செவ்வாய், 31 அக்டோபர், 2017


                   நிறைமொழி மாந்தர் ஆணையிற்  கிளர்ந்த
       
                     மறைமொழிதானே மந்திரம்  என்ப .....

                 திருமூலர் அருளிய திருமந்திரம் ஆழ்ந்த அறிவுபெற்ற தமிழறிஞர்களல்லாமல்  சாதாரண மனிதர்களால் சுலபமாகப் புறிந்துகொள்ள
முடியாது.
             அது யந்திரம்,தந்திரம்,மற்றும் மந்திரம் ஆகிய மூன்றையும் பற்றிய நூல்.திருமூலர் ஒரு சித்தர் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
                  .சித்தர்களின் மொழி மர்மம் நிறைந்தது.அவர்களது பாடல்களை புரிந்துகொள்ள மொழி அறிவு மட்டுமே போதுமானதன்று .சிறந்த மொழிப்புலமையும் ஆன்மீகப் பயிற்சியும் சித்தர்கள் தொடர்பும் பெற்றிருக்கவேண்டும்.

                                                         
                                                           

        வழுதலை வித்திட பாகல் முளைத்தது 
         புழுதியைத் தோண்டினேன் பூசனி  பூத்தது
         தொழுதுகொண்டோடினார் தோட்டத்துக்குடிகள் 
         முழுதும் பழுத்தது வாழைக்கனியே .

                       இந்த பாடலுக்கு நேரான பொருள் ,கத்தரிக்காயை விதைத்தேன்,பாகற்காய் முளைத்தது..புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது,இதைக்கண்டு தோட்டத்துக்  குடிகள் தொழுது ஓடினர் ,வாழைக்கனி  பழுத்தது என்பதாம்.
             
                      ஆனால் உண்மையான பொருள்;
                வழுதலை வித்திட -யோகப்பயிற்சி செய்ய
                பாகல் முளைத்தது-வைராக்கியம் தோன்றியது.
                புழுதியைத்தோண்டினேன் -தத்துவ ஆராய்ச்சி செய்தேன்
             பூசணி பூத்தது-சிவத்தன்மை எய்தியது
                     தோட்டத்துக்கு குடிகள்-இந்திரியங்கள் முதலியன
     தொழுது கொண்டோடினர் -அச்சிவத்தன்மை கண்டு அஞ்சி அகன்றனர்
               வழைக்கனி -ஆன்ம லாபம்
              முழுதும் பழுத்தது-முழுதும் முற்றிக்  கனிந்தது.

                      திருமந்திரம் ஒரு அற்புதமான நூல்.பல பேரறிஞர்கள் இதற்கு விளக்கவுரை எழுதியிருந்தாலும் ஒவ்வொருவரும் அவர்களுக்கே உரிய முறையில் இடைச்செருகளும் விளக்கமும் கொடுத்துள்ளனர்.

                       இந்நிலையில் பேராசிரியர் டாக்டர் சுப.அண்ணாமலை அவர்கள் சுமார் பதினேழு புகழ்பெற்ற பதிப்பகங்களின் நூல்களை ஒப்பாய்வு செய்து இந்திய பண்பாடு-ஆராய்ச்சி நிறுவனத்திற்காக 1997 ல் வெளிவந்த பதிப்பு ஒரு மாபெரும் பொக்கிஷமானது.
                 
                          சென்ற சுமார் 25 ஆண்டுகளாக பலமுறை நான் படித்து மகிழ்ந்திருக்கிறேன். இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறேன்.
                           
                              4 Engineer Regiment என்ற பொறியாளர் படைப்பிரிவின்
                   தலைவராக கர்னல் கணேசன் அருணாச்சலப்பிரதேச தவாங்கில்.

                        ஒரு இராணுவ அதிகாரியாக இரண்டு போர் களங்களைக்கண்டிருந்தாலும் சிறு வயது முதலே தீராத தமிழார்வத்தால் திருமந்திரம்,திருவாசகம்,திருஅருட்பா,போன்ற நூல்கள்  சிறிதும் பெரிதுமாக எப்பொழுதும் என் வசமிருக்கும்.

                  அந்த நூல்களின் தாக்கமே என்னை வழிநடத்துகிறது என்றால் மிகையில்லை.

                     மனித வாழ்க்கை ஒரு ஒப்பற்ற பரிசு.பெரும்பாலானவர்கள் இதைச்சாரியாகப்புரிந்துகொள்வதில்லை.பிறந்தசூழ்நிலை,பெற்றோர்கள்,சுற்றுப்புற வாழ்க்கை நிலை,இளமைக்கல்வி ,வளரும் பருவ நண்பர்கள் போன்ற பலவிதமான காரணிகளால் எண்ணங்கள் சிதறடிக்கப்பட்டு அதனால் மனித வாழ்க்கைப்பற்றி சரியானப் புரிதல் இன்றி தடுமாறி,தடம் மாறி மாசுபட்டு மடிந்துபோகிறார்கள்.

                        மனிதர்கள் தங்களது மூடிய மனக்கதவுகளை திறக்க மறுப்பதால், திறக்க தெரியாதலால் ,திறக்க முயற்சிக்காததால் ஒரு இல்லாமை,இயலாமை,என்ற மாய உலகினைத் தங்களுக்குளாகவே  கற்பனை செய்து கொள்கிறார்கள்.

                      ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு மறுபக்கம் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
 
                            ஊக்குவித்தல்,விடாமுயற்சி,இடைவிடாத உழைப்பு,வாழ்வில் ஏற்றுக்கொண்ட வேலை யில் மனம் ஒன்றிய ஈடுபாடுபோன்ற குணங்களைக்கொண்டவர்கள்,உண்மையிலேயே மலைகளைப்புரட்டுகிறார்கள்,-கடலைத்தாண்டுகிறார்கள்.நேரான சிந்தனையில் மனிதர்களின் இரு பக்க மூளையையும் உபயோகப்ப படுத்தப் படுவதில்லை.மாறுபட்ட சிந்தனைதான் மன க்கதவைத் திறக்க உதவுகிறது.

                   4 Engineer Regiment ன்  தலைமையகம் டேங்கா  என்ற இடம்

                        மாறுபட்ட கோண பரிசீலனையினால் சில மகத்தான மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன.தடைக்கற்களைப்  படிக்கற்களாக மாற்றிக்கொண்டு வாழ்வில் உயர்ந்தோர் கள்  எண்ணற்றோர்.

               
           

         
                                                  Officers Mess,4 Engr Regt,Tenga.                                               







                
                   















வெள்ளி, 27 அக்டோபர், 2017




                                   மனித வாழ்க்கை ஒற்றையடிப்                                                              பாதையல்ல.

                             வழுத்துதற்கு எளிதாய் வார்கடல் உலகினில் யானை முதல் ஆய் எறும்பு ஈறாய் 84 லட்சம் யோனிபேதங்களுடைய உயிரினங்களில் மனித இனம் மட்டுமே தன்னை அறிவதற்கும் அப்படி அறியமுடியாதவர்களுக்கு அறிவிப்பதற்குரிய ஞானமும் பெற்றிருக்கிறது.

                              இப்படிப்பட்ட மனித  வாழ்க்கை ஒரு ஒற்றையடிப் பாதை போல தான் தன்  உற்றம் சுற்றம் என்று  ஒடுங்கிவிடலாமா ?
                         

                                     Image result for tamilnadu village  agriculture scene

          இந்த பரந்த உலகில் பலவிதமான ஏற்றத்தாழ்வுகளுடனும் பல விதமான சுற்றுப்புற சூழ்நிலைகளிலும் மனிதர்கள் பிறந்து வளர்கிறார்கள் .

                             சமன்படுத்தப்பட்ட நிலத்தில் விதைக்கப்படும் நல்ல விதைகளைப்போல் நற்குடிப்பிறந்தோரும் போற்றி வளர்க்கக்கூடிய பெற்றோர்களைப் பெற்றவர்களும் வாழ்க்கையில் முன்னேறுவதில் வியப்பொன்றுமில்லை.

                        காற்றினில் கலந்து காட்டினுள் விழுந்து விண்ணும் மண்ணுமே வளர்க்கும் சில விதைகள் விரிந்து பறந்து வளர்வதுமட்டுமல்லாமல் தன் நிழலில் ஆயிரம் பறவைகளும் வாழ இடம் தருகின்றன.

           

                                 Image result for very big banyan trees
               

                        மனித வாழ்க்கை அப்படித்தான் இருக்கவேண்டும்.தான் கற்றுக்கொள்வதோடு நிறுவிடாமல் மற்றவர்களுக்கும் கற்பிப்பதும் தான் தெரிந்துகொள்வதோடு நின்று விடாமல் மற்றவர்களுக்கும் தெரியச்செய்வதும் இந்த வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கவேண்டும்.

                               பலவிதமான வசதிகளோடு பிறப்பது ஒரு விபத்து;ஆனால் பலரும் அறிய பெயரோடும் புகழோடும் இறப்பது ஒரு சாதனை என்பார்கள்.அதுபோல் சகதியிலும் செந்தாமரை மலரும்  என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

                       அப்படி நாம் செயலாற்றும்போது நாம் பிறந்து வளர்ந்து செயலா ற்றப் புறப்பட்டுவந்த அந்த ஒற்றையடிப் பாதை ஒரு ராஜ பாட்டையாக,தேரோடும் வீதியாக மாறிவிடும்  என்பதில் ஐயமில்லை.

                             
                                   Image result for multi road junction


                                                               வாழ்க வளமுடன்.!













புதன், 25 அக்டோபர், 2017


                             அறிவியல் அரங்கம் -நிகழ்வுகள்.-2

                         சன்னாநல்லூர் அகத்தூண்டுதல் பூங்கா நிகழ்வுகள் சுற்று வட்டார மக்களிடையே சில மாற்றங்களைக்கொண்டுவருவதாகத் தெரிகிறது.இந்த அமைப்பின் நோக்கமே இளைய சமுதாயம் தங்களது உடல்,மன சக்தியைத்தெரிந்து உணர்ந்து செயல்பட ஆரம்பித்தார்களானால் நிச்சயம் அவர்கள் வாழ்விலும் அதன் காரணமாக அவர்களது வீடு,கிராமம் ,வட்டம், மாவட்டம் என்று பன்முகப் புத்துணர்வு ஏற்படும் என்பதில் ஐயமில்லை,

                              மாணவர்களிடையே மாற்றம் ஏற்பட கல்லூரி முதல்வரும்,ஆசிரியர்களும்  தான் முயற்சி எடுக்கவேண்டும்.அவர்கள் மாணவர்களை அகத்தூண்டுதல் பூங்காவிற்கு அழைத்து வந்து அந்த அமைப்பின் விபரங்களை எடுத்துச்சொல்லவேண்டும்.
           
                                திருவாரூர் மாவட்டத்தில் எத்தனை கல்லூரிகள் இருக்கின்றன.அனால் ஒரு சிலர்தான் இந்தப் பூங்காவைப் பார்த்திருக்கிறார்கள்.

                        சமீபத்தில் நன்னிலம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் டாக்டர்  திரு காமராஜ் அவர்கள் பூங்காவிற்கு வந்திருந்தார்கள் .முதல் பார்வையிலேயே இது இளைய சமுதாயத்திற்கு ஒரு பொக்கிஷம் என்பதை உணர்ந்துகொண்டார்,கர்னல் கணேசன் மிக விபரமாக இந்த அமைப்பின் நோக்கத்தை எடுத்துச்சொன்னார்.இதனால் பரவசப்பட்ட அவர் ஓரிரு நாட்களுக்குள் தங்கள் கல்லூரி முதுகலை மாணவர்கள் சுமார் நூறு பேரை அழைத்து வந்துவிட்டார்.

                      மாணவர்கள் வருகை பற்றி கேள்விப்பட்ட டாக்டர் அழகர் ராமானுஜம் அவர்களும் மகிவுடன் கலந்துகொள்ள வந்தார்கள்.

                               

டாக்டர் அழகர் ராமானுஜத்தை வரவேற்கும் திரு காமராஜ்,கர்னல் கணேசன் மற்றும் திருமதி கணேசன்.


உரை நிழ்த்தும் கர்னல் கணேசன்.




 நன்னிலம் அரசு கலைக்கல்லூரி முதுகலை  படிப்பு மாணவர்கள்.

மனமது  செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்" என்பது அகத்திய
மாமுனியின்  தேவ  வாக்கு.

               மாணவர்கள் தங்களது மனதின் மகத்தான சக்தியைப் புரிந்துகொண்டு  அந்த சக்தியை தங்களது முன்னேற்றத்திற்குப் பயன் படுத்தினால் அவர்களது உயர்வை யாராலும் தடுக்க முடியாது.

                        ஆனால் தங்களது மனதின் சக்தி எவ்வளவு என்பதை எப்படி தெரிந்துகொள்வது.
                            முதலில் மனம் என்பது என்ன ? அது எங்கிருக்கிறது ?
டாக்டர் அழகர் ராமானுஜத்தின் விளக்கத்தைக்கேட்க மாணவர்கள் பேரதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.
                        மனம் என்பது ஒரு அலை இயக்கம்.வானொலியில் எப்படி செய்திகள் பதிவாகி ஒளிபரப்பப்படுகிறதோ அப்படியேதான் எண்ணங்கள் மனதில் பதிவாகி செயலாக வெளிவருகின்றன. 
அது எல்லைகளற்றது .என்றும் உள்ளது. எப்பொழுதும் தனது தலைவனுக்கு அடிபணிந்து வேலைசெய்யக் காத்திருப்பது.

                  தன்னால் முடியுமா என்று சந்தேகப்படாமல் ,எதிர்மறை எண்ணங்களை ஒதுக்கித்தள்ளி ஆக்கபூர்வ எண்ணங்களில் கவனம் செலுத்தி என்னால் முடியும் என்று முயற்சிக்கும்போது 
                         
                              உங்கள் வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது.

இது மந்திரமல்ல,மாயமல்ல;
அனுபவம் சொல்லும் உண்மை.

                                               தொடருங்கள்..........








     

































                     

செவ்வாய், 24 அக்டோபர், 2017


                                     அறிவியல் அரங்கம் -நிகழ்வுகள்.
       
                          சென்ற ஆகஸ்டு 16 ம் நாள் சன்னாநல்லூர் அகத்தூண்டுதல் பூங்கா வளாகத்தில் "அறிவியல் அரங்கம் " தொடங்கப்பட்டது என்பதை  வலைப்பூ வாசக நண்பர்கள்  அறிவார்கள்.

                          பேரளம்  வேதாத்திரி மகரிழி ஆஸ்ரம தலைவர் டாக்டர் அழகர் ராமானுஜம் அவர்கள் தலைமையில் திருவாரூர் மத்திய பகலைக்கழக டாக்டர் தங்க ஜெயராமன்,திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக டாக்டர் அமுதா,மயிலாடுதுறையிலிருந்து டாக்டர் இளங்கோவன் போன்ற அறிவியல் அறிஞர்கள் கலந்துகொண்டு  அடுத்து இந்த இடத்தையும் இங்கிருக்கும் வசதிகளையும் எப்படி இளையோருக்கு மனவளக்கலையில் ஊக்கம் பெரும் விதத்தில் பயன்படுத்தலாம் என்று விவாதிக்கப்பட்டது.

                  இங்கு ஏதும் வகுப்புகள் நடத்துவதை விட இளையோர்கள் இங்கு வந்து இந்த அமைப்பின்  "தன்னிகரில்லா"வரலாற்றை அறிந்துகொண்டு தங்களது வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்வது என்று சிந்திப்பார்களேயானால்  அந்த சிந்தனை செயல் வடிவம் பெற்று அவர்களுக்கும் அவர்களது வீட்டுக்கும் இந்த இந்தியத்  திருநாட்டிற்கும் பெருமை சேர்க்கும் என்பதில் சிறிதளவிலும்  சந்தேகமில்லை.

                            இந்த அமைப்பின் பெயருக்கேற்ப அவரவர்களது அகம் தூண்டப்படவேண்டும்.சிந்தனைதான் அறிவைத்தூண்டுகிறது .இந்த அமைப்பின் தலைவர் கர்னல் கணேசன் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதுபோல் "மனிதனின் திறமை அளவுகோலுக்கு அப்பாற்பட்டது."
தனக்குள்ளேயே இல்லாமை,இயலாமை ,ஏழ்மை போன்றவைகளைக் கற்பனை செய்துகொண்டு முடங்கிப்போய்விடாதீர்கள்  என்பதுதான் இந்த அமைப்பு வெளிஉலகிற்கு விடுக்கும் செய்தியாகும்.

                          இதன் காரணமாக சென்ற அக்ட்டோபர்   23 ம் நாள்  திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் ஜெயராமன் அவர்கள் தலைமையில் சுமார் 25 ஆய்வு மாணவர்கள்  அகத்தூண்டுதல் பூங்காவிற்கு வருகை புரிந்தனர்.



பல்கலைக்கழக  பேரூந்து.


டாக்டர் ஜெயராமன் 




மாணவர்களுடன் டாக்டர் ஜெயராமன்.


மாணவர்களின் ஆர்வம்..


                போக்குவரத்திற்கு மிக சுலபமாகவுள்ள இந்த அகத்தூண்டுதல் பூங்காவிற்கு இதுபோன்று தங்களது மாணவமாணவிகள்உ வாழ்வில் உயர்ந்து பெயரும் புகழும் பெறவேண்டும் என்று விருப்பப்படும் ஆசிரியப்பெருமக்கள் தாங்களாகவே முன்வந்து அவர்களை அழைத்து வரவேண்டும்.
     
                              மாணவர்களும் எதோ உல்லாசப்பயணம் என்றில்லாமல் வருங்கால வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் பயணம் என்று கொண்டு வளம்பெறவேன்டும்

                                            வாழ்க வளமுடன்.



















திங்கள், 23 அக்டோபர், 2017


                                              இனி ஒரு விதி செய்வோம் .

                         சட்டமும் ஒழுங்குமுறைகளும் மனித சமுதாயத்தின் நல் வாழ்க்கைக்காக ஏற்படுத்தப்பட்டவைகள் .கால வேகத்திற்கு ஏற்றாற்போலவும் மாறிவரும் வாழ்க்கை முறைகளுக்கேற்றாற்போலவும்  இவைகளை மாற்றி அமைப்பது தவறில்லை.

                           பண்டிகைகளும் விழாக்களும் மனிதர்களின் சோர்வுற்ற மனதிற்கு புது சக்தியை ஊட்டுகின்றன என்பதை மறுக்க முடியாது.

                                75 வது அகவையைக் கடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் பிள்ளைச்செல்வங்கள் பெரியவர்களாகி பேரன் பேத்திகளும் வளர்த்துவிட்ட பொழுதில்  இந்த பண்டிகைகளும் விழாக்களும் அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லைதான் .

                               ஆனால் ஐந்து வருடங்களாக பெற்றோர்களைக்காணாத மூத்த மகனும் அயல்நாட்டில் பணியாற்றும் இளைய மகனும் தீபாவளிக்கு சென்னை வருகிறோம் என்ற செய்தி வந்த பொழுது உடல் முழுவதும் புது இரத்தம் பாய்வதை உணரமுடிகிறது.

                               சர்க்கைப்பந்தலில் தேன்மாரி பெய்ததுபோல்  மைத்துனரும் இளைய சம்பந்திகளும் குடும்ப சகிதம் கலந்துகொள்கிறோம் என்ற பொழுது உண்மையிலேயே மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடும் என்பது ஒரு இயற்கையான எதிர்பார்ப்புதான்.

                              நான்கு நாட்கள் முன்பாகவே சென்னை வந்துவிட்ட இளைய மகன் அற்புதமாகத் திட்டம் வகுக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புதிய மெஷின் தங்கு  தடையின்றி ஓடுவதுபோல் தீபாவளிப்பண்டிகையின் இரண்டு  மூன்று நாட்கள் வாழ்வின் மறக்க முடியாதப்  பதிவாக மறைந்தது

                                 எல்லோருக்கும் குறிப்பாகஇளைய சம்பந்திகளுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

                                        வாழ்க வளமுடன்.!



                                    மகிழ்வோடும்  மனநிறைவோடும் சென்று வருக சொந்தங்களே.

                       








                                 














                               

புதன், 4 அக்டோபர், 2017

                                தனி ஒரு மனிதனும் அரசாங்கமும்.

                     இந்தியத்திருநாட்டில்  எண்ணற்ற மாமனிதர்கள் ஜனித்து ,வாழ்ந்து மரணித்திருக்கிறார்கள்.சமுதாய வளர்ச்சியில் பல சரித்திர சின்னங்கள் மண்ணோடு மண்ணாகிப் போனதுபோல் பல மாமனிதர்களும் இன்றைய மக்கள் மனதிலிருந்து மறைந்து போய்விட்டார்கள்.
                  அரசாங்க தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு இன்றைய இளைய சமுதாயத்தினர் தரும் சில  பதில்கள் மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் வயது முதிர்ந்தவர்களிடம் ஏற்படுத்துகிறது என்று சொல்லத்தேவையில்லை.
                 அடுத்த இந்திய தென் துருவ ஆய்வுத்தளமான  தக்ஷிண் கங்கோத்திரி யின் தலைவர் கர்னல் கணேசன் என்ற அறிவிப்பு அன்று தென்துருவ ஆய்வில் பங்கு கொண்டிருந்த ஐம்பத்திரெண்டு நாடுகளுக்கும் அறிவிக்கப்பட்டவுடன்  கணேசன் தனது சொந்த ஊரான சன்னாநல்லூருக்குப் போய்  தான் பிறந்து வளர்ந்த அந்த நறுமணச்சகதியிலிருந்து ஒரு பிடி எடுத்து வைத்துக்கொண்டார்.
                  1987 ம்  ஆண்டு டிசம்பர் 21 ம் நாள் புதன்கிழமை அவரது பாதங்கள் உலக உருண்டையின்கீழ்க்கோடியான தென் துருவத்தில் பதிந்தது.ஆய்வுத்தளபராமரிப்புப் பயிற்சிக்குப்பின் அவர் ஆய்வுத்தள தலைவராகப் பொறுப்பு ஏற்றார் .பதினைந்து பேர்களடங்கிய தனது குழுவினருடன் தனது பிறந்த மண்ணை எடுத்துக்கொண்டு விண்  ஈர்ப்பு மையத்தையும் தந்தையுடன் அன்னை செய்த தவம்போலும் என்று பெற்றோர்களையும் மனதில் கொண்டு ஆய்வதளத்தைச்சுற்றி தூவி தனது பணி தனக்கும் தனது குழுவினருக்கும் இந்தியதிருநாட்டிற்கும் பெருமை சேர்க்கவேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டார்

                          எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்   
                          இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும்  என்னால் 
                          தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால் 
                          செத்தொழியும் நாளெனக்குத் திருநாளாகும் 

                                          ..............(.யாருடைய  பாடல் என்பது  உங்கள் கற்பனைக்கு)
                 என்ற பாடலை மனதில் கொண்டு 480 நாட்கள்   அந்த உறைபனி உலகில் பணியாற்றினார்.
                   இன்றளவும் இந்தியாவின் ஐய்ந்தாவது குளிகாலக்குழு என்ற அவர்களது பணி ஈடு இணையற்று காலமெனும் கல்வெட்டில்பதிக்கப்பட்டு ஒளி வீசிக்கொண்டிருக்கிறது .
                 அண்டார்க்டிக்காவுக்குப் புறப்படுமுன் எப்படி வித்தியாசமாக செயலாற்றினாரோ அதுபோலவே கணேசன் அந்த உறைபனிக் கண்டத்திலிருந்து திரும்புமுன் யாருமே கற்பனை செய்திராதவித்ததில் செயல் புரிந்தார்.
                        சுமார் ஐம்பது கோடி வருடங்களாக உறைபனியில்  (5000 மீ  கனம்  )
கிடந்த கற்பாறைகள் நாலைந்து ஒவ்வொன்றும் ஒரு டன் எடையுள்ளது கப்பலில் ஏற்றி தமிழ் நாடு கொண்டுவந்தார்.
                    1994ம் வருட வாக்கில் ஒரு இராணுவ கர்னலின் ஓய் வூதியம் மிகவும் கேவலமாக இருந்தது.சுமார் பதினெட்டு வருடங்கள் 943,H Block .17 th Main Road,Annanagar Chennai 600 040 என்ற  முகவரியில் அந்த கற்பாறைகள் கிடந்தன.

                        இராணுவ அதிகாரிகளின் ஒய்வுவூதியம் சற்றே மாறியபின் தனது அடுத்த கட்ட செயலை ஆரம்பித்தார் கணேசன்.தமிழ்நாட்டில் எண்ணற்ற திறமைசாலிகளாக இளைஞர்கள் வழியறியாமல் தடுமாறி தடம்மாறிப் போகிறார்கள்.அவர்களுக்கு ஒரு உந்துசக்தியாக அறிவுத் திருக்கோவிலாக

                                     அகத்தூண்டுதல் பூங்கா 
             
                                 அமைத்துள்ளார்.இந்த  அகத்தூண்டுதல் பூங்காக்களில் தான் தென்துருவத்திலிருந்து கொண்டுவந்த கற்பாறைகளை சுமார் பத்து அடி உயர கான்கிரீட் தூண்களின் மேல் நிறுத்தி யுள்ளார்.
                          சன்னாநல்லூர் அவரது பிறந்த ஊர் என்பதால் அங்கு ஒரு கலந்துரையாடல் மையம் ,அருங்காட்சியகம் நூலகம் போன்றவைகளும்
 அமைத்துள்ளார்.
                     சென்ற ஆகஸ்ட்டு 28 ம்  நாள் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஒரு நிகழ்வில் கணேசனைப்பாராட்டி மேலும் அரசாங்க சார்பில் அகத்தூண்டுதல் பூங்காவை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச்செல்ல உதவுவதாக வாக்களித்துள்ளார் .











                 மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன் சொன்னதைச்செய்யும் செயல் வீரர் அவர்களிடமிருந்து அழைப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார் கணேசன்.
            மயிலாடுதுறை-திருவாரூர் முக்கிய சாலையின் ஓரத்திலிருக்கும் அகத்தூண்டுதல் பூங்காவும் அமைச்சரின் வரவு நோக்கி பூத்திருக்கிறது.




















திங்கள், 2 அக்டோபர், 2017


                                 உருவமற்ற  குரல்.........2.
                                         A VOICE  WITHOUT A FORM.
                     
                          பதினைந்து வயதில் முதல் முறையாக கணேசன் தனித்த வாழ்க்கையாக கல்லூரி விடுதியில் தங்கினார்.1958 முதல் 1961 வரையிலான மூன்றாண்டுகள்.தன்னைப்பற்றியும் தனது எதிர்கால வாழ்க்கை பற்றியும் சிந்தித்த காலமது.

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கானாடுகாத்தான்  செட்டிநாட்டு அரசர்கள் என்று புகழப்படும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களின் பிறந்த ஊர்.அரச பரம்பரைக்கே உரித்தான படாடோபங்கள் அந்த செம்மண் பூமியில் அவ்வளவாக சிறக்கவில்லையென்றாலும் நாலு அடுக்கு கட்டிடங்கள் மிகப்பெரிய ,ஆழமான குளங்கள் என்று பரந்திருந்தது செட்டிநாடு.

                      கணேசன்  ஒரு சிறிய பெட்டி,ஜமுக்காளம் இரண்டு மூன்று மாற்றுத்துணிகள் ,பத்துப்பதினைந்து ரூபாய் என்று தனது ஆஸ்திகளுடன் தனது கல்லூரி வாழ்க்கையை 1958 ம் ஆண்டு சூன் மாத வாக்கில் ஆரம்பித்தார்.

                         அந்த காலகட்டத்தில்தான் மணிவண்ணனின் (தீபம் -பார்த்தசாரதி )"குறிஞ்சி மலர் "தொடராக கல்கியில் வந்துகொண்டிருந்தது.அதன் கதாநாயகன் அரவிந்தனின் பாத்திர அமைப்பு கணேசனை மிகவும் கவர்ந்தது.
மாணவர் விடுதியில் கல்லூரி பாடங்கள் மட்டும் படித்துக்கொண்டு மற்றநேரங்களில் ஊர் சுற்றவும் கதைபேசியும் பொழுதுபோக்கும் மாணவர்களிடையே இவர் வித்தியாசமானவராக உருவெடுக்க ஆரம்பித்தார்.

                         1961 மார்ச்  அவரது இறுதித்தேர்வு வித்தியாசமான முறையில் வெளியானது.உண்மையும் நேர்மையும் நல்ல உடல் உழைப்பும் கொண்ட இளைஞனாக  அவர் கல்லூரியிலிருந்து வெளிவந்தார்.மூன்று ஆண்டுகளும் அரசாங்க உதவித்தொகை கிடைத்ததால் அவரது படிப்பு கிட்ட தட்ட  இலவசமாகவே முடிந்தது.ஏராளமான வேலை வாய்ப்புகள்  வீடு தேடி வந்தன. அண்ணனின் அறிவுரையின்படி பொதுப்பணி துறையை தேர்ந்தெடுத்து. 15 Aug 1961 ல்  அவர் பட்டுக்கோட்டையில் வேலையில் சேர்ந்தார்.

                      பட்டுக்கோட்டை,ஆவுடையார்கோயில்,பேரளம் ,கொரடாச்சேரி  என்று இரண்டு வருடங்களில் நாலைந்து இடங்கள் மாறி தஞ்சாவூருக்கு அருகில் மெலட்டூர் என்ற இடத்தில் வெட்டாற்றின் குறுக்கே கட்டப்படவிருந்த அணைக்கட்டு வேலைக்கு சிறப்பு பொறியாளராக மாற்றம் பெற்றார்.
                அக்ட்டோபர் -நவம்பர் மாதங்களில் ஆற்று நீர்வரத்து மூடப்பட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டது.எந்தவித பிரச்சினையுமில்லாமல் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வேலை முடிவை நெருங்கிக்கொண்டிருந்தது.சுமார்  40,000 மூட்டை சிமென்ட் உபயோகப்படுத்தவேண்டிய  இடத்தில் 2000-2500 மூட்டைக்கள்போல் மீந்துவிட்டது.
                       மீந்த சிமென்ட் கணக்குப்பிரகாரம் தனக்கு சேர வேண்டியது என்று ஒப்பந்தக்காரர் வாதிட்டார்.சிமென்ட் வேலைக்குத்தானே தவிர உங்களுக்கு இல்லை என்று கணேசன் எதிர் வாதமிட்டார்.ஆனால் ஒப்பந்தக்காரர் சிமென்ட் கொட்டகையை உடைத்து சிமென்டை எடுத்துக்கொண்டார்.பலவிதமான விசாரணை ஆரம்பமானது.முடிவில் வேலை சிறப்பாக முடிக்கப்பட்டது என்ற பாராட்டும் இது ஒப்பந்த வேலை என்பதால் லாப நஷ்ட்டம் ஒப்பந்தக்காரரையே சேரும் என்பதால் கணக்குப்படியான சிமெண்ட் ஒப்பந்தக்காரருக்கே உரியது என்றும் முடிவானது.
                 கணேசன் மிகவும் மனம் வெறுத்துப்போனார்.ஆற்றில் தண்ணீர் திறந்து விடவேண்டிய நேரம் வந்தது.இரண்டு ரூபாய் நோட்டு கட்டு  (ரூ.200 )
வாங்கிவந்து ரூபாய் தாள்களை பொங்கிப் பெருகிஓடும் ஆற்று நீரில் எறிந்துவிட்டு அரசாங்க வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
                 இவருடைய ராஜினாமாவை உயர் அதிகாரி ஏற்காமல் இந்திய-சீனா 1962 போரினால் நாட்டில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவம் பெருமளவில் விரிவுபடுத்தப்படுவதாகவும் தகுதியுள்ள இளம் மத்திய மாநில அதிகாரிகள் இராணுவத்தில் தாற்காலிகமாகப் பணிபுரிய அழைக்கப்படுவதால் நீங்கள் ஏன் ஒரு இராணுவ அதிகாரியாகக்கூடாது என்கிறார்.
                புற உலகில் வீசி எறியப்படும் தீப்பொறிகள் ஒன்றிரண்டு பற்றி எரிய ஆரம்பிக்கிறது.
               கணேசன் கரும்பச்சை சீருடை அணிகிறார்.
                            உருவமற்ற குரல் ஒலிக்க ஆரம்பிக்கிறது.

   அதிகாரிகள் பயிற்சிப் பள்ளி.
            இராணுவ அதிகாரிகளுக்கானப் பயிற்சிஉத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள டேராடூன் என்ற இடத்தில்தான் நடந்துகொண்டிருந்தது.ஆனால் இராணுவம் பெருமளவில் விரிவுபடுத்தப்பட்டதாலும்  உடனடியாக அதிகாரிகள் தேவைப்பட்டதாலும்  இரண்டுவருட பயிற்சி ஆறு மாதங்களாகக் குறைத்ததோடில்லாமல் பூனா மற்றும் சென்னையில் அவசரகாலப் பயிற்சிப்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன.
                         கணேசன் பூனாவில் அவசரகால அதிகாரிகள் பயிற்சி எண் 8 என்ற பயிற்சி அணியில் 9 அக்டோபர்  1963 ல்  சேர்ந்தார் .
                  ஆரம்ப கால இராணுவப்பயிற்சி உடற்பயிச்சியை மையமாகக்கொண்டது.இவைகளில் கணேசன் ஒப்புமையில்லாமல் உயர் நிலையில் இருந்தார்.பெரும்பாலான இராணுவ ஆயுதப்பயிற்சிகள் அதிகாரிகளல்லாத வர்களால் எடுக்கப்பட்டதால் அவை ஹிந்தியிலேயே இருந்தன.அவ்வளவாக ஹிந்தி பயிற்சி இல்லாததால் அவற்றில் சுமாராகத்தான்கணேசன் பிரகாசிக்க முடிந்தது.
                       மொத்தத்தில் ஆறு மாதப் பயிற்சிக்குப்பின் அவர் 400 பேரில் 47 வதாக  வந்து  Atheletics Blue என்ற சிறப்பும் பெற்று வெளிவந்தார்.03 May 1964 அன்று  அவர் இந்திய இராணுவத்தில் அதிகார வரிசையின் முதல் படியான
 2 L/t   என்ற  பதவியில் அமர்ந்தார்.

         சீருடை தரித்த சிங்கம் வளர ஆரம்பித்தது.

                           இராணுவத்தின் பொறியாளர் படைப்பிரிவில் கணேசன் அதிகாரியானார்.சுமார் இருபது விதமானப் படைப்பிரிவுகளில் பொறியாளர் படைப்பிரிவு போரிடும் வல்லமையும்,பொறியாளர் திறமையும் ஒருங்கே பெற்றது.
                பூனாவில் உள்ள college of Military Engineering என்ற கல்லூரி தலைமை இடம் போன்றது.அங்கு மூன்று மாத கால அறிமுகப்பயிற்சிக்குப்பின் கணேசன் படைப்பிரிவுக்கு அனுப்பப்பட்டார்.
                    படைப்பிரிவு எங்கிருக்கிறது என்பது தெரியாமலேயே பதினைந்து நாட்கள் விடுமுறையில் சென்னை வந்தார்.சென்ட்ரல் ரயில் நிலையித்தில் டனக்பூர் ரயில்வே ஸ்டேஷன் எங்கிருக்கிறது என்று விசாரித்தபொழுது அவர்கள் உத்திரப்பிரதேச எல்லையில் ஒரு இடத்தைக் காண்பித்தார்கள்.
Image result for uttar pradesh- pithoragarh-Darchula-tibet-nepal border areas

அதைப்பார்த்தவுடன் மனதில் பகீர் என்ற பயம் கவ்வியது.வீட்டுக்கு வந்தநாள்முதல் ஊரையும் உறவுகளையும் இனி என்று காண்பேனோ என்ற விளக்கிச்சொல்லமுடியாத வருத்தமும் வேதனையும் மனதில் இருந்துகொண்டே இருந்தது.முடிவாக ஊருக்குப்புறப்படும் நாள் வந்தது.இரவு பத்து மணிக்கு ரயில்.அம்மாவையும் அப்பாவையும் பூஜை அறையில் ஒன்றாக நிற்கவைத்து வணங்கினார் கணேசன்.போய் வாப்பா என்றார்கள் பெற்றோர்கள்.தாங்கமுடியாத சோகம் மனதைக்கவ்வ கேவிக் கேவி  அழ ஆரம்பித்துவிட்டார் கணேசன்.இத்தனைமுறை சென்ற பொழுதெல்லாம் தைரியமாகப் போய்வந்த நீ இப்பொழுது ஏன்டா அழுகிறாய் என்கிறார்கள்.கல்வியறிவும் வெளிஉலக நடப்பும் அறியாதவர்கள்.அவர்களுக்கு என்ன விளக்கம் சொல்லமுடியும்.கணேசன் பிறந்த மண்ணைப்  பிரிந்தார்..
                   சுமார் 250 படை வீரர்களடங்கிய ஒரு பிரிவுக்கு கம்பெனி என்று பெயர்.இவை ஒட்டுமொத்தமாக இடம் விட்டு இடம் மாறி இந்தியத்திருநாட்டின் பலபகுதிகளிலும் பணியாற்றக்கூடியது.44 Field Park Company  என்ற படைப்பிரிவில் கணேசன் தனது இராணுவப்பணியைத் துவக்கினார்.

                             Image result for up tibet border area


                    இந்தியத்திருநாட்டின் எல்லைப்புறங்களில் அவர் பாதம் பதிய ஆரம்பித்தது.முதன்முதல் உத்திரப்பிரதேசம்,நேபாளம், திபெத் மூன்றும் சந்திக்கும் பித்தோராகாட்- டார்ச்சுலா என்ற என்ற மலைப்பிரதேசத்தில் அவர் பணி  ஆரம்பமானது.


                                    மீண்டும் ஒலிக்கும்.........