விண்ணைத் தொடுவோம்
உலகில் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள எண்ணற்ற வழிகள் இருக்கின்றன. பொய் சொல்லாமல் , ஏமாற்றாமல் நன்றாக வாழ படித்தவர்களும் ப டிக்காதவர்களும் தங்களுக்கென்று மகிழ்வான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முதல் தேவை "மனம்"இந்த மனம் ஒரு கருவிதான்.(Instrument ). அந்தக் கருவியை உபயோகிப்பவன் மனிதன்.செயல் புரிபவன் செயலுக்கேற்ற கருவிகளின் துணை கொண்டு நேர்தியாகத் தனது வேலைகளைச்செய்கிறான்.கருவி காரியவாதியை கண்ட்ரோல் செய்யும்போதுதான் குழப்பம் ஏற்படுகிறது.உருண்டோடும் பொருளுக்கு சக்கரம் வேண்டும்.ஸ்திரமாக இருக்க சமதளமான அடிப்பக்கம் வேண்டும்.
மனம் மனிதனை ஆக்கிரமிக்க நினைக்கும்போது வள்ளலார் இராமலிங்க அடிகள் என்ன செய்கிறார் பாருங்கள்.
மனம் என்னுமொரு பேய்க்குரங்கு மடைப்பயலே நீ தான்
மற்றவர் போல் எனை நினைத்துமருட்டாதே கண்டாய்
இனமுற என் சொல் வழியே இருத்தி எனில் சுகமாய்
இருந்திடு நீ என் சொல்வழி ஏற்றிலை ஆனாலோ
தினையளவுன் அதிகாரம் செல்லவோட்டேன் உலகம்
சிரிக்க உனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
நனவில் எனை அறியாயோ யார் என இங்கிருந்தாய்
ஞான சபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே.
தந்தையின் ஆறாவது மனைவிக்கு ஐந்தாவது குழந்தையாய்ப் பிறந்தவர் வள்ளலார்.ஆன்மீகத்தையும் அறிவியலையும் இணைக்க அரும்பாடு பட்டவர் .அன்றைய கால கட்டத்திலும்கூட இவை இணையக்கூடாது என்று ஒரு திருட்டுக்கு கூட்டம் பல வழிகளில் முயற்சித்தது.ஒரு வெறுப்போடு இந்த உலகைப் பிரிந்த வள்ளலார் இப்பொழுதும் தனக்கு ஏற்புடையவர்களுடன் வாழ்கிறார்.
பவன் குப்தா I I T டெல்லி யில் பொறியியல் படித்தவர்.அவரது மனைவி அனுராதா முதுகலைப்பட்ட ஆய்வுக்காக இமயத்தின் மடியில் உள்ள தேறி கர்வால் மலைப்பகுத்திக்கு வருகிறார்கள்.மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்காக ஒரு சிறார் பள்ளியை ஆரம்பிக்க இன்று அது The society for Integrated Development of ths Himalayaas (SIDH ) என்று விரிவடைந்துள்ளது .வாழ்க்கை எங்கு ஆரம்பித்து எப்படிப்போகிறது என்று பாருங்கள்.
விண்ணிடை இரதம் ஊர்ந்து மேதினி கலக்குதற்கும்
பண்ணிடைத் தமிழ்ச்சேர்த்துப் பாரினை மயக்குதற்கும்
மண்ணிடை வாளேந்திப் பகைப்புலம் மாய்ப்பதற்கும்
எண்ணிலாத் தமிழர் உள்ளார் எனும் நிலை இன்று காண்போம்
திருவாரூர் மாவட்டம்,சன்னாநல்லூரில் அமைந்துள்ள "அகத் தூண்டுதல் பூங்கா "வுக்கு வாழ்வின் இளமைப்பருவத்தில் சென்று வாருங்கள்.உங்கள் கனவுகள் மெய்ப்பட வாசல் திறக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக