உருவமற்ற குரல்..........7
சென்னையில் இராணுவ மருத்துவ மனை செயின்ட் தாமஸ் மவுண்ட் ல் இருக்கிறது.மருத்துவமனையில் சேர்ந்த 2-3 நாட்களில் கால் கட்டு பிரிக்கப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.கால் சரியாகிவிட்டது என்று Re medical categorization board நடத்த உத்திரவு இடப்பட்டது.
எதோ காரணத்தால் அது கால தாமதமாக இடையில் 1965 ம் ஆண்டு தீபாவளி வந்தது.கிராமத்தில் பெற்றோர்கள் கணேசன் ஒரு காலை இழந்துவிட்டான் என்ற நினைவிலேயே இருந்ததால் இரண்டு நாட்கள் விடுமுறையில் போக விரும்பினார் .ஆனால் விடுமுறை மறுக்கப்பட்டது.
காலையிலிருந்து இரவு வரை அவுட் பாஸ் இரண்டு நாட்களுக்கு எழுதிவிட்டு கணேசன் பெற்றோரைப் பார்த்துவர போய்விட்டார்.இரவு பணிக்கு வந்த டாக்டர் கணேசன் மருத்துவமனையில் இல்லாதது குறித்து புகார் எழுதிக்கொடுத்துவிட்டார்.
மறுநாள் காலை இராணுவ தலைமையகத்திற்கும் காவல் நிலையங்களுக்கும் இராணுவ விதிமுறைப்படி "இராணுவ அதிகாரி ஓடிப்போய்விட்டார் " என்று தந்தி கொடுத்துவிட்டார்கள்.
மூன்றாம் நாள் காலை கணேசன் மருத்துவமனை வந்தார்.இராணுவ விதிகளின்படி அவர் குற்றவாளியாக உயர் அதிகாரிமுன் நிறுத்தப்பட்டார்.அதிகாரி Lt.Col Venkitaachalam கோபமாக ஏன் ஓடிப்போனாய் என்று கேட்டார்.கணேசன் போரில் அடிபட்டது, மூன்று மருத்துவமனை சுற்றியது,கிராமத்தில் பெற்றோர்களின் நிலை எல்லாவற்றையும் சொல்லி விடுமுறை மறுக்கப்பட்டதால் தான் ஊருக்குப்போய் பெற்றோர்களை பார்த்து வந்ததாக சொன்னார்.
கோபத்தோடு ஆரம்பித்த அதிகாரி கணேசன் மீது பரிதாபப்பட்டு உடனே அவரை டிஸ்சார்ஜ் செய்யும்படிஉத்திரவிட்டார்.போர்க்களத்திலிருந்து
வெளிவந்தவர்களை திரும்பவும் அங்கு அனுப்ப முடியாது.பயிற்சி தளமான பெங்களூருக்குத்தான் அவர் போயிருக்க வேண்டும்.அனால் தவறாக அவரை அவரது படைப்பிரிவுக்கே அனுப்பிவிட்டார்கள்.
அவரது படைப்பிரிவு போரில் மகத்தான வெற்றி பெற்று பாகிஸ்தானுக்குள் சுமார் 20 கி.மீ.சென்று விட்ட நிலையில் போர் நின்றது.
கணேசன் தனது படைப்பிரிவை கண்டுபிடித்து போய்ச்சேர்ந்தார். சியால்கோட் என்ற பாகிஸ்தான் பெரு நகரம் 20 கி.மீ.தூரத்திலிருக்குமிடத்தில் அவர்கள் இருந்தார்கள்.
சுமார் ஒரு மாதம் போல் வெற்றிபெற்ற இடங்களில் சுற்றி வேலைகள் செய்தார் கணேசன். 1966 ம் ஆண்டு ஜனவரி 9 ம் நாள் ரூர்கி பல்கலைக்கழக த்தில் ஆரம்பிக்கும் ஒரு பயிற்சிக்கு அவரை நியமித்து உத்திரவு வந்தது.
இந்தியாவிலேயே பொறியியற் படிப்புக்கு பல்கலைக்கழகமாக இருக்கும் ரூர்கிக்கு வந்து சேர்ந்தார் கணேசன்.
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்கு