ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

        இந்தியப் பெருமக்களுக்கு 73 வது சுதந்திர                                      தின வாழ்த்துக்கள்.

        தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்                                      கவனத்திற்கு.

               தென்  தமிழகத்தின் காவேரிக்  கரையோரத்தில் பிறந்தவர்கள் நுங்கும் நுறையுமாகப் பாய்ந்தோடும் புதுப்புனலில் நீராடி மகிழ்ந்தவர்கள்  மட்டுமல்லாது வளம் செறிந்த தமிழ் மொழியிலும் மூழ்கி முத்தெடுத்தவர்கள் என்பது சரித்திரம் சொல்லும் உண்மை.
                    இம்மண்ணில்தான் பிள்ளைக்கறி சமைத்த சிறுத்தொண்ட நாயனார் வாழ்ந்த திரு செங்காட்டங்குடியும்
                    வீரத்திற்கு விளக்கம் சொல்லும் கலிங்கத்துப் பரணி பாடிய ஜெயன்கொண்டார் பிறந்த தீபங்குடியும் இருக்கிறது.
                இந்த இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 15 கி.மீ.தான். இந்த இடைப்பட்ட தூரத்தில் தான் வீரத்திற்கும் விவேகத்திற்கும் முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடிய ஒரு மாமனிதன் பிறந்த ஊரான சன்னாநல்லூர் இருக்கிறது.
           ஒருதமிழ்ப்புலவன் கருணைக்கும் காவியபுலமைக்கும்,
எடுத்துக்காட்டாகச் சொல்லப்படும் ஒரு தமிழ்ப்புலவன் கையில் கொலைக்கருவியான துப்பாக்கி ஏந்தி நிற்பது போன்ற ஒரு ஒவ்வாத
உருவக்  கற்பனை நம் மனதில் எழலாம்.
                       இப்படி ஒவ்வாத உருவக் கற்பனைக்கு உரியவர்தான் கர்னல் பாவாடை கணேசன்.
                 பொறியாளர்,போர்வீரர்,தமிழ் மொழிக்கு பத்துக்கும் மேற்பட்ட நூலெழுதி பாமாலை சூட்டிய புலவன் போன்ற அடைமொழி இவருக்குப் பொருந்தும்.
            எல்லாவற்றிற்கும் மேலாக இராம காவியம் பாடிய கவிச்சக்கரவர்த்தி கம்பர் "ஏர் எழுபது "என்று வேளாண்குடிமக்களின் பெருமை பற்றி எழுபது பாடல்கள் பாடிய விவசாயக் குடும்பத்தில் இந்த மண்ணை நேசித்த மா  மனிதர்களான பாவாடை-தெய்வானை என்ற தம்பதியினர்க்குப் பிறந்தவர்.
                  அதனால்தான் இந்த சன்னாநல்லூர் மண் பற்றி இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது.
                   பொதுப்பணித்துறை பொறியாளராக இருந்த கணேசன் 1962 ல் நடந்த சீன ஆக்கிரமிப்பும் அதன் காரணமாக ஏற்பட்ட நாட்டின் அவசரகால நிலையும்
இருந்த நேரத்தில் பொதுப்பணித்துறை வேலையே விட்டு விட்டு இராணுவத்தில் அதிகாரியாகசேர்ந்தார்.
           கிராமத்து இளமை சுறு சுறுப்புடன் இருந்த அவரை இராணுவம் தாலாட்டியதில் வியப்பில்லை.Best sports person in Athletics,Swimming and Basketball என்று அதிகார வர்க்கத்திற்கு ஒரு முன்னுதாரணமாக முன்னேறினார்.
                   1984 ல் 4 Engineer Regiment என்ற படைப்பிரிவை Colonel என்ற தகுதியில் தலைமை ஏற்று நடத்திவருகையில் 1987 ம் ஆண்டு இந்தியதிருநாட்டின் தென்துருவ ஆய்வு தளமான "தக்ஷிண் கங்கோத்ரிக்கு " குளிர்காலத்த தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
               அண்டார்க்டிக்கா புறப்படுமுன் தான் பிறந்த ஊரான சன்னாநல்லூர் வந்து ஒருபிடி மண் எடுத்துக்கொண்டார்.இந்த மண் தென் துருவ ஆய்வுத்தளம் சுற்றி தூவப்பட்டது.
                 இந்தியாவின் ஐந்தாவது குளிகாலக் குழு தலைவர் என்ற தகுதியில் தனது 15 பேர்களடங்கிய குழுவுடன் 480 நாட்கள் உலகிலேயே அதிகக்  குளிர்பிரதேசமான அண்டார்க்டிகாவில் பனிப்புயல்,உடல்,மன ,உளவியல் போராட்டங்கள் என போராடி 1989 ம் ஆண்டு March 26 ம் நாள் இந்தியா திரும்பினார்.
          அண்டார்க்டிக்காவிலிருந்து புறப்படுமுன் அங்கு சுமார்  50 கோடி வருடங்கள் 5000.மீ.ஆழ உறைபணிக்கிடையில் கிடந்த நாலைந்து கற்பாறைகளை தமிழகம் கொண்டுவந்தார்.
             சுமார் 1 டன் எடையுள்ள இந்த கற்பாறைகளைக்கொண்டு  ஐந்து  இடங்களில் "அகத்தூண்டுதல் பூங்கா " அமைத்துள்ளார்.
              சென்னையில் வீட்டுவசதி வாரியம் வழங்கிய தனி மனையில் வசதியாக வாழ்ந்துவரும் கர்னல் தனது ஓய்வூதியம்,உடல் உழைப்பு எல்லாவற்றையும் இம்மண்ணுக்கு வழங்கி
                  அகத்தூண்டுதல் பூங்கா அமைக்கக் காரணமென்ன ?
       
                        வாருங்கள். ! அவரிடமே கேட்கலாம். !

                                                  நேர் காணல் 
கேள்வி.1.
           பொன்னையும் பொருளையும் தேடித்தேடி தேவைக்கும் அதிகமாக சேர்க்கத்துடிக்கும் இன்றைய மக்கள் மத்தியில் உரிமையோடு வாங்கிய சம்பளத்தைக்கூட ஆற்றில் வீசியெறிந்தவர் என்று உங்களை அடையாளம் காட்டுகிறார்கள் .அந்த நிகழ்வு பற்றி சொல்லுங்கள்.
கேள்வி 2.
             இராணுவத்தில் ஆள்சேர்ப்பு என்று கேள்விப்பட்டவுடன் ஆயிரம் லட்சம் என்று மோதும் கூட்டத்தில் மிகவும் சர்வ சாதாரணமாக நீங்கள் அதுவும் அதிகாரியாக சேர்ந்து பணியாற்றியுள்ளீர்கள்.உங்களது தேர்வு,ஆரம்பகாலப் பனி பற்றி சொல்லுங்கள்.
கேள்வி.3.
               நாட்டின் அவசரகால சூழ்நிலையில் அதிகாரியானீர்கள்.பொதுப்பணித்துறை உங்களை திரும்பவும் அழைத்தபோது அதை ஏற்காமல் மீண்டும் ஏன் இராணுவத்தேர்வுக்கு சென்றீர்கள்.
கேள்வி.4.
            இராணுவத்தில் அதிகாரியாவதற்கு பலவிதமானப் பயிற்சிப் பள்ளிகளில் பயின்று தேர்வுக்கு முயற்சிப்பவர்களுக்கிடையில் நீங்கள் மிக சுலபமாக அதிகாரியாகிவிட்டீர்கள்.ஒரு Royal life  என்று சொல்லக்கூடிய அதிகார வர்க்கத்தினிடையே மிக சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து சுமாரான கல்வியறிவுடனிருந்த நீங்கள் ,பொதுவாக ஒரு இராணுவ அதிகாரிக்கு கிடைக்கமுடியாத கௌரவமும் பணிப்பெருமையும் பெற்றது எப்பெடி .
கேள்வி . 5.
              தேசீய அளவில் உங்களை அறிமுகப்படுத்தியது உங்கள் அண்டார்க்டிக்கா அனுபவம்.அந்த தேர்வு,அந்தப் பனி பற்றி சொல்லுங்கள்.
கேள்வி.6.
                 Rashtriya Indian Military College (R I M C ) போன்ற இந்தியாவின் மிகச்சிறந்த
Public School ல் பயின்று பின்னர் National Defence Acadamy,Indian Military Acadamy போன்ற  இராணுவப் பயிற்சி தளங்களில் பயின்று அதிகாரியானவர்களைவிட நாட்டின் அவசரகால நிலையில் அதிகாரியான உங்களை புகழ்பெற்ற பயிற்சி படைப்பிரிவுகளின்  தலைவராக எப்படி நியமிக்க முடிந்தது.
கேள்வி.7
                இராணுவப் பொறியியல் கல்லூரியின்பெருமை மிகு "போர்க்கள பொறியியல் பகுதி " (Faculty of Combat Engineering ") யில் இளம் அதிகாரிகளை பயிற்றுவிக்கும் அதிகாரியாகத் தங்களது பணி  பற்றி சொல்லுங்கள்.
கேள்வி. 8.
                உங்களது சேமிப்புகளையெல்லாம் செலவு செய்து உங்களது பிறந்த மண்ணில் அமைத்துள்ள "அகத்தூண்டுதல் பூங்கா "பற்றி சொல்லுங்கள்.
கேள்வி. 9.
                   உங்களது குடும்பம் பற்றி சொல்லுங்கள்.
கேள்வி 10.
                   தொலைகாட்சி நேயர்களுக்கும்  பொதுமக்களுக்கும் தங்களது செய்தி என்ன.

                               நேர்காணல் கண்டு ஒரு நூலுக்கோ அல்லது ஒரு தொலைக்காட்சிக்கோ நிகழ்ச்சி தயாரிக்க வருபவர்கள் பேசப்படும் செய்தியில் சரியான தெளிவு இல்லையெனில் அவர்கள் நேர்காணல் கொடுப்பவரின் அனுபவ அறிவை வெளியுலகம் கொண்டுவர முடியாது..
                 அவர்களுக்கு உதவும் பொருட்டு, "கேள்வியும் நானே,பதிலும் நானே " என்று தயாரித்ததுஇந்த தொகுப்பு.
                  யார் வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். 
             




















2 கருத்துகள்:

  1. இவ்வாறான உத்தியானது முற்றிலும் பயனுள்ள செய்திகளை, விடுபாடின்றி, வாசகர்களின் கொண்டு சேர்க்க உதவும்.

    பதிலளிநீக்கு
  2. உண்மை
    ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் கருத்தினை வழிமொழிகின்றேன்

    பதிலளிநீக்கு