சனி, 13 ஜூன், 2020

மாறுபட்ட கோணப் பரிசீலயினால் 
                ஒரு மகத்தான வெற்றி.
                       
                      "'பெண் "' ஒரு மக த்தானப் படைப்பு.ஆண்மகனின்காம இச்சையைத் தணிப்பதற்கு மட்டுமே பெண் என்ற தவறான போதனையினால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தங்கள் திறமையையும் பலத்தையும் அறியாது போனது பெண் இனம்.


              கால ஓட்டத்தின் மாற்றத்திலே தன்  முயற்சியாலும்,பிறர் உதவியாலும் பெண் தனது பொன் விலங்கை உடைத்து வெளிவர ஆரம்பித்துவிட்டாள்.ஆனாலும் கருவைச்சுமந்து சத்திய புருஷர்களை உலகுக்கு வழங்க பெண் ஒருவளால்  மட்டுமே முடியும் என்பது மறுக்கமுடியாத உண்மை.



                  காம சுகம் அனுபவிக்கத்துடித்த ஆண்மக்கள் விபச்சார உலகை உருவாக்கினார்கள்.இயந்திரத்தனமாக ஆண்  வெளியேற்றும் விந்தணுக்கள் விருப்பமில்லாத பொழுதும் கூட பெண்ணின் கருமுட்டையை உடைத்து "கரு " உருவாகி பின்னர் குழந்தையாக ஆக விபச்சார பெண்கள்கூட ஈன்றெடுக்க ஆரம்பித்த பொழுது அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி யாருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

                           அமெரிக்கத் தலைநகரம் வாஷிங்டனில் போலீஸ் தலைவராகப் பொறுப்பேற்கும் ஒருவர் தனது தாய் என்ன ஆகியிருப்பாள் என்று தேடிப்பார்த்த உண்மை   நிகழ்ச்சி Readers Digest,2003 ல் வெளியானது.ஒன்பது கணவர்களுடன் ஒன்றன் பின் ஒன்றாக வாழ்ந்து கடைசியில் ஒரு விபச்சார விடுதியில் தங்கிய அவள் பின்னர் கொலைசெய்யப்பட்டுவிட்டாள் என்பதைக் கண்டுபிடிக்கிறான் நான்காவது கணவன் மூலம் இந்த உலகுக்கு வந்த அந்த போலீஸ் அதிகாரி.



For years, Bernard B. Kerik, the New York City police commissioner, was haunted by the same dream. He said he would wake up drenched in sweat, feeling like a frightened child waiting for his mother to come home.
Mr. Kerik, 46, knew that his mother had abandoned him when he was a young boy. But he did not find out until last summer why he never heard from her again. While researching a memoir, he said, he found police records in Ohio showing that his mother was a convicted prostitute -- and that she died in 1964 from a massive blow to the head.



              ஒரு விபச்சாரியின் மகனாகப் பிறந்தும் அமெரிக்கத் தலைநகரப்  போலீஸ் தலைவராக தன்னால் வரமுடியுமென்றால் தங்களது பிறப்பு ஒரு சாபக்கேடு என்று எவரும் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை என்பதை உலகுக்குப் பறைசாற்றியது அந்த உண்மை நிகழ்ச்சி.

                            இதோ ! கல்கத்தாவின் மிகப் பெரும் விபச்சாரச்சாலையில்  விளையாடித்திரியும் அந்த விபச்சாரிகளின்  குழந்தைகள் பற்றிய  ஒரு குறும் படம்  உலகப் புகழ் "ஆஸ்கார் "விருது பெற்றுள்ளது.




                   " Born into the Brothels " 
          March 18,2005 ,The Hindu பத்திரிகை துணுக்கு உங்களுக்காக.


               வாழ்க ! வளமுடன். !!!



                     Corona Half way through.!




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக