இந்த நடைப் பயணத்தில் நமக்குக் கிடைத்த அற்புதமான கைவிளக்கு இராணுவப் பயிற்சியும் அதன் காரணமாக ஏற்படும் அறிவு விளக்கமும்
வாழ்க்கை ஓர் நீண்ட பயணம். இது எங்கு ஆரம்பித்தது என்பதும் எங்கு முடியும் என்பதும் இறைவன் வகுத்த கணக்கு. நாம் அனைவருமே வழிப்போக்கர்கள். நீண்ட பயணத்தில் இடையில் நுழைந்து இடையிலேயே மறைந்து போகக் கூடியவர்கள். ஆனால் அந்தப் பயணத்தில் நாம் நடக்கிற ஒவ்வொரு நொடியிலும் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியிலும் என்னென்ன அனுபவங்கள்.. எத்தனை மனித அறிமுகங்கள்.. அதுவும் நாடு காக்கும் பணிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்ட நமக்கு இராணுவத்தில் சேராதிருந்தால் இவை கிட்டியிருக்குமா ? என்று யோசித்தால் நிச்சயம் இல்லை என்ற பதில்தான் வரும்.
நமது இந்தத் தொடர் பயணம் சிவிலியன் வாழ்விலிருந்து இராணுவ வாழ்க்கைக்கு நீண்டிருக்கிறது. பிறகும் இது தொடரும். இந்த நடைப் பயணத்தில் நமக்குக் கிடைத்த அற்புதமான கைவிளக்கு இராணுவப் பயிற்சியும் அதன் காரணமாக ஏற்படும் அறிவு விளக்கமும். இந்தக் கைவிளக்கு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆண்டவன் சந்நிதியில் நுழைய அங்கீகாரம் பெற்றவர்களுக்கே இந்தக் கைவிளக்கு கிடைக்கிறது. இதைக் கையில் ஏந்திச் சிறப்பான வாழ்க்கைக்கு வழி தேடுங்கள்.

கர்னல். பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு )
.
வாழக்கைப் பயணம் மிகவும் நீண்டது -ஐயமில்லை.
பதிலளிநீக்குஉங்கள் இந்தப் பதிவைப் படிக்கும்போதே மனப்பின்னணியில் ஒலித்த திரையிசைப் பாடல்,
பதிலளிநீக்கு““எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்““
வாழ்வின் நடைபயணத்தில் எல்லார்க்கும் கிடைக்காக தியாகக் கைவிளக்கு இராணுவப் பணி - முற்றிலும் உண்மையே!
தொடர்கிறேன்.
நன்றி.