எனது நாடு ;எனது மக்கள்
ஒரு சர்வாதிகாரிபோல் தமிழ்நாட்டைத் தன் பிடிக்குள் வைத்திருந்த ஒருவரை கொஞ்சம் கொஞ்சமாக அடக்கி ஒடுக்கி சவப்பெட்டிக்குள் சேர்த்துவிட்டனர்.
தமிழ்நாட்டின் முழு அதிகார வர்க்கமும் கூனிக்குறுகி அவர் காலடியில் கிடந்தது.
காரணம் அவரது வீரம் விவேகம் ஆளுமைத்திறன் .பணத்தால் எதையும் சாதித்துவிட முடியும்என்றுபலரும்நினைக்கிறார்கள்.ஆகையினால்
மானம் மரியாதை சுய கௌரவம் எல்லாவற்றையும் பணத்திற்காக இழக்கத் தயங்காமல் தொண்டர் படை என்ற கூட்டம் அவரது காலடியில் கிடந்தது.அவரது மறைவு,இன்றுவரை விடைகாண முடியாத மர்மமாகவே இருக்கிறது.
இந்நிலையில் " இந்திய விடுதலையின் இறுதி நாட்கள் "என்ற அலைகள் வெளியீட்டகம் பதிப்பித்த நூலைப் படிக்க நேர்ந்தது.அதிலிருந்து சில வரிகள் அப்படியே பதிவிடுகிறேன்
எனது நாடு பாரம்பரிய பெருமை மிக்கது.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகிற்கு வழிகாட்டியாக விளங்கியது.எமது மக்கள் உலகிற் சிறந்த வல்லுநர்கள்.எனது நாட்டின் பெருமையை அறிந்த உலக மக்கள் பல நாடுகளிலிருந்து வந்துஎமது நாட்டின் பெருமையைப் படித்திருக்கின்றனர்.மருத்துவத்திலும் வான சாஸ்த்திரத்திலும் விஞ் ஞானத்திலும்எமது மக்கள் உலகிலேயே சிறந்தவர்களாக விளங்கியிருக்கின்றனர்.குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு சிறு சிறு கூட்டங்களாக இவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.அம் மன்னர்கள் வீரத்திற்கும் விவேகத்திற்க்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் .
இன்றைய நிலை என்ன ?
எனது நாடு வாழ்க்கைமுறைக்கு ஏற்றது இல்லை என்று எமது மக்களே நினைக்கின்றனர்.காலம் காலமாக எமது நாடு கொள்ளையடிக்கப்பட்டது.பிற மதத்தினர் கூடிக்கூடி எமது மக்களை மூளைச்சலவை செய்தனர்.எத்தனையோ அறிவுப்பொக்கிஷங்கள் இங்கிருந்து அகற்றப்பட்டன.
திரும்பவும் நாம் நமது உன்னத நிலையை அடைய முடியுமா?
முடியும் ! ! !
அறிவாளிகளும் திறமைசாலிகளும் ஒதுங்கியிருந்து வே டிக்கை ப் பார்க்காமலிருந்தால்.......
மனதாலும் செயலாலும் உண்மையானவர்கள் ,வல்லுநர்கள் வலிமை பொருந்தியவர்களும் ஒதுங்கியில்லாமல் முன்னே நின்று நாட்டின் வளர்ச்சியில் பங்கு கொண்டால் ........இந்த நாட்டில் இருக்க விரும்பாது புகலிடம் தேடி வேறு நாட்டுக்கு ஓடாமலிருந்தால் ..........
நிச்சயம் முடியும்.
நேற்று ஆண்டவர்கள் ,இன்று ஆள்பவர்கள்,நாளை ஆளப்போகிறவர்கள் நாட்டு மக்களின் வளத்தையும் நலத்தையும் கொள்ளையடிக்காமல் நமது நாட்டின் பெருமையை நிலைநாட்டுவதில் ஆர்வம் காட்டினால் ......
நிச்சயமாக முடியும்.
அரசியல் களத்தில் முன் நிற்பவர்கள் முதலில் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளட்டும்.இன்றும் கூட சாக்கடையை சுத்தம் செய்பவர்கள் யார்.....? அந்த சாக்கடையிலேயே உழன்று கொண்டிருப்பவர்கள்தானே.
திருப்பராய்த்துறையில் விவேகானந்தா வித்யாலயா அமைத்த சித்த பவானந்தர் வாழ்வில் ஒரு சம்பவம்.......
அன்று பள்ளி வளாகத்தில் கழிவுநீர்குளத்தை (Septic tank ) சுத்தம் செய்ய திட்டமிட்டிருந்தார்கள் .சித்த பவானந்தர் வந்தார்.மற்றவர்கள் ,ஐயா,கழிவு நீர் சுத்தம் செய்பவர் இன்று வரமுடியாது என்று செய்தியனுப்பிவிட்டார் ,இப்பொழுது நாம் எப்படி சுத்தம் செய்வது ? என்று
செய்வதறியாது நின்றுகொண்டிருந்தனர்.
சித்பவானந்தர் கொஞ்சம்கூட தயங்காமல் இடைத்துணியை அவிழ் த்துப்போட்டுவிட்டு கோவணத்துடன் கழிவுநீர்த்தொட்டிக்குள் குதித்து
இப்படி சுத்தம் செய்வோம்
என்று வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார்.
தலைமை ஏற்க முன்வருபவன் திறமையானவனாக சொந்த கஷ்ட நஷ்டங்களைப் பாராமல் தனது செயல்பாட்டில் உண்மைநிலையை நிலைநாட்டுபவனாக இருக்கவேண்டும்.
அப்படிப்பட்டவர்கள் அடையாளம் காணப்படாமல் எங்கோ ஒரு மூலையில் தன்னளவில் செயலா ற்றிக்கொண்டிருக்கிறார்கள். தினமும் ஆயிக்கணக்கானவர்கள் பயணிக்கும் ஒரு சாலை இது.
இதன் ஒரு புறத்தில் பார்ப்போர் மனம் விழிப்படைந்து அவர்களுக்குள் ஒரு உந்துசக்தியை ஊட்டக்கூடிய "அகத்தூண்டுதல் பூங்கா"' அமைந்துள்ளது.
ஒரு சோதனைக்காக நாளை இந்த சாலையோரத்தில் நின்று கொண்டு யாரிடமாவது ,"இது என்ன அமைப்பு " என்று கேட்டுப்பாருங்கள்.
அநேகமாக பலரும் தெரிந்துகொண்டிருக்க மாட்டார்கள்.
இப்படிப்பட்ட மக்களை எப்படி வழி நடத்துவது.மக்கள் மனதளவில் இது நமது நாடு என்று பெருமை கொள்ளவேண்டும். நாட்டிற்கு ப் பெருமை சேர்ப்பவர்களை ஊடகங்கள் முன்னிலைப்படுத்தவேண்டும் .
இன்று கொடி பிடிக்கும் தொண்டர்கள் தலைவனிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
தனக்கொரு பதவி.அதன்மூலமாக செல்வம் . இவர்களால் நாடு என்ன முன்னேற்றத்ததை அடைந்துவிட முடியும் ?
இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஒருவரின் பேச்சும் செயல்களும் பல ஊடகங்களால் விமரிசிக்கப்படுகிறது.
அவர் பிறப்பதற்கு முன்பாகவேப் பிறந்து இன்று எழுபத்தியாறு அகவையைக் கடந்துகொண்டிருக்கும் ஒரு இராணுவ அதிகாரி அன்று 1962 ல் தான் வாங்கிய அரசாங்க சம்பளத்தை ஆற்றில் வீசி எரிந்தார் .பின்னர் தனது பிறந்தமண்ணை உலகின் கீழ்க்கோடியில் தூவி பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்தார் . தென் துருவத்திலிருந்து ஒரு டன் எடையுள்ள கற்பாறைகளை தமிழகம் கொண்டுவந்து "அகத்தூண்டுதல் பூங்கா" அமைத்துள்ளார்.
இதை எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை .
இவரைப்போன்றவர்கள் யாருக்காக உழைக்கிறார்கள் ?நாட்டு நலனில் அக்கறையுள்ள மனிதர்கள் .......
சிந்தியுங்கள் ! செயல் படுங்கள் !!
மேலும் விபரங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளுங்கள் ...
9444063794,9884060671
கர்னல் பாவாடை கணேசன்
மீண்டும் சந்திப்போம் ...

மனிதர்கள் வருவார்கள் போவார்கள், நான் என் பாதையில் போய்க்கொண்டிருக்கிறேன் என்று தேம்ஸ் ஆறு கூறுவதாக ஆங்கிலக் கவிஞர் கூறுவார். அதுபோல நாம், நம் கடமையை, பிறரை எதிர்பார்க்காமல் செய்துகொண்டேயிருக்கும்போது நம்மையும் அறியாமல் பிறரால் மதிக்கப்படுவோம். இவை போன்ற உழைப்புகளுக்கு என்றும் மதிப்பு உண்டு. ஐயாவின் பணி தொடர வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு