உருவமற்ற குரல்............8
ரூர்கி பல்கலைக்கழகத்தில் மூன்றுமாத பயிற்சிக்காக கணேசன் வந்திருந்தார்.அங்கு வந்த இரண்டாம் நாள் 1966 ஜனவரி 11ம் நாள் பாரதப்பிரதமர் லால்பகதூர் சாஸ்த்ரி மரணமடைந்தார்.ரஷ்யாவின் முயற்சியினால் இந்திய-பாகிஸ்தானிய பேச்சுவார்த்தை தாஷ்கண்ட்டில் நடை பெற்றபோது சாஸ்த்ரி அங்கு மரணமடைந்தார்.
இவைகளைப்பற்றிய தாக்கம் ஏதுமில்லாமல் கணேசன் பயிற்சி நடந்தது.பிப்ரவரி 4 ல் அவரது சின்ன அண்ணன் ராமமூர்த்தியின் திருமணம் நடந்தது.
இதற்கிடையில் போர் நிறுத்த ஒப்பந்தமும் ஏற்பட்டது.கணேசன் படைப்பிரிவு பழைய இடமான பெறலிக்கு செல்ல உத்திரவிடப்பட்டது.அதேசமயம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்ஜினியர் ரெஜிமென்ட் உருவாக்கவும் உத்திரவு வந்தது.இதனால் கணேசன் பொறியாளர் பிரிவு போர்முனையிலிருந்து அஸ்ஸாம் செல்லவும் அங்கு 23 Inf Div என்ற படைப்பிரிவின் பொறியாளர் அங்கமாக 4 Engineer Regiment என்ற
புதிய பொறியாளர் அமைப்பை உருவாக்கவும் உத்திரவு வந்தது.
இதனால் கணேசன் ரூர்கி பல்கலைக்கழகத்திலிருந்து அஸ்ஸாம் செல்ல உத்திரவு வந்தது.1966 ம் ஆண்டு ஜூன் 2 ம் நாள் 4 என்ஜினியர் ரெஜிமென்ட் என்ற புதியஅமைப்பு உருவானது.கணேசன் captain என்ற பதவி உயர்வு பெற்றார்.
1966 ம் ஆண்டுக்கான விடுமுறையை நவம்பர்-டிசம்பர் போன்ற சமயத்தில் எடுத்துக்கொண்டு ஊர் வந்தார் கணேசன்.அப்போதுதான் அவரது கேப்டன் பதவிக்கான சம்பளம் மொத்தமாக வந்தது.கணேசன் தனது பெற்றோரை ராமேஸ்வரம்,காசி போன்ற இடங்களுக்கு அழைத்துச்செல்ல விரும்பினார்.அதுவே நல்ல சமயம் என்று ராமேஸ்வரம் புறப்பட்டார்.உடல் நலமில்லாத அம்மாவுக்குத் துணையாக தங்கையையும் கூட்டிச்சென்றார்.
ராமேஸ்வரம்,மதுரை,பழனி என்று சில ஊர்களுக்கு ரயிலில் முதல் வகுப்பில் அழைத்துச்சென்று விட்டு திரும்பினார்.
1967 ம் ஆண்டு மாற்றங்கள் அதிகமின்றி சென்றுமறைந்தது.1968 ம் ஆண்டு கணேசன் வாழ்வில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.இராணுவப் படைப்பிரிவிலிருந்து அவர் கட்டுமானப்பிரிவிற்கு மாற்றப்பட்டார் .பொதுப்பணித்துறை வேண்டாம் என்று இராணுவத்திற்கு வந்த அவரை மீண்டும் அதுபோன்ற அமைப்புக்கு மாற்றியது விதியின் விளையாட்டு போலும்.
Chief Engineer,CWE,GE எல்லோரும் ஒரே இடத்திலிருக்க Assisstant Garrission Engineer என்ற பதவியில் அதே இடத்தில் கணேசன் வேலையை ஏற்றுக்கொண்டார்.ஒரு கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் வேலை நடந்துகொண்டிருந்தது.32 லட்ச ரூபாய் ஒப்பந்தக்காரருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது
நடந்துகொண்டிருக்கும் வேலையின் இடையில் கணேசன் சேர்ந்திருப்பதால் அதுவரை நடந்துள்ள வேலையின் தரம் பற்றி ஒப்பந்தக்காரரும் கணேசனும் ஒருங்கிணைந்த ஒரு பட்டியல் தயார்செய்து இருவரும் கையெழுத்திட்டனர்.
அதன்படி வேலையின் மதிப்பு 30 லட்ச ரூபாய் தான் வந்தது. இரண்டு லட்ச ரூபாய் போல் over payment ஆகியிருந்தது.ஒருகோடி ரூபாய்க்கான வேலையில் 2 லட்சம் அதிகமாக்க கொடுத்திருப்பது பெரிய குற்றமில்லையென்று கணேசன் ஏற்றுக்கொண்டார்.ஆனால் வேலைக்கு அவர் புதியவர் என்பதால் அடுத்த பில் போடும்போது இந்த over payment சரிக்கட்டி விடவேண்டும் என்று உத்திரவிட்டார்.
ஒப்பந்தக்காரர் கணேசனிடம் வேலை செய்வது அவ்வளவு சுலபமில்லை என்பதைப் புரிந்து கொண்டார். இதனால் வேலையில் தொய்வு ஏற்பட்டது.ஒப்பந்தக்காரர் உயர் அதிகாரிகளின் தயவை நாட ஆரம்பித்தார்.யாரிடம் போனாலும் கடைசியில் கணேசனிடம்தான் வரவேண்டியிருந்தது,
நேரடியாகவும் மறைமுகமாகவும் பலவிதமான பிரச்சினைகள் வந்தன.கணேசன் எல்லாவற்றையும் சமாளித்தார்.இந்நிலையில் அவரது அவசரகால இராணுவப்பணி முடிந்துவிட்டது.அவர் மீண்டும் பொதுப்பணி துறைக்குத் திரும்பவேண்டும் அல்லது மீண்டும் ஒருமுறை அவர் இராணுவத்தேர்வுக்குப் போகவேண்டும்.
கணேசன் இராணுவத்திலேயே தொடர விரும்பி அலகாபாத் இராணுவத் தேர்வு மையத்திற்குப் போனார்.அதிர்ஷ்ட வசமாக தேர்வு பெற்றார்.
இடைக்காலத்தில் அவரது அன்னையின் உடல்நிலை மோசமானது.இவரைப் பழிவாங்க நினைத்த உயர் அதிகாரி அவருக்கு விடுமுறை தர மறுத்து விட்டார்.மறுநாளே அவர் அன்னை மரணமடைந்தார்.உயர் அதிகாரி வருத்தப்பட்டு உடனே அவரை விடுமுறையில் போக வற்புறுத்தினார்.
ஆனால் கணேசன் வரமாட்டார் என்றெண்ணிய அவர் அண்ணன்கள் அன்னையின் உடலை எரியூட்டிவிட்டார்கள்.வீட்டிற்கு வந்தும் கூட கணேசனால் அவர் அன்னையின் உடலைப் பார்க்க வில்லை.
தாங்கொணாத்துயருடன் அ ன்னையின் அஸ்தியை காசியில் கங்கையில் கரைத்துவிட்டு அவர் பணியிடம் திரும்பினார்.
1970,May 9 th மூன்றாண்டுகால B.Tech படிப்பிற்காக அவர் பூனா இராணுவப் பொறியியல் கல்லூரி வந்தடைந்தார்.