எல்லை பாதுகாப்பு என்பது
காலை 9 மணி-மாலை 5 மணி வேலையல்ல.
இராணுவப் பணி இராணுவத்தினருடன் சம்பந்தமில்லாதவர்கள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதில்லை.அதனால் தான் பல படித்த முட்டாள்கள் கூட இராணுவத்தினரின் ஊதிய முக்கியத்துவங்களை காகிதக் கணக்கீடுகளுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள்.
ஒன்றரை வருடங்கள் இந்த உலகின் கீழ்க்கோடியான தென்துருவதில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.மிகவும் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் உற்றம் சுற்றம் மனைவி மக்களைப் பிரிந்து அங்கு பணியாற்றிக்கொண்டிருக்கையில் புதிய குழுவினர் எங்களது சில கடிதங்களுடன் எங்களது பணி முடியும் தறுவாயில் அண்டார்க்டிகா வந்தனர்.

மகா ராஷ்ட்டிரா விலிருந்து ஒரு B.Sc பட்டதாரி எங்களுடனிருந்த அவரது அண்ணனுக்கு (விஞ்ஞானி )எழுதியிருந்த கடிதத்தில் இரண்டு நாட்கள் அவசர விடுப்பில் வீட்டுக்கு வந்து போகும்படி எழுதியிருந்தார்.
இதைப் படித்தவர்கள் வாய்விட்டு சிரிக்கையில் தலைவன் என்றமுறையில் என் நெஞ்சில் உதிரம் கொட்டியது.
அண்டார்க்டிகா என்பது எங்கிருக்கிறது,அங்கு ஒன்றரை வருடங்கள் பணியாற்ற எவ்வளவு உடல்,மன திண்மை வேண்டும் என்பதை
உணர முடியாத படித்த முட்டாள்கள் நிறைந்த இந்த நாட்டிற்க்காகவா நான்
இத்தனை சிரமங்களையும் ஏற்றுக்கொண்டுள்ளேன்?
உலகிலேயே கொடுமையான குளிர் 5000மீ.கனமான உறைபனி ,மணிக்கு சுமார் 300கி.மீ வேகத்தில் வீசும் நிற்கவே நிற்காத பனிக்காற்று நிறைந்த உலகை இந்த முட்டாள்கள் கற்பனை செய்து உணரமுடியவில்லையே.
அதே நிலையில் தான் இன்றைய அறிவு ஜீவிகள் இருந்துகொண்டு இராவணுவத்தின் பணியை மற்ற மத்திய அரசு பணிகளுடன் ஒப்பிடுகிறார்கள்.
இந்திய மக்களின் நினைவுகளில் சமீபத்திய நிகழ்வுகள் பசுமையாக இருக்கும் என நினைக்கிறேன்.
உரி பகுதிகளில் நடந்த நிகழ்வுகளும் அதற்கு இந்திய இராணுவம் கொடுத்த பதிலடியும் நமது மக்களிடையே இருந்த தூக்கத்தை சற்றே கலைத்திருக்கிறது என நினைக்கிறேன்.
எல்லை பாதுகாப்புப் பணியும் மனிதர்களை மிருகங்களை விட கேவலமாக,கொடூரமாக போர்க்கைதிகளின் நடத்து விதிகளைக் காலில் போட்டு மிதிக்கும் நமது அண்டைநாட்டு நடைமுறைகளும் இந்திய ஆட்சிப்பணியாளர்கள் அறிந்திராதது.
நமது மக்களுக்கு நமது இராணுவத்தினரின் எல்லை பாதுகாப்புப் பணி பற்றிய எண்ணங்களும் அதனால் ஏற்படும் உணர்வுகளும் சரியாக இல்லை என்பதன் அடையாளமே "ஒரு ரேங்க் ஒரே ஓய்வு ஊதியம் "என்று போராடிய முன்னாள் இராணுவத்தினரின் கோரிக்கை இன்னமும் முடியாமலிருக்கிறது.
கார்கில் போரின்போது பாகிஸ்தானியரிடம் பிடிபட்ட லெப்டினன்ட் காலியாவையும் அவரது சகாக்களையும் உயிரை வைத்து உடலை சிதைத்தார்கள் என்ற உண்மை நமது மக்களிடையே ஒரு அதிர்ச்சியையும் அதன் காரணமாக ஒரு பூகம்பத்தையும் ஏன் ஏற்படுத்தவில்லை.
பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக அறிவிக்கக் கோரி காலியாவின் தந்தை இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார்.அது என்னவோ தனிமனித போராட்டம் என்று நமது மக்கள் உணர்வுகளற்று போய்க்கொண்டிருக்கிறார்கள்.
நமது "அறுவை சிகிச்சை" போருக்குப் பின் இன்று இந்திய எல்லைப்புற வாழ்க்கை எப்படிஇருக்கும் என்று இராணுவம் அல்லாத மக்கள் அறிவார்களா?
நித்திய கண்டம் பூரண ஆயுள் .
செத்துப் பிறக்கும் குழந்தையை வெட்டிப் புதைக்கும் வீர மறவர்கள்தான் நாம். ஆனால் எல்லையில் உள்ள இராணுவத்தினர் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள் என்பதை இந்த நாடு உணருமா?
அவர்களுக்காக என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்.
தனது மகன் பாகிஸ்தானியர்களால் பிடிக்கப்பட்டுவிட்டான் என்ற சேதியைக் கேட்டவுடன் மாரடைப்பால் மரணமடைந்த அந்த மகாராஷ்ட்டிர மாநில தாய்க்கு இந்த நாடு என்னசெய்யப்போகிறது .
எனது அருமைத் தாய்நாட்டு மக்களே ,சிந்தியுங்கள்.!!
ye mere vathanki logo,
jara yaadkaro kurpaani.

சிறந்த அலசல்
பதிலளிநீக்குஅருமையான சிந்தனை
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
பதிலளிநீக்குகருமமே கண்ணாயினார் என்ற குமரகுருபரர் வரிகளை நினைக்கிறேன் இவ்விடுகையூடே..!
தொடர்கிறேன் ஐயா.
நன்றி.