வியாழன், 4 ஏப்ரல், 2013

ஆளுமைத் திறனும் தலைமைப் பண்பும் மிகுந்த இராணுவ அதிகாரிகள் !

தங்களது  அதிகாரியை  எத்தனையோ  சிப்பாய்கள்  வாழ்க்கையில்
மறவாமல்  மனமாரப்  போற்றும்படி நடப்பது  அதிகாரிக்குக் கிடைக்கும் 
கிடைக்கும் பெரும்பேறு.
இராணுவத்தில் அதிகாரிகளின் பங்கு ஒரு அற்புதமான பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது. படிப்பறிவும் தேர்வில் வெற்றி பெற்ற திறமையுமே ஆரம்ப காலத்தில் அதிகாரியாவதற்கான தகுதிகளாகக் கொண்டாலும், காலப்போக்கில் அதிகாரிகளின் தன்னிகரில்லா நாட்டுப்பற்றும், தலைவனுக்கே உரித்தான தியாகங்களும் எல்லா நிலைகளிலும் ஒரு சிப்பாயைவிட உயர்ந்து நிற்கும் குண நலன்களுமே அவர்களை ஒரு சபையின் முன்னே நிறுத்துகின்றது. அதிகாரிகள் தம் படைப் பிரிவின் பாரம்பரியப் பெருமைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; அத்தோடு நின்றுவிடாது புதிய பெருமைகளையும் உருவாக்க வேண்டும்; நாள்தோறும் மாறிவரும் உலகில் ஊடகப் பரிமாணங்கள் பலமடங்கு முன்னேறிவிட்டன. அறிவியல் வளர்ச்சியில் மனிதன் இயற்கையுடன் சளைக்காமல் போட்டியிடுகின்றான்

அதிகாரிகளாக இருப்போர் தங்களது அறிவின் முதிர்ச்சியையும், செயலாக்கத் திறமை, மாறிவரும் சுற்றுப்புற சூழ்நிலை, சமுதாய மதிப்பீடுகள் ஆகியவற்றிற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ள ஒரு பொழுதும் தயங்கக் கூடாது. எத்தனையோ சிப்பாய்கள் வாழ்க்கையில் தம்மை மறவாமல் போற்றுகிற வண்ணம் நடந்து கொள்வது அதிகாரிகளுக்குக் கிடைக்கின்ற மாபெரும் விருது. அதற்கு ஆளூமைப் பண்பும் தலைமைப் பண்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து உதவும் என்பதை நினைவில் கொண்டு கடமையாற்ற வேண்டும். .

Colonel. P.Ganesan, B.Tech.V.S.M ( Retd ) 

1 கருத்து:

  1. ஆம் ஐயா. தாங்கள் சொல்வதுபோன்ற அதிகாரிகளைச் சந்தித்திருக்கிறேன்.
    உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிந்தோராய்த் தொடர்பில் இருக்கின்றனர் இன்னும்.

    சீருடைப்பணிக்குத் தகுதியில்லாதோரும் இருக்கிறார்கள்.

    நன்றென்பதற்கும் தீதென்பதற்கும் உரிய உதாரணங்களாக இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்பேன் மாணவரிடத்து...!

    தங்களிடம் கற்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு