வியாழன், 1 செப்டம்பர், 2016

Dakshingangothri

                                எனது நாடு -எனது  மக்கள்.
          இந்தியத்  திரு நாட்டின் முதல் தென் துருவ ஆய்வு தளம் தக்ஷிண்கங்கோத்ரி என்பதும் அது 1983ம்  ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பிப்ரவரி 1983 முதல் ஒரு குளிர்காலக் குழு அங்கேயே தங்கி ஆய்வு நடத்துகிறார்கள் என்பதும் நாம் அறிந்ததே. 

                     " முதல் குளிர்காலக் குழு "என்று அழைக்கப்பட்ட இவர்கள் தென் துருவத்தில் சுமார் 480 நாட்கள் (November -next full year-next February)செலவிடுகிறார்கள்.
                கர்னல் கணேசன் 4 Engineer Regiment  என்ற பொறியாளர் படைப்பிரிவைத்  தலைமை ஏற்று பணியாற்றி வருகையில்  முதலில் அருணாச்சல் பிரதேசத்திலும் பின்னர் ஜம்மு காஷ்மீர்  உதம்பூரிலும் அதே படைப்பிரில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.3 ஆண்டுகள் முடியும் தறுவாயில் அவர் பணிமாற்றம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.
                           அந்நிலையில் தக்ஷின் கங்கோத்த்ரிக்கு  5 வது குளிர்காலக்குழுவுக்கு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி  நடந்துகொண்டிருந்தது.
                       கணேசன் தானும் ஒரு போட்டியாளராகப்  பெயர் கொடுத்தார்.
பல விதமான தேர்வு விதிமுறைகளுக்குப் பிறகு கணேசன் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
                மத்திய அரசின் கடல்சார் துறை தக்ஷின் கங்கோத்த்ரி  ஒரு 5 நட்சத்திர விடுதி போல்  அற்புதமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
                    கணேசன் அண்டார்க்டிக்கா பற்றி நிறைய செய்திகள் சேகரித்து மனதளவில் தன்னைத் தயார் படுத்திக்க கொண்டார்.







                     23 நாட்கள் கடல் பயணத்திற்குப் பிறகு கப்பல் அண்டார்க்டிக்கா சென்றடைந்தது.கடற்கரையிலிருந்து 15 கி.மீ.தொலைவில் இருந்தது ஆய்வு தளம்.



                      தக்ஷிண் கங்கோத்திரியின் முதல் தோற்றமே பார்ப்பவர்கள் வயிற்றில் புளியைக்கரைத்தது.
                      இரண்டடுக்கு மாளிகையான ஆய்வுத்தளம் முற்றிலும் உறைபனியில் மூழ்கியிருந்தது.உயிர் பிழைக்கும் வழியொன்று ஏற்படுத்தப்பட்டு அதன் வழியே ஆய்வாளர்கள் உள்ளே-வெளியே போய்வந்தனர்.
                         கணேசன் சிலாவிடிகள் சிலையாகிப் போனார்.இதுவா ஒரு 5 நட்சத்திர விடுதி ?
                           எனதுநாடு  பாரம்பரிய புகழ் மிக்கது.எனது மக்கள் நாட்டுப்பற்றுடன் உண்மையும் நேர்மையும் கொண்டு உழைப்பவர்கள்  என்ற
கணேசன் எண்ணம் சற்றே  ஆட்டம் கண்டது.
                       மனிதர்கள் எப்படியிருந்தாலும் தனது பெயர் உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின் தென் துருவ ஆய்வு தளங்களுக்கு தெரியப்படுத்திவிட்டதால் மனசாட்சிப்படி நடப்பேன் என்று உறுதிகொண்டார்.
                          காலம் அவரத்தாலாட்டியது .குடியரசுத்தலைவரின் விருது வழங்கப்பட்டு  அவர் ஒய்வு பெற்றார்
                      அவரது சொந்த நிலத்தில் அகத்தூண்டுதல் பூங்கா அமைக்கப்பட்டு இந்தியத் திருநாட்டின் தேசியக்கொடி அங்கு பறக்கிறது.





















1 கருத்து: