அன்னையின் பொற்பாதங்களிலே.
முந்தித் தவமிருந்து முன்னூறு நாட் சுமந்து பெற்றுவளர்த்துப் பின்னைப் பாலூட்டி சீராட்டி கண்ணே மணியே என் கட்டிக்கரும்பே என சொல்லி வளர்த்துத் தன் சுகமெல்லாம் தந்து
மடியில் வளர்த்த மக்களில் சிலரை மண மேடையும் ஏற்றிவிட்டு வாழுங்களப்பா நான் வருகிறேன் என்று சொல்லாமல் சொல்லி இன்று இல்லாமல்போய்விட்ட எனது அன்னையின் நினைவுகள் அவ்வப்பொழுது வந்து என்னை அலைக்கழிப்பதுண்டு.
காலமெனும் காட்டாறு கரைபுரண்டு ஓடுகையில் எண்ணக்குவியல்கள் மேலும் கீழும் இடதும் வலதுமென இடம்மாறி போகலாம்.அப்படி தடுமாறி,தடம்மாறி போகையில் கற்பனைக்குமெட்டாத நிகழ்வாக
எனது அன்னையை ஒருநாள் சந்தித்தேன் .எனது சொல்லால்,செயலால்,நாட்டுப்பற்றால் ஈர்க்கப்பட்ட நண்பரின் அறிமுகமும் அவர் மூலமாக அவரது அன்னையின் ஆசிர்வாதமும் கிடைத்தது.
அவர் ஒரு திருநாளில் தனது பூர்வீகம் தேடிவந்ததுபோல் எனது பிறந்தமண்ணில் பாதம் பதித்ததை என்னவென்று சொல்வேன்.
தனது செல்வ மகனுடன் புண்ணிய தல தரிசனம் புறப்பட்ட அவர் ராமநவமி அன்று ராமேஸ்வரம் கோதண்டராமனை தரிசித்து பின்னர் தமிழ்நாட்டில் எமதர்மராஜனுக்கு ஆலயம் உள்ள ஒரே ஊரான திருவாஞ்சியம் (திருவாரூர் மாவட்டம்)தரிசித்தார் .அங்கிருந்து வருகையில் "சன்னாநல்லூர்" 7 கி.மீ.என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்து ஆழ் மனதில் ஒரு மின்னல் பளிச்சிட அவர் பொற் பாதங்கள் எனது பிறந்தமண்ணில் பதிந்தது.
எத்தனைப் பிறவியில் நான் செய்த தவமோ ஆயிரம் பிறை கடந்து இன்று நூறாவது அகவையை நெருங்கிக்கொண்டிருக்கும் அவர் சன்னாநல்லூரில் அமைக்கப்பட்டிருக்கும் "அகத்தூண்டுதல் பூங்காவிற்கு "ம் அங்கு திறப்பு விழாவிற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் "அறிவுத் திருக்கோவிலுக்கு"ம் வருகை தந்தார்.
நன்றி சொல்வேன் நண்பர் ஹரிஹர சுப்பிரமணியனுக்கு.
தொடர்புக்கு :
கர்னல் .பாவாடை கணேசன் .
044-26163794, 09444063794.

தாயின் ஆசிர்வாதமும்
பதிலளிநீக்குமனமார்ந்த வாழ்த்துதல்களும்
தங்களின் அகத்தூண்டுதல் பூங்காவின்
வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஐயா
மகிழ்ந்தேன் ஐயா
வருகைக்கு நன்றி நண்பரே.
பதிலளிநீக்குஅருமையான நிகழ்வு
பதிலளிநீக்குஅன்னையின் ஆசீர்வாதம்