Farewell not Goodbye.
இடைக்காலப் பிரிவேயன்றி
இறுதி வணக்கமல்ல .
இராணுவம் ஒரு பாரம்பரிய புகழும் பெருமையும் கொண்ட அமைப்பு என்று பார்த்தோம் .இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பெற்ற வெற்றிகளையும் விருதுகளையும் இன்றளவும் எல்லா இராணுவ அமைப்புகளும் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றன.
இராணுவ அதிகாரிகள் தங்களது தன்னிகரற்ற திறமையால் ,அறிவு வெளிச்சத்தினால் படைப்பிரிவுக்குப் புகழும் பெருமையும் சேர்க்கிறார்கள்.
நாள்தோறும் மாறிவரும் சுற்றுப்புற சூழ்நிலை சமுதாய மாற்றங்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு அதிகாரிகள் படைப்பிரிவை வழிநடத்திச் செல்லவேண்டும்.
ஆனால் பெரும்பாலான அதிகாரிகள் எதற்கு வம்பை விலைக்கு வாங்கவேண்டும் என்று பழைய தடத்திலேயே சென்று விட்டு ஓடிவிடுவார்கள்.
கணேசன் கிராமப்புற சூழ்நிலையில் வளர்ந்தவர்.அவரது படைப்பிரிவினர் கேரளா,தமிழ்நாடு,ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தைச்சேர்ந்தவர்கள்.ஆகையால் அவர்களோடு இணைந்து செயலாற்றுவதில் ,அவர்களைத் தனித்திறமை வாய்ந்தவர்களாக உருவாக்குவதில் பெருமகிழ்ச்சியடைந்தார்.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் இராணுவத்திலிருந்து ஒய்வு பெறுகிறார்கள்.இளமையையும் எழிலான வாழ்க்கையையும் இந்த நாட்டிற்கு வழங்கிவிட்டு சிவில் வாழ்க்கைக்குத் திரும்பும் அவர்களுக்கு பிரிவு உபசார விருந்து ஒன்று நடக்கும்.
அத்துடன் அவர்களது இராணுவத்தொடர்பு முடிந்துவிடும்.
இங்குதான் கர்னல் கணேசன் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார்.
சுமார் 18 வயது முதல் குறைந்தது 40 வயது வரை எல்லைப்புறங்களில் எதிரிகளுடனும் இயற்கைக் கொடுமைகளுடனும் போராடிய இவர்களுக்கு சில மணி நேர பிரிவு உபசார விருந்துடன் வீட்டுக்கு அனுப்பி விடுவது சரியல்ல என்று நினைத்தார் அன்றைய மேஜர் கணேசன்.
இராணுவத்தினரின் பிரிவு உபசார விருந்து ஒரு நிரந்தர பிரிவின் ஆரம்பம் இல்லை.அந்த விருந்துக்கு
Farewell not goodbye
என்று பெயரிட்டார்.அதாவது இராணுவத்தினரின் ஒய்வு ஒரு
இடைகாலப் பிரிவேயன்றி இறுதி வணக்கமல்ல.
உற்றார் பெற்றோர் உறவுகள் பிரிந்து கல்லோடும் மண்ணோடும் கலந்து இந்தியதிருநாட்டின் எல்லைப்புறங்கள் மட்டுமல்லாமல் இந்த நாட்டின் சார்பாக பல அயல் நாடுகளிலும் செஞ்சொற்றுக் கடன் தீர்த்த இந்தக் கடமை வீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கக்கூடிய விதத்தில் அவர்களது பிரிவு உபசார விருந்து இருக்கவேண்டும் என்று விரும்பினார் கணேசன்.
ஒரு படைப்பிரிவு அதன் அங்கத்தினர்களை மிக சாதாரண பணியாளர்கள் போல் நடத்தக்கூடாது.அந்த உறவு குருதி கலந்து இறுகியது.அதன் உறுப்பினர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த படைப்பிரிவினுடன் தொடர்பு கொள்ளவேண்டும்.
அதனால் இந்த நிகழ்வு இடைக்காலப் பிரிவுதான் இறுதிவணக்கமல்ல.ஒய்வு பெரும் ஒருவர் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த படைப்பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.
படைப்பிரிவுடன் அவர் பணி யாற்றிய காலங்களின் தொகுப்பாக ஒரு ஓரங்க நாடகம் போல் நடத்த மலரும் நினைவுகளில் அவர் மயங்க பிரிவு உபசார விழா பிரியா விழாவாக நிறைவுபெறும்.
1980-82ல் கணேசன் ஆரம்பித்த இந்த விழா இன்றளவும் மிகவும் சிறப்பாக அந்த படைப்பிரிவினர்கள் நடத்துகிறார்கள் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

போற்றுதலுக்கு உரிய செயலைத் தொடங்கி வைத்திருக்கிறீர்கள் ஐயா
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குதங்கள் இடுகையை தேசிய மாணவர் படை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி.
தங்கள் பணிக்குப் பாராட்டுகள்
பதிலளிநீக்குஅருமையான முயற்சி