செவ்வாய், 24 ஜூலை, 2018

                                 10,உருவமற்ற குரல்                  
      ( நல்ல மனைவி,நல்ல பிள்ளை,நல்ல குடும்பம்
                                    தெய்வீகம்.)
          திருமணம் பல விதங்களில் பலரது வாழ்க்கையில் மகத்தான மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது.இது எப்படி என்ன மாற்றங்களைக் கணேசனது வாழ்க்கையில்   கொண்டுவந்தது  என்று பார்க்கலாம்.
                எப்படிப்பட்ட  மனநிலையில்,எப்படிப்பட்ட சூழ்நிலையில் கணேசன் திருமணத்தை எதிர் நோக்கினார் என்று பார்ப்போம்.

                              அவரது அன்னை மறைந்துவிட்டார்.தந்தை கல்வி அறிவற்று விவசாயமே வாழ்க்கை என்றிருந்தார்.மூத்த அண்ணன் சாதாரண வேலை யில் இருந்துகொண்டு ஆறு குழந்தைகளுக்குத் தந்தையாக திணறிக்கொண்டிருந்தார்.கல்வியறிவில்லாத அக்காள் அது போன்ற கணவருடன் போதிய வருமானமில்லாத வாழ்க்கையில் போராடிக்கொண்டிருந்தார்.அடுத்த அறிவு ஜீவியான அண்ணன் முற்றிலும் தோல்வியான மண வாழ்க்கையில் தன்னைப் பழிவாங்கத்துடிக்கும் அலுவலக அதிகாரிகளுடன் நிம்மதியற்று  நாட்களை செலவிட்டுக்கொண்டிருந்தார்.திருமணமான தங்கை யாருடைய அன்புமின்றி கணவரை விட்டால் வேறு கதி இல்லை என்று வாழ்ந்து கொண்டிருந்தார்.திருமணமான தம்பி விவசாயமே கதி என்று முடிவாகிவிட்ட நிலையில் காவிரி தண்ணீர் பிரச்சினையில் தனது வாழ்க்கையும் காய்ந்து போய்விடுமோ என்ற பயத்திலேயே நாட்களை செலவிட்டுக்கொண்டிருந்தான்.கடைசி தம்பி கல்லூரியில் FINAL YEAR  B.Sc படித்த்துக்கொண்டிருந்தான்.

                          இராணுவப் பொறியியல் கல்லூரியில் கணேசன் படித்துக்கொண்டிருந்த போதிலிருந்தே அவரது திருமண முயற்சிகள் நடந்தன.ஆனால் இடையில் பங்களாதேஷ் போரின் காரணமாக சற்றே  பின்னடைவு ஏற்பட்டது.

                             போரின்  அறிகுறி ஏற்பட்டு கணேசன் கல்லூரியை விட்டு பு றப்படுமுன் அவருடைய சாமான்கள்,ஒரு மோட்டார் சைக்கிள் எல்லாவற்றையும் எங்கு விட்டுச் செல்வது என்று யோசித்தார்.ஒருவேளை போர்க்களத்திலிருந்து அவர் திரும்பி வராவிட்டால்.........?

                                   திருமணமானவர்கள்அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த வீட்டிலேயே குடும்பம் இருக்கவும் தனி அதிகாரிகளின் சாமான்களை கல்லூரியே பாதுகாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கணேசன் தனது சின்ன அண்ணனுக்கு ஒரு விரிவான கடிதம் எழுதி ஒருவேளை தான் போரிலிருந்து திரும்பி வராவிட்டால் என்னென்ன சாமான்கள் எங்கு இருக்கின்றன என்று தெரியப்படுத்தியிருந்தார்.

                 அதிர்ஷ்ட்ட வசமாக அவர் திரும்பி வந்துவிட்டார்,சுமார் நான்கு மாத போர்க்கள இடைவெளியில் அவருடைய உற்றார் உறவுகளிடமிருந்து ஒரு கடிதம் கூட வரவில்லை.இது கணேசனை விரக்தியின் விளிம்பில் நிறுத்திவிட்டது.தனது இருப்போ அல்லது இறப்போ குடும்பத்தில் எந்த பாதிப்பையும்  ஏற்படுத்தாது என்பதை வருத்தமுடன் புரிந்துகொண்டார்.

                   இந்நிலையில் யார் அவருடைய திருமண முயற்சிகளை மேற்கொள்ளுவார்கள்.? சற்று படித்து வெளி உலக அனுபவம் பெற்றிருந்த சின்ன அண்ணன் தான் பார்க்க வேண்டும்.ஆனால் அவரோ திருமணம் ஒரு தேவையற்ற சுமை என்றும் கணேசனும் திருமணம் புரிந்து தன்னைப்போல் தடுமாற வேண்டாம் என்றும் கணேசனுக்கு அறிவுரை கூற ஆரம்பித்துவிட்டார்.

                     கணேசன் கயிறருந்த காற்றாடியாக திரிந்தார்.ஆனால் மனதில் உறுதியுடன் தனக்கு நிச்சயம் ஒரு நல்ல மண வாழ்க்கை அமையும் என காத்திருந்தார்.

                       தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இராணுவம் என்றால் சிப்பாய் மட்டமும் போரிடுவதுதான் அவர்களது வேலை என்பது மட்டுமே தெரிந்திருந்தது.ஆகையினால் படித்த நல்ல குடும்பத்துப் பெண்கள் இராணுவ அதிகாரியை மணக்க முன்வரவில்லை.

                              கணேசன் ஒரு அதிகாரியின் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சில இடங்களில் பெண் பார்த்தார்கள்.குடியாத்தம் அரசாங்க மருத்துவராக இருந்த பெண் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிச்சயதார்த்தம் செய்ய இருந்தது.அப்பொழுது கணேசன் தனது நண்பர் திருநாவுக்கரசு என்பவரையும் அவரது துணைவியாரையும் அந்த குடியாத்தம் பெண்ணைப் பார்த்து கருத்து கூறும்படி கேட்டுக்கொண்டார்.

                               அவர்கள் அந்த பெண்ணைப் பார்த்து வந்து அவர் கணேசனுக்கு ஏற்றவரில்லை என்று கூறிவிட்டனர்.இதற்கிடையில் தனது திருமணத்தில் முழு மனதுடன் முயற்சி எடுக்கக்கூடியவர்கள் யாருமே இல்லை என்று கணேசன் விரக்த்தியில் அவரது சின்ன அண்ணனுக்கு கடிதம் எழுதினார் .
                    தனது திருமணம் படுதோல்வியடைந்து மன ரீதியில் மிகவும்  அடிபட்டுக்கிடக்கும்  அவர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு திருமணம் ஒரு சூதாட்டம் போன்றது என்பதால் நீ திருமணத்தைத் தவிர்த்து அதே சமயம் மனம் விரும்பும் பெண்ணுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்று பதில் எழுதினர்.
                            அண்ணன் தம்பிகளுக்கிடையே ஒரே சீரான வாழ்க்கையுமில்லை,எண்ணங்களுமில்லை .கணேசன் ஒரு வித்தியாசமானப் பாதையில் பயணிப்பவர் என்று முன்பே பார்த்தோம்.ஆகையினால் அவர் அண்ணன்களின் கருத்துக்களை ஏற்கவில்லை.பாவ புண்ணியங்களுக்கஞ்சி உண்மையாகவும்,நேர்மையாகவும் நடக்க முயற்சிக்கும் தனக்கு எப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமையாமல் போகும் ?
                       
                                       காமத்தின் வடிகால்தான் திருமணம் என்று அவர் நினைக்கவில்லை.ஆணுக்கும் பெண்ணுக்கும் காம வடிகால் தேவைதான்;ஆனால் அதற்காகவே அமையும் திருமணம் வெற்றி பெறாது.ஆகையினால் கணேசன் அவசரப்படவில்லை.

                        கணேசனுக்காகப் பரிதாபப்பட்டு கடைசி முயற்சியாக அவரது சின்ன அண்ணன் ஒரு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு எங்கெங்கோ சுற்றினார்;யார் யாரையோ சந்த்தித்தார்.அதன் பலனாக சென்னையில் postal RMS  Service ல் பணியாற்றும் ஒருவரின் பெண்ணைப்பார்த்தோம் .சுமாரான குடும்பம்.ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய பெண் தான்.ஆனாலும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
                        இந்நிலையில் குடியாத்தம் பெண்ணை வேண்டாம் என்று சொல்லிய நண்பர் திருநாவுக்கரசு கணேசனின் திருமண முயற்சிகளில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். அதுவரைப் பார்த்திருந்த பெண்களை பற்றிய விபரங்களையும் கேட்டுக்கொண்டார்.P &T COLONY யில் பார்த்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவர்களை சந்தித்தார்.இராணுவ அதிகாரியின் வசதி,வாழ்க்கைமுறைகளைக்கொண்டு பார்த்தால் அது சுமாரான இடம்தான் என்று அவரும் புரிந்து கொண்டார்.ஆனால் அந்த பெண்ணைப்ப் பார்க்கவில்லை.
                    இந்நிலையில் கணேசன் பெங்களூரு வந்து ஒரு வருடமாகிவிட்டது.அவரது ரெஜிமென்ட் அங்கிருந்து வேறு இடத்திற்குப் போய்விடலாம்.அல்லது கணேசன் வேறு இடத்திற்கு மாற்றப்படலாம்.ஆகையினால் திருநாவுக்கரசும் சின்ன அண்ணனும்  கணேசன் திருமணத்தில் அவசரம் காட்ட ஆரம்பித்தனர்.1973 ம் ஆண்டு அக்டொபர் மாத சமயத்தில் தீபாவளிக்கு பொருள் வாங்க திருநாவுக்கரசு தேனாம்பேட்டை காமதேனு சூப்பர் மார்க்கெட் போயிருக்கிறார்.

                            சூப்பர் மார்க்கெட் வளாகத்தை சுற்றி வருகையில் அங்கு ஒரு பெண் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்ததைக் கவனித்திருக்கிறார் திருநாவுக்கரசு.அவர் மனதிற்கு மிகவும் பிடித்துப்போய் ,இப்படிப்பட்ட பெண் கணேசனுக்கு துணைவியாக அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு நடந்து வருகையில் அன்று P & T காலனியில் பார்த்த அம்மையார்  அங்கு அமர்ந்திருந்ததைப்பார்த்து அவருடன் பேசியிருக்கிறார்.பேச்சு வாக்கில் அவர்களது பெண்ணுக்கு இன்னமும் சரியான இடம் அமையவில்லை என்றும் அதோ நிக்கிறாளே அவள்தான் அவர்களது பெண் என்றும் சற்று முன் திருநாவுக்கரசு பார்த்த அதே பெண்ணை காட்டியிருக்கிறார். அப்படியா,நாங்கள்கூட கணேசனுக்காக இன்னமும் தேடிக்கொண்டுதானிருக்கிறோம்  என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்.

                         வீட்டிற்கு வந்த சில வினாடிகளுக்குள் பெங்களூரிலிருந்த கணேசனுக்கு போன் செய்து உடனே சென்னை வரச்சொன்னார்.கணேசன் சென்னை வந்தவுடன் திருநாவுக்கரசு,சின்ன அண்ணன் மூவரும் ஏன் அந்த P &T காலனி பெண்ணை முடிவு செய்யக்கூடாது என்பது பற்றி வெகு நேரம் விவாதித்தனர்.கணேசன் மீதும் அவர் இராணுவ பணியில் கொண்டுள்ள ஆர்வத்திலும்  நம்பிக்கைக்கொண்ட  திருநாவுக்கரசு அந்த பெண்ணை மணமுடிப்பதினால் கணேசனின் வாழ்க்கை நிலை நிச்சயம்  நன்றாக இருக்கும் என்று விவாதித்தார்.அவர்களை வேண்டாம் என்று சொல்வதற்கு பொருளாதாரம் மட்டுமே ஒரு காரணம் என்பதாலும் கணேசன் முன்பே பணத்தை ஆற்றில் வீசி ஏறிந்தவர் என்பதனால் அவரைப்பொறுத்தவரை அது ஒரு தடையில்லை என்று முடிவு செய்தார்கள்.

                          ஆம்.இப்படித்தான் சில நிகழ்வுகள் நமக்கு வழி காட்டுகின்றன.1974 ம் ஆண்டு தை பூசத்திருநாளில் 06 Feb ,புதன்கிழமை அனந்தலக்ஷ்மி என்ற அந்த கற்பகத்தரு கணேசனின் வாழ்க்கைத்துணைவியானார்.

                       காலம் உருண்டோடியது.1975 ம் ஆண்டு முதல் ஆண்  குழந்தையும் 1980 ம் ஆண்டு இரண்டாவது ஆண் குழந்தையும் என இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இன்று இருவருமே வளர்ந்து மணம் முடித்து உயர் அதிகாரிகளா க இருக்கின்றனர்

                          நல்ல மனைவி,நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்        


















         
         






















திங்கள், 23 ஜூலை, 2018

                                    Dignity is not negotiable

                It was a few days after my new posting to an Engineer Regiment.Those officers who were already there had established themselves strongly in the mind of the  Commanding officer and accordingly were getting a soft corner from him.
                The readers should keep in mind that the officership in the Army is made up of a conglamerated group .There is hard core officer cadre coming from Rashtriya indian military college,sainik schools,Reputed Public schools getting entry into N D A and I M A.Direct entry,Tech Graduate entry, etc.
                  Amongst these there were officers who responded to the National call when the country's safety,honour and integrity was challenged by external forces.Ganesan was an engineer in Tamilnadu thePWD and was not happy in serving there.He threw away his salary currency notes into  flowing river and resigned Govt job.But his superior did not accept his resignation and instead reminded him of the National emergency and advised him to join the Army as Emergency commission officer.With out knowing anything about Army set up he went to Services Selection Board and was selected.

                              Being a sportsman playing most of the games,and an athelet he did very well during military training and passed out as 47 th in a group of about 400 cadets.He started enjoying Army life and took keen interest in his professional matters.He took part in 1965 war,injured and awarded wound medal.
                          When emergency was lifted he was given the option either to continue in the Army or return to PWD.Ganesan opted to continue and was asked to go for second Services selection Board.He went and got  selected for the second time.He went for 3 years B.Tech Degree engineering course and completed the course as Civil Engineering dicipline topper.

                       On completion of the Degree course Ganesan came on posting as mentioned earlier.Honesty,integrity ,hard work and superior professional knowledge were his field of interest.He was physically outstanding and was highly respected by his troops.But the commanding officer perhaps did not get   time to know more about Ganesan.In this scenerio time for Annual confidential report came.Ganesan went on annual leave and returned after two months.

                             It was an evening time and officers were playing games.Ganesan finished his games and was about to leave for his room.At that time the staff officer to the commanding officer gave a key of a cuboard and requested Ganesan  to look for his confidential report which was written by the commanding officer in his absence and sign as a token of acceptance.

                          Ganesan went to office and searched the file for his report.In the process he saw most of the officers reports  and finally he got his report and went through.It was an above average report and Ganesan had no grievance.But the reports of other officers who were junior to him and weaker than him in some aspects were outstanding.This had hurt Ganesan as the commanding officer was showing partiality in reporting.Because if a third person like Army Head Quarter see these reports they will certainly think that Ganesan is not as good as other officers.

                          Ganesan started spending sleepless nights.He had been reading and writting  about morality in personal and public life.Each one of us has an obligation to do something when you witness an injustice.We have rules and laws.But if you dont have the necessary will to  protect them what is the use of these rules and laws ?.

                           But in Army the reporting systems are cofidential.One cannot know about other officers report authentically unless an enquiry is orded.Ganesan has right to represent if his report was showing any negative quality.So Ganesan had no option but to keep quiet and continue to serve under the commanding officer.

                           The Regiment moved to Leh-Ladak region in November.Generally move to high altitudes will take place only in summer so that troops are acclamatised properly and ready to face the winter.In the meantime Ganesan was posted out of the Regiment to Banglore.But the commanding officer instead of relieving him requested him to move to Leh and promised to relieve him once the Regiment selltes down.Accordingly though a newly married officer Ganesan moved to Leh.

                      In Leh the Regiment was split to support each Brigade and Ganesan was moved to Kargil as Field company commander to 121 Indep Bde Gp.( The readers may understand that this was the group which bear the on slaught in 1999 the famous Kargil war.) The Regiment was struggling in winter cold of December-January  and many officers and men were falling sick.

                            One Field company was supporting 114 Inf Bde  across Changla pass at Dharbog.The pass has to be kept open for supply.A detachment of Engineers with support of a Rifle company from Infantry Bn was placed at Zingral (altitude 14000-15000 ft ) with enough road clearing machines. The officer placed at Zingral fell sick and one dozer has slipped 1000ft down due to heavy snow fall.

                  Ganesan was ordered to move to Zingral immediately and restore communication.From Kargil Ganesan moved to Zingral and started clearing snow.The accident Dozer was recovered  and things were going on smoothly.Suddenly there was un usual  heavy snow fall and road to a stretch of 13 Km was blocked.Ganesan swung into action and was continusly on the road for about 14 hours and opened the road to traffic.when the taffic was opened Ganesan's vehicle got struck in snow and went off.

                               Time was about 10.00 PM and if one has to reach base there is no alternative but to walk 10 -12 Km.Ganesan and his team walked.They  reached the base at about 02.00 AM.and took rest.Next day Ganesan's another officer was running heavy fever and Ganesan took him to Leh and got him admitted to military hospital.

                        Ganesan came back to his room and was thinking about all events that had taken place since his last confidential report event.Un fortunetly now time has come for next year confidential report.The commanding officer will once again get all the tough works done by him and show his partiality to his favourite officers.Inspite of his posting to Bangalore he is not being relieved and sent to one task to another.

                         Ganesan decided to talk to the commanding officer.At that time the staff officer came and told Ganesan that Commanding officer wants him to go for another task.Ganesan flatly refused and told the staff officer to report his un willingness to obey the order.In a few minutes Ganesan was called to Commanding officer 's room.

                          The Commanding officer asked his explanation for such dis obedience.Ganesan explained that his posting has come about 4 months before  and till date he has done all the jobs whole heartedly.Now he wants to be relieved.Some more arguments took place and the Commanding officer shouted to Ganesan that he will be relieved at the very moment and he can fly the next day.That night there was dining out party for Ganesan and next day Ganesan was free to fly.

                      For next three-four days the weather went bad and there was no flight.Ganesan was struck.In the meantime the Commanding officer wrote the Annual confidential report of Ganesan  and was called to his office to sign it.

                              Ganesan went inside took the confidential report turned to to the page  where he has to sign ,signed and returned to the Commanding officer.The CO told him to go through the report as he has done good works in the Regiment.
                      Ganesan cooly stated;"
                                   "Sir,this is a report about what you feel about me.I would be a fool to know about me from others.I am aware of my assets and liabilities.So be pleased to write whatever you want and keep it, I don't care."

                           The CO might have felt that he is facing a new figure in Ganesan.Without much discussion he stood up and stretched his hands to shake and said, Ok,All the best.Ganesan shook hands with him and after  a second of hesitation said,
                        Sir,generally the commanding officer writes annual confidential report on the officers serving under him.But no one bothers about what the junior officers feel about their commanding officer.May I have your permission to say what I feel about you ?

                             There was some gliter on the eyes of the CO.Are you allright ?is there any brain disorder due to high altitude effect ?

                          Ganesan replied, "No sir.I am perfectly all right.If you give me permission,then only I can speak.
                              CO said, "ok,What do you feel about me  "

                       Ganesan spoke, "Sir,in my humble opinion ,you are unfit to command the Regiment.

            The CO was furious; "Do you  know that I can court martial you and throw you out of the Army ?

                       "Yes Sir,I know that.I can be a cooli at the central station of Madras and earn my living.I threw away a Govt Job and Joined Army out of shear Patriotism.Here I find officership is different.My statement is based on some facts of your activities.

                Firstly,I was the senior most Captain in the Regiment.when there was a vacancy of a major  instead of giving me the oppurtunity to command,you had made an officer one year junior to me to officiate.Why ?

                      No reason.

"Even I had taken permission to be away on a Regimental function from the officiating CO,You,after joining from leave ordered Summery of Evidence against me,What is the reason ?

                  " No reason".

   Adding one or two more such alligations,Ganesan finally asked,


                 " Amongst all officers of my seniority and juniors,I was the fittest and best .But in the last year of reporting You have graded me just above average while some other officers were graded as "out standing "Why ?

                   With such salvo of alligations Ganesan concluded "IN WHAT WAY I AM INFERIOR TO OTHERS. ?

                         The CO sat silent for a while as he was not able to digest Ganesan's alligations.But He is a Gentleman.He understood that from the first day  of Ganesan  coming to the Regiment there had been a mis understanding.Ganesan had been very sensitive towards his ill treatment and lack of appreciations by the CO over all these days.He spoke;


                                 Ganesan,I wish that you had spoken to me last year itself like this.The CO is not a God.I am also a human being with likes and dislikes.I liked some officers and over rated them.But I have not under rated you.I have reported truely about you .As long as you have not been under rated why should you bother about others.?

                   Ganesan comes from an ordinary agriculture family.He never heard about Army service.But he is honest and sincere in most of his dealings.He is very compassionate tries himself to be a noble leader to all under his command.He keeps himself physically,mentally and psychologically strong and his professional knowledge is more than any officer who had come from military back ground.He is very proud about his profession.He has very strong spiritual feelings.

                       But he  doesn't serve to please his superiors,does n't hide his feelings;Generally he "calls a spade as spade as he does not know what to call othervice or was he taught how to hide his concience.

                        So,he spoke," Sir,you are most welcome to have your likes and dislikes.But these should not harm others.Your outstanding report on other officers are fine.But when mine and other officers reports are seen by a third person ,who does not know about us,what opinion will they form.? certainly they will think  that the other officers are  better  than me while actually they are not.Is it not an indirect harm to me.If you want to boost up report of an officer inferior to me ,then there is no alternative but to bring me atleast at  par with him, if not above him.

                        The CO avoided answering further.He said Ganesan,you must have a thick skin not to bother about others.If you have this you will go high in services life.He once again shook hands and Ganesan left Leh.

                   A  bunch of part 2 orders back dated were published by the Regt giving lot of financial benifit to Ganesan later.But Ganesan did not bother to know about that.

                         What is great about the Commanding Officer ? His moral courage to appreciate Ganesan's dignity to stand up and correct himself.Ganesan did not know  till date what was written in Leh report.But after exactly 10 years of that incident when Ganesan was appointed Commanding Officer of the same Regiment ,he honestly  saluted the then Commanding Officer in gratitude.It is obvious that the CO certainly would have recommended him for command may be even as an after thought.
                 Ganesan's posting as Commanding officer of 4 Engineer Regiment came in a turbulant environment in November 1984 as Prime minister Indira Gandhi was shot dead and Ganesan was at Delhi at that time.He was flown to Assam along with some ARMY,AIRFORCE personnel as special courrier.Ganesan tookover Command of 4 Engineer Regiment who were in the role of 5 Mountain Division Engineers.


            Incidently Ganesan brought the Regiment from 11 Corps,Jullunder as Advance Party Commander,to 5 Mtn Div,in Dec-82 and left Tenga in Mar-83.When he was approved for promotion to Lt Col he was denied Regimental Command and posted to Chief Engineer Delhi zone as S O 1.The destiny is great.With out earning a report Ganesan was moved to Command.He had spent only about 80 days in Delhi.

             In additition to existing Fine Officers,Brilliant Young Officers started joining.Sandeep,Devaya,Malani, Padhi,Joshi,Mishra and Darshan,Vijayan are few I could remember.I took initiative to bring Joe from Staff college,and Badri from TSC
               Finally, in May 1987,while in Commanad ,I was selected as Leader and Station Commander of Indian Antarctic Research Station Dakshingangotri for the wintering period of 1987-89 and handed over Command to Col OHJA,I left India in November 1987.
                    Ganesan's Command tenure of 3 years had been under different conditions.In 5 Mtn Div he served under Maj Gen KD Majumdar and J M Singh.J M Singh was the officer who was asked to resign or face Court Martial by the then COAS General  Rodriguess.Then the Regiment moved to Udhampur under complex Command.71 Sub Area,Northern Command,and 26 Div all had control on the Regiment.Inspite of such disturbed Command tenure Ganesan made it for Colonel.He became the first Colonel to Command the Regiment which he raised along with others in 1966.                 

       The Officers and men who served under Ganesan  will understand these.To day in 2018, almost 30 years after relinquishing command one of the officer posted in wattsup is for you.

                                                                 
                     
                     '"Our own iron man flanked by his Youngsters......not so long back.
        ( Col A Gautham,and Col Vijayan two very good officers who missed command of the Regiment.)
   






,


     























      

வியாழன், 19 ஜூலை, 2018

                                                         9.உருவமற்ற குரல் ......

                                                             (  இரா ணுவப் பொறியியற்  கல்லூரி )
         
இந்திய இராணுவத்தின் பொறியாளர் படைப்பிரிவிக்கான எல்லா பயிற் சிகளும் நடக்குமிடம் இராணுவப் பொறியியற்கல்லூரி.இது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பூனா என்னுமிடத்தில் சுமார் 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
            பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றிராத இராணுவ அதிகாரிகள் ( BA,B.Sc) இங்கு மூன்றாண்டு கால B. Tech பட்ட ப் படிப்புக்கு வருவார்கள்.இராணுவத்தில் நிரந்திர அதிகாரியானபிறகு கணேசன் இந்த படிப்புக்காக பூனா வந்தடைந்தார்.
                      அவர் அன்னையின் மறைவு குடும்பத்தில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருந்தது.அப்பா,25 வயது தம்பி,மற்றும் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த 18 வயது கடைசி தம்பி மட்டுமே ஊரிலிருந்தார்கள்.சமையல் செய்ய யாருமில்லை.இந்நிலையில் மூத்த தம்பிக்கு திருமணம் செய்விக்கவேண்டியது காலத்தின் கட்டாயமானது.

                            அதன்படி 03 Dec 1970 தம்பி கலியமூர்த்தியின் திருமணம் நடந்தது.கணேசனின் மூன்றாண்டு கால படிப்பு தொடர்ந்தது.

                          இந்நிலையில் எதிர்பாராதவிதமாக இந்திய எல்லைப்புறம் பதட்டமான சூழ்நிலைக்குள்ளானது.அண்டை நாடான பாகிஸ்தானில் ஏற்பட்ட கலவரம் போர்க்கால சூழ்நிலையை ஏற்படுத்த இராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அதிகாரிகள் படைப்பிரிவிற்கு அனுப்பப்பட்டனர்.

                           கணேசன் மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்த 4 Engineer Regiment என்ற படைப்பிரிவிற்கு அனுப்பப்பட்டார்.அந்த படைப்பிரிவு அப்பொழுது திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கருகிலிருந்தார்கள்.எந்த நிமிடமும் போர் ஆரம்பமாகலாம் என்ற பதட்டமான சூழ்நிலையில் கணேசன் படைப்பிரிவு சென்றடைந்தார்.
           ஏராளமான இராணுவத்தினர் கிழக்கு பாகிஸ்தானைச்சுற்றி மூன்று புறத்திலும் இந்திய கடற்படை நான்காவது பக்கமான வங்கக்கடல் முழுவதும் குவிக்கப்பட்டிருந்தனர்.
                   அகதிகளை அவர்கள் நாட்டிற்குள் அனுப்ப போரைத்தவிர வேறு வழியில்லை என்றானபொழுது 03 Dec1971 இந்தியா பன்முக தாக்குதலை ஆரம்பித்தது.
               போர் ஆரம்பித்த மூன்றாவதுநாள் Bangladesh என்ற புதிய நாட்டை இந்தியா அங்கீகரித்தது.
               பன்னாட்டு தலைவர்களும் ஐக்கியநாட்டு சபையும் இந்த போரின் முன்னேற்றம் குறித்து உன்னிப்பாக கவனித்தனர் .போரின் முடிவு எப்படியிருக்கும் என்பது      வெளி உலகத்திற்குப் புரியவில்லை.ஆனால் இந்திய இராணுவத்தினர் "சேருமிடம் டாக்கா "என்ற குறிக்கோளுடன் அதி வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தனர்.ஆக பங்களாதேஷ் என்ற புதிய நாடு உருவாவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
              பல இடங்களில் பாகிஸ்தானிய இராணுவம் போரிட விரும்பவில்லை.ஆங்காங்கே அவர்களை சுற்றி வளைத்துவிட்டு மற்ற இந்தியப்படைகள் டாக்கா நோக்கி மூன்று புறங்களிலும் முன்னேறிக்கொண்டிருந்தனர்.
                      கணேசன் இருந்த படைப்பிரிவு புது முயற்சியாக 130 mm Artillery gun ஐ பொறியாளர்களின் கனரக மிதவையில் ஏற்றி மேகனா நதி மூலமாக நரசிங்கிடி என்ற கிராமம் வரை சென்று அங்கிருந்து இயக்கினார்.பீரங்கிக் குண்டு டாக்கா விமானதளத்தில் விழுந்தது.
                           போர் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்றுணர்ந்த பாக் இராணுவ தளபதி A A K Niyazi சரணடைய ஒப்புக்கொண்டார்.
                16 December 1971 மாலை நான்கு மணியளவில் பாகிஸ்தானின் 93,000 இராணுவத்தினர் இந்தியாவிடம் டாக்கா Race Course மைதானத்தில் சரணடைந்தனர்.
                 உலகிலேயே நடந்த போர்களில் பங்களாதேஷ் போர் புதிதாக போருக்கு இலக்கணம் வகுத்தது.
                    கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாலும் ஒரு சரித்தரப் புகழ் பெற்ற போரில் கலந்துகொண்டது பெரு மகிழ்ச்சி என்ற நினைவுடன் கணேசன் இராணுவப்பொறியியல் கல்லூரி திரும்பினார்.
                        28 june 1973 அவரது மூன்றாண்டு கால படிப்பு முடிந்தது.சிவில் இன்ஜினியரிங் பிரிவில் கணேசன் முதல் மாணவராக வெற்றி பெற்றிருந்தார்.சிறந்த நீச்சல் வீரர் என்ற பரிசும் பெற்றார்.ஆரம்பகால இராணுவப் பயிற்சியின்போது சிறந்த தட கள வீரர் என்ற பரிசும் பெற்றிருந்தார்.
                இந்த பெருமையுடன் அவர் 4 Engineer Regiment என்ற அவரது பழைய படைப்பிரிவிற்கே மீண்டும் வந்து சேர்ந்தார்.
                      பங்களாதேஷ் போர் முடிந்து அவர்களை திரிபுரா மாநிலத்தில் விட்டு வந்திருந்தார்.அவர்கள் அங்கிருந்து உடனடியாக மேற்கு பாகிஸ்தான் எல்லைப்புறம் சென்று அங்கு பணி  முடிந்து தற்பொழுது பெங்களூரு வந்திருந்தார்கள்.
                        கணேசன் பெங்களூரு வந்து சேர்ந்தபின் அவரது அண்ணன்கள் அவரது திருமண முயற்சியில் ஆர்வம் கொண்டனர்.