வெள்ளி, 28 ஜனவரி, 2022

          ஆழிசூழ் உலகில் ஒரு கலங்கரை  விளக்கு.

                         கடலாடும் மக்களுக்கு வழிகாட்ட நம் முன்னோர்கள் அமைத்தது கலங்கரை விளக்கு. அதுபோல் பிறவிப்  பெருங்கடல்  கடக்கவும் வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டவும் அமைக்கப்பட்டது "அகத் தூண்டுதல் பூங்கா. ".பெங்களூரு,சென்னை,பேரளம் ,சன்னாநல்லூர் போன்ற இடங்களில் இந்த பூங்கா அமைக்கப்பட்டிருந்தாலும் சன்னாநல்லூரில் அமைந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.அது இந்த நிகழ்வின் காரணகர்த்தாவான கர்னல் கணேசன் பிறந்த ஊர்.


                இந்த கட்டுரையின் நோக்கம் கர்னல் கணேசன் காலத்திற்குப்பிறகு இந்த பூங்காவை எப்படி நிர்வகிப்பது என்பது பற்றியது .

                       சன்னாநல்லூர் அகத் தூண்டுதல் பூங்காவில் ஒரு நினைவுத்தூண்,ஒரு பயிற்சி அரங்கம்,மற்றும் ஒரு நூலகம் உள்ளது. நூலகத்தினுள்  ஒருவர் தங்கிக்  கொள்வதற்கான எல்லா வசதிகளும் உள்ளன.ஒரு அலுவலக அறையும்,ஒரு சிற்றுண்டி தயாரிப்பதற்கான வசதியுள்ள சமையலறையும் உள்ளது.


                       2017 லிருந்து இன்றுவரை பூங்காவின் பாதுகாப்பிற்காக இருக்கும் திரு ஜெயபிரகாஷ்  அவரது ஆயுட்காலம் வரை பாதுகாவலராக இருக்கவேண்டும்.பூங்காவின் வசதிகளை உபயோகப்படுத்திக்கொண்டு இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக நிகழ்ச்சிகளை நடத்த விரும்புவோர் திரு ஜெய்பிரகாஷின் அனுமதியோடு செலவுகளை முடிவு செய்து வாடகை தொகையை அவரிடம் முன்பணமாக தந்துவிடவேண்டும்.

                           கர்னல் கணேசன் காலம் வரை  அவரே தலைமை இயக்குனராக (Managing Director.)இருப்பார்.அவரது காலத்திற்குப் பிறகு அவரது இரண்டு மகன்களில் ஒருவர் பொறுப்பேற்றுக்கொள்வார்.ஆனால் இருவருமே வெளிநாட்டில் இருப்பதால் அகத்தூண்டுதல் பூங்காவின் நிகழ்வுகள் முழுக்க முழுக்க பாதுகாவலர் ஜெயப்ரகாஷ் தலைமையிலேயே நடைபெறும்.

                              பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அகத் தூண்டுதல் பூங்கா உருவாக்கப்படவில்லை. ஆகையினால் இதன் நிகழ்வுகள் பணம் சம்பாதிப்பதை உள்  நோக்கமாகக் கொண்டு செயல்படக்கூடாது. இளைய சமுதாயத்தினரின் மன வளம் ,நலிந்தோர் நலம் பாராட்டல்,இந்தியதேசத்தின் பெருமையைப் பறைசாற்றல் போன்ற நிகழ்வுகளே இங்கு நடத்தப்படவேண்டும் .

                             பூங்காவில் உள்ள பயிற்சி அரங்கம் காலப்போக்கில் விரிவடைந்து "பாவாடை-தெய்வானை "பல்தொழில் பயிலரங்கமாக வளர்ச்சியடையவேண்டும். அதன் அடிப்படையில் தொழிலதிபர்கள்  மாணவர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் கட்டணமின்றி பயிற்சி நடத்த விரும்ம்பினால்  அவர்களிடம் வாடகை என்று ஏதும்  வசூலிக்காமல் மின்சாரக்கட்டணம்,உபயோகப்படுத்தும் பொருள்களுக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.  பார்வையாளர்களுக்காக  ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் காலத்தின் மாற்றங்களுக்கேற்ப மாற்றப்படவேண்டும்.

             பூங்கா வளாகத்தில் யோகா,உடற்பயிற்சி, கராத்தே  போன்ற உடல்,மன நல  வகுப்புகள் நடத்தலாம்.

                      மகளீர் மன்றம் பெண்களுக்கான வகுப்புகள்,பயிற்சிகள் நடத்த விரும்பினால்  அனுமதிக்கப்படலாம்.அப்படிப்பட்ட வகுப்புகள் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை மட்டுமே நடத்தப்படவேண்டும்.இரவு நேரத்தில் நடத்தக்கூடாது.

                 பூங்காவில்  உள்ள நூலகம் பொதுவான நூலகம் போல் இருக்காது.இது "அறிவை  அறிவால்  அறிந்துகொள்ளும் அறிவுத் திருக்கோவில்."இங்கு மனித வள மேம்பாட்டுக்கான நூல்களும்,அறிவு வளர்ச்சிக்கான நூல்களும்  உள்ளன.புகழ் பெற்ற  சமூக நலனுக்காகப் பாடுபட்ட சான்றோர்களின் வாழ்க்கை வரலாறும் ,தமிழ் இலக்கியங்களும் உள்ளன. சில சிந்தனையாளர்கள் இலவசமாகக் கொடுத்த நூல்களும் உள்ளன. எக்காரணத்தைக்கொண்டும் நூல்கள் வெளியில் எடுத்துச்செல்லக் கூடாது. குறிப்புகள் எடுத்துக்கொள்ள விருப்பப்பட்டால் பேப்பர், பேனா  இலவசமாக வழங்கப்படும்.பாதுகாவலர் அல்லாமல் நூலக நிர்வாகத்திற்காக ஒருவர்  நியமிக்கப்படவேண்டும்.ஆனால் அவர் பாதுகாவலரின் கட்டளைப்படியே இயங்கவேண்டும். நூலகம் காலை 9.00 மணி முதல்  மாலை 6.00 மணிமுதல் இயங்கவேண்டும்.

                          நூலகத்திற்கு வருவோரின் வருகைப் பதிவு செய்யப்படவேண்டும்.வருவோருக்கு காலை 11.00 மணி அளவிலும் மாலை 5.00 மணி அளவிலும் இலவச தேநீர் வழங்கப்படவேண்டும்.

                         கால மாற்றங்களுக்கேற்ப  நகல் எடுப்பதற்கான  xerox machine ம் கணினி யும்,பிரின்டர் மற்றும் அது சம்பந்தமான மெஷின்களும் வாங்கப்படவேண்டும்.ஆனால் அவைகளை  உபயோகப்படுத்தும் முறை தெரிந்தவரே  நூலகராக இருக்கவேண்டும்.

                          பூங்காவின் செலவினங்கள் அதில் வரும் வருமானத்திலேயே சமாளிக்கவேண்டும்.புதிய கட்டுமானங்கள்,பொருள்கள் வாங்குவது போன்றே செலவுகள் நிவாக இயக்குனரின் முன் அனுமதி பெற்றே செய்யவேண்டும்.

                             கர்னல் கணேசனின் பெற்றோர் மற்றும் முன்னோர்களின் சொத்துக்கள் பாகம்   பிரிக்கப்படாமல் இருக்கிறது.பூர்வீக சொத்துக்கள் சன்னனநல்லூர் ,தூத்துக்குடி மற்றும் முடிகொண்டான் ஆகிய மூன்று கிராம எல்லைக்கு உட்பட்ட இடங்களில் உள்ளது.உயர் கல்விக்குத் தகுதியை எல்லா வழியிலும் இழந்துவிட்ட அவரது தம்பி கலியமூர்த்தி சூழ்நிலை காரணமாக கிராமத்திலேயே தங்கி இருக்க நேர்ந்தது.ஆனால் காலப்போக்கில் அவர் சுயநல வாதியாக மாறி,குடும்ப சொத்துக்களின் வருவாயை தான்,தன்  மனைவி  மக்கள் என்று எடுத்துக்கொண்டார்.இது எந்த காலத்திலும் வாரிசுகளால் விவாதிக்கப்படலாம்.



                           பூர்வீக சொத்துக்களில் தன் பங்கு என்று கேட்காமல் பூங்கா அமைக்க சாலையோரத்து நிலம் வேண்டும் என்று கணேசன் கேட்டபோது  தயங்காமல் அவரே முன் நின்று கணேசனின் தாத்தா நாராயண படையாச்சி  பெயரில் உள்ள நிலத்தை வழங்கியதோடு  ஆரம்ப வேலைகளை அவரே கவனித்துக்கொண்டார்.பூங்கா அமைத்துள்ள இடம்,கர்னல் கணேசன் பெயருக்கு மாற்றப்பட வேண்டும்.இதற்கு கணேசனின் அண்ணன்  தம்பிகள்,அக்காள்,தங்கை எவருக்குமேஆட்சேபனை தெரிவிக்கவில்லை.சட்ட பூர்வ வேலைகள் தாமதமாகின்றன.இருந்தாலும் பூங்கா அமைந்துள்ள இடத்தின் இன்றைய  உரிமை மற்றும் அதன்  பிற்கால உரிமை கணேசனின் வாரிசுகளுக்கே உரித்தாகும்.

                         கணேசனின் அம்மா பிறந்த ஊர்  பேரளம்-காரைக்கால் சாலையில் மேனாங்குடி என்ற கிராமத்திற்கு அருகில் உள்ள "செம்பியநல்லூர் ".அவரது அம்மா தெய்வானையின்  இளமை வாழ்க்கை, கணேசனை மிகவும் பத்தித்துள்ளது.அம்மாவின் குடும்பத்தினருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தில் அம்மாவின் பெரிய தம்பி ராமச்சந்திர படையாச்சியின் பேரனும்,பழனிவேல் படையாச்சியின் மகனுமான ஜெயபிரகாஷ் என்பவருக்கு பூங்காவின் பாதுகாவலராகவும், அதன் அனுபோக உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

                                                               திரு .ஜெயபிரகாஷ்.

அவரது காலத்திற்குப் பிறகும் அவரது வாரிசுகளில் ஒருவர் பூங்காவின் வசதிகளை அனுபவிக்கலாம்.ஆனால் எக்காரணத்தைக்கொண்டும் பூங்காவிற்கு உரிமை கொண்டாட முடியாது.

                                அகத் தூண்டுதல் பூங்கா  அமைக்கப்பட்டதன் நோக்கம் பல நூறு ஆண்டுகளுக்கு நீடித்து நிற்க்கவும்,மனிதன் மகத்தான சக்தி படைத்தவன் என்பதை உலகுக்கு பறைசாற்றவும் ,எண்ணங்களே வாழ்க்கையை அமைக்கிறது என்பதால் இது ஒரு "சுய முன்னேற்ற சிந்தனை மையமாக "வும் இருக்கவேண்டும்.

                             சன்னாநல்லூர் மண் உலகின் கீழ்க் கோடியான  தென் துருவத்தில் தூவப்பட்டு ,அங்கு சுமார் 50 கோடி வருடங்களாக உருகாத உறைபனிக்கிடையில் கிடந்த இந்த கற்பாறை  சன்னாநல்லூர் கொண்டு  வரப்பட்டு உயரமான தூணில் நிறுவப்பட்டுள்ளது "மனிதனின் திறமை அளவுகோலுக்கு அப்பாற்பட்டது என்பதை நிரூபிப்பதாகும் .

ஆண்டு விழா.

                       வருடத்திற்கு ஒரு முறை ஆண்டு விழா நடத்தப்படவேண்டும். டிசம்பர் 1 ந்தேதி கர்னல் கணேசன் பிறந்தநாள்.டிசம்பர் 23 அண்டார்க்டிக்கா கல் நிறுவப்பட்ட நாள். மே  மாதம் 17 ந்தேதி நூலகம் திறக்கப்பட்ட நாள். இப்படி ஏதாவது ஒரு நாளில் ஆண்டு விழா கொண்டாடப்படவேண்டும்.

                    ஓராண்டில் நடந்த நிகழ்வுகள்,பூங்காவைப் பார்வையிட்ட முக்கியமான மனிதர்கள்,அடுத்து திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வுகள் பற்றி பொது மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.நலிந்தோர் நலம் பாராட்டல்,வசதியற்ற மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை,போன்ற நிகழ்வுகள் இருக்கலாம்.

                        ஆண்டு விழா காலை 9.00 மணி போல் ஆரம்பித்து சிறப்பான பகல் விருந்துடன் நிறைவு பெறவேண்டும்.உத்தேசமாக செலவுகள் கணக்கிடப்பட்டு ,அதர்க்கானப்  பணத்தை ஏற்பாடு செய்த பிறகே விழா நடத்தவேண்டும்.விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப் படவேண்டும். உள்ளூர் ஊடக பிரதிநிதிகள் அழைக்கப்படவேண்டும்..புகைப்பட,வீடியோ பதிவுகள் இருக்கவேண்டும்.

                             விழா முடிந்தவுடன்,குறை,நிறைவுகள் ஆராயப்பட்டு மீண்டும் தவறுகள் நடக்காதவாறு பதிவு செய்யப்படவேண்டும்.

                      2022 ம் ஆண்டு ஜனவரி 28ம் நாளான இன்று 80 வது அகவையில் பயணித்துக்கொண்டிருக்கும் கணேசன் தனது காலத்திற்குள் பூங்காவின் சட்டபூர்வ உரிமையைப்  பதிவு செய்துவிடலாம்.

                       இதை முகநூலிலும்,மற்ற ஊடகங்களிலும் பதிவிடுவதன் நோக்கம் சன்னாநல்லூர் "பாவாடை-தெய்வானை "குடும்பத்தின் வாரிசுகள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு இந்த செய்தி போய்ச்சேரவேண்டும் என்பதேயாகும்.


 தொடர்புக்கு;

                       Colonel P Ganesan,V S M,943,H Block,17th main road,Annanagar,Chennai-600040

                                 cell;9444063794,9884060671,044-26163794

                                  e mail;pavadai.ganesan@gmail.com.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக