வியாழன், 14 ஜனவரி, 2021

             இந்திய  இராணுவ தினம்-15 January.

ஒரு விபத்து போல எனது இராணுவ வாழ்க்கை  அமைந்தாலும்,உடலாலும்,மனதாலும்,வாக்காலும் நோக்காலும் இராணுவ வாழ்க்கையை மிக மிக மகிழ்வோடு நான் அனுபவித்து வாழ்ந்தவன்.எல்லைப்புற தனிமை வாழ்க்கை இயற்கையை ரசிக்கவும்,ஏராளமான தமிழ் இலக்கியங்களை படிக்கவும் கிடைத்த வாய்ப்பாக எடுத்துக்கொண்டேன்.



              1965 ஆண்டு ஆகஸ்ட் 28-29 தேதிகளில் பஞ்சாப் மாநிலம் அம்பாலா என்ற இடத்தில் 24 மணிநேர இராணுவ உடையில் போர்க்களத்தை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்த நேரம்...."சைனிக்சமாச்சார் "என்ற இராணுவ பத்திரிகையில் இதைப் படித்தேன், "The innocent Girl became a widow before she could become a woman."இதன் பொருள் உணர்ந்து சிந்திப்பதற்குள் 1965 ம் ஆண்டின் இந்திய-பாகிஸ்தானிய போர் முழக்கம் ஆரம்பமாகிவிட்டது.

                  சுமார் 30 ஆண்டுகள்  உருண்டோடிவிட்டது.சீருடை கலைந்து தெருவில் போகும் எண்ணற்ற மக்களில் ஒருவராக நான் கலந்துவிட்டாலும் "பெண்ணாக மாறுமுன்பே விதவையாக ஆக்கப்பட்டால் அந்த சிறுமி '"என்ற வரிகள் உள் உணர்வோடு கலந்துவிட்டது என்பதை நான் அறிவேன்.



          நாட்டுப்பற்று இருந்தாலும்,நாட்டின் பாதுகாப்புப்படையில் அங்கம் வகிக்க எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.அந்தப் பேரதிர்ஷ்ட்டம் "Men of Noble Birth "என்று  ஆங்கிலேயர்களால் விமரிசிக்கப்பட்ட ஒரு சிலருக்கே கிடைக்கிறது.அப்படிக் கிடைத்தவர்களில் பலர் என் கண்முன்னே மண் மேடுகளானார்கள்.1965.மற்றும் 1971 என்ற இரு போர்க்களங்கள் மட்டுமல்லாது எல்லைப்புறங்களில் இயற்கைக்கு கொடுமைகளுக்கும்,எதிரிகளின் நயவஞ்சக கொடுமைகளுக்கும் ஈடுகொடுத்த பலரும்கூட மண்ணோடு மண்ணாகிப் போனார்கள்.இன்றும் மண்ணாக்கிக் கொண்டிடுக்கிறார்கள்.அத தாக்கமே இந்த கற்பனைக்கதை.

                      ஒரு தேசத்தின் முதல் தர பாதுகாப்புப் பணியில் இருக்க ஒவ்வொரு இளைஞர்களும் பயிற்றுவிக்கப்படன்வேண்டும்.அப்படிப்பட்ட பயிற்சியை அதுபோன்ற வேல்வித் தீயிலிறங்கி  வெற்றியோடு திரும்பிய சத்திய புத்திரர்களால்தான் நடத்தமுடியும்.

            வாருங்கள் ! !அப்படிப்பட்ட சில மாமனிதர்களை சந்திப்போம்.

 இது "மண் மேடுகள் "என்ற எனது புதினத்திற்கான என்னுரை.இந்த நூலுக்கு அணிந்துரையாக முன்பே இரு மாமனிதர்களின் வழங்கிதைப் பதிவிட்டிருக்கிறேன். 

                            01october 2016............Mr.Harihara Subramanian.

                     07 April 2020.............Dr.Anbashakan,Tamil professor,Annamalai                                                                            university.

            வாசக அன்பர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்; இவைகளைப்படித்துவிட்டு தங்களது கருத்துக்களை பதிவிட்டால் முழு  நாவலையும் பகுதி பகுதியாகப் பதிவிடுகிறேன்.

                                                                      



                                     நன்றி.





1 கருத்து:

  1. மண் மேடுகள் என்ற தலைப்பே மனதில் ஒருவகையான ஏக்கத்தையும், எழுச்சியையும் உண்டாக்கியதை உணர்கிறேன். உங்களின் எழுத்துமூலம் பல அரிய செய்திகளைத் தெரிந்துகொள்ள ஆர்வமோடு காத்திருப்போரில் நானும் ஒருவன்.

    பதிலளிநீக்கு