புதன், 5 ஜூலை, 2017

                 
                              வை யவன்  என்ற  MSP முருகேசன் .

             விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.இதற்கு விளக்கம் சொல்லமுடியாது.விளக்கத்திற்கு உட்பட்டு ஒரு நிகழ்வு நடந்தால் அது முதலிலேயே எதிர்பார்க்கப்பட்டஒன்று  என்று ஆகிவிடும்.விபத்துகள் விபத்துகளேயன்றி அதற்கு விளக்கம் சொல்லமுடியாது.

                     அப்படிப்பட்ட ஒரு இனிமையான விபத்துதான் திரு வையவன் அவர்களின் சந்திப்பு.
                     
                       எனது தென்துருவ அனுபவங்கள் பற்றி பேசுவதற்கு தங்களது அமைப்புக்கு வரமுடியுமா என்று கேட்பதற்காக ஒரு முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் 2012 ம் ஆண்டு எங்கள் வீட்டுக்கு வந்தார்.பேசிக்கொண்டிருக்கும்போது ,சார்,நீங்கள் வையவன் அவர்களை சந்தித்திருக்கிறீர்களா ?என்று கேட்டார்.

                  சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றேன் .
                     இப்பொழுதே  ஏற்படுத்திக்கொள்ளலாம் என்ற அவர்
         வையவனுடன் கைபேசியில் தொடர்புகொண்டு கைபேசியை என்னிடம்                                                     தந்தார்.
           அது ஒரு மகத்தான நேரமாக இருந்திருக்கவேண்டும்.

                                எந்த சுமார் 5 ஆண்டுகளில் ஏதோ வேலை செய்தோம் ,எழுதினோம் என்றிருந்த கர்னல் பாவாடைகணேசன் என்பவரை கிட்டத்தட்ட உலகத்தமிழர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்திவிட்டார் திரு வையவன்  அவர்கள்.
             
                   அவர் எழுத்தாளர், proof reader, wrapper designer,பதிப்பாசிரியர் ,கவிஞர்  என்று பன்முகப் பரிமாணம் அதிலும் விஸ்வரூபம் எடுப்பவர் என்பதால் அவர் மூலமாக வெளிவரும்  நூல்கள் பரவலாகப் பேசப்படுகின்றன.

                                           இது அவர் முயற்ச்சி எடுத்த எனது  முதல் நூல்.

  அதன்பிறகு பல நூல்கள் வெளிவந்துவிட்டன.எண்ணிக்கை தொடர்கிறது.தாரணி பதிப்பகம் என்ற பெயரில் பதிப்பிக்கப்படுகிறது.அவரது உதவியில் வந்த எனது மற்ற நூல்கள்,

     மற்றவர்களுக்காக எழுதுவதும் பதிப்பிப்பதுவும் இல்லாமல் அவரது கைவண்ணத்தில் ,இலக்கிய வேள்வியில் பல கவிதை,கட்டுரைகள்,நாவல்கள்,ஆய்வக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன.உதாரணத்திற்கு ஒன்று சில நாட்களுக்குமுன் பதிப்பித்த பாரதி பற்றிய ஆய்வு நூல்.


             பாரதி பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன.கடுகைத் துளைத்து ஏழ் கடலைப்புகுத்தியதுபோல் எல்லா நூல்களையும் விலக்கி வைத்து பாரதியை புதிய கோணத்தில் அறிமுகப்படுத்துகிறார் வையவன் .

                         பாரதியின் விஸ்வ ரூபா தரிசனத்தில் ஆரம்பித்து  பாரதி என்னுமொரு மானுடன் என்று 23 ஆய்வுகளில் 183 பக்கங்களில் மிக அற்புதமான முறையில் பாரதியின் எல்லா எழுத்துக்களையும் அறிமுகப்படுத்துகிறார்.

                      பள்ளிக்கூடங்கள்,கல்லூரிகள் ,மேடைப்பேச்சாளர்கள்,இலக்கியவாதிகள் எல்லோரிடமும் இருக்கவேண்டிய நூல் இது.

                                       
                              வாழ்க வையவன் !  வளர்க அவரது கைவண்ணம்.











செவ்வாய், 4 ஜூலை, 2017



                                                  எங்கிருந்தோ  வந்தார்.
           
                          இராணுவத்திலிருந்து 1994 ல் 52  வயதில்   ஒய்வு பெற்றார் கர்னல் கணேசன்.ஒய்வு என்பது ஒரு குறிப்பிட்ட  பணியிலிருந்து விடுவிப்பு என்பதைத்தவிர வேறு பொருளை தாமாகவே கற்பனை செய்துகொள்ளும் மனிதரல்ல கணேசன்.
                      இளமை முதலே தீவிர நாட்டுப்பற்றும் இலக்கிய மற்றும் கவிதைகளில் ஈடுபாடும்  கொண்டவர் என்பதால் ஒய்வு என்பதற்கு தான் ஆர்வம் காட்டும் பல பணிகளில் ஒன்றிலிருந்து விடுவிப்பு என்று ஏற்றுக்கொண்டு மிக சாதாரணமாக அடுத்தநாளைத்  தொடர்ந்தார் .

                         மனித வாழ்க்கை ஒரு அற்புதமான பரிசு என்பதை  நாம் அறிவோம் .ஒவ்வொரு நிகழ்வுகளும் ,நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் நமக்கு புதுப்புது பாடங்களை சொல்லித்தருகிறார்கள்.அப்படியிருக்க ஒரு மனிதன் எப்படி ஒதுங்கியிருந்து ஓய்வெடுக்கமுடியும்?

                             ஆகையினால் கணேசன் தனது ஆடுகளத்தில் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார் .பல புதிய பாதைகள் திறந்தன,பல புதிய மனிதர்களின் சந்திப்பு ஏற்பட்டது.

                                அப்படி அறிமுகமானவர்தான் திரு ஹரிஹரசுப்ரமணியன் அவர்கள்.தீவிர நாட்டுப்பற்றுக் காரணமாக Indian Institute of Governance என்ற அமைப்பை ஏற்படுத்தி பல மாமனிதர்களை சந்தித்து இந்த இந்தியத்திருநாட்டிற்கு தம்மால் முடிந்ததை செயல்படுத்தி வருகிறார்.

                            இராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இராணுவத்தினரை பெரிதும் மதித்து மரியாதை கொடுப்பவர்.

                   கர்னல் கணேசன் தனது 30 ஆண்டு பணிக்காலத்தின் நிகழ்வுகளிலிருந்து தனது அனுபவத்தைத் தொகுத்து சுமார் பத்து நூல்கள்  எழுதியிருக்கிறார்.எல்லாமே தேசப்பற்றுடைய கதை,கட்டுரைகள்.

                               a) வெண்பனிப் பரப்பிலும் சில வியர்வைத்துளிகள்.
                               b)இராணுவம் அழைக்கிறது.
                               c)எல்லைப்புறத்தில் ஓர்  இதயத்தின் குரல்.
                               d)கல்  சொல்லும் கதை.(தமிழ்,ஆங்கிலம் )
                               e)எண்ணத்தளவே வாழ்க்கை .
                               f)இலக்கைத்தேடும் ஏவுகணைகள் .
                               g)மண் மேடுகள்.
                               h)சங்கமமாகும் சில இணை கோடுகள் .
                               j)சரித்திரம் படைக்கத் தயாராகும் சன்னாநல்லூர்.
                               k)அகத்தூண்டுதல் பூங்கா

           இவற்றில் பல நூல்களை திரு ஹரிஹர சுப்ரமணியன் படித்திருக்கிறார்.சில நூல்களைத் திரும்பத் திரும்ப படித்து கணேசனுடன் உரையாடியிருக்கிறார்.

                      இலக்கைத்தேடும் ஏவுகணை நூல் இராணுவ வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் அப்பொழுது கணேசன் எடுத்த முடிவுகள் பற்றியது.இதை பலமுறை படித்திருந்தாலும் சமீபத்தில் அவர் அனுப்பிய செய்தி  இது.






Col.ji
Was reading a few pages starting from your marriage to u taking over the Lt.col position in Leh.
I am not that amazed at your disciplined mind because it its extensive and passionate working with one of the finest Army in the World,but truly amazed to see your narrative flowing like Ganges.
Like in a river you take bath at one point or stretch of it and happily tell the world that I bathed in Ganges,take any page and read it gives the pleasure of going through the entire book.
In your previous birth u should have been a Patriotic writer,may be rubbing shoulders with MahaKavi and the like.
U are a measure of what this Great India is.
U will run a State or a Country in the event of another birth.
Pranams
Hariharan

              இப்படி மனம் திறந்து படிக்கவும் பாராட்டவும் எத்தனைப்பேரால் முடியும்.
                     இப்படிப்பட்டவரை நண்பனாய்,நல்லாசிரியனாய் ,குருவாய் பெற என்ன தவம் கணேசன் செய்திருக்கவேண்டும் .

                       இம் மாபெரும் இந்தியத்திருநாட்டில் பலப்பல கணேசன்களும் ஹரிஹரசுப்ரமணியன்களும் பரவலாகக் காணக் கிடைப்பார்கள் .ஆனால் யார் அடையாளம் காண்பது.
           
                   என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?



















செவ்வாய், 27 ஜூன், 2017

                        தேவதைப்போலொரு பெண்ணங்கு                                                          வந்தாள் ........ 
         1972-73

          கிழக்கு பாகிஸ்தான் என்ற பகுதி "பங்களாதேஷ் '"என்றபுதிய நாடாக உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு சிலதினங்களே ஆகியிருந்தன.
                   இந்திய இராணுவத்திற்குப் பெயரும் புகழும் பெற்றுத்தந்த போர்க்களம்  இராணுவ அதிகாரிகளின் திருமண வாய்ப்புகளை சற்றே பின்னுக்குத்தள்ளியிருந்த  நேரமது.
              சாதாரண கிராமத்து இளைஞனான அவர் யாரும் எதிர் பார்த்திராத விதத்தில் சிறப்பான இராணுவ அதிகாரியாக உருவாகிக்கொண்டிருந்தார் .சுமார் 30 வயதைக் கடந்துகொண்டிருக்கும் அவருக்கு திருமணம் தள்ளிப்போய்கொண்டே யிருந்தது .
                   பள்ளிக்கூடம் பார்த்திராத பெற்றோர்கள் அதிலும் பெற்ற தாயை இழந்திருந்தார்.


                சற்றே உலக நடப்புகள் பற்றி அறிந்திருந்த அவர் அண்ணன் தோல்வியில் முடிந்த தனது மண வாழ்க்கையின் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் தவித்துக்கொண்டிருந்த நேரமது.
                இந்நிலையில் சென்னை காமதேனு சூப்பர் மார்க்கெட்டில் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தாள் ஒரு பெண்.அந்த இராணுவ அதிகாரியின்  நண்பர் அவளைப் பார்த்துவிட்டு இப்படிப்பட்ட பெண் ஏன் அந்த இராணுவ அதிகாரிக்கு வாழ்க்கைத்துணைவியாக அமையக்கூடாது என்று யோசிக்கலானார் .
   
                 " கோபுர வாசலிலே"என்ற தமிழ் திரைப்படம் வெளியாகி
                              "தேவதை போலொரு பெண் அங்கு வந்தாள்  "என்ற பாடல் மிகவும் பிரபலமாகி எல்லா இடங்களிலும் எதிரொளித்துக்  கொண்டிருந்தது.
                       அந்த இராணுவ அதிகாரியும் அந்த பாடலை முனு முனுத்துக்கொண்டிருந்தார் .
                  விண்வெளி இதை வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது.அந்த
தேவதை பிறந்த நாள் 26 JUNE.
                          பிறந்த நாள் வாழ்த்துகள் பெருமைமிகு தேவதையே.
                      ஒருநாள் அந்த தேவதையே அந்த இராணுவ அதிகாரியின் வாழ்க்கைத்துணைவியானார்.


                                வாழ்க  வளமுடன்.நிறைவாக வாழ்க.நீடூழி வாழ்க.










செவ்வாய், 25 ஏப்ரல், 2017

கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்:

கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்:

                               அறிவுத் திருக்கோவில் திறப்பு விழா . 

       பரம்பொருளே இயக்கத்தில் உயிராகி ,உயிர் திரட்சியில் பஞ்ச பூதங்கள்,பேரியக்க மண்டலம் ,உலகம்,உடல் இவைகளாகி உயிர் உடலோடும் உலகத்தோடும் பேரியக்க மண்டல நிகழ்ச்சிகளோடும் மெய்ப்பொருளோடும் தொடர்புகொண்டு இயங்கும்போது அறிவாகவும் இயங்குகிறது.இந்த இயக்கத்தைப் புரிந்துகொண்டால் அறிவே பரம்பொருள் என்ற உணர்வு பிரகாசிக்கும்.
                       எண்ணங்களே வாழ்க்கையை அமைக்கின்றன என்பது எண்ணற்ற உளவியல் வல்லுநர்கள் கண்டறிந்தது.இன்றும்கூட மனித மூளையின் செயல்பாடுகள் பற்றி உலகம் முழுவதும் ஆய்வுகள் நடக்கின்றன.
                    மனம் நம்புவதை உடல் செயலாக்குகிறது.இந்த சக்தி அவனுள்ளேதான் இருக்கிறது.ஆனால் அந்த ஞானப்பெட்டகத்தைத் திறக்கும் சாவிதான் நம்பிக்கை.அந்த நம்பிக்கை ஆகாயத்தில் கட்டும் கோட்டையாக இல்லாமல் சில உண்மைகள் என்ற அஸ்திவாரத்தில் எழுப்பப்படும் கற்சுவர்களாக இருக்கவேண்டும்.
                    இந்த அடிப்படையில்தான் 


                                  Dr.அழகர் ராமானுஜம் திறந்துவைக்கிறார்.

   திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூரில் கர்னல் கணேசன் அவர்களால் அகத்தூண்டுதல் வளாகத்தில் அறிவுத்திருக்கோவில் நிர்மாணிக்கப்பட்டது.
          கர்னல் கணேசனுடன் அண்டார்க்டிகாவில் பணியாற்றிய இந்திய கடற்படை அதிகாரி ராஜ்குமார் அவர்களின் துணைவி விளக்கு ஏற்றுகிறார்.இரு புறமும்  கணேசனும் அவரது துணைவியாரும் .

                  முன்பே அறிவித்தபடி விழாத்தலைவரும் மற்ற விருந்தினர்களும் 17-5-2017  புதன்கிழமை காலை பத்து மணியளவில் ஒருங்கிணைய விழா இனிதே தொடங்கியது.
                கணேசனுடன் அண்டார்க்டிகாவில் பணியாற்றிய மற்றோர் இராணுவ அதிகாரி  ராஜன் அவர்கள் பெங்களூரிலிருந்து வந்திருந்தார்.
                  திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயராமன் ,சென்னையிலிருந்து காவல் ஆய்வாளர் (ஒய்வு )செல்வராஜ் காரைக்காலிருந்து திரு .வேதாச்சலம் மற்றும் ஏராளமான நண்பர்கள் உதவியுடன் விழா இனிது நடந்தது.
                     நன்னிலம் காவல் கண்கானிப்பாளர் திரு அருண் அவர்களும் கரந்தை ஜெயக்குமார் அவர்களும் வாழ்த்தினார்கள்.
                       இந்த விழாவின் நோக்கம் மனிதனின் திறமை அளவுகோலுக்கு அப்பாற்பட்டது என்பதையும் அவனது செயல்பாடுகளை எந்த புற  காரணிகளும் தடுத்து நிறுத்த முடியாது என்பதையும் இன்றைய இளையோர் மனதில் பதியவைப்பதேயாகும் .
                   வருங்காலத்தில் சன்னாநல்லூரைச் சுற்றியிருக்கும் கிராம மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு அவர்கள் சரித்திரம் படைப்பார்கள் என்று எதிர்பார்ப்போம் .



            விழா சிறப்பாக நடைபெற உதவிய எல்லோருக்கும் இதயம் நிறைந்த நன்றி .
         மாலையில் சென்னை வானொலி நிலைய காரைக்கால் பகுதி அதிகாரிகள் அறிவுத்திருக்கோவில் வளாகத்தில் கர்னல் கணேசனை நேர்காணல் நடத்தி பெருமை சேர்த்தார்கள்.அவர்களுக்கும் நன்றி.
 














                             
                                             மின்காந்த  நூலகம் 

                                                cosmic    Library
  அன்புடையீர்  !
                 நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 3 ம்  நாள் (17-05-2017) புதன்கிழமை திருவோணம் நட்சத்திரம் கூடிய நன்னாளில்  காலை 10.00 மணியளவில் 
                     திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூரில் பெருமைமிகு பாவாடை-தெய்வானை  குடும்பத்தினர்களால் பொது மக்களுக்காக அர்பணிக்கப்பட்டிருக்கும் "அறிவூத்   திருக்கோவில்" திறப்பு விழா நடைபெறும்.
  


                       
                 பரம்பொருளே இயக்கத்தில் உயிராகி உயிர் திரட்சியில் பஞ்ச பூதங்கள் ,பேரியக்கமண்டலம் ,உலகம் இவைகளாகி உயிர் உடலோடும் உலகத்தோடும் பேரியக்க மண்டல நிகழ்ச்சிகளோடும் மெய்ப்பொருளோடும் தொடடர்புகொண்டு இயங்கும்போது அறிவாகவும் இயங்குகிறது..

                       இந்த இயக்கத்தைப் புரிந்துகொண்டு "அறிவே  பரம்பொருள்" என்ற உணர்வை  விருந்தினர்களிடையேப் பதியவைத்து இந்த ஞானாலயாவைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார் 

                             டாக்டர் .அழகர்  ராமானுஜம் ,Ph.D
                   தலைவர் ,வேதாத்ரி மகரிஷி  ஆசிரமம் ,பேரளம்.

  தொடர்ந்து சில அறிஞர் பெருமக்களும் உரையாற்றுகிறார்கள் .

                     அனைவரும் வருக!     ஞானவெள்ளத்தில் நனைக !.

                                                                                    சக பயணிகளுக்காக,
                                                                             கர்னல்.பாவாடை கணேசன்   















வியாழன், 20 ஏப்ரல், 2017


                                  அன்னையின் பொற்பாதங்களிலே.

               முந்தித் தவமிருந்து முன்னூறு நாட் சுமந்து பெற்றுவளர்த்துப்  பின்னைப் பாலூட்டி  சீராட்டி கண்ணே மணியே என் கட்டிக்கரும்பே என சொல்லி வளர்த்துத்   தன் சுகமெல்லாம் தந்து

                    மடியில் வளர்த்த மக்களில் சிலரை மண மேடையும் ஏற்றிவிட்டு வாழுங்களப்பா  நான் வருகிறேன் என்று சொல்லாமல் சொல்லி இன்று இல்லாமல்போய்விட்ட  எனது  அன்னையின் நினைவுகள் அவ்வப்பொழுது வந்து என்னை அலைக்கழிப்பதுண்டு.

                       காலமெனும் காட்டாறு கரைபுரண்டு ஓடுகையில் எண்ணக்குவியல்கள் மேலும் கீழும் இடதும் வலதுமென இடம்மாறி போகலாம்.அப்படி தடுமாறி,தடம்மாறி போகையில் கற்பனைக்குமெட்டாத நிகழ்வாக
                எனது அன்னையை ஒருநாள் சந்தித்தேன் .எனது சொல்லால்,செயலால்,நாட்டுப்பற்றால் ஈர்க்கப்பட்ட நண்பரின் அறிமுகமும் அவர் மூலமாக அவரது அன்னையின் ஆசிர்வாதமும்  கிடைத்தது.

                          அவர் ஒரு திருநாளில் தனது பூர்வீகம் தேடிவந்ததுபோல் எனது பிறந்தமண்ணில் பாதம் பதித்ததை என்னவென்று சொல்வேன்.


               தனது செல்வ  மகனுடன்  புண்ணிய தல   தரிசனம் புறப்பட்ட அவர் ராமநவமி அன்று ராமேஸ்வரம் கோதண்டராமனை தரிசித்து பின்னர் தமிழ்நாட்டில் எமதர்மராஜனுக்கு ஆலயம் உள்ள ஒரே ஊரான திருவாஞ்சியம் (திருவாரூர் மாவட்டம்)தரிசித்தார் .அங்கிருந்து வருகையில் "சன்னாநல்லூர்" 7 கி.மீ.என்ற அறிவிப்புப் பலகையைப்  பார்த்து ஆழ் மனதில் ஒரு மின்னல் பளிச்சிட  அவர் பொற்  பாதங்கள் எனது பிறந்தமண்ணில் பதிந்தது.

        எத்தனைப் பிறவியில் நான் செய்த தவமோ ஆயிரம் பிறை கடந்து இன்று நூறாவது  அகவையை நெருங்கிக்கொண்டிருக்கும்  அவர் சன்னாநல்லூரில் அமைக்கப்பட்டிருக்கும் "அகத்தூண்டுதல் பூங்காவிற்கு "ம்  அங்கு திறப்பு விழாவிற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் "அறிவுத்  திருக்கோவிலுக்கு"ம் வருகை தந்தார்.
                 
                   நன்றி சொல்வேன் நண்பர் ஹரிஹர சுப்பிரமணியனுக்கு.




                  தொடர்புக்கு :
                                         கர்னல் .பாவாடை கணேசன் .
                                044-26163794,       09444063794.