புதன், 29 ஏப்ரல், 2020

                              Bow to the Will of Providence
            
              The term "Providence" was heard by me for the first time when I was preparing for my Antarctic expedition in 1987 when I was sitting in the Department of Ocean Development,New Delhi,and going through ,Robert Falcon Scotts "Trumph and Tragedy" reports .All those adventure enthusiasts can not miss this book.


                 Later ,when I was going through the wintering period at Antarctica  I was going through the notes I had prepared at Delhi about Providence.

                     All those who were interested in Antactic adventure reports canot miss the great Heroes of Antarctica.In 1819 ,the world was un aware that there is a continent in the sothern hemisphere.But by 1958 in a matter of 139 years some 50 major expeditions fromc ountries like, USA, UK, Russia, Australia,Sweeden,Norway had revealed to the world the Frozen continent Antarctica.

                      What an un imaginable developments in my life from a rural tiny village, Sannanallur in Tamilnadu to be Leader and station commander of Indian Antarctic reseaech station Dakshingangotri.I was on the icy surface where great personalities like Scott,Schakleton,Amundsen


etc would have made history 

                   Was it Providence,?
             All great scholars and litrary giants have repeatedly mentioned that Man is the creater.Vivekanand ,the great national leader says,"You are the creator of your own destiny."


           
               Right from childhood my approac to a problem hsd been on an unusual angle which made me a different type of person.So I alwasys thought that I will do my duty and the posterity will write my history.

                  Thousands would have read Maha kavi Bharathi's poetry.But howmany would have followed ?
            
                   தேடிச்சோறு நித்தம் தின்று பல 
                                சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் 
                   வாடித்துன்பம் மிக வுழன்று பிறர் 
                            வாடப்  பல செயல்கள் செய்து -நரை 
                  கூடிக் கிழப்பருவம் யெய்திக் கொடுங் 
                            கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் -பல 
                 வேடிக்கை மனிதர்களைப்போல் நானும் 
                             வீழ்வேனென்று நினைத்தாயோ ?

                
                 So, I will not be like the millions of idiots who are born like worms and die.It is this mind which directed me to take a handfull of mother earth from my birth place Sannanallur and sprinkle it arround Dakshingangotri,Antarctica.
                 Again it is this frame of mind  which made me to bring rocks which were about 1 ton each and were in ice over 50 millions years  to Tamilnadu and establish "Inspirational Parks" at different places.



               As a Battalion Commander ,it is this mind made me to demonstrate my physical fitness to fellow officer when I was 47 years old.



             Inspite of all detailed planning and precautions if something un usual happens then you have no alternative but "To Bow to the Will of Providence ".

                             This is what  Scott had experienced at ANTARCTICA. 15 days before when Amundsen and his team walked happily from hoisting Norway national flag at geographic South pole  Scott and his team were cought in a Blizzard nailing them into their tent and die of starvation.




              Ganesan had always kept this in mind in all his activities.

                Readers would be wondering that  "A Summery of Evidence "was recorded agaist me for "calling a spade as spade ".But I left it to the will  of Providence.The charge was set aside and I walke with head held high.














திங்கள், 27 ஏப்ரல், 2020

Contd........3.                                    Ven panip parappilum..........


                  ஐந்தாம் குளிர்காலக் குழுவினிலே
                  அருமைத்தலைவர் கணேசனுடன்
                  ஐய்ந்தொரு பத்துப் பேர்களாவர்
                அண்டார்க்ட்டிக்காவுக்கு சென்றார்கள்


                  பதினெண் மதம் பனிஉலகில்
                பகலாறு மாதம் இரவும்தான்
                 பதியும் கால்கள் பனியினிலே
                பனிவிழும் உடலில் எல்லாமே
                 அமைந்த ஆய்வின் அரங்கமது
                அனைவரும் தங்கும் இடமாகும்
                  சமையல் உணவு தூங்குவதும்
                சரியாய் அரங்கின் உள்ளேதான்.

               அதையும் பனியது  மூடிவிடும்
               அகற்றும் பணியே இவர்களுக்கே
                எதையும் தங்கும் இதயமதால்
                ஏற்றார் கணேசன் துன்பமதை
                 எத்தனை எத்தனை இடையூறு
                  எத்தனை எத்தனை தொல்லைகளே
                 அத்தனையும் தன்  துணிவாலே
                   அகற்றிவிட்டார் பனிபோலே



             பனியில் மூழ்கிய இருபேரை
             பார்த்துதேடிக் காப்பாற்றிய
            பணியால் இவரது பண்பதுதான்
            படிக்கையில் நம் மனம் பாராட்டுமே.



              சமையல்காரர் குடும்பத்தில்
             சகலத்தொடர்புமின்ரிருந்தார்
              அமைதியாய்  கணேசன் முயற்சித்தே
            எல்லாத்தொடர்பும் பெற்றீந்தார்

           Three Antarctic Station commanders.Novolazaravskia (Russian ) Dakshin gangothri (India ) and Georgefoster (East Germany )





               பிற நாட்டாய்வோர்களைத்தேடி
             பிரியா ஒற்றுமை சேர்த்திட்டார்
              உறவுகள் வளர்க்கப்  பாடுபட்டார்
              உண்மை இந்தியன் பேர் பெற்றார்.



           பதினெட்டுமாத பனிப்பாலையின்
            பயங்கர அதிசய அனுபவத்தை
            பதிவே செய்து நூலாக
           படிக்கத்தந்துள்ளார் மிக அருமை
            வெண்பனிப் பரப்பிலும் சில வியர்வைத்துளிகள் 
          என்ற இந்நூலே .



             உண்மையாய் இதுபோல் ஒரு நூலே
             உயர்தமிழ் மொழியில் வந்ததில்லை.
             சாகித்ய அகடமி பார்வைக்கே
               சாதனை  நூலிது இதுவரையில்
             போகவில்லையே ஏன்  எதற்கு
               புரியவில்லையே இது நமக்கு.

         

                அண்டார்க்டிகாவுக்கு இதுவரையில்
                ஆய்ந்திட சென்றவர் எதனை பேர்
                கொண்டாடும் விதத்தில் நூலாக
               குறிப்பாய்  தந்தவர் எவருமில்லை
               ஆகவே கர்னல் கணேசனாருக்கே
               ஆயிரம் விருதுகள் தரலாமே
                 நாகரீகமெனில்  இதுதானே
                 நம் தமிழ் உலகம் உணராதோ

                         டாக்டர் கோ.மா.கோதண்டம்
                     தலைவர் மணிமேகலை மன்றம்,
                             இராஜபாளையம் ,626108.
                     செல்;9944415322.



















ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

                                  Continuing..........Venpaip parappilum.....

                  O1 December 1942 born Colonel Pavadai Ganesan  is from Corps of Engineers of the Indian Army.He was commanding an Engineer Regiment from November 1984.Generally the Command appointments are limited to 2-3 years in order to give more oppurtunities to eligible officers.So Ganesan was expecting his transfer order any time early 1987.


                  It was heaven sent oppurtunity that in April 1987 Army head quarters had called for volunteers to be leader of Indias 5 th winter team to Antarctica.The QR specified were looking like tailor made for Ganesan.The family conditions also were suiting him.His two children were 12 years and 7 years. so he volunteered.A number of interviews,medical examinations were held.Finally Ganesan was selected.

                  Now let us go with KO.MA.Kothandam............

                எளிய கிராம விவசாய
               இனிய குடும்பத்துதித்தவராம்
                தெளிவாய்  எதையும் சிந்தித்தே
              தீர்வே காண்பதில் வல்லவராம்
               அறிவியல்,இலக்கியம்,வரலாறு
              ஆய்வுதான் பலப்பல படித்தவராம்
              செறிவுடன் ஆற்றலுடன் சேர்ந்தே
             சீரிய நெறியில் நடப்பவராம்
               அன்புடைப் பேருளம் மிக்க துணிவு
              யார்க்கும் உதவும் கலையார்வம்
            பண்பு ஆற்றல் சத்தியநெறி
               பார்ப்பவர் கர்னல் நம் கணேசன்  

              படித்து முடித்ததும் பொதுத்துறையில்
             பணிதனை சேவையாய் செய்திட்டார்.
              துடிப்பாய் இந்தியப் படைதனிலே
            தூய நல்லதிகாரியாய் சேர்ந்தார்.




            எதற்கும் யார்க்கும் அஞ்சா நெஞ்சம்
              எடுத்த பணியில் செய்நேர்த்தி
          இதனால் இவற்கே ஆதரவும்
               எதிர்ப்பும் இயல்பாய் எழுந்ததுவாம்

             இரண்டு இந்திய போர்களிலே
             ஏற்புடன் தன்  திறன் காட்டியுமே
            புரட்சி சாதனை செய்தவராம்
            பூம்பொழில் பதக்கம் வென்றவராம்




            தவறது கண்ட  இடத்தினிலே
             தலைமையாயினும் துணிவுடனே
            விவரமாய்யதை எடுத்தோதி
              மிடுக்குடன் செயல்கள் செய்பவராம்
           கர்னல் கணேசன் பணிகளிலே
              கணக்கிலா சாதனை செய்தவராம்
               கர்னலின் திறமையைக் கண்டதுமே
               கைப்பிடித்தரசு உயர்த்தியதாம்

                  அண்டார்க்டிகாவின் ஐந்தாவதாம் 
                  குளிர்காலக் குழுவின் தலைமைதனை 
              கண்டதும் கர்னல்  கணேசனாருக்கே 
              கனிவுடன் அரசே தந்ததுவாம்.  

                  உரிய அறிய   திறமைகளை
                  உணர்ந்தே  யளித்த நம் அரசை
                  பரிவுடன் ஓர் குரலாய்க்கூடி
                  பாராட்டுகளால் வாழ்த்திடுவோம்.

              Secretary,Department of ocean Development ,Govt of India,Dr,S Z .Quasim.with Colonel Ganesan just before Departure to Antarctica.

                                                        To be contd..........

                   
                       
























   
                               ven panip parappilum sila viyarvaiththulikal.

                                                  Colonel Ganesan's Antarctic experiences.



           Wintering at Antarctica is an unique experience for a person.But the impact of that depends upon the inbuilt texture of that person. Ganesan had  natural inclination to be adventurist,sportsman,philosophere,psychologist, spiritual leader and a Rationalist. This type of combination does not happen usually.



Life is the sum total of experience gained by an individual from birth to death.Accordingly man comes in contact with the world of object and ekes out himself for pleasure or pain ,joy or sorrow and failure or success.His reactions are dependent upon the quality and texture of his mind and intellect equipment.There is an infinite variety in the texture and composition of equipment varying from individual to individual.Thus the world provides different and distinct visions according to the equipment of the individual who projects them.



                            So Ganesan's wintering experience was totally different from other wintering members.The additional advantage was that he was the leader and station commander of Indian Antarctic research station.These factors placed him in a position to do things for the benifit of the country and that of posterity with out carring for his superiors when ever they go wrong.
              The book of Antarctic experience written in tamil drew the greatest admiration of Dr.Avvoi Natarajan Retd Vice chancellor of Tamil university ,Thanjavur.On publication and priced Rs 150/per copy 7500 copies were ordered as a single purchase and perhaps entire Tamilnadu Govt Libraries has got a copy.
                    This copy has reached  famous phlantherepist and bussinessman Nalli Kuppusamy chettiar.After going through it perhaps he thought it was worth mentioning amongst the best books he had read. But it is a pity that Sri Kuppusamy chettiar did not bother to find out about the author .

                       Under the above circumstances one day there was a call from Rajapalayam from Kurinji chelvar Dr.Ko.Ma. kothandam.He had gone through Nalli Kuppusamy chettiar's book  where he had written about my Antarctic experiences.He requested me to send a copy of my Antarctic experience book.After going through the book he  wrote a poetry in tamil.This is  for the readers who can understand Tamil.

              பூமி உருண்டையின் தென்கோடி 
             பூரண அழகுடை பனி ப்பரப்பு.
             ஆமிதன்  பெயரே அண்டார்க்டிகா .
             அகிலம் வியக்கும் அவ்விடமே 
             எங்கு பார்க்கிலும் பனிப்பரப்பே 
             என்றுமெப்போதும் உறைபனியே 
             அங்கிலை  புல் ,பூண்டு உயிரினங்கள் 
             அதிகக்   குளிரே  அப்பப்பா  
              நடுங்க வைக்கும் பெருங்குளிரே 
                நாடியை மாற்றிடும் குளிர் காற்றே. 
                அடுக்கடுக்காணப் பனிப்பொழிவே 
              அதுவே பனியின் பாலைவனம்.

                உயினம் வாழ்ந்திட இயலாதாம் 
                ஓய்வெடுத்திடவும் முடியாதாம்.
                வெய்யிலும் அதிகம் கிடையாது 
                 வெக்கை வியர்வை தெரியாது.
                ஆறு மாதம் ஒரே பகலாம் 
               அடடா என்னே ஒளிவெள்ளம் 
               ஆறுமாதம் ஒரே இரவாம் 
                அடடா என்னே கருமை இருள்.

                 மார்கழி மாத குளிர்தானே 
                மனிதரை ஆட்டிப் படைத்திடுதே 
               பாரதின் தென் துருவக்  குளிரே 
               படிக்கையில்கூட உடல் நடுங்கும் .

              புவியியல் வானியல் காற்றியலை 
              புத்தம் புதிதாய் ஆய்ந்திடவே
             புவிப்பல நாடுகள் அங்கு வந்தே
             பொறுப்புடன் தங்கி ஆய்ந்திடுவார்

              இந்த உலகில் உயர்நாடு
               இந்தியாவும் அவ்விடத்தில்
              சொந்த ஆய்வரங்கு அமைத்துள்ளதாம்
              தூய தக்ஷிண்கங்கோத்ரி .

             அவ்வப்போது பலநாட்டினரும்
              ஆய்வுக்கங்கே சென்றுதங்கி
             வெவேறு விதத்தில் பலமாதம்
             விரும்பி சிரமப்பட்டு வருமாம்.
              பனி யில் குளிரில் பல மாதம்
              படுக்கை உணவு உடையோடு
            துணிவாய்த் துன்பமதையேற்றே
            சொல்லொனாத் துன்பம் அடைந்திடுமாம்.

           ஐயோ அக்கொடியக் குளிரை
           அரசும் மறைத்தே ஆய்வோரிடம்
             பைவ்ஸ்டார் ஹோட்டல் போலிருக்கும்
            என்றே சொல்லி அனுப்பிடுமாம்.

                              கர்னல் கணேசனின் வருகை .........
                                                                      
  














செவ்வாய், 7 ஏப்ரல், 2020

                                                              மண் மேடுகள்.

  1965 August 28 சமயத்தில்  இந்திய பாகிஸ்தானிய போர்க்கால சூழ்நிலையில் Army Head quarters Reserve  6 Mountain டிவிசன் என்ற எங்களது படைப்பிரிவு அம்பாலாவில் சுமார் 500 க்கும் மேற்பட்ட சிவில் ,மிலிட்டரி வண்டிகளில்  உத்திரவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.
                  அப்பொழுது வந்த சைனிக் சமாச்சார் பத்திரிகையில் ஒரு பகுதி " The innocent girl became a widow before she could become a woman. " என்று ஒரு இராணுவ நிகழ்வு பற்றி வந்தது படித்தேன்.
              01 September 1965 போர் ஆரம்பமாகிவிட்டது.44 Field Park company என்ற எனது படைப்பிரிவு எங்கெங்கோ சுற்றியது.நான் பாகிஸ்தானின் விமானத்தாக்குதலில் சிக்கி காலில் குண்டடிபட்டு பதான்கோட், டெல்லி ,லக்னோவ் ,சென்னை போன்ற மருத்துவ மனைகளில்
சிகிச்சை பெற்று மீண்டும் எனது படைப்பிரிவு சேர்கையில் போர் முடிந்து எனது படைப்பிரிவினர் மாபெரும் வெற்றி பெற்று பாகிஸ்தானின் "சியால்கோட் "என்ற நகரத்திற்கருகிலிருந்தார்கள்.











                  போரின் தாக்கம் என்னுள் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.அப்பொழுது சில உண்மை,சில கற்பனை என்ற நினைவுகள் கொண்டு உருவாக்கியது "மண் மேடுகள் "என்ற எனது நூல்.இன்றுவரை பதிப்பகத்தாரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.இந்த நூலின் விமரிசனம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் "க.அன்பழகன் "
அவர்கள் எழுதியது.
             இதோ ! உங்களுக்காக ! !
                                       தேசப்போராளியின்  உள்ளக்கோயில் ......
கற்றது கைம்மண்ணளவு,கல்லாதது உலகளவு என்று ஒளவை சொன்னாள்.ஒரு மனிதன் தன் மரணத்தின் கடைசி நிமிடம் வரை கற்றுக்கொண்டுதான் முடியவேண்டும். உலகின்
ஒவ்வொருகணமும்,விந்தைகளும்,வியப்புகளும்,ப்ரம்மாண்டங்களும்,பேரச்சங்களும்,பெரு நிகழ்வுகளும் என நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.உலகின் மனிதனாகப் பிறப்பு எடுத்துவிட்டவர்களில் ஒரு சிலரே இறப்பதற்குள் எதையேனும் இந்த தேசத்திற்கு பங்களிப்பாகச்செய்துவிட்டு அது தேசத்தின் விழுமிய அடையாளமாக அதை உருவாக்கியவன் என்கிற தன்னையும் நினைவுகூர்தல் வேண்டும் என்று நினைத்து உழைப்பார்கள்.
இல்லை.அர்பணிப்பார்கள்.
               தேசத்தின் நலனுக்காக அதன் ஒவ்வொரு அசைவிலும் அதனைப் பாதுகாப்பாகக் காத்து நிற்கிற மனிதர் கர்னல் கணேசன்.அவரைப்பற்றி எதுவும் சொல்லவில்லை.ஆனால் அவர் எழுதிய இந்த புத்தகம் அந்த மனிதனின் உயரிய சிந்தனைகளையும் தேசத்திற்கான தொண்டுகளையும் அதற்கான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் இன்றுவரை இயங்கும் தன்னலமற்ற சேவைகளின் ஒளிர்வையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டிக்கொண்டிருகிறது .
                இந்த நூல் அவரின் இராணுவ தளத்தில் பணியாற்றிய அனுபவத்தை மட்டுமே உணர்த்த வந்ததல்ல.தன்னை ஈன்றெடுத்த தேசத்திற்காக யாரும் ஆணையிடாமல் அச்சுறுத்தாமல் அதிகாரம் செலுத்தாமல் தன்னுடைய செங்குருதியிலேயே உணர்வாக ஊறித் திளைத்துச் செயல்பட வைக்கவேண்டும் என்கிற சத்திய முகங்களைக் காட்சிப்படுத்துகிற நூலாகும்.


                    ராணுவத்தில் சேர்வது  என்பது பிழைப்புக்காக என்பது ஒருபுறமிருக்க அப்படி வாழ்க்கை துரத்தச்சென்று சேர்ந்தவரல்ல கர்னல் கணேசன்.பொதுப்பணித்துறையில் உயர் பதவியில் திறம்படச் செயலாற்றிய பொறியாளர்.நாட்டிற்கு கேடு வந்திருக்கிறது .கேடு  நீக்க வாருங்கள் என்றவுடன் அரசு  பணியை அப்படியே விட்டு விட்டு தேசம் காக்க ஓடிய மாண்பாளர் கர்னல் கணேசன்.


                  இது எல்லோருக்கும் அமையுமா? அமையாது.இப்படியொரு மனப்பாங்கு பிறந்தது முதல் குருதியிலேயே கலந்து இருக்கவேண்டும்.அதுதான் கொப்பளித்து ஓட வைத்திருக்கிறது.
                     இந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் அனுபவம் கலந்த பொறுப்புணர்ச்சியும் நாட்டுப்பற்றும் உழைக்கும் துடிப்பும் என ஒவ்வொரு சொல்லிலும் கலந்து எழுதப்பட்டமையைப் படிக்குபோது உள்ளத்தில் ஆணியெழுத்தாய்ப்  பதியவைக்கிறது.
                                 "உடலாலும்,மனதாலும்,நினைவாலும்,நோக்காலும்,சொல்லாலும்,
செயலாலும் சீருடையணிந்த வாழ்க்கையை நேசித்தவர்.ஆனால்
 இந்த வாழ்க்கையின் அற்புதங்களையும்,அவலங்களையும் வாழ்ந்து பார்த்துதான் புரிந்துகொள்ளவேண்டும்."
              கர்னல் கணேசனின் சொற்கள் இவை.இப்படித்தான் 30 ஆண்டுகள் அவர் பணிபுரிந்திருக்கிறார்.அது இந்த நூல் முழுக்க விரவிக்கிடக்கிறது.சத்தியத்தின் அடையாளங்களாக அவை இந்நூலில் உயிர்த்துக்கிடக்கின்றன.
                  அரவிந்தன்,தேவகி,அரவிந்தனை நேசமும் பாசமும் கொண்டு அர்ச்சிக்கும் ஒரு பெண் பரிமளா.(அவள்தான் இந்நூலின் கதை சொல்லி ) எனக் குறுகிய சட்டகத்திற்குள் இப்படைப்பு உருக்கொண்டிருக்கிறது.எங்கும் தடையில்லை,தளர் வில்லை.உண்மையின் சொரூபங்களைச் சிலை வடிப்பதுபோல வடித்துக்கொண்டே போகிறது ,இரு கரைகளுக்குள் கரைமேவா கரைதொட்டோடும் அழகிய நதியின் சீரான வேகத்தைப்போல.நம்மிடம் பல இடங்களில் பேசுகிறது,நம்மை உறைய வைக்கிறது,உணர்வில்  நெருப்பேற்றுகிறது,உடலெங்கும் வெப்பப்பரவலைச்  சீராக ஏற்றி நகராது கட்டிப்போடுகிறது.




               பறவை அடைகாக்கும் முட்டையை உடைப்பது போன்ற பாவம் ஒரு நூலின் எல்லாவற்றையும் சொல்லிவிடுவது என்பது.ஆகவே ஒவ்வொருவரும் இந்த நூலை வாசிக்கவேண்டும்.அப்போதுதான் கர்னல் கணேசன் வாழ்ந்த வாழ்க்கையின் சத்திய தரிசனம் புரியும்.கண்ணுக்கு விருந்தாகிக் களிக்க வைக்கும்.கனலை மனத்தில் சுடரென ஏற்றியும் வைக்கும்.
                  முதல்தரமான வீரன் தன்மானம்,நாட்டுப்பற்று,தனது படைப்பெருமை,இராணுவ சம்பிரதாயம் போன்ற உணர்ச்சிகளினால் உந்தப்பட்டு தனது உயிர் ,தனது குடும்பம் உறவு என்பன போன்ற தடைகளினால் தடுக்கப்படாமல் யாருடைய உத்திரவையோ ,கண்காணிப்பையோ எதிர்பார்க்காமல் தன்னால் எதிரியின் படைகளை ஒரு சில வினாடிகளாவது தடுத்து நிறுத்த முடியும் என்று முடிவு செய்து அந்த முடிவே மன  உறுதியைத்தரப் போராடிப் பின்னர் அறிமுகமில்லாமலேயே அடக்கம் செய்யக்கூட ஆள் இல்லாமல் மண்ணோடு மண்ணாகிக் கலந்துபடுகிறான்.இப்படி அறிமுகமில்லாமலேயே மண்ணில் கலந்துபடும் இம் மண்மேடுகளே முதல்தர தேசீய வீரர்கள் என்று கருதப்பட்டு அவர்களுக்காகவே எழுப்பப்பட்டதே unknown soldiers சமாதி. 








               படிக்கிறபோதே  இரத்தம் துடிக்கிறது.உணர்வில் எதையோ திணித்து எரிய வைக்கிறது.ஒரு தேசப்  போராளியின் தன்னுடைய தாய் நாட்டைக்  காக்கத்துடிக்கும் மனத்தைக் காட்சிப் படுத்துகிறது.
            கர்னல் கணேசன் இராணுவப் பணியிலிருக்கும்போது செய்த பல செயற்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.குறிப்பாக வீட்டினர்க்குக் கடிதம் எழுதுதல் என்கிற செயற்பாடு போர் முனையிலிருந்தும் அவரவர் குடும்பம் சிதையாமலிருக்க உதவும் பங்கு இவற்றை உருவாக்கிய சூழல் கர்னல் கணேசனின் இன்னொரு கருணை உள்ளத்தை,செயல் திறத்தை அடையாளப்படுத்துகிறது.
                     தன்னுடைய அனுபவங்களின் கடையாக விரித்திருக்கும் இந்த நூலில் பல உணர்வு தெறிக்கும் கேள்விகளையும் எழுப்புகிறார்.
                      எந்த மக்கள் பிரதிநிதியாவது ஒரு இராணுவ வீரனின் சமாதியைப் புனரமைக்க முயற்சித்திருக்கிறார்களா ?
               வெகு நியாயமான இன்றுவரை பதில் சொல்ல முடியாத கேள்வியாக நின்று வாசிப்போரை உறுத்தல் கொள்ள வைக்கிறது.குற்ற உணர்ச்சி நெருப்பில் நம்மைத் தள்ளுகிறது.
               இராணுவ சிப்பாயைவிட அவனது மனைவியே வாழ்க்கையில் மிகவும் போராடுகிறாள். 
                     மனது கசிகிறது.இச் சொற்களில் தேசம்,தேசப்பற்று,பாதுகாப்பு இவற்றிற்காகத் தங்களைத் தியாகம் செய்யும் எந்த ஒரு வீரனும் தன்னுடைய அவலங்களைப்பற்றிக் கவலை கொள்வதில்லை.இந்த நிலையில் அவர்களைப்பற்றி இந்த தேசம் கவலை கொள்ள வேண்டாமா? என்பதையும் பூடகமாக உணர்த்துகிறார்.தேசத்தைக் காப்பவனின் வலியையும் காயங்களையும் உணர்வுகளையும் இந்த நூலில் எடுத்து உடைக்கிறார். அவற்றின் சில்லுகள் படிப்போரின் உள்ளத்தில் விழுந்து வடுக்களை ஏற்படுத்துகின்றன;வலிக்கிறது.




  
               நூல் முழுக்கப் பல்வகை சிந்தனைகளை  எழுப்பும் கேள்விகளும் நிகழ்வுகளும் சங்கடங்களும் இன்னல்களும் நிரம்பி வழிகின்றன.
அவற்றுக்கிடையில் ஒரு தேசப்  போராளியின் வாழ்க்கை அழகிய தேராக வடம் பிடித்துக் காட்டுகிறார் கர்னல் கணேசன்.குறிப்பிட்ட காலங்கள் பணியாற்றிய பிறகு கட்டாய ஒய்வு கொடுத்துவிட்டு வந்து தன்னுடைய சொந்த ஊரில் சில செயற்பாடுகளை மேற்கொள்ளுவதாக இந்த நூல் முடிகிறது.என்றாலும் அந்த முடிவில்லா செயற்பாடுகளில் இந்த தேசத்தின் விடியலுக்கான பல வித்துக்களை நமக்குத் புடம் போட்டுத் தருகிறார் கர்னல் கணேசன்.
            நம்மிடத்தில் ஆயிரம் இருக்கலாம்;
            ஆயிரம் லட்சங்களாகப் பெருகலாம்;
            பெருகியவை பெருங்கடல்களாகலாம்;
            ஆனாலும் அவை பயனற்றவை.
              எப்படி இருக்கவேண்டும் எப்படி பெருகவேண்டும்
            என்பதற்கு அடையாளம் வேண்டும்.
           அவை சத்தியத்தேடல் களினால்தான் அடைய முடியும்.
இதற்க்கான வழிகாட்டுதல்களைத்தான் கர்னல் கணேசன் இந்த நூலில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
                அவசியம் வாசிக்க வேண்டிய நூல் மட்டுமல்ல,வாசிக்கும் எல்லோரும் சுவாசிக்கவேண்டிய நூலும் கூட.
            என் மனக் கிடக்கையில்இந்நூல் ஏற்படுத்திய விளைவுகளை என்றேனும் என்னுடல் விட்டு உயிர் பிரிவதற்குள் ஒன்றேனும் செய்வேன் என்கிற  ஒற்றைச்சுடரை ஏற்றிவைத்திருக்க இந்நூல் உதவியிருக்கிறது.
                                                                     முனைவர்.க.அன்பழகன்.
                                                                          தமிழ்ப் பேராசிரியர் 
                                                                அண்ணாமலை பல்கலைக்   கழகம் 
                                                                             சிதம்பரம்.