அவரை இராணுவம் தாலாட்டியதில் வியப்பில்லை.Best sports person in Athletics,Swimming and Basketball என்று அதிகார வர்க்கத்திற்கு ஒரு முன்னுதாரணமாக முன்னேறினார்.
                   1984 ல் 4 Engineer Regiment என்ற படைப்பிரிவை Colonel என்ற தகுதியில் தலைமை ஏற்று நடத்திவருகையில் 1987 ம் ஆண்டு இந்தியதிருநாட்டின் தென்துருவ ஆய்வு தளமான "தக்ஷிண் கங்கோத்ரிக்கு " குளிர்காலத்த தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
               அண்டார்க்டிக்கா புறப்படுமுன் தான் பிறந்த ஊரான சன்னாநல்லூர் வந்து ஒருபிடி மண் எடுத்துக்கொண்டார்.இந்த மண் தென் துருவ ஆய்வுத்தளம் சுற்றி தூவப்பட்டது.
                 இந்தியாவின் ஐந்தாவது குளிகாலக் குழு தலைவர் என்ற தகுதியில் தனது 15 பேர்களடங்கிய குழுவுடன் 480 நாட்கள் உலகிலேயே அதிகக்  குளிர்பிரதேசமான அண்டார்க்டிகாவில் பனிப்புயல்,உடல்,மன ,உளவியல் போராட்டங்கள் என போராடி 1989 ம் ஆண்டு March 26 ம் நாள் இந்தியா திரும்பினார்.
          அண்டார்க்டிக்காவிலிருந்து புறப்படுமுன் அங்கு சுமார்  50 கோடி வருடங்கள் 5000.மீ.ஆழ உறைபணிக்கிடையில் கிடந்த நாலைந்து கற்பாறைகளை தமிழகம் கொண்டுவந்தார்.
             சுமார் 1 டன் எடையுள்ள இந்த கற்பாறைகளைக்கொண்டு  ஐந்து  இடங்களில் "அகத்தூண்டுதல் பூங்கா " அமைத்துள்ளார்.
              சென்னையில் வீட்டுவசதி வாரியம் வழங்கிய தனி மனையில் வசதியாக வாழ்ந்துவரும் கர்னல் தனது ஓய்வூதியம்,உடல் உழைப்பு எல்லாவற்றையும் இம்மண்ணுக்கு வழங்கி
                  அகத்தூண்டுதல் பூங்கா அமைக்கக் காரணமென்ன ?
       
                        வாருங்கள். ! அவரிடமே கேட்கலாம். !

                                                  நேர் காணல் 
கேள்வி.1.
           பொன்னையும் பொருளையும் தேடித்தேடி தேவைக்கும் அதிகமாக சேர்க்கத்துடிக்கும் இன்றைய மக்கள் மத்தியில் உரிமையோடு வாங்கிய சம்பளத்தைக்கூட ஆற்றில் வீசியெறிந்தவர் என்று உங்களை அடையாளம் காட்டுகிறார்கள் .அந்த நிகழ்வு பற்றி சொல்லுங்கள்.
கேள்வி 2.
             இராணுவத்தில் ஆள்சேர்ப்பு என்று கேள்விப்பட்டவுடன் ஆயிரம் லட்சம் என்று மோதும் கூட்டத்தில் மிகவும் சர்வ சாதாரணமாக நீங்கள் அதுவும் அதிகாரியாக சேர்ந்து பணியாற்றியுள்ளீர்கள்.உங்களது தேர்வு,ஆரம்பகாலப் பனி பற்றி சொல்லுங்கள்.
கேள்வி.3.
               நாட்டின் அவசரகால சூழ்நிலையில் அதிகாரியானீர்கள்.பொதுப்பணித்துறை உங்களை திரும்பவும் அழைத்தபோது அதை ஏற்காமல் மீண்டும் ஏன் இராணுவத்தேர்வுக்கு சென்றீர்கள்.
கேள்வி.4.
            இராணுவத்தில் அதிகாரியாவதற்கு பலவிதமானப் பயிற்சிப் பள்ளிகளில் பயின்று தேர்வுக்கு முயற்சிப்பவர்களுக்கிடையில் நீங்கள் மிக சுலபமாக அதிகாரியாகிவிட்டீர்கள்.ஒரு Royal life  என்று சொல்லக்கூடிய அதிகார வர்க்கத்தினிடையே மிக சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து சுமாரான கல்வியறிவுடனிருந்த நீங்கள் ,பொதுவாக ஒரு இராணுவ அதிகாரிக்கு கிடைக்கமுடியாத கௌரவமும் பணிப்பெருமையும் பெற்றது எப்பெடி .
கேள்வி . 5.
              தேசீய அளவில் உங்களை அறிமுகப்படுத்தியது உங்கள் அண்டார்க்டிக்கா அனுபவம்.அந்த தேர்வு,அந்தப் பனி பற்றி சொல்லுங்கள்.
கேள்வி.6.
                 Rashtriya Indian Military College (R I M C ) போன்ற இந்தியாவின் மிகச்சிறந்த
Public School ல் பயின்று பின்னர் National Defence Acadamy,Indian Military Acadamy போன்ற  இராணுவப் பயிற்சி தளங்களில் பயின்று அதிகாரியானவர்களைவிட நாட்டின் அவசரகால நிலையில் அதிகாரியான உங்களை புகழ்பெற்ற பயிற்சி படைப்பிரிவுகளின்  தலைவராக எப்படி நியமிக்க முடிந்தது.
கேள்வி.7
                இராணுவப் பொறியியல் கல்லூரியின்பெருமை மிகு "போர்க்கள பொறியியல் பகுதி " (Faculty of Combat Engineering ") யில் இளம் அதிகாரிகளை பயிற்றுவிக்கும் அதிகாரியாகத் தங்களது பணி  பற்றி சொல்லுங்கள்.
கேள்வி. 8.
                உங்களது சேமிப்புகளையெல்லாம் செலவு செய்து உங்களது பிறந்த மண்ணில் அமைத்துள்ள "அகத்தூண்டுதல் பூங்கா "பற்றி சொல்லுங்கள்.
கேள்வி. 9.
                   உங்களது குடும்பம் பற்றி சொல்லுங்கள்.
கேள்வி 10.
                   தொலைகாட்சி நேயர்களுக்கும்  பொதுமக்களுக்கும் தங்களது செய்தி என்ன.

                               நேர்காணல் கண்டு ஒரு நூலுக்கோ அல்லது ஒரு தொலைக்காட்சிக்கோ நிகழ்ச்சி தயாரிக்க வருபவர்கள் பேசப்படும் செய்தியில் சரியான தெளிவு இல்லையெனில் அவர்கள் நேர்காணல் கொடுப்பவரின் அனுபவ அறிவை வெளியுலகம் கொண்டுவர முடியாது..
                 அவர்களுக்கு உதவும் பொருட்டு, "கேள்வியும் நானே,பதிலும் நானே " என்று தயாரித்ததுஇந்த தொகுப்பு.
                  யார் வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.