சனி, 3 அக்டோபர், 2026

                          உறவுகளைக் காட்டி என் 

                          சிறகுகளை உடைத்துவிடாதீர்கள்.

                         கர்னல் பாவாடை கணேசனின் வாழ்க்கைப் பயணம்  சாதாரண மனிதர்களி  லிருந்து மிகவும் மாறுபட்டது. இதை பதிவிடுவ தின் நோக்கம் இளைஞர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதே। 

            விவசாயக் குடும்பதில் பிறந்த அவர் இந்த மண்ணை மிகவும் நேசித்தார். அண்ணன் தம்பிகள் இருந்தும் அவர்களும் குடும்பத்தில் ஆளுக்கொரு வேலையாக செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புகள் இன்றி தானாகவே முன்வந்து வீட்டு வேலைகளை செய்வார். மூத்த அண்ணனுக்கு 22 வயதில் திருமணம். தனிக்குடும்பமாக அவர் வாழ்ந்தாலும் தம்பி தங்கைகள் வாழ்க்கையில் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறார். அறிவு ஜீவியாக உருவெடுத்த சின்ன அண்ணன் தானே தனக்குத் தலைவீதி என்று வீட்டை விட்டுப் புறப்பட்டு உயர் அதிகாரியாக உருவெடுத்தார்.

             பள்ளிக்கூடம் பார்த்தறியாத மூத்த சகோதரிக்கு அதுபோன்றே மாப்பிள்ளை அமைந்தது விதியின் விளை யாட்டு. கணேசன் SSLC  தேர்வு எழுதும் நேரம் அம்மா மருத்துவ மனையிலிருந்தார். அதிகாலை எழுந்து சமையல் செய்துவிட்டு 4 கி. மீ தூரத்தில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு  ஓடிச்சென்று  காலை த்தேர்வு எழுதுவார். அருகில் உள்ள கோவிலில் உட்கார்ந்து பகலு னவு சாப்பிட்டு விட்டு பகல் தேர்வுக்குப் படித்து தேர்வு எழுதி விட்டு  வீட்டுக்கு ஓடிவருவார். இரவு உணவுக்கு ஏதாவது செய்துவிட்டு உறங்கப் போவார்கள்। 

                   தான் என்ன படிக்கவேண்டும்,தனது பிற் கால  வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்ற எதிர் பார்ப்புகள் இன்றி பாரதியின் ,"தேடிச்சோறு நிதம் தின்று " என்ற  பாடலுக்கேற் ப்ப தான் வித்தியாசமானவனாக வாழ  வேண்டும்  என்பது மட்டுமே நெஞ்சில் நின்றது. 

                      மூத்த அண்ணன் வழிகாட்டுதலில் பொறியியல் டிப்ளோமா படித்து தமிழக அரசின் பொதுப்பணி துறையில் இளம் பொறி யாளராக 1961 ல் அமர்ந்துவிட்டார் .19 வயதில் அரசாங்க உத்யோகம் . ஆனால் இதுதான் வாழ்க்கையா ? என்ற சிந்தனை அவர் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. 

                  1962 ம் ஆண்டு அக்டோபர் -நவம்பர் மாத  சமயத்தில் இந்திய -சீன போர் ஏற்பட்டு  நாட்டில் அவசர கால நிலை பிரகடனப் படுத்தப் பட்டது. இந்திய இராணுவம் பல காரணங்களினால் சிதை த்து சீரழிக்கப் பட்டது. மத்திய அரசிலும் மாநில அரசிலும் பணிபுரியும் இளைஞர்கள் இராணுவத்தில் சேர ஊக்குவீக்கப் பட்டனர். தான் வித்தியாசமான வாழ்க்கை வாழவேண்டும் என்று தவமிருந்த கணேசன்  யாரையும் காலந்தாலோசிக்காமல்  இராணுவ சேவைக்கு விருப்பம் தெரி  வித்தார்.

             அவர் தேர்வுக்கு சென்ற விதமும் எப்படித் தேர்வானா ர் என்பதும் ஒரு தனி வரலாறு. பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்;அவரவர் வாழ்க்கையை அமைதுக் கொள்வார்கள் என்று பெற்றோர்கள் இருந்தார்கள். தனக்குப் பிறகு சன்னாநல்லூரில் உள்ள பூர்வீக  சொ த்து க்களை  யார் பார்த்துக்கொள்வார் கள்  என்பதே அப்பாவின் கவலையாக இருந்தது.

                      யாரையும் கலந்தாலோசிக்காமல் முன் எப்போதும் கனவில் கூட நினத்தறி யாத புதிய பாதையில் கணேசன் பயணிக்க முடிவெடுத்தது குடும்பத்தில் எல்லோருக்கும் கவலையாக இருந்தது. 

                 திருமந்திரம்,திருவாசகம் ,திரு அருட்பா என்றும் பல மாமனிதர்களி ன் சுய சரிதையிலும் பயணித்துக் கொண்டிருந்த கணேசன் எதைப் பற்றி யும் கவலைப் படாமல் "காக்கக் கடவிய நீ ,காவாதிருந்தக்கால் ஆர் க்குப் பரமா ? ஆறுமுகவா  என்று போர்க்களங்களிலும் உயர்மலைப் பகுதிகளி ளும் பணியாற்றிக் கொண்டிருந்தார்.   

            புதிய பாதை என்ற பயம் இல்லாமல் உடலியலிலும் ,உளவியலி லும் ,தனது பணி சார்ந்த அறிவியலிலும் மிகச் சிறப்பாக செயல் பட்டுக் கொண்டிருந்தார் கணேசன். 

                      இன்று 84 வது அகவையில் பயணித்துக் கொண்டிருக்கும் அவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள அவரது வலை தளம் pavadaiganesan.com பாருங்கள் .