உன்னைப் பின்பற்றுபவர்களின் எண்ணங்களையும்
ஆசாபாசங்களையும் நன்கறிந்து அவற்றைச்
சரியாக நெறிப்படுத்தி வளர்க்கும்
எண்ணம் தலைவனுக்குத் தேவை
“தலைவர்கள்” என்பவர்கள் பலவிதமாக உருவாகிறார்கள். சுற்றுப்புறத்தால், சூழ்நிலைகளினால், பிறப்பால், கல்வித் தகுதியால், பயிற்சி முறைகளினால் என்று பலவிதங்களிலும் தலைவர்கள் உருவாகிறார்கள். இவைகள் எல்லாம் ஒரு துணைக்காரணமாக இருக்கலாமே ஒழிய, “தலைவன் தானாகவே உருவாகிறான்” எஎன்பதுதான் உண்மை.
தொண்டர்கள் பின்பற்றுவோர் என்று பலர் அவனது உயர்வுக்கான பிரமிடை அமைத்துச் சென்றாலும், ஒவ்வொர் சங்கிலிக் கரணையோடு அவனுக்குள்ள உறுதியான தொடர்புதான் அவனை அந்தத் தலைமைப் பீடத்தில் நிலைத்து நிற்க வைக்கிறது. அதற்குத் தானாகச் சிந்தித்துத்ச் செயலாற்றும் திறன் தேவை. தன்னைப் பின்பற்றுவோர்களின் உள்ளத்து எண்ணங்களையும், ஆசாபாசங்களையும் நன்கறிந்து அவற்றைச் சரியான முறையில் நெறிப்படுத்தி வளர்க்கும் எண்ணம் தலைவனுக்கு வேண்டும்.
உண்மையில் இந்த எண்ணமும் பரிவும்தான் அவனைத் தலைவனாக நிலைத்து நிற்க வைக்கும். மற்ற முறைகளில் உருவாகும் தலைவர்கள் காலம் என்னும் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்படுகிறார்கள்.
கர்னல்.பா.கணேசன், P.Tech.V.S.M ( ஓய்வு ).
ஆளுமை என்பதில் அன்பும்அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பும் முக்கியமானது.
பதிலளிநீக்குகுறிப்பாக அதிகாரப் படிநிலையில் மேலே இருப்பவர்களுக்கு அவசியமானது.
நன்றி.