திங்கள், 29 ஜூலை, 2019

                      When you go home tell them of us 
                                       and say 
                   For your tomorrow we gave our Today.

                 India,had always been thrust upon war  for protecting the safety,honour and integrity of this country especially after independence.Even before hoisting the independent country's national flag ,the Army was thrust into battle field.
                        1947......1962.....1965.......1971.......1999......It will continue.
          In all these wars was there ever a case disobedience from the three services.? Never.Patriotism was imbibed into the blood of  every soldier and he takes pride in taking part in wars.
               what about the people of free india feels about the wars india fought.Not even one percent feels that Army has let down  the Country.
               The 1962 war was a different story.The politicians and few of the Army top brass were not even had knowledge about indias border,leave alone defending it.The 4 corps commander was not even knows where is Bomdila and where is Tawang.Equipments,clothing were out dated.The out come of 1962 war was certainly a political failure.
                   But the 1965 war  and wars fought there after were the true representation of indian soldiering.
             To day Kargil day is being observed in many parts of this country.But what the patriotic soldiers of army who participated,dependents of who sacrificed,wounded and ofcourse families of those missing/POWs.feel about it.


                The army saved the faces of incompitent political leadership and the total failure of intelligence.
                The then COAS Gen Mallik puts it "our soldiers fought with what we have not what should have been given.
               The media had published a story just before 29 july 2019.

 
                For a casual reader ,it is just a news that an Ex service man is employed as constable in Punjab police.But the news zoomed on to his medal ribbons worn in the chest and explaines that it was a Gallentry medal  Veer chakra

                 The Punjab chief minister immedietely swung into action in recognising the services  of Satpalsing and promoted him as inspector.

                             Congratulations capt Amarinder singh. Not only Satpal was honoured his son was also given an employment..
                    It is a true recognition of a soldiers service to the Nation.

 Punjab being a border state certainly knows the value of Army.

What about other states.what the chief ministers of other states feel about it It is worth mentioning that kargil heroe's father did not allow their state chief minister to enter their house.
              Appreciations and recognitions must come with out delay and with out any recomendations.

Awards are to be presented on a silver plate.and not to be demanded.

                Let the leadership shine in true meaning and spirit.














ஞாயிறு, 14 ஜூலை, 2019

                             மெய்ப்பொருள் அறிவு.

              மெய்ப்பொருள் அறிவு என்பது ஒருவித மன நிலை.இந்நிலையை அடைந்தவர்கள் பின்னர் அந்நிலை பற்றி முழுவிளக்கமும் தந்தது இல்லை.காரணம் சொற்களால் விளக்க முடியாத நிலை அது.உணர்ந்துதான் பார்க்கவேண்டும்.
          ராமகிருஷ்ண  பரம ஹம்சர் பரவச நிலைக்குப் போகிறார் என்பார்கள்.மற்றவர்களும் அந்நிலைக்குப் போக முயற்சிக்கலாம்.ஆனால் ராமகிருஷ்ணரின் மன  நிலையையும் மற்றவர்களது மன  நிலையும் ஒன்றே என்று சொல்லமுடியுமா ?
                       எண்ணங்களின் வலிமையான தாக்கத்தினால் சூழ்நிலையை மாற்றி அமைக்க முடியும் என்றும் கற்பனையில் காணும் மனிதர்களை நேரில் கொண்டுவந்து நிறுத்த முடியம் என்றும் கர்னல் கணேசன் எழுதியும் பேசியும் வருகிறார்.அதன் வெளிப்பாடாக அவர் பிறந்த ஊரான சன்னாநல்லூரில் அறிவை அறிவால் அறிந்துகொள்ளும் அறிவுத் திருக்கோவில் அமைத்து பொது மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சித்து வருகிறார்.


           மயிலாடுதுறை -திருவாரூர் மெயின் சாலையில் அவரது சொந்த நிலத்தில் அமைந்துள்ள இந்த இடத்தைப்பற்றி யாரிடமும் விளக்கம் கேட்கவேண்டிய அவசியமில்லை.இதைப்பற்றி கேள்விப்பட்டு அதைப்பார்க்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றிவிட்டால் கட்டாயம் ஒருநாள் அங்குபோய் நிற்பீர்கள்.
           திருவாரூர் தியகேசப் பெருமானைத் தரிசிக்க ஒருவர் பாண்டிச்சேரியிலிருந்து காரில் புறப்பட்டுப் போகிறார்.வழியில் அகத்தூண்டுதல் பூங்காவைப்பார்த்துவிட்டு  இது என்னவாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே போகிறார்.

 
          தியாகேசப் பெருமானை தரிசித்துவிட்டு வரும் வழியில் மீண்டும் சன்னாநல்லூர் அகத்தூண்டுதல் பூங்காவில் காரை நிறுத்தி சுவர்களில் எழுதியிருக்கும் வாசகங்களை பொறுமையாகப் படிக்கிறார்.பூங்கா பூட்டி யிருக்கிறது .யாருமே எதிர்பார்க்காமல் சற்று நேரத்தில் பூங்கா பாதுகாவலர் அங்கு வருகிறார்.
                 பூங்காவைத்திறந்து அவர்களை வரவேற்று பூங்கா அம்மைப்பின் காரண காரியங்களை விளக்குகிறார்.விண்  ஈர்ப்பு மையம் என்ற நூலக அருங்காட்சியகத்தை திறந்து மேலும் விளக்குகிறார்.
                     தியாகேசனத்தரிசித்து விட்டு வந்த நமது பார்வையாளர் ஒரு புது உலகிற்குள் நுழைந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு பூங்கா அமைப்பாளர் கர்னல் கணேசனுடன் பேச முடியுமா ? என்று கேட்கிறார்.
                 நேரம் பகல் 2 மணி.சென்னையிலிருக்கும் கணேசனைத் தொடர்பு கொள்கிறார்கள்.வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு வித்தியாசமான புதுமையை படைக்கும் மனிதருடன் பேசிய அவர் தனது உணர்வுபூரணமான மகிழ்ச்சியை வார்த்தைகளில் கொட்டுகிறார்.
                அவர் யார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா ?


             அவர் ஒரு மக்கள் பிரதிநிதி.அதுவும் பக்கத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்.

                      ஆம் !நண்பர்களே !என்னுடைய பிறந்த மண்ணை உலகின் கீழ்க்கோடியில் தூவி அங்கிருந்து கோடிக்கணக்கான ஆண்டுகள் உறைபனி யில் மூழ்கிக் கிடந்த சுமார் ஒரு டன்  எடையுள்ள கற்பாறைகளை பதினைந்தாயிரம் கீ.மீ  மற்றும் ஏழுகடல் தாண்டி  கொண்டுவந்து  உறங்கிக் கிடக்கும் இளைய சமுதாயத்தை தட்டி எழுப்ப முயற்சிக்கும் கணேசனை அண்டை மாநில மக்கள் பிரதி நிதி சட்டமன்ற உறுப்பினர் வானளாவாப்  புகழ் கிறார்.
                      எனது தாயகம் 234 சட்டமன்ற உறுப்பினர்களைக்   கொண்ட  தமிழகத்தில் எனது பிறந்த ஊரினைகொண்ட சட்ட மன்ற உறுப்பினர்  மந்திரியாக இருக்கும் இந்த தமிழ்நாட்டில் இந்த சுமார் பத்து ஆண்டுகளில்  தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் சாலையில் அமைந்திருக்கும் அகத்தூண்டுதல் பூங்காவைப் பற்றியோ  தன்னலமற்ற தியாக உணர்வுடன் பணியாற்றும் முன்னாள் இராணுவ அதிகாரி,குடியரசுத்தலைவரின் விருது பெற்ற கர்னல் கணேசனைப் பற்றி தெரிந்துகொள்ளவோ காலமும் நேரமும் இல்லாத நமது மக்கள் பிரதிநிதிகளைப்பற்றி  நாம் என்ன சொல்வது.?

                                        வாழ்க ! தமிழகம் !
            வளர்க்க நமது நாட்டுப்பற்று.


















வியாழன், 11 ஜூலை, 2019

               அறிவு என்ற விளக்கை ஏற்றுங்கள்;
                       அறியாமை என்ற இருள் விலகும்.

              வளர்ச்சி  என்பது ஒரு தொடர் நடவடிக்கை.ஞானேந்திரியங்கள் என்ற மனிதனின் ஐம்பொறிகளும் இணைந்து ஒரு செயலில் உற்றுநோக்கும்போது அந்த செயல் கற்பனைக்கும் எட்டாத வெற்றியைப் பெறுகிறது.இது சரித்திரம் சொல்லும் உண்மை.விவாதங்களுக்கு அப்பாற்பட்ட து .
        சன்னாநல்லூரில் கர்னல் கணேசன் "'அகத்தூண்டுதல் பூங்கா " அமைத்து அங்கு ஞானவிளக்கை ஏற்றி  "அறிவுத்திருக்கோவில் "என்னும் "விண் ஈர்ப்பு மையம்" ஒன்றையும் அமைத்துள்ளார் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.

            அந்த பூங்காவின் நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக சன்னாநல்லூரின் சுற்று வட்டாரத்தில் மக்களிடையே மனதளவிலும் செயலளவிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
                காரைக்கால் வானொலியில் கணேசன் பங்குகொண்ட "அனுபவம் அற்புதம் "நிகழ்ச்சியின் காரணமாக சுமார் 50 Km சுற்று வட்டார மக்கள் தங்களது நேரம் காலத்திற்கேற்ப அவ்வப்பொழுது வந்து பூங்காவைப் பார்த்து புது சுவாசத்துடன் போகிறார்கள்.

                இது மயிலாடுதுறையிலிருந்து  வந்த சில பெரியோர்கள் .அங்கிருந்து அவர்கள் சென்னையிலிருந்த கணேசனைத் தொடர்புகொண்டு பூங்கா வளாகத்தில் ஏதாவது ஒரு கோவில் அமைத்து பூஜைகள் செய்யலாமா என்று கேட்டார்கள்.
                      கோயிலாவது ஏதடா ? குளங்களாவது  ஏதடா ?
                     கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே !
                      கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே !
                     ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே .
                                                                         -   சிவ வாக்கியர் 
               கணேசன் மிகவும் வருத்தப்பட்டார்.மனிதனின் வளர்ச்சிக்கு பக்தி மார்க்கம்,ஞான மார்க்கம்,செயல் மார்க்கம் ( Karma yoga ) என சில வழிகளிருந்தாலும் ஞான மார்க்கமே அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒருங்கிணைக்கும் .பக்தி மார்க்கம் மக்களை அறியாமைக்குள் ஆழ்த்தி அவர்களது சிந்திக்கும் திறனை முடக்கிவிடும்.

                  நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே 
                  சுற்றி வந்து மொன மொனத்து சொல்லும் மந்திரம் ஏதடா ?
                   நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் 
                  சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ?


                     வைஷ்ணவ மாமுனி ராமானுஜரின் வாழ்க்கையை தீவிரமாக அலசி ஆராய்த்தால் அவர் எப்படிப்பட்ட சமூக சீர்திருத்தவாதி என்பது புரியும்.
                 " மனமே கோவில் மன  சாட்சியே தெய்வம்" என்னும் கணேசன் கொள்கைக்கு ஏற்புடையது இல்லை என்று மறுத்துவிட்டார்.
                சன்னாநல்லூர்  "அகத்தூண்டுதல் பூங்கா "ஒரு மாபெரும் சக்தி பீடம்.அது உங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும்.உங்களுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் ஒரு மா மனிதனை வீறுகொண்டு எழ வைக்கும்.
                   







                   இந்த அறிவியல் பொக்கிஷம் பற்றி கேள்விப்பட்ட நன்னிலம் ரோட்டரி சங்க அன்பர்கள் பலமுறை சன்னாநல்லூர் வந்து பார்த்திருக்கிறார்கள்.
                         கணேசன் சாதனைகளை  வெளியுலகம் கொண்டுவரும் முதல் முயற்சியாக அவர்கள் சமீபத்தில் ரோட்டரியின் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு   விழாவில் கணேசனைப் பாராட்டும் விதத்தில் ஒரு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்துள்ளார்கள்.


             மிகவும் துடிப்பாக செயல்படும் ரோட்டரி உறுப்பினர்கள் நன்னிலம் சுற்று வட்டார பகுதிகளில் மகத்தான மாற்றங்களை கொண்டுவருவார்கள் என வாழ்த்துவோம்.