வியாழன், 15 நவம்பர், 2018


                                                     சொல்லும் செயலும்.

              அறிவினால் சிருட்டிசெய்த அதிகார பிரயோகத்தின்
                     நெறியினை உணரா மாந்தர் நிர்வாகம் செய்யும்போது
                      முறிவில்லா முறை பழக்கி முன் விதி நினைந்து மக்கள்
                     கறியில்லா உணவைக்கொள்ளும் கருத்தொக்க வாழ்கின்றாரே
                                                                                     ..........    வேதாத்ரி மகரிஷி.
          சிந்தனைக்கும் தனது சுதந்திரத்திற்கும் சட்டத்திற்கு உட்பட்ட மனத்தெளிவுதான் மனிதனை உயர்த்துகிறது.அதிகாரச் சட்டங்கள் அறிவாளிகளால் உருவாக்கப் படுகின்றன.அவற்றை முட்டாள்கள் அமல்படுத்தும் போது அந்த ஆளுகைக்கு உட்பட்டவர்கள் வருந்த த்தானே நேரும்.
                  ஓரிரு ஆண்டுகளுக்கு முன் கர்னல் கணேசன் எழுதிய The Sound of Silence and  Voices  of isolation   என்ற நூல் நல்ல வரவேற்பைப்பெற்றது.
நாட்டுப்பற்றைத் தூண்டக்கூடிய நூல் என்பதால் அதன் சில பிரதிகள் மாண்பு மிகு பிரதம மந்திரி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



                   


















சிலநாட்களிலேயே எல்லாப் பிரதிகளும் தீர்ந்து விட்டதால் இரண்டாம் பாதிப்புக்கு பிரிண்டர் அவர்களை அணுகினேன்.2000 பிரதிகள் போடவும்,Rs 40,000 ஆகும் செலவில் Rs 15,000 முன் பணமாகத் தருவதாகவும் ஏற்றுக்கொண்டு ஒரு ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டோம்.
     
                           சில நாட்களில் நூல் தயாராகி ஒரு பிரதியைக் கொண்டு வந்து  கொடுத்தார்.பரிசீலித்துப் பார்த்தபோது ஒரு பக்கம் முழுவதுமாக விட்டுப்போயிருந்தது.
                  தனது தவற்றை ஏற்றுக்கொண்ட பிரிண்டர் நூல் முழுவதையும் திரும்பவும் பதிப்பித்து தருவதாக ஏற்றுக்கொண்டார்.நிச்சயம் அவருக்கு இது லாபமானதாக இருக்காது.
                  சில நாட்களில் புதிய பிரதியான நூலைக் கொண்டுவந்தார்.முதல் பார்வையிலேயே பேப்பரின் தரத்தைக் குறைத்து விட்டார்  என்பது தெரிந்தது.மேலும் ஒப்பந்தப்படி 2000  பிரதிகள் போடாமல் திருத்தப்பட்ட நூல்
குறைவாகப் போட்டு பழைய பிரதிகளுடன் கலந்து விட்டால் எப்படிக் கண்டுபிடிப்பது. ?
             ஆகையினால் திருத்தப்பட்ட 2000 ம் பிரதிகளையும் பார்த்தபிறகே நான் மீதம் பணம் தருவேன் என்றேன்.அவர் பணம்  முழுவதும் கொடுத்து விட்டு நூல்களை எடுத்துச் செல்லுங்கள்  என்று வாதாடுகிறார்.

                        இதற்கு முடிவு என்ன ?.

நாட்டில் நல்லவர்கள் இருந்தால் இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்.



















3 கருத்துகள்:

  1. சிந்திக்க வைக்ககும் பதிவிது!

    பதிலளிநீக்கு
  2. வழி சொல்லுங்கள் என்றால் .......தங்களது கருத்தில் தெளிவில்லையே.
    காவல் துறை அதிகாரிகள் ,ரோட்டரி குறைதீர்க்கும் மையங்கள், தலைவர்கள் என்று
    சொல்லிக்கொண்டு ஊர் சுற்றி வருபவர்கள்,வழக்கறிஞர்கள் போன்றோர் என் முன்வரக்கூடாது.
    எனது தொடர்பு எண் 9444063794.

    பதிலளிநீக்கு
  3. வழி சொல்லுங்கள் என்றால் .......தங்களது கருத்தில் தெளிவில்லையே.
    காவல் துறை அதிகாரிகள் ,ரோட்டரி குறைதீர்க்கும் மையங்கள், தலைவர்கள் என்று
    சொல்லிக்கொண்டு ஊர் சுற்றி வருபவர்கள்,வழக்கறிஞர்கள் போன்றோர் என் முன்வரக்கூடாது.
    எனது தொடர்பு எண் 9444063794.

    பதிலளிநீக்கு