வியாழன், 19 ஜூலை, 2018

                                                         9.உருவமற்ற குரல் ......

                                                             (  இரா ணுவப் பொறியியற்  கல்லூரி )
         
இந்திய இராணுவத்தின் பொறியாளர் படைப்பிரிவிக்கான எல்லா பயிற் சிகளும் நடக்குமிடம் இராணுவப் பொறியியற்கல்லூரி.இது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பூனா என்னுமிடத்தில் சுமார் 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
            பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றிராத இராணுவ அதிகாரிகள் ( BA,B.Sc) இங்கு மூன்றாண்டு கால B. Tech பட்ட ப் படிப்புக்கு வருவார்கள்.இராணுவத்தில் நிரந்திர அதிகாரியானபிறகு கணேசன் இந்த படிப்புக்காக பூனா வந்தடைந்தார்.
                      அவர் அன்னையின் மறைவு குடும்பத்தில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருந்தது.அப்பா,25 வயது தம்பி,மற்றும் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த 18 வயது கடைசி தம்பி மட்டுமே ஊரிலிருந்தார்கள்.சமையல் செய்ய யாருமில்லை.இந்நிலையில் மூத்த தம்பிக்கு திருமணம் செய்விக்கவேண்டியது காலத்தின் கட்டாயமானது.

                            அதன்படி 03 Dec 1970 தம்பி கலியமூர்த்தியின் திருமணம் நடந்தது.கணேசனின் மூன்றாண்டு கால படிப்பு தொடர்ந்தது.

                          இந்நிலையில் எதிர்பாராதவிதமாக இந்திய எல்லைப்புறம் பதட்டமான சூழ்நிலைக்குள்ளானது.அண்டை நாடான பாகிஸ்தானில் ஏற்பட்ட கலவரம் போர்க்கால சூழ்நிலையை ஏற்படுத்த இராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அதிகாரிகள் படைப்பிரிவிற்கு அனுப்பப்பட்டனர்.

                           கணேசன் மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்த 4 Engineer Regiment என்ற படைப்பிரிவிற்கு அனுப்பப்பட்டார்.அந்த படைப்பிரிவு அப்பொழுது திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கருகிலிருந்தார்கள்.எந்த நிமிடமும் போர் ஆரம்பமாகலாம் என்ற பதட்டமான சூழ்நிலையில் கணேசன் படைப்பிரிவு சென்றடைந்தார்.
           ஏராளமான இராணுவத்தினர் கிழக்கு பாகிஸ்தானைச்சுற்றி மூன்று புறத்திலும் இந்திய கடற்படை நான்காவது பக்கமான வங்கக்கடல் முழுவதும் குவிக்கப்பட்டிருந்தனர்.
                   அகதிகளை அவர்கள் நாட்டிற்குள் அனுப்ப போரைத்தவிர வேறு வழியில்லை என்றானபொழுது 03 Dec1971 இந்தியா பன்முக தாக்குதலை ஆரம்பித்தது.
               போர் ஆரம்பித்த மூன்றாவதுநாள் Bangladesh என்ற புதிய நாட்டை இந்தியா அங்கீகரித்தது.
               பன்னாட்டு தலைவர்களும் ஐக்கியநாட்டு சபையும் இந்த போரின் முன்னேற்றம் குறித்து உன்னிப்பாக கவனித்தனர் .போரின் முடிவு எப்படியிருக்கும் என்பது      வெளி உலகத்திற்குப் புரியவில்லை.ஆனால் இந்திய இராணுவத்தினர் "சேருமிடம் டாக்கா "என்ற குறிக்கோளுடன் அதி வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தனர்.ஆக பங்களாதேஷ் என்ற புதிய நாடு உருவாவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
              பல இடங்களில் பாகிஸ்தானிய இராணுவம் போரிட விரும்பவில்லை.ஆங்காங்கே அவர்களை சுற்றி வளைத்துவிட்டு மற்ற இந்தியப்படைகள் டாக்கா நோக்கி மூன்று புறங்களிலும் முன்னேறிக்கொண்டிருந்தனர்.
                      கணேசன் இருந்த படைப்பிரிவு புது முயற்சியாக 130 mm Artillery gun ஐ பொறியாளர்களின் கனரக மிதவையில் ஏற்றி மேகனா நதி மூலமாக நரசிங்கிடி என்ற கிராமம் வரை சென்று அங்கிருந்து இயக்கினார்.பீரங்கிக் குண்டு டாக்கா விமானதளத்தில் விழுந்தது.
                           போர் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்றுணர்ந்த பாக் இராணுவ தளபதி A A K Niyazi சரணடைய ஒப்புக்கொண்டார்.
                16 December 1971 மாலை நான்கு மணியளவில் பாகிஸ்தானின் 93,000 இராணுவத்தினர் இந்தியாவிடம் டாக்கா Race Course மைதானத்தில் சரணடைந்தனர்.
                 உலகிலேயே நடந்த போர்களில் பங்களாதேஷ் போர் புதிதாக போருக்கு இலக்கணம் வகுத்தது.
                    கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாலும் ஒரு சரித்தரப் புகழ் பெற்ற போரில் கலந்துகொண்டது பெரு மகிழ்ச்சி என்ற நினைவுடன் கணேசன் இராணுவப்பொறியியல் கல்லூரி திரும்பினார்.
                        28 june 1973 அவரது மூன்றாண்டு கால படிப்பு முடிந்தது.சிவில் இன்ஜினியரிங் பிரிவில் கணேசன் முதல் மாணவராக வெற்றி பெற்றிருந்தார்.சிறந்த நீச்சல் வீரர் என்ற பரிசும் பெற்றார்.ஆரம்பகால இராணுவப் பயிற்சியின்போது சிறந்த தட கள வீரர் என்ற பரிசும் பெற்றிருந்தார்.
                இந்த பெருமையுடன் அவர் 4 Engineer Regiment என்ற அவரது பழைய படைப்பிரிவிற்கே மீண்டும் வந்து சேர்ந்தார்.
                      பங்களாதேஷ் போர் முடிந்து அவர்களை திரிபுரா மாநிலத்தில் விட்டு வந்திருந்தார்.அவர்கள் அங்கிருந்து உடனடியாக மேற்கு பாகிஸ்தான் எல்லைப்புறம் சென்று அங்கு பணி  முடிந்து தற்பொழுது பெங்களூரு வந்திருந்தார்கள்.
                        கணேசன் பெங்களூரு வந்து சேர்ந்தபின் அவரது அண்ணன்கள் அவரது திருமண முயற்சியில் ஆர்வம் கொண்டனர்.         






















      

வியாழன், 21 ஜூன், 2018


                          உருவமற்ற குரல்............8

                    ரூர்கி பல்கலைக்கழகத்தில் மூன்றுமாத பயிற்சிக்காக கணேசன் வந்திருந்தார்.அங்கு வந்த இரண்டாம் நாள் 1966 ஜனவரி 11ம் நாள் பாரதப்பிரதமர் லால்பகதூர் சாஸ்த்ரி மரணமடைந்தார்.ரஷ்யாவின் முயற்சியினால் இந்திய-பாகிஸ்தானிய பேச்சுவார்த்தை தாஷ்கண்ட்டில் நடை பெற்றபோது சாஸ்த்ரி அங்கு மரணமடைந்தார்.
                         இவைகளைப்பற்றிய தாக்கம் ஏதுமில்லாமல் கணேசன் பயிற்சி நடந்தது.பிப்ரவரி 4 ல் அவரது சின்ன அண்ணன் ராமமூர்த்தியின் திருமணம் நடந்தது.
            இதற்கிடையில் போர் நிறுத்த ஒப்பந்தமும் ஏற்பட்டது.கணேசன் படைப்பிரிவு பழைய இடமான பெறலிக்கு செல்ல உத்திரவிடப்பட்டது.அதேசமயம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்ஜினியர் ரெஜிமென்ட் உருவாக்கவும் உத்திரவு வந்தது.இதனால் கணேசன் பொறியாளர் பிரிவு போர்முனையிலிருந்து அஸ்ஸாம்  செல்லவும் அங்கு 23 Inf Div என்ற படைப்பிரிவின் பொறியாளர் அங்கமாக 4 Engineer Regiment என்ற 
 புதிய பொறியாளர் அமைப்பை உருவாக்கவும் உத்திரவு வந்தது.
                     இதனால் கணேசன் ரூர்கி பல்கலைக்கழகத்திலிருந்து அஸ்ஸாம் செல்ல உத்திரவு வந்தது.1966 ம் ஆண்டு ஜூன் 2 ம் நாள் 4 என்ஜினியர் ரெஜிமென்ட் என்ற புதியஅமைப்பு  உருவானது.கணேசன் captain என்ற பதவி உயர்வு பெற்றார்.
                   1966 ம் ஆண்டுக்கான விடுமுறையை நவம்பர்-டிசம்பர் போன்ற சமயத்தில் எடுத்துக்கொண்டு ஊர் வந்தார் கணேசன்.அப்போதுதான்  அவரது கேப்டன் பதவிக்கான சம்பளம் மொத்தமாக வந்தது.கணேசன் தனது பெற்றோரை ராமேஸ்வரம்,காசி போன்ற இடங்களுக்கு அழைத்துச்செல்ல விரும்பினார்.அதுவே நல்ல சமயம் என்று ராமேஸ்வரம் புறப்பட்டார்.உடல் நலமில்லாத அம்மாவுக்குத் துணையாக தங்கையையும் கூட்டிச்சென்றார்.

                            ராமேஸ்வரம்,மதுரை,பழனி என்று சில ஊர்களுக்கு ரயிலில் முதல் வகுப்பில் அழைத்துச்சென்று விட்டு திரும்பினார்.

                             1967 ம் ஆண்டு மாற்றங்கள் அதிகமின்றி சென்றுமறைந்தது.1968 ம் ஆண்டு கணேசன் வாழ்வில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.இராணுவப் படைப்பிரிவிலிருந்து அவர் கட்டுமானப்பிரிவிற்கு மாற்றப்பட்டார் .பொதுப்பணித்துறை வேண்டாம் என்று இராணுவத்திற்கு வந்த அவரை மீண்டும் அதுபோன்ற அமைப்புக்கு மாற்றியது விதியின் விளையாட்டு போலும்.

                     Chief Engineer,CWE,GE எல்லோரும் ஒரே இடத்திலிருக்க Assisstant Garrission Engineer என்ற பதவியில் அதே இடத்தில் கணேசன் வேலையை ஏற்றுக்கொண்டார்.ஒரு கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் வேலை நடந்துகொண்டிருந்தது.32 லட்ச ரூபாய் ஒப்பந்தக்காரருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது 
             நடந்துகொண்டிருக்கும் வேலையின் இடையில் கணேசன் சேர்ந்திருப்பதால் அதுவரை நடந்துள்ள வேலையின் தரம் பற்றி ஒப்பந்தக்காரரும் கணேசனும் ஒருங்கிணைந்த ஒரு பட்டியல் தயார்செய்து இருவரும் கையெழுத்திட்டனர்.

                        அதன்படி வேலையின் மதிப்பு 30 லட்ச ரூபாய் தான்  வந்தது. இரண்டு லட்ச ரூபாய் போல் over payment ஆகியிருந்தது.ஒருகோடி ரூபாய்க்கான வேலையில் 2 லட்சம் அதிகமாக்க கொடுத்திருப்பது பெரிய குற்றமில்லையென்று  கணேசன் ஏற்றுக்கொண்டார்.ஆனால் வேலைக்கு அவர் புதியவர் என்பதால் அடுத்த பில் போடும்போது இந்த over payment சரிக்கட்டி விடவேண்டும் என்று உத்திரவிட்டார்.

                            ஒப்பந்தக்காரர் கணேசனிடம் வேலை செய்வது அவ்வளவு சுலபமில்லை  என்பதைப் புரிந்து கொண்டார். இதனால் வேலையில் தொய்வு ஏற்பட்டது.ஒப்பந்தக்காரர் உயர் அதிகாரிகளின் தயவை நாட ஆரம்பித்தார்.யாரிடம் போனாலும் கடைசியில் கணேசனிடம்தான் வரவேண்டியிருந்தது, 

                      நேரடியாகவும் மறைமுகமாகவும் பலவிதமான பிரச்சினைகள் வந்தன.கணேசன் எல்லாவற்றையும் சமாளித்தார்.இந்நிலையில் அவரது அவசரகால இராணுவப்பணி முடிந்துவிட்டது.அவர் மீண்டும் பொதுப்பணி துறைக்குத் திரும்பவேண்டும் அல்லது மீண்டும் ஒருமுறை அவர் இராணுவத்தேர்வுக்குப் போகவேண்டும்.

                            கணேசன் இராணுவத்திலேயே தொடர விரும்பி அலகாபாத் இராணுவத் தேர்வு மையத்திற்குப் போனார்.அதிர்ஷ்ட வசமாக தேர்வு பெற்றார்.
                   இடைக்காலத்தில் அவரது அன்னையின் உடல்நிலை மோசமானது.இவரைப் பழிவாங்க நினைத்த உயர் அதிகாரி அவருக்கு விடுமுறை தர மறுத்து விட்டார்.மறுநாளே அவர் அன்னை மரணமடைந்தார்.உயர் அதிகாரி வருத்தப்பட்டு உடனே அவரை விடுமுறையில் போக வற்புறுத்தினார்.
                    
                              ஆனால் கணேசன் வரமாட்டார் என்றெண்ணிய அவர் அண்ணன்கள் அன்னையின் உடலை எரியூட்டிவிட்டார்கள்.வீட்டிற்கு வந்தும் கூட கணேசனால் அவர் அன்னையின் உடலைப் பார்க்க வில்லை.
                   தாங்கொணாத்துயருடன்  அ ன்னையின் அஸ்தியை காசியில் கங்கையில் கரைத்துவிட்டு அவர் பணியிடம் திரும்பினார்.

                        1970,May 9 th மூன்றாண்டுகால B.Tech படிப்பிற்காக அவர் பூனா இராணுவப் பொறியியல் கல்லூரி வந்தடைந்தார்.

                                











 

சனி, 12 மே, 2018

                                               கல்லடிபட்ட கனிக்கொத்தை 
                                          சொல்லடியின்றி காப்பீரோ 
 கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்  பற்றி படித்துவரும் வாசக அன்பர்கள் அவரது பெற்றோர் மற்றும் உற்றம்  சுற்றம் பற்றியும் ஓரளவாவது அறிந்திருப்பீர்கள்.மலரும் நினைவாக அவற்றை சற்று பார்க்கலாம்.
     திருவாரூர் மாவட்டம்   சன்னாநல் லூர் கிராமத்தில் பாவாடை -தெய்வானை குடும்பம் சுற்று வட்டார மக்களிடையே சற்று அறிமுகமானது என்றால் மிகை இல்லை.காரணம் அவர்களது வாரிசுகள் அந்த காலத்தில் (1940-50 ) கல்வியின் எல்லைகளைத் தகர்த்தெறிந்து கொண்டிருந்தார்கள்.
                  ஐந்து  ஆண்பிள்ளைகள் இரண்டு பெண்கள் என்ற அந்த குடும்பத்தில் மூத்தவர் பசுபதி.1947 எஸ்.எஸ்.எல்.சி யில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அசத்தியவர்.
              அடுத்தவர் ராமமூர்த்தி.ஒன்றாம் வகுப்பு முதல் அவர் படித்த M.Com படிப்பு வரை ஒரு வகுப்பில் கூட முதல் மாணவன் என்ற தகுதியை விட்டுக்கொடுக்கவில்லை.உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அவர் B.Com பாஸ் செய்தபோது பல்கலைக்கழகத்தின் 34 வருட பதிவைத் தகர்த்தெறிந்து புதிய மீண்டும் அழிக்கமுடியாத பதிவை ஏற்படுத்தினார்.
         மிகவும் ஏழை என்றில்லாமல் சுமாரான வசதியுடனிருந்த பெற்றோர்,தாத்தா  பாட்டி போன்றோர் இவ்வளவு அறிவு ஜீவியான குழந்தைகளை நன்றாகப் படிக்கவைக்க வேண்டும்என்று அவர்களுக்கு தோன் றவில்லை.
அவர்கள் மண்ணின் மைந்தர்கள்.மண் தான் மிகப்பெரும் சொத்து என்று சேமித்த கொஞ்சம் பணத்தை நிலம் வாங்குவதில் ஈடுபட்டார்கள்.அப்படியும் பெருமளவில் நிலம் வாங்கிக் குவித்துவிடவில்லை



                           பெற்றோர்.அப்பா பாவாடை -அம்மா தெய்வானை
.
                தாத்தா பாட்டி காலத்தில் வாங்கிய நிலமே அதிகம்.
      இந்நிலையில் அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்ததினால் வரவும் செலவும் சரியாகப்போய்க்கொண்டிருந்தது போலும்.
               எஸ்.எஸ்.எல்.சி தாண்டிய மேற்படிப்பு என்று குடும்பத்தால் அனுப்பப்பட்டவர் அடுத்தவரான கணேசன் தான்.
               அப்பா பாவாடைக்கு வயது ஆகிக்கொண்டிருப்பதால் நிலபுலன்களை பாதுகாக்க ஒருவர் வீட்டோடு இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.குடும்பத்தலைவி கடுமையான காச நோயால் தாக்கப்பட்டார்.
               பெரிய கூட்டமாக இருந்த குடும்பம் சற்றே விலக ஆரம்பித்தது.காலமெனும் காட்டாறு கரைபுரண்டோட பிள்ளைகளும் பெண்களும் திருமணம் ஆகி  தங்கள் தங்களது குடும்பம் என்று அவரவர்களுக்குப் பிடித்தமான இடத்தில் வசதிகளுக்கேற்ப வாழ ஆரம்பித்தார்கள்.
               பெரியவர் பசுபதி கடலூரிலும்,மூத்த பெண் திருச்சியிலும்,ராமமூர்த்தி சென்னையிலும் கணேசன் சென்னையிலும் கலியமூர்த்தி பிறந்த ஊரின் பெருமை சேர்ப்பவராக சன்னாநல்லூரிலும்,அடுத்த பெண் திருச்சியிலும்,கடைசி பிள்ளை நடராசன் சென்னையிலும் என்று அந்த சன்னாநல்லூர் குடும்பம் கல்லடிபட்ட   கனிக்கொத்து போல் சிதறியது.
                   இதில் சென்னையில் செட்டிலான கணேசன் தேசீய அளவில் பெயரும் புகழும் பெற்றிருந்தார்.அவரது சாதனைகள் பற்றி அவ்வப்பொழுது ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன.அவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள சிலர் சன்னாநல்லூர் சென்று விசாரித்துள்ளனர்.

               
                          
                                     
   அன்றைய குடியரசு தலைவர் வேங்கடராமனுக்கு இராணுவ மரியாதை தரும் கர்னல் கணேசன்.

                        அதிர்ச்சிதரும் விதமாக அப்படியொரு குடும்பம் சன்னாநல்லூரில் இல்லை என்று ஊர் மக்கள் சொல்லிவிட்டார்கள்.
                   இங்குதான் விதி விளையாட ஆரம்பித்தது.
            2010 ம் ஆண்டு ஒருநாள் கணேசன் திருச்சி எக்ஸ்பிரஸ் ட்ரைனில் பகல் வேளையில் பயணித்துக்கொண்டிருந்தார்.வண்டி விழுப்புரம் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.கூட்டமே இல்லாத பயணம்.வண்டிக்குள்ளேயே கணேசன் இங்கும் அங்குமாக நடந்து வேறு ஒரு இடத்தில் அமர்ந்தார். எதிரில் உட்கார்ந்திருந்தவருடன் பேச்சு ஆரம்பமானது.
               அந்தப் பெரியவர் இந்தியாவின் ஆய்வுக்குழு தலைவராக தென் துருவ ம் சென்றுவந்த கர்னல் கணேசன் பற்றி கேள்விப்பட்டு சன்னாநல்லூர் சென்று விசாரித்ததாகவும் அப்படி யாரும் அந்த ஊரில் இல்லை என்றும் சொல்லிவிட்டார்கள்.
                நீங்கள் இராணுவ அதிகாரி என்கிறீர்களே உங்களுக்கு கர்னல் கணேசனைத்தெரியுமா? என்கிறார்.
                   அப்படியா என்று வியந்த கணேசன் தனது இடத்திற்கு வந்து தான் எழு திய நூல் ஒன்றை எடுத்து அவருக்குப் பரிசாக அளித்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தார்.
             1950-60 களில் பெயரோடும் புகழோடும் இருந்த பாவாடை-தெய்வானை குடும்பம் சன்னாநல்லூர் மக்களிடையே கிட்டத்தட்ட மறைந்துபோய்வி ட்டதாக கணேசன் உணர்ந்தார்.
               காலப்போக்கில் பசுபதி,ராமமூர்த்தி,கலியமூர்த்தி,நடராசன் என்ற சகோதரர்களும் வாலாம்பாள் என்ற மூத்த சகோதரியும் இப்பூவுலகை நீத்தார்கள்.
               ஆனால் கணேசன் பாவாடை -தெய்வானை குடும்பத்தின் பெயர் சன்னாநல்லூர் சுற்று வட்டாரத்தில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் அறிமுகமாகும் விதத்தில் அங்கு அகத்தூண்டுதல் பூங்கா அமைத்து இளைய சமுதாயம் சாதனை படைக்கும் விதத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.



                         பிரிந்த உறவுகள் அவ்வப்பொழுது அங்கு ஒன்று கூடி பிறந்த மண்ணின் பெருமை பேசுகின்றன.






                                             தங்கை சகுந்தலாவின் குடும்பம்.


     பெரிய அண்ணன்  பசுபதி அவர்களின்  இரண்டு மகள்கள் பிரேமா மற்றும் சாந்தி .
           
ஆனால் ஒரு வருத்தம் இப்படி உறவுகள் பிறந்தமண்ணை மிதிக்கும்போது யாருக்கும் தெரிவிப்பதில்லை.ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு பிடித்த விதத்தில் செயல் பட்டாலும் ஒருங்கிணைந்த சக்தியாக முன்வந்தால் "பாவாடை- தெய்வானை "குடும்பம் உலக அளவுக்கு பேசப்படும் நிலையை உருவாக்கலாம் என்பது எனது கருத்து.
             கனிக்கொத்து சிதறி விட்டாலும் "சொல்லடி இன்றி '" இவர்களது வாரிசுகள் சரித்திரம் படைப்பார்கள்.
                   
                    காலம் வெல்லும்;கனவுகள் மெய்ப்படும் .