திங்கள், 10 அக்டோபர், 2016

                                      கணேசன் என்பது யார் ?
                கர்னல் பாவாடை கணேசன் என்ற எனது பதிவுகளைப்  படித்துவரும் நண்பர்களும்   எனது  pavadaiganesan.com என்ற வலை தளத்தைப் பார்த்துவரும் நண்பர்களுக்கும் "யார் இவன் ; வித்தியாசமானவனாகத் தெரிகிறதே" என்ற எண்ணம் எழுந்திருக்கலாம்.
                             ஆம்!எனது வாழ்க்கைப் பாதையில் சற்று  பின் நோக்கி நடந்து பார்த்தால் விளக்கம் கிடைக்கிலாம்.
                    திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் தாலுக்காவில் உள்ள அன்றைய சிற்றூர்  சன்னாநல்லூர்.இன்று அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டது .இன்னமும் விரிவாக்கப்பட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரு நகரமாக இது உருவாகலாம்.




             நன்னிலம் என்ற ரயில் நிலையம் இருப்பது சன்னாநல்லூரில்.
                             அன்றைய அந்த சிற்றூரிற் பிறந்து வளர்ந்து பொதுப்பணித்துறையிலும் பின்னர் இந்திய இராணுவத்திலும் தன்னிகரற்ற தலைவனாக உயர்ந்து இந்தியத் திருநாட்டின் தென் துருவ ஆய்வு தளம் தக்ஷிண் கங்கோத்ரியின் குளிர்காலக் குழு தலைவனாகப்  பணியாற்றி  குடியரசுத்தலைவரின்"வஷிஷ்ட்ட சேவா மெடல் "விருது பெற்றவர் கணேசன்.

கணேசன் பிறந்து வளர்ந்த தெரு,குளம் மற்றும் அவரது வயல்.




                                இந்த செய்தி 1989ல்  பல ஊடகங்களில் வெளியாகியிருந்தது.இதைப்பற்றி அறிந்த தஞ்சாவூர் மனிதர் ஒருவர் "அப்படியா? என்று ஆச்சரியப்பட்டு கணேசனை வாழ்நாளில் ஒருமுறையாவது கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.
                 சுமார் 10 ஆண்டுகளுக்குப்பின் தஞ்சாவூரிலிருந்து "திருச்செங்க ட்டான் குடி"புறப்பட்ட அவர் வழியில் சன்னாநல்லூரைப் பார்த்து வண்டியை நிறுத்திவிட்டார்.
                    ஆகா ! கர்னல் கணேசன் பிறந்த ஊரல்லவா என்று மகிழ்ந்து அவரைப் பற்றியும் அவரது பெற்றோர் ,குடும்பம் பற்றி விசாரித்திருக்கிறார்.ஊர் மக்கள் அப்படி யாரும் இந்த ஊரில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
                     அண்டவெளி  ஒரு மாபெரும் சக்தி பீடம் .நமது மூளைப் பகுதியில் உள்ள  "பீனியல்"சுரப்பி ஒரு தொலைத்தொடர்பு மையம்.இதில் பதிவாகும் கேள்விகளுக்கு விண்ணிலும் மண்ணிலும் எங்கும் தேடி அதற்கு விடை கொண்டுவந்துவிடும்.
                      காலம் சுழன்றது.தஞ்சாவூர் மனிதர் கணேசனை மறக்கவே இல்லை.சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கணேசன் ரயிலில் 2Tier A/Cயில் பகல் வேளையில் சன்னாநல்லூர் போகப் பயணித்துக்கொண்டிருந்தார்.வண்டி விழுப்புரம் தாண்டுகையில் கம்பார்ட்மெண்ட் உள்ளேயே இங்கும் அங்கும் நடந்து தனது இருக்கையை விட்டு வேறு ஒரு இடத்தில்உட்கார்ந்தார்.
                            எதிரில் சுமார் 70-75 வயது முதியவர் வெளிப்பக்கம் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். வண்டி கிட்டத்தட்ட காலி.கணேசனே பேச்சை ஆரம்பிக்கிறார்.
                     அய்யா !கையில் என்னவோ "ஒய்வு ஊதியோர் பத்திரிகை" வைத்திருக்கிறீர்களே ,நீங்கள் ஒய்வு பெற்றவரா ?
                          பெரியவர் சற்று திரும்பிப் பார்த்து "ஆம்"என்கிறார்.
              நானும் இராணுவத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவன்தான் .
          அண்டவெளியில் சற்று சலசலப்பு !அவரது பீனியல் சுரப்பி பிரகாசிக்கிறது.
             கண்கள் மின்னுகின்றன.
                             சார்! சில ஆண்டுகளுக்குமுன் தென் துருவம் சென்று வந்த சன்னாநல்லூரைச்சேர்ந்த ஒரு இராணுவ அதிகாரியை பற்றி விசாரித்தேன் .அப்படி யாரும் அந்த ஊரில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
                               நீங்கள் இராணுவ அதிகாரி என்கிறீர்களே உங்களுக்கு கர்னல் கணேசனத்தெரியுமா?
                       அண்டவெளி என்ற சக்தி பீடம் அதிர்ந்து சிரித்தது.
                கணேசன் அப்படியா என்று சொல்லிவிட்டு எழுந்து போய் தன்னிடமிருந்த ஒரு தன விளக்க நூலை எடுத்துவந்து பெரியவரிடம் தந்தார்.
                          அடையாளம் கண்டுகொண்ட பெரியவர் கைகள் நடுங்க கணேசனைக் கட்டிப்  பிடித்துக்கொண்டார்.
                          தான் பிறந்து வளர்ந்து 15-16 வயதுவரை வாழ்ந்த ஊரில் யாருமே என்னைப் பற்றி நினைவு கூறவோ பெருமைப் பாடவோ இல்லையா?
                      நமது செயல்பாடுகள் மக்கள் மனதிலே நிற்பதோடு அல்லாமல் அவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக உந்து சக்தியாக காலம் காலமாக நிலைத்திருக்கவேண்டும்.
                            அப்படி உருவானதுதான்"அகத்தூண்டுதல் பூங்கா."



 சன்னாநல்லூரில் அவரது சொந்த நிலத்தில் அவரது தம்பி கலியமூர்த்தி உதவியுடன் ஆறு கோண வடிவில் அகத்தூண்டுதல் பூங்கா வேலைகள் ஆரம்பமாகின்றன.
                     பேரளம்  வேதாத்திரி மகரிஷி  பெருவெளி ஆலயத்து தலைவர்  டாக்டர்  அழகர் ராமானுஜம் அவர்கள் 23-12-2012 அன்று அகத்தூண்டுதல் பூங்காவைத்  திறந்த வைத்து உரையாற்றினார்.

பெருமை மிகு நண்பரும் என்னை எனது பிறந்த ஊரிலேயே  அறிமுகப்படுத்திய தஞ்சாவூர் "தங்கமுத்து" அவர்களும் நண்பர் திருநாவுக்கரசும்.
              தம்பி கலியமூர்த்திக்குப் பொன்னாடைப் போர்த்தி மகிழும் அண்ணன்  கணேசன்.
பேரளம் பெருவெளி ஆலயத்தில் அகத்தூண்டுதல் பூங்கா.

                 தமிழ்நாட்டில் சன்னாநல்லூர்,பேரளம் ,சென்னை ஆகிய இடங்களிலும் பெங்களூருவில் M.E.G &CENTRE
                                                         பெங்களூரு M.E.G&Centre
             


சென்னை  943,17வது மெயின் ரோடு ,அண்ணாநகர் என்ற கணேசனின் வீட்டு முன்னால் .


     உலக  உருண்டைபோல் வடிவமைக்கப்பட்ட  மற்றோரு கல் பெங்களூருவில் அமையவிருக்கும் Military Museum of India வில் இடம்பெற  
கணேசனின் தென் துருவ கல் எடுத்துச் செல்லப்படுகிறது.
                 சுமார் 50 கோடி வருடங்கள் 5000மீ கனபரிமான உறை பனியில் கிடந்த இந்த பாறைகள்  தெற்கு பசிபிக் மகாசமுத்திரம் ,தெற்கு அட்லாண்டிக் மகாசமுத்திரம் சந்திக்கும் தெற்கு மகாசமுத்திரம் வழியாக இந்தியப் பெருங்கடல் ,அரபிக் கடல் தாண்டி கோவா துறைமுகம் வந்து பின்னர் தரை மார்க்கமாக இந்த இடங்களுக்கு ஒரு தனி மனிதனால் கொண்டுவர முடிந்தது என்றால்..........



                இந்த அகத்தூண்டுதல் பூங்கா பார்ப்போர் மனதில் உந்து சக்தியைக் கொடுத்து சாதனைப் புரியத்  தூண்டும் என்று எதிர் பார்ப்போம்.

                                வாழ்நாளில் ஒருமுறையாவது ஏதாவது ஒரு அகத்தூண்டுதல்  பூங்காவிற்கு  சென்று வாருங்கள்.
                           
                           உங்கள் வாழ்க்கை  வளமாகும்.








































5 கருத்துகள்:

  1. அகத்தூண்டுதல் பூங்கா பார்ப்போர் மனதில் உந்து சக்தியைக் கொடுத்து நிச்சயம் சாதனை புரியத் தூண்டும் ஐயா

    பதிலளிநீக்கு
  2. நன்றி !திரு.ஜெயக்குமார்.
    சரித்திரம் படைக்கத் தயாராகும் சன்னாநல்லூரை வெளி உலகத்திற்கு
    அறிமுகப் படுத்தியதே நீங்கள் தானே .

    பதிலளிநீக்கு

  3. அருமையான தகவல்

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா.

    எண்ணங்களுக்கு வலிமை உண்டு என்று நம்புகின்றவன்.

    தங்களின் முயற்சிகள் பரவலாக அறியப்படவும் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு