திங்கள், 23 அக்டோபர், 2017


                                              இனி ஒரு விதி செய்வோம் .

                         சட்டமும் ஒழுங்குமுறைகளும் மனித சமுதாயத்தின் நல் வாழ்க்கைக்காக ஏற்படுத்தப்பட்டவைகள் .கால வேகத்திற்கு ஏற்றாற்போலவும் மாறிவரும் வாழ்க்கை முறைகளுக்கேற்றாற்போலவும்  இவைகளை மாற்றி அமைப்பது தவறில்லை.

                           பண்டிகைகளும் விழாக்களும் மனிதர்களின் சோர்வுற்ற மனதிற்கு புது சக்தியை ஊட்டுகின்றன என்பதை மறுக்க முடியாது.

                                75 வது அகவையைக் கடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் பிள்ளைச்செல்வங்கள் பெரியவர்களாகி பேரன் பேத்திகளும் வளர்த்துவிட்ட பொழுதில்  இந்த பண்டிகைகளும் விழாக்களும் அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லைதான் .

                               ஆனால் ஐந்து வருடங்களாக பெற்றோர்களைக்காணாத மூத்த மகனும் அயல்நாட்டில் பணியாற்றும் இளைய மகனும் தீபாவளிக்கு சென்னை வருகிறோம் என்ற செய்தி வந்த பொழுது உடல் முழுவதும் புது இரத்தம் பாய்வதை உணரமுடிகிறது.

                               சர்க்கைப்பந்தலில் தேன்மாரி பெய்ததுபோல்  மைத்துனரும் இளைய சம்பந்திகளும் குடும்ப சகிதம் கலந்துகொள்கிறோம் என்ற பொழுது உண்மையிலேயே மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடும் என்பது ஒரு இயற்கையான எதிர்பார்ப்புதான்.

                              நான்கு நாட்கள் முன்பாகவே சென்னை வந்துவிட்ட இளைய மகன் அற்புதமாகத் திட்டம் வகுக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புதிய மெஷின் தங்கு  தடையின்றி ஓடுவதுபோல் தீபாவளிப்பண்டிகையின் இரண்டு  மூன்று நாட்கள் வாழ்வின் மறக்க முடியாதப்  பதிவாக மறைந்தது

                                 எல்லோருக்கும் குறிப்பாகஇளைய சம்பந்திகளுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

                                        வாழ்க வளமுடன்.!



                                    மகிழ்வோடும்  மனநிறைவோடும் சென்று வருக சொந்தங்களே.

                       








                                 














                               

1 கருத்து: